Friday, April 16, 2010

எரியும் கற்பூரத்தை எப்படி சாப்பிடுவது?


ஓரமா நிண்டு கவனிச்சிருப்போம்...
சிலர் கோயில்கள்ள எரியற  கற்பூரத்தை அப்படியே வாயில் போட்டுவிட்டு கண்ணை மூடியபடி சிறிது நேரம் நிற்பார்கள்..
அப்பிடியே “அம்மாளாச்சி தாயே..” “வைரவக்கிழவா..“ “கதிர்காமக் கந்தா..“ போன்ற ஏதாவது ஒன்றை எட்டு ஊருக்கு கேட்கும்படி மெதுவாக கத்திவிட்டு 
பின் தம்மை சுற்றியுள்ள மற்ற பக்தர்களை பார்ப்பார்கள்.. சந்திரனில் காலடி வைக்கும் போது நீலாம்ஸ்ராங் முகத்தில் என்ன றியாக்ஸன் இருந்திருக்குமோ.. அதே பெருமை இவர்கள் முகத்தில் தெரியும்..

எரியும் கற்பூரத்தை வாயில் போட்டு சாப்பிட்டால் தான் கூட அருள் தருவேன் என்று கடவுள்கள் யாரும் சொல்லியிருப்பார்களோ!!

இது கடவுளின் ஆசி பெற்றவர்களால் மட்டும் தான் முடியுமா?                                                                                நாம பண்ணினா தெய்வ குத்தமாயி சாமி கண்ண குத்திடுமா? இல்லைனா நாக்கு சுட்டுடுமா?

ஒரு கற்பூரத்தை எடுத்து கைல வைச்சி கொளுத்திட்டு அப்டியே நெருப்புபோட வாய்ல போட்டு சாப்பிடலாம்..
கையையும் சுடாது.. 
நாக்கையும் ஒண்ணும் பண்ணாது..

ஏன்னா..
நம்ப தோல் வெப்பத்தை உணர 3 நொடி தாமதமாகும்..
அதுக்கிடேல கையில எரிஞ்விட்டிருக்கிற கற்பூரத்தை வாய்ல போட்டுடுவோம்..
வாய்ல கற்பூரம் எரிஞ்ச படி விழுந்ததும் நாம வாய மூடிக்குவோம்..
இதனால கற்பூரம் எரியறதுக்க தேவையான O2 (ஒட்சிசன்)
 தடைபட்டு விடுவாதால்  கற்பூரம் வாய்க்குள் சென்றதுமே அணைந்து விடுகிறது..
இவளவு தான் மேட்டர்..


அடுத்த பதிவில்  பூ மிதிப்பது அல்லது தீ மிதிப்பது எனப்படும் தீ மீது நடப்பது நமக்கும் சாத்தியப்படுமா? என்பது பற்றி பார்ப்போம்..



தொடர்ந்து உயிரோடு புதைத்தவர் மண்ணிற்குள்ளிருந்து மீண்டு வருதல்..
வெறுங்கையில் விபூதி வரவளைத்தல்..
தானாக தீப்பிடிக்க வைத்தல் இன்னும் பல சுவாரசியமான சாமியார்களின் பிஸ்னஸ்கள் பற்றி பொழுதுபோக்காக பார்ப்போம்..
நன்றி நண்பர்களே!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails