Wednesday, April 21, 2010

ஒரு காதல் தோல்வியால் உருவான FACEBOOK இணையத்தளம்



காதலின் சின்னம் தாஹ்மகால் என்று எல்லாரும் பொதுவாக சொல்லுவார்கள்.ஆனால் காதல் தோல்வியின் சின்னம் என்று குறிப்பாக எவற்றையும் யாரும் இது வரை சொல்லவில்லை.காதல் தோல்வி அடைந்தவர்கள் பொதுவாக பார்த்தால் அவர்கள் முகத்தில் படர்ந்த தாடியும், குடியும் குடித்தனமுமாக என்று அவர்களின் காதலியின் நினைவில் இருந்து விடுபட முடியாமல் இருப்பார்கள்.ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு இருந்த மாணவன் Mark Zuckerberg என்பவர் தன்னை கை விட்டு போன தனது காதலியின் நினைவில் இருந்து மீள்வது எப்பிடி என்று ஒரு இரவில் நினைத்து கொண்டு இருக்கும் போது அவருக்கு ஒரு யோசனை வந்தது.



ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான விபரங்களை அச்சிட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவது அந்த பல்கலைக்கழகத்தின் வழக்கம். அதை அனைத்து மாணவர்களும் பேஸ்புக் என்று சொல்லுவார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டே Mark Zuckerberg என்ற மாணவன் தனது சக நண்பர்களான Eduardo saverin Dustin Moskovitz, Chris Hughes ஆகியோரை இணைத்து கொண்டு பேஸ்புக் என்ற இணையத்தளத்தை உருவாக்கினார்.முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்.பிறகு காலப்போக்கில் அந்த இணைய தளத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்.


ஆனால் இன்று அபிவிருத்தி அடைந்த நாடு,அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்று உலகத்தில் அனைத்து நாடுகளிலும், வீடுகளில் கணணியை வைத்திருப்பவர்கள் வைத்திருக்காதவர்கள், சிறுவர்கள்,முதியவர்கள் என எல்லா வயது மட்டதினரும் FACEBOOK பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று கூறலாம். எந்த அளவுக்கு இன்று உலகத்தில் பிரபலம் அடைந்து இருக்கிறது. ஒரு காதலியின் நினைவில் இருந்து விடுபடுவதற்கு Mark Zuckerberg என்பவரால் ஒரு பொழுது போக்காக உருவாக்கப்பட்ட இணையதளம் இன்று உலகின் பல நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கிறது. இதை உருவாக்கிய Mark Zuckerberg என்ற மாணவனை உலகின் முக்கியமான பணக்காரனாக உருவாக்கி இருக்கிறது .மேலும் பல முன்னணி நிறுவனங்கள் இதை வாங்க போட்டி போடுகின்றனர்.இதில் உலக புகழ் பெற்ற நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலீடு செய்து இருக்கிறது. இன்று எந்த இணைய தளம் பல இலட்ச கோடிகளில் சம்பாதிக்கிறது . மேலும் இதன் மதிப்பு இன்னமும் உயர்ந்து கொண்டே போகிறது.



இந்த சமூக சேவை இணைய தளத்தை அனைவரும் பயன்படுத்தும் காரணம் என்ன? இதில் உறுப்பினராக இணைவது சுலபம் ஒரு இ-மெயில் முகவரி இருந்தால் மட்டும் போதுமானது.மேலும் பல நாடுகளில் இருந்து நண்பர்களை உருவாக்கி கொள்ள முடியும் .அவர்களுடன் அரட்டை பண்ண முடியும்,உங்களின் உணர்வுகளை,விருப்பங்களை,உங்கள் அன்றாட செயற்பாடுகளை நீங்கள் வாசித்ததை ,பிறருக்கு தெரியாத பல விடயங்களை எல்லாம் நீங்கள் அவர்களுடன் பகிந்து கொள்ள முடியும்.நீங்கள் உங்கள் நண்பர்களின் உணர்வுகளை ,விருப்பங்களை ,அவர்களின் பழக்கவழக்கங்கள் எல்லாம் புரிந்து கொள்ள முடியும் மேலும் உங்கள் உறவினர்கள் ,சிறு வயதில் படித்த நண்பர்கள், தெரிந்தவர்கள்,அறிந்தவர்கள் இன்று எல்லாருடனும் இந்த இணைய தளத்தில் தொடர்பை வைத்திருக்க முடியும். இந்த இணையத்தளம் உங்களின் தனிமையை போக்கி உங்களுக்கு ஒரு புதிய உறவுகளை பெற்று தருகிறது என்றால் மிகையாகாது.
.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails