Friday, November 11, 2011

ஜாலியா ஒரு குறும்படம் - யாழ்ப்பாணம்


ஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.
ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது...! பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்


இப்போ கதை வேணுமே...!
யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.

லொகேஷன்...!
பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூர் பொது நூலகம் பஸ்ஸராண்ட் என்பனவற்றோடு ஒருமுறை சுபாங்கன் அண்ணாவோடு யாழ்ப்பாணத்தை சுற்றிவந்து போட்டோ எடுத்தபோது இதையெல்லாம் வீடியோவாக எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்றார். அவரோடு சென்ற சங்கிலியன் சிலை, மந்திரி மனை போன்ற பல இடங்களையும் தெரிவு செய்தோம்.

கதாநாயகன்
ஆறுமுதல் அறுவது வரை ஆறரைகோடி விசிறிகள் கொண்ட கறுப்பு  சூப்பர்ஸ்ராரை போல- நமக்கும் ஒரு சூப்பர்ஹீரோவாக மதிசுதா ஒரு கிழிந்த சட்டையுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து இறங்கினார்(காரக்டராவே மாறுவது என்பது இதுதான்).
இவரோடு பிரசன்னா என்ற மருத்துவதுறையை சார்ந்த ஒருவரும் உள்ளார்.

முதல்நாள் படப்பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் வைத்து மற்ற நடிகர்களுக்கு ஷ்கிரிப்டை கொடுத்து அவரவர் டயலாக்களை சொல்லி கொடுத்த பின் லொகேஷனுக்கு செல்ல சொல்லிவி்ட்டு நாம் அன்றய படப்பிடிப்பு இடமான கசூரினா பீச்க்கு போய்விட்டோம். ஆனால் மற்றவர்களை காணோம் ஒவ்வொருவராக அழைப்பு எடுத்தால் தாம் ஸ்பொட்'ல தான் நிக்கிறோம் என்றனர். சில நிமிட போராட்டத்துக்கு பிறகு அவர்கள் லெகேஷன் என நினைத்து சிலர் பஸ்ஸான்டுக்கும் சிலர் சங்கிலியன் சிலையடியிலும் போய் அங்குள்ளவர்களுக்கு இப்ப இங்க சூட்டிங் நடக்க போகுது என்று பீதியை கிளப்பி வி்டார்கள்.

(இந்த படத்தில் மதிசுதா மதுரன் உட்பட படத்தில் பணியாற்றிய சிலர்

பஸ்ரான்ட் படப்பிடிப்பு
தீபாவளி சனக்கூட்டம் நிரம்பிவழிந்து கொண்டிருந்தாலும் சன நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தையே தெரிவு செய்தோம். கமரா ரோல் ஆகிகொண்டிருக்கும் போது கமராவுக்கு குறுக்கே யாரும் வந்து விடாமல் எம்மோடு இருந்தவர்கள் நாலா பக்கமும் நின்று பார்த்துக்கொண்டாலும் பல ரீ டேக்குகள் எடுக்கவேண்டியானது. ஒரு பழக்கடையில் உசிரை குடுத்து நடித்துக்கொண்டிருந்த மதிசுதாவிடம் பலர் பொருள் விலை கேட்க சிறிது நேரம் ஒரு துறைசார் வல்லுனர் போல் பழ வியாபாரி ஆகி நடத்திக்கொடுத்தார்.

அங்கிருந்த சிலர் தம்மையும் படத்தில் எங்காவது இணைத்து கொள்ளுமாறு கேட்டனர். சிலர் திட்டு வாங்கினாலும் குறுக்கே நடந்து தம் முகத்தை கமராவுக்கு காட்டிய படி வரலாற்று சாதனை புரிந்தார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு 9மணியளவில் பருத்திதுறையிலிருந்து டப்பிங்குக்காக வந்து கொண்டிருந்தார் மதிசுதா அன்று விஜய் படம் ரிலீசாகி அவருக்க்காக ப்ஸ் நிலையத்துக்கருகில் நின்றிருந்த படக்குழுவினர் அனைவரும் 500/= டிக்கட்டை ஒரு நல்ல உள்ளம் ஓசியில் எடுத்து தந்ததால் தியேட்ருக்குள் சென்று விட்டோம்.  மதிசுதா பஸ் நிலையம் வந்தும் திரையரங்குக்கு வராமல் சென்று இடையில் மழை குறுக்கிட்டதால் வீதியில் ஓய்வெடுத்து காலை 5மணியளவிலே வீடு சென்றார். அவருக்காக எடுத்த டிக்கட்டை 1000ரூபாக்கு ஒரு உயிர் ரசிகருக்கு ப்ளாக்கில் விற்று இன்னுமொரு சாதனை நிலைநாட்டினோம் அன்று மதிசுதா என்ற புன்னகை மனிதருள்குள் இருந்த காலசுவடுகளின் வைராக்கியத்தை கண்டு வியந்து போனேன்.

இந்த குறும்படத்தின் முகப்புத்தக பக்கம் இது http://www.facebook.com/யாழ்ப்பாணம் இங்கே ஏனய புகைப்படங்கள் செய்திகள் எதிர்(பார்)ப்புகள் பகிரப்பட்டுள்ளது.

எம் படம் பற்றி செய்திகள் பகிர்ந்த ஊடகங்களுக்கு படத்தில் மட்டுமல்ல எம் தனிப்பட்ட நன்றிகளும் கூட..!

இப்போது Sound edit டப்பிங் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது இன்னும் சில நாட்களில் வெளியிட தயாரக உள்ளோம். உற்சாகமூட்டிய அனைவருக்கும் எம் உளமார்ந்த நன்றிகள்.

அடுத்துள்ளது படப்பிடிப்பின் போது இடம்பெற்ற சில சீரியஸ்ஸான சீக்கின்ஸ்...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

14 comments:

Subankan said...

வாழ்த்துகள் கூல் :-)

விரைவில் இசை வெளியீட்டு விழா, வி.ஐ. பி ப்ரிவியூ ஷோ எல்லாவற்றிற்கும் ஓசி டிக்கெட் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்

Subankan said...

என்ன இது? ஹீரோ பப்ளிக்கில மேக்கப் போடறார்? ஒரு கேரவான் கிடையாது, ஆப்பிள் யூஸ் கிடையாது, வாட் இஸ் திஸ்? எமது கடுமையான எதிர்ப்புக்களை பதிவுசெய்கிறோம்
- மதிசுதா ரசிகர் மன்றம், அகில உலக கிளை

Nemi said...

அட்டகாசமான ட்ரெய்லர்...
கதாநாயகிய மட்டும் கண்ல காட்றீங்க இல்லையேப்பா..!!!
facebook fanpageமுழுக்க தேடிபாக்கறேன்.

Thava said...

வாழ்த்துக்கள் கிருத்திகன் கசிந்த குறும்புகளினாலேயே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை குறும்படம் வந்தால் என்னவாகுமோ?

Kiruthigan said...

@Subankan //வாழ்த்துகள் கூல் :-)
விரைவில் இசை வெளியீட்டு விழா, வி.ஐ. பி ப்ரிவியூ ஷோ எல்லாவற்றிற்கும் ஓசி டிக்கெட் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்//
மனம்நிறைந்த நன்றிகள் சுபாங்கன் அண்ணா...! முதல்ல எனக்கு மதிசுதா ஓசி டிக்கட் தரணுமே..!

//என்ன இது? ஹீரோ பப்ளிக்கில மேக்கப் போடறார்?//
இவரு படத்துக்காக ஹோம் ஒர்க் பண்ணறாரு.. வெயில்ல நின்னு கறுக்க வைச்சிருக்கோம் அதால ஏசி ரூமுக்கெல்லாம் போக மாட்டாராம்...

//ஒரு கேரவான் கிடையாது, //
வேற வான் தான் நிக்குது...

//ஆப்பிள் யூஸ் கிடையாது,//
ஆப்பிள இங்குள்ள பீப்பிள் யூஸ் பண்றதில்லைங்கறதால ஆப்பிள் யூஸ் கிடைக்காது பழக்டைல இருக்கிற மதிசுதாக்காக வாழைப்பழ யூஸ் ஒண்ணு படத்தில வருது பாத்தி்ட்டு சொல்லுங்க!

// வாட் இஸ் திஸ்? எமது கடுமையான எதிர்ப்புக்களை பதிவுசெய்கிறோம்
- மதிசுதா ரசிகர் மன்றம், அகில உலக கிளை//

ரசிகர்களுக்கு நாம் விடுக்கும் அறிக்கை படப்பிடிப்பு முடிந்துள்ளதால் தலைவர் ஓய்வெடுக்க இமயமலை சென்றுள்ளார்.. விரைவில் வருவார் தரிசனம் தருவார்... அதுவரை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் உடன்பிறப்புகளே! பெறுமையுடன் காத்திருக்கவும் கட்வுட்டுக்கு பாலாலும் தேனாலும் சீராட்டும் காலம் விரைவில்!

Kiruthigan said...

@Nemi
இதயம் நிறைந்த நன்றிகள் நண்பா...!

Kiruthigan said...

@Thava//வாழ்த்துக்கள் கிருத்திகன் கசிந்த குறும்புகளினாலேயே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை குறும்படம் வந்தால் என்னவாகுமோ?//

உளம் நிறைந்த நன்றிகள் தவா சேர்..!
எல்லாம் தங்களிம் குடித்த யானைப்பால்..!
ஆரம்பம் முதலே உங்கள் ஆசீவாதம் எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
படம் வந்த பிறகு எதிர்பார்த்த மாதிரி இல்லையே எண்டு தி்டகூடாது..!

KANA VARO said...

கூல், முயற்சிக்கு ஒரு பெரிய வாழ்த்து..

KANA VARO said...

படத்துக்கு வெயிட்டிங்

Ashwin-WIN said...

வாழ்த்துக்கள் ராஜாக்களா...
அப்டியே படம் வி ஐ பி ஷோ இருந்தா சொல்லி அனுப்புங்கோ.

Kiruthigan said...

@KANA VARO//கூல், முயற்சிக்கு ஒரு பெரிய வாழ்த்து..
படத்துக்கு வெயிட்டிங்//
உளமார்ந்த நன்றிகள் வரோ...!
இது ஒரு கூட்டு முயற்சி உங்கள் வாழ்த்து அனைவரையும் சென்று சேரும்.

Kiruthigan said...

@Ashwin-WIN//வாழ்த்துக்கள் ராஜாக்களா...
அப்டியே படம் வி ஐ பி ஷோ இருந்தா சொல்லி அனுப்புங்கோ.//
நன்றி ராஜா..!
வி ஐ பி ஷோக்கு குடும்ப சகிதம் வருகை தந்து படக்குழுவினரை ஆசீர்வதித்து அதனைத்தொடர்ந்து இம்பெறும் மஹேஸ்வர பூசையிலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டிநிற்கின்றோம்.

sinmajan said...

வாழ்த்துக்கள்.. கலக்குங்கள் :-)

Kiruthigan said...

@sinmajan வாழ்த்துக்கள்.. கலக்குங்கள் :-) ////தங்கள் வாழ்த்துக்கு நன்றி சின்மயன்//

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails