Sunday, May 16, 2010

யாத்ரா - 2010 - சில சுவாரசியங்கள்


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இணையதமிழர் மாநாட்டின் சில சுவாரசியங்கள் புகைப்படங்களுடன்...








வருகை தந்தேரில் ஒரு பகுதியினர்












இடைவேளை
இனி சரவெடி.....













யாழில் இணைய தமிழர் மாநாடு நடத்திமுடித்தது யாழ்ப்பாணத்திலிருக்கும் எழுத்தாளர்களினதும் பதிவர்களினதும் இளைய தலைமுறையினருக்கும் பயனுடையதாக யாத்ரா 2010 அமைந்தது இம்முயற்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் கிடைத்த வெற்றி..
இங்கு புகைப்படங்களில் முக்கிய நிகழ்வுகள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் அவற்றை கோபி வெற்றிகரமாக வழங்குவார்...
விருந்தோம்பலின் போது பாத்தோம் மருதமூரான் அண்ணாவின் முகத்தில் சந்திரமண்டலத்தில் கால் வைத்த நீலாம்ஸ்ரேங்கின் பெருமிதம்...


இலங்கன், கோபி, வாசகன் அண்ணா, கு.கிருத்திகன்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

"" எதுக்கு சுனாமி""(distroy in seconds)




ராமநாராயணன் தயாரிப்பில் ஸ்டீபன்ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஆசியாக்கண்டத்தின் அடுத்த ஜனாதிபதி இளையதளபதி டாக்டர் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் "" எதுக்கு சுனாமி"" இப்படம் முழுக்க முழுக்க தமிழில் எடுக்க படும் ஆங்கில திரைப்படம்,,,,,,,,

இந்த திரைப்படத்தின் அநேக காட்சிகள் விண்வெளியிலேயே படமாக்கபட்டிருக்கின்றன,, இந்த படத்தில் கோட்சூட், சப்பாத்து சகிதம் செவ்வாய் கிரகத்தில் சைக்கிள் கடை வைத்திருக்கும் சாதாரண பையனாக விஜய் நடித்திருக்கிறார் இல்லை இல்லை வாழ்த்திருக்கிறார் ,,,,,
விஜயின் அறிமுக பாடல் காட்சியிலேயே பால்வீதியிலே பல்சர் மோட்டார்சைக்கிளில் பாடிக்கொண்டு வருவது உச்சக்கட்ட ஹீரோஜிசம்,,
மற்றும் தன்னுடைய நாயை கடத்தி வைத்திருக்கும் வில்லனின் இடத்திற்கு மணிக்கூடு கட்டாமல் மாறுவேடத்தில் செல்வது அங்கே அவருடைய நாயே அவரை அடையாளம் தெரியாமல் துரத்தி துரத்தி கடிப்பது போன்ற காட்சிகள் எதிபாராத திருப்பம்
தனது தாய்க்கு வேர்த்து விடக்கூடாதென சூரியனை தண்ணி ஊத்தி அணைக்கும் காட்சியில் தியேட்டரில் இருந்த தாய்மாரின் கண்களில் கண்ணீர்
விஜயை காதலிக்கும் ஜெனிபர்லோபஸ் அவரை காதலிக்கும் பிராட்பிட்,, விஜயின் மாமன் மகளாக கேட்வின்சல்ட் பாவாடை தாவணியில் கலக்கியிருக்கிறார் ,இதற்கிடையில் விஜயின் கீரோஜிசத்தை பார்த்து அவரை காதலிக்கும் வில்லனின் தங்கை கோவை சரளா என பல குழப்பங்களை படமாக்கியிருக்கிறார் இயக்குனர், இறுதியில் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பது இயக்குனருக்கே தெரியாத புதிர்,,,,,,,,,,
பாசம்,காதல்,நடனம் போன்றவற்றில் மட்டுமல்லாது சண்டை காட்சிகளிலும் பிளந்துகட்டியிருக்கிறார்
உதாரணமாக
சிவனே என்று பாகனை மிதித்துக்கொண்டிருந்த யானையை தூக்கி எறிந்து தீவிரவாதிகள் தப்பிசெல்லும் விமானத்தை வீழ்த்துவது விஜயின் முன்னைய படங்களை ஜாபகப்படுதினாலும் தியேட்டர்களில் கைதட்டலுக்கு பஞ்சமில்லை,,,,,,,,,
மற்றும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு நெப்டியூனில் வீடு கட்டி கொடுப்பது விஜயிடம் அடிவாங்கிய வில்லன் புளூட்டோ கிரகத்தில் பொய் விழுவது போன்ற காட்சிகள் ரசிகர்களை "" எங்க கிறகம் இதெல்லாம் பாக்க வேண்டியிருக்கே'''' என பாராட்ட வைக்கிறது,,,,,,

மொத்தத்தில் "எதுக்கு சுனாமி"" திரைப்பட ரிலீஸ் திகதியில் விஞ்ஜானிகள் எதிர்பார்த்திருப்பது இந்த உலகத்தின் அழிவை அல்ல ,,,,,,,,,, இன்னொரு உலகத்தின் ஆரம்பத்தை,,,,,,,,,,,,,,,,,,,,,

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, May 12, 2010

Wtch TV Oneline Free Have Fun!

Watch online free TV தமிழ் டிவி நேரடி









பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்







Free TV  Have Fun






















இங்க Comment பண்ணுங்கப்பா...!

Tuesday, May 11, 2010

விஜயின் எதிர்கால பட காட்சிகள்





விஜயின் எதிர்கால பட காட்சிகள் எப்படி அமையப்போகின்றன என பல எதிர்பார்ப்புகள் உங்களுக்குண்டா?

தொடர்ந்து படியுங்கள்...


கீழேயுள்ள படம் விஜயின் அறிமுக காட்சி



இது அறிமுக பாடலின் ஆரம்ப காட்சி












உலக வெப்பமயமாதல் குளேபல் வார்மிங்ஐ தடுப்பதற்காக ஆடு மாடுகளை தலையில் தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவது போல சூரியனை பாஸ்கட் பால் போல ஆடியபடி தடவிக்கொடுத்து கூலாக்கும் தளபதி

பூமிவெப்பநிலையை சமப்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபராகும் தகுதி விஜைக்கு வந்துவிட்டதால் ஒபாமா பயத்தில் உறைந்து விட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன .




கண்கிசெவ்வாய்க்கு புறப்படவிருந்த ராக்கட்டை அதிவேக ரயிலில் கடத்திப்போன வில்லன் 






ராக்கட்டை மீட்டுவரும் வருங்கால முதல்வர்





நன்றி நண்பர்களே!









இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, May 3, 2010

விஜய் நம் நன்றிக்குரியவர்

வசூல் நாயகன் விஜயால் தமிழுலகுக்கு கிடைத்த நன்மைகள் எவை?
தொடர்ந்து படியுங்கள்...

வேட்டைக்காரனுக்கு 30+ நாட்களிலேயே 40+ வது நாள் வெற்றி என போஸ்ட்டர் அடித்துவிட்டமையால் இம்முறை அந்த சாதனையை முறியடிக்கும் முகமாக இப்போதே இப்படி போஸ்டர்கள் வெளிவந்தால் யாரும் காண்டாக வேண்டாம்..!
(இப்புடி தான் சந்திரமுகி சாதனையை முறியடிக்கிறது..)



கடந்த படங்களில் ஒரு டிக்கட்டுக்கு இன்னொரு டிக்கட் இலவசமாக வழங்கிய இளைய தலைவலி தளபதியின் தாராள மனப்பாண்மை இப்போது இன்னும் அதிகரித்துள்ளது..




வியஜின் Coca cola Adஆல் Pepsi தனது செல்வாக்கை தூக்கி நிறுத்திவிட்டதாக 
விஜயக்கு வாழ்த்து செய்தி.




ஒவ்வொரு விஜய்படம் வெளிவரும் காலங்களிலும் தமது விற்பனை  பிய்த்துகொண்டு போவதால் அனாசின் தலைவலி மாத்திரை நிறுவனம் தனது விளம்பர செலவுகளில் விஜய் படங்கள் தயாரிக்கும் அபாயம் உள்ளது...




மேலும் கைதிகளிடம் இரக்கம் காட்டி விசாரணை மேற்கொள்ளவும்...
தீவிரவாதிகள் காரில் அல்லது பார்சலில் விஜய் படங்களை அனுப்பும் நாசகார சதி வேலைகளில் ஈடுபடுதவதை கைவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..



 கீழ ஓட்டு போடலைனா உங்க அட்ரசுக்கு சுறா ப்ழூ ரே அனுப்பிடுவோம்..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Sunday, May 2, 2010

அழியும் யாழ்நகர் பண்பாட்டு சின்னங்கள்-எச்சரிக்கை ரிப்போர்ட்

 

மற்ற இடங்களை போலல்லாது யாழ்நகர் கடுமையான யுத்தத்தை தாங்கிய “செல்“வந்த பூமி.
துளைகளை காணாத கட்டடங்களையும் கொலைகளை காணாத மனிதர்களையும் காண்பது அரிது..
கந்தகவாசம் ஓயும்முன்னே அடுத்த ஆர்ப்பாட்டமில்லாத அபாயசங்கு ஊதபடுகிறது.
தற்போது புது கட்டடம்ஸ்..
புது கம்பனீஸ்..
புது ரூறிஸ்ட்..
கலக்குது Jaffna கலக்குது..னு தோணுறதென்னமோ உண்மைதான்..
ஆனா இவளவுநாளும் இங்கிருந்த தமிழர் போய்வர வீதிகள் போதுமாயிருந்தன..
இப்போது அபிவிருத்திக்காக பாதை அகலமாக்கப்படவேண்டியுள்ளது..
ஏற்கனவே சிங்களவன் உத்தரவு குடுத்திட்டான் சீனாக்காறன் நோண்ட ஆரம்பிச்சிட்டான்..
இதனால வரப்போற இலாபங்கள் ஒருபுறமிருக்க..
யுத்தத்தில் கூட தப்பிய சில தமிழர் பண்பாட்டு சின்னங்கள் இன்று அழிக்கபட நாம் வேடிக்கை பார்க்கபோகிறோமா ..!
அவசர அபிவிருத்தியா..? தூரநோக்குடான அபிவிருத்தியா எமக்கு தேவை?
இவ்வளவு நாளும் சரியான மின்சாரமில்லாமல் இணையம் இல்லாமல் ஏன் பல அடிப்படை வசதிகள் தேவைகள் இல்லாமலே வாழ்ந்ததை யாராலும் மறுக்கமுடியுமா?
அப்படியிருந்தும் எம்மவர்கள் உலகம் முழுவதும் சாதிக்காமல் விட்டார்களா?
அபிவிருத்தி பூகோளமயமாதல் என்பவற்றின் பெயரால் நாமே நமது பண்பாட்டு சின்னங்களை இழக்கபோகின்றோமா?..
பல்வேறு பிராந்திய மக்கள் அவர்களது தனித்துவமான பண்பாட்டு வரலாற்று அம்சங்களை அழியவிடாமல் பாதுகாப்பதில் பெரும் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்..
ஆனால் நமக்கோ இவ்விதமான முயற்சிகளோ அதற்கான வேலைத்திட்டங்களோ இல்லாவிட்டால் கூட பரவாயில்லை அதைபற்றி யோசிக்க கூட மனமில்லை..!
தற்போது ஆரம்பித்துள்ள வீதிகளை அகலமாக்கும் பணியால் பாதிக்கபட போகும் புராதன எச்சங்களில் குறிப்பிடகூடிய சில..
கே.கே.எஸ் வீதியில்..

  • வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை மையமாக கொண்டஇலங்கையின் ஒரேயொரு கோயில்நகரம்(1790)
  • நூற்றாண்டுக்கு முற்பட்ட யாழ் இந்துக்கல்லூரியின் பிரார்த்தனை மண்டபம்(1890)
  • மூத்த பத்திரிகைகளில் ஒன்றான இந்து சாசனத்தின் பழைய கட்டட தொகுதி
  • நாவலர் இயக்கத்தின் கருத்து நிலையை ஆட்டங்காணவைத்த கின்லர் மண்டபம்
  • சித்தர் பரம்பரையின் சிவதொண்டர் நிலையம்(1930)
  • நாவலர் பாடசாலை(1848)

கல்வியங்காடு முத்திரை சந்தி பகுதியில்

  • அரண்மனை நுளைவாயில் மந்திரிமனை சட்டநாதர் போயில் முதலியன..
  • சங்கிலியன் சிலை..
  • மானிப்பாய் புராதன கிறிஸ்தவ தேவாலயம்..
  • கண்டி வீதியில் ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண நகர கட்டுமானங்கள் மட்டுமல்ல பல 300 வருடத்துக்கு மேற்பட்ட இயற்கை மரங்களையும் அழிப்பதை வேடிக்கை பார்க்கபோகின்றோம்...

யாழ்ப்பாணத்தில் அரும்பொருட்காட்சியகத்துக்கு எத்தனைபேர் போயிருப்பார்கள் என்று கேட்க போவதில்லை.. அது எங்கேயிருக்கிறதெண்டு எத்தின பேருக்கு தெரியும்?
பிள்ளைகளுக்கு டாடி மம்மி எண்டு கூப்புட சொல்லிகுடுக்கும் பெற்றோருக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா என்ன!!?
அம்மாக்களுக்கு சீரியல் பாக்கவே நேரம் போதறதில்லை..
அங்கிள்களுக்கு எடுப்பா வேலைக்கு போகவும் வீட்ல உடுப்புதோய்க்கவும் விடுப்பு புடுங்கவுமே இடுப்பு ஓடிஞ்சு கடுப்பா போயிடுவினம்..

பண்பாட்டையும் வரலாற்று சின்னங்களையும் அழிக்காது உள்ளெடுக்கும் அபிவிருத்தியே எமக்கு தேவைப்படுகிறது.
இதற்கான மாற்று திட்டங்களும் சொத்துகளை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளும் துறைசார் வல்லுனர்களின் வழிகாட்டல்களும் புரிந்துகொள்ள கூடிய அரசாங்கமும் பொதுமக்களின் ஆதரவும் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துளைப்புடனான கூட்டுநடவடிக்கைகளும் இருந்தால் நல்லாயிருக்கும் ஆனா அதெல்லாம் இங்கயிருக்கெண்டா முப்பது வருசமா தமிழரும் சிங்களவரும் புடுங்குப்பட்டு ஆளயாள் தூக்கி கொஞ்சியிருக்க வேண்டிவந்திராதே...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails