Sunday, April 4, 2010

யாழ் தேர்தல் களத்தில் மாணவர்கள்.


சகோதரர்களே ,நானும் உங்களில் ஒருவன் என்ற காரணத்தினால் இதை நான் எழுதுகிறேன். யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லதவாறு இன்று சிங்கள மயமாக்கமும் ,கலாசார மாற்றங்களும் ,மாணவ அரசியல் கலாசாரமும் நடந்து கொண்டு இருக்கின்றது.கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று இருந்தவர்கள் இன்று இல்லை.வரும் தேர்தல் களத்தில் 300க்கும் மேலானவர்கள் யாழ்ப்பாணத்தில் பல கட்சிகள் சார்பில் போட்டி இடுகின்றனர்.

யாழ் மக்கள் கடந்த கால யுத்ததினால் பாதிக்கபட்டு கஷ்டப்பட்டு படும் போது உதவிகள் செய்யாது புலம் பெயர்ந்த நாடுகளில் சொகுசு வாழ்கை வாழ்ந்தவர்கள் பலர் இன்று யாழ் நகரில் சந்திக்கு சந்தி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று தருவதாக பிரசாரம் செய்து வருவது வேடிக்கையானது.யாழ் நகரில் போட்டி இடும் பல கட்சிகள் யாழ் மண்ணின் புத்திஜீவிகளை தமக்கு ஆதரவாக களம் இறக்கி இருப்பது வியப்புக்குரியது.இந்த புத்திஜீவிகள் பலர் ஆசிரியர்களாகவும், அரசாங்க உத்தியோகம் செய்பவர்கள் ஆகவும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் தமது சுயநலமான சரணாகதி அரசியலுக்கு இவர்கள் கற்பித்த மாணவர்களை பயன்படுத்துகின்றனர். இவர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை பற்றி ஜோசிக்காது இவர்களின் சுயநல நோக்கத்துக்காக மாணவர்களை தங்களது அரசியல் செயற்பாடுகளில் தூண்டி விடுகின்றனர். இதனால் பாதிக்கபடுவது மாணவர்கள் மட்டுமே இவர்கள் பலர் வெப் களிலும் facebook களிலும் தமது தேர்தல் கொள்கைகளை பதிக்கின்றனர் .இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் உலக நாடுகளில் சரணாகதி ஆகிவிடுவார்கள்.இவர்கள் தமிழ் மக்களுக்கும், தமக்கு பின்னால் நின்ற மாணவர்களுக்கும் ஒன்றும் செய்ய போவதும் இல்லை. வாய் அறிக்கை மட்டுமே இவர்களது பலம்.

கடந்த காலத்தில் பல குதிரை அரசியல் வாதிகளுக்கு பின்னால்,பக்கபலமாக நின்ற பாடசாலை,பல்கலை கழக மாணவர்களுக்கு நடந்தது யாவரும் அறிந்ததே,பல கனவுகளை சுமந்து இருந்த மாணவர்கள் தமது சிறு வயதில் மரணம் தழுவிய சம்பவங்களும்,பல மாணவர்கள் கடத்தபட்டு தாக்கபட்டும்,பல மாணவர்கள் காணாமல் போன சம்பவங்களும் , பல மாணவர்கள் தமது படிப்பை இடைகளில் நிறுத்தி விட்டு தமது உயிரை பாதுகாத்து கொள்ள எதோ ஒரு நாடுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் .இதற்கு எல்லாம் இவர்கள் போன்ற அரசியல் வாதிகளின் தவறான வழிகாட்டல்களே காரணம் ஆகும். பாதிக்கபட்ட மாணவர்களுக்கு,அவர்களின் பெற்றோர்களுக்கும் இவர்கள் உதவிகள் செய்ய போவதும் இல்லை.இவர்களின் பின்னால் நிற்பதை விட்டு மாணவர்களே நீங்கள் உங்கள் படிப்புகளில் உங்கள் பெற்றோர்களின் கனவுகளில் உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனத்தை செலுத்தி உங்களின் வாழ்க்கையை நீங்களே முன்னேற்றுங்கள்.

குறிப்பு -இந்த பதிவு யாரையும் குறிப்பிட்டு எழுத பட்டது இல்லை.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails