Friday, October 29, 2010

Magic- கிழிந்த தாளை ஒட்ட வைக்க முடியுமா..?

இங்க Comment பண்ணுங்கப்பா...!

பணம் தயாரிக்கும் இயந்திரம்-மாஜிக்!

மாஜிக்! மாஜிக்!





அதாகப்பட்டது யாதெனில்...
நாம அனுப்பற வெள்ளைத்தாள் உள்ளபோயி சுருண்டுக்க... உள்ள சுருட்டி வச்சிருக்கற துட்டு வெளியே வருது...

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, October 18, 2010

50லும் ஆசை வருமா..?








மேலே பார்த்த பாடகர் Justin Bieberஆக வேடமிட்டு சிறுமிகளை ஏமாற்றியிருக்கிறார்.. இந்த கிழவர்.. இதுக்கப்புறம் என்ன

சொல்ல...  வீடியோ பாருங்க...


இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, October 2, 2010

முதல் ஷோ பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

தியேட்டரில் முதல் ஷோ பார்த்தால் என்னென்ன நன்மைகள்?

ரஜினி விஜய் அஜித்....மற்றும் பலர் என யார் படம் ரிலீஸானாலும் முதல் ஷோ அன்னிக்கு தியேட்டரே களைகட்டி அந்த ஏரியாவே அமர்க்களப்படுவதை பாத்திட்டிருக்கோம்...
டிக்கட் விலையைப்பத்தி கவலைப்படாம ஏன் பிளாக்ல கூட வாங்கி தியேட்டருள்ள போயி ஆர்த்தியெடுத்து தேங்காயுடைச்சி பார்க்கறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்...






முதல் ஷோ பார்ப்பதால் ஏற்படும் பயன்கள் என்னாண்ணு பார்த்தோம்னா...


1) சனநெருக்கடிக்குள் நெருக்கப்பட்டு தள்ளுமுள்ளுப்பட்டு நசிபடுவதால் உடலிலுள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.


2) தலைக்குமேலால் ஏறிபோவது காலை வாரிவிட்டு முன்னேறுவது போன்ற அரசியல் டிப்ளோமாக்களை பழகுகிறோம்.


3) ப்ளாக்கில் டிக்கட் விற்பவர்களுக்கு வருமானத்தை பெருக்குவதன் மூலம் சிறு தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கிறோம்.


4) புகையிலை பான்பீடா கசிப்பு வியர்வை போன்றவற்றோடு காற்றில் கலந்து வரும் இன்னபிற வாசங்களுக்கும் பழக்கப்பட்டு விடுவதால் பொது இடத்தில் குமட்டிக்கொண்டு வரும் அலர்ஜி இல்லாமல் போகும்...


5)  டிக்கட் கிழிக்கும் பகுதிக்கு செல்வதற்குள் சட்டை கிழிந்துவிடுவதால் புதுசட்டை வாங்கும் யோகம் கிடைக்கிறது...


6) படம் பார்க்கும் போது இருட்டில் நம்மை நோக்கி பறந்து வரும் காலி பாட்டில்கள் பிய்ந்த செருப்பு போன்றவற்றை தடுத்தாட்கொள்ள வேண்டியிருப்பதால் அது கண்களுக்கு நல்ல பயிற்சியாகி கண்பார்வை பிரகாசமடையும் எதிர்ப்பு சக்தி கூடும் எரியா மேட்ச்சில் விக்கட்கீப்பராகும் வாய்ப்பும் கிடைக்கலாம்.


7) அகராதியில் இல்லாத சில வார்த்தைகளை காதார கேட்டு இன்புறுகின்றோம்..


8) ஊருக்குள் சீன் போட நல்ல மேட்டர் கிடைக்கும்...




இவ்வளவு நன்மைகள் நிறைந்த முதல்காட்சி அனுபவத்தை தவறவிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல...


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... வேறு உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கீழே கருத்தில் தெரிவிக்கவும்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails