Tuesday, December 21, 2010

தில்லு முல்லு - சிறுகதை



ணினியில் நண்பன் ஒருவரின் ப்ளாக் வலைத்தளத்தை படித்துக்கொண்டிருந்தான் வேணு.
படுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக 'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று கொமன்ட் போட்டுவிட்டு கணினி அருகில் காய்ந்து கொண்டிருந்த பிஸ்கட்டில் ஒன்றை வாயில்போட்டான்..

செல்போன் நச்சரித்தது அட! நன்பன் சிவா. எடுத்து பேசினான்
டேய் Officeல பதில் சொல்லணும்டா நீ புதுசா ப்ரின்ட் பண்ணி வந்திருக்கிற ரீசேர்ட் வாங்குறாயா இல்லையா? நாளைக்குள்ள சொல்லணும்.

போன வருசம் வாங்கினதே இங்க போடாம கிடக்கு அதுக்குள்ள எதுக்குடா இன்னொண்டு வேண்டிக்கிடக்கு..

அது வேற ப்ரின்டுடா இது க்ரிக்கட் ப்ரின்டுடா.. 800 ரூபா தானே நாங்களல்லாம் வேண்டுறம் நீயும் எடுத்தியெண்டா ஒண்டா போடலாம்...

அது சரிடா ஆனா ஒருநாள் போட்டுட்டு அப்பிடியே பெட்டீக்க தான் வைக்கணும்...

மச்சான் நாங்க உனக்கும் சேர்த்து வேண்ணுறம் சந்திக்கேக்க காச தந்தா போதும்டா..

800ரூபா ரொம்ப அதிகம்டா..

கேக்காமலே எங்களுக்கு எல்லாம் வாங்கி தாற நீயாடா இப்பிடி கதைக்கிறாய்..? ஓகே அப்புறம் ஒஃபிஸில மீட் பண்ணுறன் வைக்கிறன்
என்று கூறியவாறே பேன் கட் ஆனது..

வேணுவின் கண்கள் மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை வெறித்துபார்த்தன.. சுழன்றுகொண்டிருப்பது விசிறி மட்டுமல்ல அவனது எண்ணங்களும்தான்...

இது பிரைவேட் ஐ.ரி கொம்பனி இங்கே அவனுக்கு மட்டுமல்ல கூடவேலைபார்க்கும் 16 பேருக்கும் இதே நிலமைதான் கடுமையாக உழைப்பவருக்கே வேலை நிரந்தரமாக இருப்பதில்லை காரணம் அவர்களை வேறொரு போட்டிக்கம்பனி அதிக சம்பளத்துக்கு சுவீகரித்துக்கொள்ளும் அதே நேரம் கற்பனைத்திறன் ஒரேபாணியில் பயணிக்க தொடங்கினால் 'வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்க சேர்' என்று விடுவார்கள்.

யாராவது வாயைத்திறந்தா 'ஆமா சேர் உங்களுக்கு இந்த வேலை கஷ்டமாதான் இருக்கு எங்களுக்கு புரியுது இதைவிட குறைஞ்ச சம்பளத்தில வேலை செய்ய நிறைய அப்பிளிக்கேஷன் வெய்ட்டிங்ல இருக்குபா' நீங்கள் இங்கயிருந்து கஷ்ட படாம எங்கயாவது குழங்தைகளுக்கு MS Office படிப்பீக்கலாமே.. என்று பதில் வரும்.

றுநாள் ஒஃபிஸில் சிவாவும் விசாரித்தான்

“ஆனா எப்பிடிடா வேணு உன்னோடயே ஒண்டாப்படிச்ச திரு மட்டும் எப்படி வீடுகட்டி குடிபுகுறான். கார்ல கைகாட்டிகிட்டே போறான்.. ?“

“அவன் தனியா தொழில் பண்ணுறான்டா தனி ஒஃபிஸ் எடுத்து கொன்ராக்ட் எடுத்து ப்புரஜக்ட் செய்யிறான்..“

“ஏன்டா உன்னை அந்தமாதிரி பண்ணகூடாதெண்டு ஆரும் சத்தியம் கட்டினவயோ?..“

“ங்கொய்யாலே.. அதுக்கு ரொம்ப முதல் போடணும்டா. ஒஃபிஸ்க்கு அட்வான்ஸ், வாடகை, அட்வடிஸ்மன்ட், கம்யூட்டர்ஸ் நெட்வேர்க், வேர்க்கர்ஸ் எல்லாத்துக்கும் மேல கஸ்டமர்ஸ பிடிக்கணும்டா.. யாவாரமெண்டு வந்திட்டா நிறைய தில்லுமுல்லு பண்ணோணும்...

அவங்கள் எல்லாம் கஸ்டமஸ்ஸ பயப்புடுத்தி ஆறு நாள் வேலைய அறுவதுநாள் ஆகுமெண்டு சொல்லி ஆறுமடங்கு காச வேண்டிப்போட்டு ஐம்பது நாளுக்குள்ள முடிச்சு குடுத்து நல்லபிள்ள மாதிரி நடிப்பாங்கள். அதுவும் ஏற்கனவே சேய்த Software Source Codeக்கு வெளில மட்டும் மாத்திபோட்டு தன்ர கொம்பனி பேரோட தாங்கள் செய்தது மாதிரி குடுப்பாங்கள்டா...

ஆரோ மெனக்கெட்டு செய்ததுக்கு தான் காசுபாக்கிறான் இது பாவம் பெரிய தப்புடா... என்னால அதெல்லாம் பண்ணமுடியாது.. வம்சமே அழிஞ்சிடும்டா..“

“ஓஹோ நீ நேர்மையின் சின்னம் அரிச்சந்திரன் மறுபிறவி.. கொம்பனிக்கு 7 நாடுகள்ள பிறாஞ்ச்ஸ் இருக்கு இங்க இருந்தும் USAக்கு தானே வேலசெய்யிறியள் ஏன் உன்னேட வேல செஞ்ச சஞ்சீக்கு மட்டும் UKல வேலை மாற்றம் கிடைச்சிது?..“

“அவன் ஒண்ணும் என்ன மாதிரி திறமைசாலி இல்லை USAலருந்து செயாமன்(chairman) வந்தா இவன் அரரோடயே திரிவான் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிறதிலயிருந்து கார் கதவு திறந்து விட்டு தண்ணில சேடா ஊத்தி கொடுக்குற வரைக்கும் செஞ்சான்..
USAகாறனுக்கு அவங்கட நாட்டில Software செய்விக்கிறத விட எங்கட ஊர்ல செய்விக்கிறது தான் மலிவா முடிக்கலாம்..“

“கதைய மாத்தாத திறமை திறமை எண்டுறியே அதுக்கான அங்கீகாரம் ப்ரமோஷனா தானே இருக்கேலும்? ஆனா காணமே..!!...“

“வரத்தான்டா போகுது பாத்துகொண்டே இரு இப்ப தான் ரீம் லீடர் Head officeக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்.. பாக்கலாம்டா..“
ன்று இரவு வீட்டில் செய்துகொண்டிருந்த Codeல் எங்கோ பிழைச்செய்தி வந்ததால் வெறுப்பாக டிலீற்ஐ தட்டி விட்டு கண்ணுக்கு Efemoline மருந்து துளிகள் இட்டுக்கொண்டு வேணு விரல்களில் நெட்டி முறித்தான்.
தன் மனம் இன்று தெளிவில்லாமல் இருப்பதை உணரக்கூடியதாயிருந்தது.. இனம்புரியாத வெறுமை வாட்டுவது போலிருந்தது..

செல்போனில் அன்று வந்திருந்த SMSகளுக்கு Reply போட்டான்.
நடுவே ஒஃபிஸ் ரீம் லீடரின் how is going new project? என்ற குறுஞ்செய்திக்கு பதிலனுப்பாமல் அவர் நம்பருக்கு டயல் செய்தான்.

“சேர் இண்டைக்கு ஒண்டு முடிச்சிட்டன் ஆனா இன்றும் பெட்டரா ஒண்டு ரை பண்ணலாமெண்டு பாக்கிறன்... ஓகே சார் நாளைக்கு ஒஃபிஸில பாப்பம்..“

மறுநாள்
ரீம் லீடர் அஷோக்கின் அறைக்குள் பென்ரைவுடன் நுளைந்தபோது அவர் செல்போனில் கதைச்சுக்கொண்டிருந்தார்.
“இன்றும் முடியேல்ல சேர் வேணுட்ட குடுத்திருக்கிறன்... டிலே ஆகிட்டுது சொறி சேர் மூண்டு நாள் ரைம் தாங்கோ.. புரியுது சேர்.. யெஸ் சேர்..“
என்று வைத்துவிட்டு

“கேட்டனீங்களெல்லே உங்களால தான் சொறி சொல்லிக்கொண்டிருக்கிறன்.. இந்த சிஸ்ரம் செய்யுற புரஜெக்ட எடுக்குறதுக்கு நாலு கொம்பனி அடிபட்டுகொண்டிருக்குது.. அவங்கள் ஒரு அபிமானத்தில எங்கட கொம்பனி டிசைனுக்காக வெய்ட் பண்ணிக்கொண்டிருக்கிறாங்கள்... கனக்க பொறுமய சோதிச்சா புரஜக்ட் கைய விட்டே போயிடும்...“
என்று கரித்துக்கொட்டினார்...

“சொறி சேர் இந்த டிசைன பாருங்கோ“ என்று பென்ரைவை நீட்டிய வேணு “ஆனா ரெண்டு நாள் ரைம் தந்தா இதவிட பெட்டரா ஒண்டு செய்து தாறன் சேர்..“ என்றான்.

கையால் அவனை அமர சொல்லி தன் லப்டப்பில் பெனடரைவை செருகியவர் முகம் சிவந்தார்...
“திஸ் இஸ் வட் மான்? என்னாச்சு உங்களுக்கு? இப்பிடி சொதப்புறதுக்கு தான் ஏழு நாள் ரைம் எடுத்தனீங்களா? வேலைல கவனம் போயிடிச்சா?..“

“நான்தான் இன்னும் பெட்டரா பண்ணி தர்றேன்னு சொன்னனே...“

“எப்ப.. எல்லாம் கையை விட்டு போனாப்பிறகோ.. ஏழு நாள்ள புடுங்கேலாதத ரெண்டு நாள்ள புடுங்க போறிங்களோ? என்ர பிளை தான்.. அசைமென்ர தர்ஷிகாட்ட குடுக்கலாமெண்டு இருந்தன் நீங்க சீனியர் எண்டு தான் உங்களிட்ட தந்தன் இந்த லட்சனத்தில உங்கட புரமோஷனுக்கு செயாமனிட்ட எடுத்து சொல்லிகொண்டிருக்கிறன் பாருங்கோ நான் ஒரு இடியட்.. இங்க நிக்காதேங்கோ.. ஒரு நாலு நாள் லீவு எடுங்கோ.. கவனம் எங்கயும் சிதறினா இப்பிடி தான் உருப்படாத டிசைன் வரும்... “

“இல்ல சேர் ரெண்டு நாள்ள வேணுமெண்டா..“

“வேண்டாமெண்டா விடுங்கோ சரியோ இத நான் ஹானர்லி பண்ணுறன் நாலு நாள் லீவு டென்ஷன் படுத்தாம போங்கோ பிளீஸ்..“

தலை குனிந்து வெளியே வந்தான் அனைவரது கண்களும் அவனையே கவனித்தன உள்ளே ரீம் லீடர் சத்தம் போட்டது இவர்களுக்கு கேட்டிருக்கிறது

மாடி ஜன்னலில் தள்ளுவண்டியில் மீன் விற்று கொண்டிருந்தவன் “மாளு... மாளு....“ என கத்தி கொண்டு செல்வதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

செல்போன் சிணுங்க எடுத்தான் திரையில் IT Priya என்று இருக்க ஆர்வமில்லாமலே ’ஹலோ' சொன்னான்..

“haai Venu Goodmorng என்ன ஒஃபிஸ் பக்கம் காணல அதான் போன் பண்ணினேன்..“

“நாலு நாள் கட்டாய லீவு குடுத்திட்டாங்க ப்ரியா நான் செய்த டிசைன் ஆகலும் மட்டமாயில்லை ஆனா இன்னும் பெட்டரா செய்ய தயாரா தான் இருந்தேன்... ஆனா..“

“வேலைல எப்பவும் சின்ஸியரா இருப்பீங்களே.. “

“சின்னியரா இருந்து என்ன ப்ரியா பிரயோசனம்.. சரி விடு நீ என்ன பண்ணுவாய் எல்லாம் என்ர நேரம்..“

“வேணு ஒஃபிஸில எல்லாரும் பம்பலடிச்சு ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கேக்க நீங்க மட்டுந்தான் சின்சியரா இருப்பீங்க அது எனக்கு பிடிக்கும் அது தான் உங்கள இண்டக்கு காணேல்ல எண்டவுடன போன் பண்ணின்னான்..“

' ஓகே. நான் ஒஃபிஸில வந்ததும் உன்ன சந்திக்கிறன் Bye Priya..'

நான்கு நாட்கள் கழித்து அலுவலகம் வந்து கதிரையில் இருந்ததும் ப்ரியா வந்து

“விஷயம் தெரியுமா வேணு நம்ம ரீம் லீடருக்கு புரமோஷன். UK Officeக்கு போறார் மூண்டு மடங்கு சம்பளம் கார் வீடு எல்லாம் குடுத்திருக்கிறாங்கள்..“

“வாவ்.. அப்படியே!!?“ என்றன்

“ஓமோம்.. உங்கட டிசைன் சரியில்லை எண்டுட்டு ராப்பகலா இருந்து அவரே ரண்டு நாள்ள டிசைன் பண்ணி அனுப்பி வச்சார்.. அது UKல Ok ஆயி புரமோஷனும் கிடைச்சிட்டுது.. செயாமன் ஹப்பியாகி உடனே FAXல லெற்ரர் அனுப்பீட்டார்... நேற்று இங்கயிருந்து றிலீவாயிட்டார். நாளைக்கு UK வெளிக்கிடுறார். இத தான் மச்சம் எண்டுறது..“

“ம்..“

“அவர்ர டிசைன பாக்கிறியளோ..?“

ப்ரியா லப்டப்பில் அஷோக்'s புரஜக்ட் என்று சேவ் செய்யப்பட்டிருந்த C# பைலை ஓப்பிண் பண்ணியதும் அதிர்ந்து போனான் வேணு.

“ப்ரியா இ..இ..இது நான் ஏழு நாளா மினக்கட்டு செஞ்ச டிசைன்... இத தான் அவர் ரிஜக்ட் செய்தவர்.. உண்மயாதான்...“

ப்ரியா அவனை ஒரு மாதிரிப்பாத்து “ஜோக்கடிக்காதேஙக்கோ வேணு பொறாமைக்கம் ஒரு அளவு வேணும்..“
என்று தன் கதிரைக்கு சென்றுவிட என்ன கொடுமை இது!!! அக்கிரமம்.. பரபரவென்று முகம் சிவக்க எழுந்தான் சுழல் கதிரை பின்புறமாக சரிந்ந்து விழுந்ததைக்கூட பொருடபடுத்தாமல் manager அறை நோக்கி நடந்தான்.


ரீம் லீடர் அஷோக் தன் வீட்டு வரவேற்பறையில் இருந்து இரு பிள்ளைகளுடனும் ஹோம் தியேட்டர் திரையில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தவர் வாசலில் பைக் நிறுத்தி வேணு இறங்குவதை கண்டதும் சோஃபாவில் வந்து சிரித்தபடி அமர்ந்தார்.

சப்பாத்தை கழட்டாமல் மேசைமீது சைஷவக்கப்பட்டிருந்த மலர்க்கொத்துகளை பார்த்தபடி வேணு உள்ளே நுளைந்தான்...

“வாங்க வேணு நானே போன் எடுத்து வரச்சொல்லோணுமெண்டு நினச்சன். இருங்கோ வைஃப் கடைக்கு போய்ட்டா ரீ போட ஆளில்லை என சிரித்தார்..“

“நான் வாழ்த்து சொல்ல வரேல்ல எண்டு உங்களுக்கு தெரியும்..“

“கோபமா இருக்கிறீர் போலகிடக்கு.. என் ஐடியாவ கேட்டா கோபப்பட் மாட்டியள் என்னண்டா.. உங்களுக்கு புரமோஷன் UKல தான் எண்டு எழுதி இருக்கு.. நான் அங்க இருந்தா ரொம்ப சுலபம் கண்டியளே.. இப்ப இருக்கிற ஒஃபிஸில உங்கள தான் ரீம் லீடரா இருத்தி அழகு பாக்க போறன்.. ஒரு மாசத்தில ஓடர் வரும் பாருங்கோ சந்தோசம் தானே..“

“அதுக்கு...“

“ஒரு சின்ன அஜஸமன்ட் தானே வேணு இது... அந்த டிசைன நானே செய்ததா ஒரு பொய் சொல்லிட்டன் இப்ப பாருங்கோ எனக்கும் புரமோஷன் என்னால உங்களுக்கும் புரமோஷன் வரப்போகுது.. ஒரே கல்லில ரெண்டு மாங்காய்...“

ஆத்திரத்தை அடக்கிகொண்ட வேணு

“அதோ அந்த மஞ்சள் ரீசேட்டோட வீடியோ கேம் விளையாடுற பெடியன் யாரு..?“

“என் ரெண்டாவது பையன் ரகு. ஏன்?..“

“மன்னிக்கோணும் சேர் ரகு உங்களுக்கு பிறக்கேல்ல அவன் எனக்கு பிறந்தவன்...“

டேய்....“
பதறி எழுந்து வேணுவின் சட்டையைப்பிடித்தார் அஷோக்.

“வலிக்குதெல்லே... அசிங்கமா இருக்கெல்லே... அவமானமா இருக்கெல்லே.. இது தான்டா இ.. இப்பிடி தான்டா நீ செய்ததும்...தூ.. நீ எல்லாம் ஒரு மனுஷன்..“

“ஏய்.. ஏய்.. ஆரோட கதைக்கிறாய் தெரியுமே... உன்ன UKபோனதும் வேலைல இருந்து தூக்கீடுவம்..“

“உன்னால ஏலாதுடா... நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு தான் இஞ்ச வந்திருக்கிறன்..எப்பிடி எப்பிடி அஜஸ்மன்டடா..?...“

வேணு பளார் என்று அறைய அஷோக்கின் கண்ணாடி பறந்து விழ இரண்டு பிள்ளைகளும் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“இப்ப தான்டா நீ ஆம்பிளை“ என்றான் சிவா.

“ஒரு கஸ்டமரை பாத்திட்டு தான்டா வந்திருக்கிறன். அவர் ஒரு லைபரரிக்கு சிஸ்டம் செய்ய ஓடர் குடுத்திருக்கிறார். நேர்மையா உழைப்பம் வர்றது வரட்டும்..“ என்ற வேணுவை கை குலுக்கி

“ ஆனானப்பட்ட ரொக்கட்டே நெருப்பு பட்டதும் தான்டா விண்வெளிக்கு போகுது.. வாழ்த்துக்கள் மச்சி.. இப்ப தான்டா கதையே தொடங்குது...“ என்றன்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

38 comments:

ம.தி.சுதா said...

வாறன்...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃபடுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக 'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று கொமன்ட் போட்டுவிட்டு கணினி அருகில் காய்ந்து கொண்டிருந்த பிஸ்கட்டில் ஒன்றை வாயில்போட்டான்..ஃஃஃஃஃ

யாரப்பா அந்த எழுத்தாளர்.. ஆரம்பமே ஒரு கிறக்கத்துடன் போய் ஒரு இறக்கம் தந்து கடைசியில் ஏற்றி விடுகிறதே...

Kiruthigan said...

'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று நீங்கள் கொமன்ட் போடாதது மிக்க மகிழ்ச்சி மதி.சுதா

நன்றி தங்கள் ரசனைக்கு...

KANA VARO said...

இது தான் தம்பி வேணும். அசத்துறீங்க..

KANA VARO said...

ப்ளாக்ல தொடங்கி ஐ.டி ல புகுந்து கடைசில ஒரு வழி பண்ணிட்டாய். அதுகும் அந்த ரெண்டாவது புள்ள மாட்டர் சூப்பர்...

Kiruthigan said...

@KANA VARO
நன்றி வரேண்ணா...

//ப்ளாக்ல தொடங்கி ஐ.டி ல புகுந்து கடைசில ஒரு வழி பண்ணிட்டாய். அதுகும் அந்த ரெண்டாவது புள்ள மாட்டர் சூப்பர்..//
ரசனைக்கு நன்றி...
நீங்கல்லாம் அருமையா கதை எழுதலாம் நாங்க எழுதப்புடாதோ...!!!

நிரூஜா said...

யோ, இப்பிடியாய்யா எங்கட வண்டவாளத்தை பப்பிளிக்கில போட்டு உடைக்கிறது.

கதை அருமை. வாழ்த்துக்கள்

Kiruthigan said...

@நிரூஜா

//கதை அருமை. வாழ்த்துக்கள்// நீங்க நீங்க நல்லவரா கெட்டவரா...?(முதல் பந்தியை மறந்திட்டீங்களா?...)

//யோ, இப்பிடியாய்யா எங்கட வண்டவாளத்தை பப்பிளிக்கில போட்டு உடைக்கிறது.//
மன்னிச்சுக்கோங்க தெய்வமே...

ILA (a) இளா said...

அருமையான கதை

Kiruthigan said...

@ILA(@)இளா
தங்கள் ரசனைக்கு
நன்றி இளா..

sinmajan said...

இந்தப் பெரிய கதையில அந்த பிரியா ப்ற்றி மட்டும் சின்னதாய் எழுதி.. #மென்மையான கண்டனங்கள் ;)

Kiruthigan said...

@sinmajan அடடா... அடுத்தவாட்டி சின்மயனுக்காக பிரியாவ கூட்டியாந்து திண்ணைல உக்காரவச்கிறேன்...

தங்கள் ரசனைக்கும் ரகளைக்கும் நன்றி

Subankan said...

அருமை :)

Unknown said...

//படுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக 'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று கொமன்ட் போட்டுவிட்டு//

ஹா ஹா ஹா! பதிவுலகில இதெல்லாம் சகஜமப்பா! :-)

Kiruthigan said...

@Subankan
ரசனைக்கு நன்றி அண்ணா..
: )

Kiruthigan said...

@ஜீ...
நீங்க எனக்கு அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்' என்று போடாது மகிழ்ச்சி.
நன்றி ஜீ..

கார்த்தி said...

உண்மையா இவ்வளவு பெரிய கதையவாசிக்க பஞ்சிலதான் வந்தனான். அதாடங்கின பிறகுதான் interest பிடிபட்டு முழுக்கதையையும் வாசிட்டன். நல்லா இருந்தது. நானும் ஐடில இருக்கிறன். பிரயோசனப்படும் எண்டு நம்புறன்

Kiruthigan said...

@கார்த்தி
நன்றி கார்த்தி
ம்.. கதை கொஞ்சம் பெருசாத்தான் போச்சு..!
படிப்பு மட்டும் ஒருமனிதனை நிதர்சன வாழ்க்கைக்கு உகந்ததாய் ஆக்காது என்பதற்கு ஒரு சிறு உதாரணமே இது..

ஷஹன்ஷா said...

குறை ஒன்றுமில்லை Cool Boy கிருத்தி.....!

இது ஒரு சிறுகதையாக இருந்தாலும் IT துறையில் பணிபுரிபவர்களின் நிலையை வெளிக்காட்டியுள்ளீர்கள்....(அனுபவோ..?)

2nd son விடயம்...:-
உறைக்க வைக்கும்...

ஃஃஃஆனானப்பட்ட ரொக்கட்டே நெருப்பு பட்டதும் தான்டா விண்வெளிக்கு போகுது.. ஃஃஃஃஃ

Jana said...

என்ன கூல் திடீர் என்று சிறுகதைப்பக்கம்??? என்னதான் இருந்தாலும் குசும்பு மட்டும் கதையிலும் லொள்ளு பண்ணுது.
அருமை கூல், தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்.

Kiruthigan said...

@ஜனகனின் எண்ண ஜனனங்கள்
நன்றி ஜனகன்

//IT துறையில் பணிபுரிபவர்களின் நிலையை வெளிக்காட்டியுள்ளீர்கள்....(அனுபவோ..?)//
எனக்கு இன்னும் யாரும் நெருப்பு வைக்கல :(

தங்கள் ரசனைக்கு மீண்டும் நன்றி ஜனகன்...

Kiruthigan said...

@Jana

நன்றி ஜனாண்ணா... தங்கள் கருத்துக்களே என்போன்ற இளையவர்களை செதுக்கும்.

//என்ன கூல் திடீர் என்று சிறுகதைப்பக்கம்???//
நீங்க தான் நம்க்கு ரோல் மாடல்

// என்னதான் இருந்தாலும் குசும்பு மட்டும் கதையிலும் லொள்ளு பண்ணுது.//
நன்றி ஜனாண்ணா... அடுத்த பதிவில லொள்ளு பண்ணாம சீரியஸ்ஸா ஏதாச்சும் பண்ணுறேன்...


படுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக //அருமை கூல், தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்.// என்று கொமன்ட் போட்டுவிட்டு கணினி அருகில் காத்துது கொண்டிருந்த மதிய உணவை ஒரு பிடி பிடித்தார் அந்த இலக்கிய மேதை.

தமிழமுதம் said...

ஃஃஃஃஃஃபடுமொக்கையாயிருந்தாலும் நண்பன் என்பதற்காக 'அருமையான பதிவு தங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள்'

டானியல் செல்லையா said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

Bavan said...

வாவ் கதை கலக்கல்ஸ்..:D

//நிரூஜா said...
யோ, இப்பிடியாய்யா எங்கட வண்டவாளத்தை பப்பிளிக்கில போட்டு உடைக்கிறது.
//

அண்ணே நீங்களும் டீம் லீடரோ #டவுட்டு

எப்பூடி.. said...

முழுவதும் படித்தேன், சூப்பராயிருக்கின்னு சொன்னா டெம்ளேட் கமன்ட் அகிடுமேன்பதால் நல்லாயிருக்கு என்கிற என் கருத்தை சொல்லாமலே கிளம்புகிறேன்.

Unknown said...

கதை??ம்ம் ஆமா எல்லே??

Kiruthigan said...

@Aravi Ar நன்றி நண்பா...!!!

Kiruthigan said...

@admin
நன்றி வலைச்சரம் நிர்வாகத்தினருக்கு..
தொடர்ந்தும் இன்னும் தரமானதாக எழுத முயல்கிறேன்..
என்னையும் ஏற்றுக்கொண்டமைக்கு மீண்டும் என் நன்றிகள்

Kiruthigan said...

@Bavan
எனக்கும் இந்த டவுட்டு வந்தது தான் பவன் நீங்க கேட்டுப்புட்டீங்க..!!
நிரூஜா ஐயம் தெளிவிக்க வேண்டும்
நன்றி பவன்..

Kiruthigan said...

@எப்பூடி..
பொறுமையாக படித்தமைக்கு நன்றி அண்ணா...
தங்கள் புத்திசாலித்தனமான அழகான கருத்துக்களுக்கும் மீண்டும் நன்றிகள்.

Kiruthigan said...

@மைந்தன் சிவா
//கதை??ம்ம் ஆமா எல்லே?//
அம்மா சத்தியமா இது கதை தான் மைந்தன் சிவா...
நம்புங்கய்யா...

நிரூஜா said...

//எனக்கும் இந்த டவுட்டு வந்தது தான் பவன் நீங்க கேட்டுப்புட்டீங்க..

உப்பிடி எல்லாம் பொது இடத்தில கேட்டு என்ன அவமான படுத்த கூடாது

Anonymous said...

ஹி ஹி ஹி .......

Kiruthigan said...

@நிரூஜா
//உப்பிடி எல்லாம் பொது இடத்தில கேட்டு என்ன அவமான படுத்த கூடாது//
ஓகே தெய்வமே...
தனிப்பட்ட இடத்தில கேட்டு அவமானப்படுத்தலாமா..?

Kiruthigan said...

@தில்லு முல்லு
தாங்யு தாங்யு தாங்யு

K.Thiruthanigesan said...

நண்பரே வழமைபோல் வெளுத்துக் கட்டிவிட்டீர்!!!!! என்ன ஒரு கற்பனை!!!! எப்படித்தான் ஜோசிப்பீரோ!!!

Kiruthigan said...

@K.Thiruthanigesan
நன்றி நண்பா...
ஓவரா புகழாதடா டேய்...

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails