Friday, November 11, 2011

ஜாலியா ஒரு குறும்படம் - யாழ்ப்பாணம்


ஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.
ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது...! பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்


இப்போ கதை வேணுமே...!
யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.

லொகேஷன்...!
பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூர் பொது நூலகம் பஸ்ஸராண்ட் என்பனவற்றோடு ஒருமுறை சுபாங்கன் அண்ணாவோடு யாழ்ப்பாணத்தை சுற்றிவந்து போட்டோ எடுத்தபோது இதையெல்லாம் வீடியோவாக எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்றார். அவரோடு சென்ற சங்கிலியன் சிலை, மந்திரி மனை போன்ற பல இடங்களையும் தெரிவு செய்தோம்.

கதாநாயகன்
ஆறுமுதல் அறுவது வரை ஆறரைகோடி விசிறிகள் கொண்ட கறுப்பு  சூப்பர்ஸ்ராரை போல- நமக்கும் ஒரு சூப்பர்ஹீரோவாக மதிசுதா ஒரு கிழிந்த சட்டையுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து இறங்கினார்(காரக்டராவே மாறுவது என்பது இதுதான்).
இவரோடு பிரசன்னா என்ற மருத்துவதுறையை சார்ந்த ஒருவரும் உள்ளார்.

முதல்நாள் படப்பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் வைத்து மற்ற நடிகர்களுக்கு ஷ்கிரிப்டை கொடுத்து அவரவர் டயலாக்களை சொல்லி கொடுத்த பின் லொகேஷனுக்கு செல்ல சொல்லிவி்ட்டு நாம் அன்றய படப்பிடிப்பு இடமான கசூரினா பீச்க்கு போய்விட்டோம். ஆனால் மற்றவர்களை காணோம் ஒவ்வொருவராக அழைப்பு எடுத்தால் தாம் ஸ்பொட்'ல தான் நிக்கிறோம் என்றனர். சில நிமிட போராட்டத்துக்கு பிறகு அவர்கள் லெகேஷன் என நினைத்து சிலர் பஸ்ஸான்டுக்கும் சிலர் சங்கிலியன் சிலையடியிலும் போய் அங்குள்ளவர்களுக்கு இப்ப இங்க சூட்டிங் நடக்க போகுது என்று பீதியை கிளப்பி வி்டார்கள்.

(இந்த படத்தில் மதிசுதா மதுரன் உட்பட படத்தில் பணியாற்றிய சிலர்

பஸ்ரான்ட் படப்பிடிப்பு
தீபாவளி சனக்கூட்டம் நிரம்பிவழிந்து கொண்டிருந்தாலும் சன நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தையே தெரிவு செய்தோம். கமரா ரோல் ஆகிகொண்டிருக்கும் போது கமராவுக்கு குறுக்கே யாரும் வந்து விடாமல் எம்மோடு இருந்தவர்கள் நாலா பக்கமும் நின்று பார்த்துக்கொண்டாலும் பல ரீ டேக்குகள் எடுக்கவேண்டியானது. ஒரு பழக்கடையில் உசிரை குடுத்து நடித்துக்கொண்டிருந்த மதிசுதாவிடம் பலர் பொருள் விலை கேட்க சிறிது நேரம் ஒரு துறைசார் வல்லுனர் போல் பழ வியாபாரி ஆகி நடத்திக்கொடுத்தார்.

அங்கிருந்த சிலர் தம்மையும் படத்தில் எங்காவது இணைத்து கொள்ளுமாறு கேட்டனர். சிலர் திட்டு வாங்கினாலும் குறுக்கே நடந்து தம் முகத்தை கமராவுக்கு காட்டிய படி வரலாற்று சாதனை புரிந்தார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு 9மணியளவில் பருத்திதுறையிலிருந்து டப்பிங்குக்காக வந்து கொண்டிருந்தார் மதிசுதா அன்று விஜய் படம் ரிலீசாகி அவருக்க்காக ப்ஸ் நிலையத்துக்கருகில் நின்றிருந்த படக்குழுவினர் அனைவரும் 500/= டிக்கட்டை ஒரு நல்ல உள்ளம் ஓசியில் எடுத்து தந்ததால் தியேட்ருக்குள் சென்று விட்டோம்.  மதிசுதா பஸ் நிலையம் வந்தும் திரையரங்குக்கு வராமல் சென்று இடையில் மழை குறுக்கிட்டதால் வீதியில் ஓய்வெடுத்து காலை 5மணியளவிலே வீடு சென்றார். அவருக்காக எடுத்த டிக்கட்டை 1000ரூபாக்கு ஒரு உயிர் ரசிகருக்கு ப்ளாக்கில் விற்று இன்னுமொரு சாதனை நிலைநாட்டினோம் அன்று மதிசுதா என்ற புன்னகை மனிதருள்குள் இருந்த காலசுவடுகளின் வைராக்கியத்தை கண்டு வியந்து போனேன்.

இந்த குறும்படத்தின் முகப்புத்தக பக்கம் இது http://www.facebook.com/யாழ்ப்பாணம் இங்கே ஏனய புகைப்படங்கள் செய்திகள் எதிர்(பார்)ப்புகள் பகிரப்பட்டுள்ளது.

எம் படம் பற்றி செய்திகள் பகிர்ந்த ஊடகங்களுக்கு படத்தில் மட்டுமல்ல எம் தனிப்பட்ட நன்றிகளும் கூட..!

இப்போது Sound edit டப்பிங் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது இன்னும் சில நாட்களில் வெளியிட தயாரக உள்ளோம். உற்சாகமூட்டிய அனைவருக்கும் எம் உளமார்ந்த நன்றிகள்.

அடுத்துள்ளது படப்பிடிப்பின் போது இடம்பெற்ற சில சீரியஸ்ஸான சீக்கின்ஸ்...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, October 29, 2011

அவசரமாய் ஒரு குறும்படம் - அவசரம்

நான் பணியாற்றிய மூன்றாவது குறும்படம்.


ஒரு இளம் காதல் ஜோடியின் காதலையும் அடுத்து நண்பர்களின் உதவியோடு நடக்கும் அவசரக்கல்யாணத்தையும் அடுத்து நடக்கும் சில சம்பவளையுமே சொல்ல வந்திருக்கிறது இந்த குறும்படம். இந்த குறும்படத்தில் நானும் சம்மந்தப்பட்டிருப்பதால் குறை நிறைகளை விமர்சனம் செய்வது நடுநிலையாக இருக்காது என்பதால்.. சிலஇனிய படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்கின்றேன்.
ஒரு காதல் காட்சியில் கதாநாயகி ஆக்டிவ்வாக பர்போம் செய்துகொண்டிருந்தபோது குறுக்கே வந்த போலிசார் பல மணி நேர விசாரணைகளுக்கு பின்பே இது குறும்படப்பிடிப்பு என அடையாளங்கண்டார்கள்.( அது ஒரு வெளிநாட்டு சணல் வெளியிட்ட ஆவணத்தால் சகோதர மொழியினர் சர்வதேசத்திடம் புகழ்மாலை வாங்கி சூடிக்கொண்ட நேரம் என்பது குறிப்பிடத்தக்கது)
எம்மை வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்கள் வெளியீட்டுக்கு வந்திருந்தவர்கள் எம்மோடு புகப்படங்கள் எடுத்துக்கொண்டது மேலும் என்னை வலுப்படுத்த தூண்டுகிறது...! தற்போது யாழ்ப்பாணம் Town Site கடைகளுக்கு போனாலும் நீங்க அவசரம் Short Movieல நடிச்சீங்க தானே..! என கேட்டு பலவருடம் பழகியவர்கள் போல் புன்னகைக்கிறார்கள். இவர்கள் பாசத்துக்கு நான் தகுதியானவனா என எண்ணும் போது அடுத்து சமூகத்துக்காய் குறும்படத்தில் ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கின்றது...!
தம்பீ அதை அப்புடி பண்ணியிருக்கலாம் இதை இப்புடி பண்ணியிருக்கலாம் போன்ற மூத்தவர்களின் உரிமை கலந்த விமர்சனங்களை எனது இப்போது இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும் படமான 'யாழ்ப்பாணம்' Short Filmல் நிறைவு செய்ய முயன்றிருக்கிறேன்.
போட்டோ ஆல்பம்
(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது க்ளிக்செய்க)
திரையில் எம்மை பார்த்து படம் பார்த்தவர்களிடமிருந்து கிடைத்த கரகோஷம் க்ளைமாக்சுக்குமுதலில் வரும் “ பொண்ணை தூக்கறோம் மச்சி நாளைக்கு உனக்கு கலியாணம்டா...!“ என்ற எனது வசனத்தின் போது எழுந்த விசில்கள் எமக்கான இனிய அங்கீகாரம்.

ப்ரோமோ போஸ்ட்டர்


அறிமுகவிழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர்

Music கலையகத்தில் அவசரம் குழுவினர்

இலங்கையின் ஏனய சினிமா துறை சார்ந்தவர்களோடு எம் குறும்பட டீம்

பல்கழைக்கழகத்தில் அவசரம் திரையிடப்ப்டபோது...!

படம் வெளியீடு முதல் ஷோ..!

திரைப்பட இயக்குனர் கேசவராஜாவுடன் குறும்பட இயக்குனர் மற்றும் நடிகர்


இது படப்பிடிப்பின் லொகேஷன் தெரிவுசெய்யும் போது நான் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள்...!

இது அவசரம் குறும்பட ட்ரெய்லர் 1




இது அவசரம் குறும்பட ட்ரெய்லர் 2



நன்றி நண்பர்களே! தங்கள் கருத்துக்களை கீழே தெரிவிக்கவும்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, May 25, 2011

pirates of the caribbean 4 விமர்சனம்

pirates of the caribbean 4
மீண்டும் கப்டன் ஜாக்ஸ்பைரோ..
pirates of the caribbean 1 ல் நீரில் மூழ்கும் படகிலிருந்து எதுவுமே நடக்காதது போல் இறங்கி வந்து அறிமுகமானார்

pirates of the caribbean 2ல் கடலில் மிதக்கும் பிரேதப்பெட்டிக்குள்ளிருந்து பிணம்தின்ன காத்திருக்கும் காக்கையை சுட்டபடிவெளிவந்தார்

pirates of the caribbean 3ல் தன்னைப்போலவேயிருக்கும் தன் நினைவு உருவங்களுடன் உரையாடியபடி அறிமுகமானார்

pirates of the caribbean 4 குற்றவாளிக்கூண்டிலிருக்கும் தன் நண்பனை காப்பாற்ற நீதிபதியாக வேடமிட்டவாறு இன்ரடக்ஷன்...(முன்பு காட்டுவாசிகளின் தலைவனாக வந்தது போல..)
இங்கு கடற்கன்னிகளை 3D வடிவில் கொண்டுவந்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

முழுக்கதையையும் இங்கு சொல்லி எதிர்பார்ப்பை குறைக்க விரும்பவில்லை

வழக்கம் பேலவே வசனங்களில் அதே நக்கல் அதே இலட்சிய வெறி..
பழைய காதலர்கள் கதாநாயகி கதைப்படி பத்துவருடம் கழித்து தான் சந்திப்பார்களென்பதால் இம்முறை அவர்களின் பதினொரு வயது மகன் இக்கதையிலுள்ளார்


இயக்குனர் தொடர்ந்து முதலிடத்திலிருப்பது உறுதி
ஜொன்னி டப் வழக்கம் போல நடிப்பில் தூள் கிளப்புகிறார்(பின்ன சும்மாவா 200கோடி டாலர் வாங்குகிறார்) 
புது கதாநாயகி மேலும் அமர்க்களப்படுத்துகிறார். கூடவே இளைம தெறிக்கும் கடற்கன்னி பொண்ணும்...

மேலும் அதகளப்படுத்தும் காட்சிகளாக...

  • குதிரை வண்டியில தப்பிக்கும் காட்சிகள் 
  • கடற்கன்னிகள் மனிதருடன் போரிடும் காட்சிகள் 
  • ஜாக் மலையிலிருந்து குதிப்பது 
  • பர்போஸா அறிமுகம் 
  • கடற்கன்னி  அடைக்கப்பட்டிருக்கும்கண்ணாடி தொட்டி உடையும் காட்சி 
  • ஜாக்ஸ்பைரோவை தென்னை மரத்துடன் சுற்றிக்கட்டிய படியே கட்டை கழற்றாமல் மர உச்சிக்கு ஏறும் காட்சி
  • கடற்கன்னிகள் சண்டையிடும் சீன்
  • மனிதனும் கடற்கன்னியும் கண்களாலேயே காதலிக்கும் காட்சிகள்
  • தன் இலட்சியத்துக்காக தந்தை மகளையே பலியிட துணியும் காட்சிகள்...

இன்னும் நிறைய 3D காட்சிகள் மூன்றுவருட உழைப்பை வெளிப்படுத்துகின்றன. இயக்குனருக்கு ஷொட்டு வசனகர்த்தாவுக்கு குட்டு ஹீரோயினுக்கு லட்டு எல்லாம் விமர்சனத்தில் கொடுக்குமளவுக்கு நான் வித்தகனல்ல...
ஹென்ஸ் ஜிம்ன்ஸ் இசை ஏற்கனவே பழக்கப்பட்டதாயிருந்தாலும் விறுவிறுப்பை கூட்டி காட்சிகளை மெருகேற்றுகிறது.

எதிர்பாபர்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமில்லாத படம்.
ஏனயவர்களுக்கு எதிர்பார்க்காதளவுக்கு ஆச்சரியப்படுத்தும் படம்.

நன்றி



இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, January 1, 2011

புது பொலிவுடன் புதுவருடம் ஆரம்பம்

நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails