இயக்குனர் மெண்டிஸ் இயக்கத்தில் கவிமாறன் மற்றும் பலரது நடிப்பில் எனது எடிட்டிங் அன்ட் பின்னணி இசையில் உருவான குறும்படம் கரும்பலகை.
கன்டிகேம் எனப்படும் கேமராவில் மிக நீ......ண்ட ஒளிப்பதிவில் எடுக்கப்பட்டு ஃப்ரேம் பை ஃபரேமாக வெட்டி இருபது நிமிட குறும்படமாக எடிட் செய்தோம்.
2010ம் ஆண்டு வெளியவதற்கு சில நாட்களே இருந்தநிலையில் இரவு முழுவதும் சில நாட்கள் எடிட்டிங் அன்ட் பின்னணி இசை வேலைகள் தொடர்ந்தது. இது கவிமாறனின் முதலாவது சினிமா பிரவேசமாக அமைந்தது. (பின்நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முதலாவது திரைப்படத்தை கவிமாறனே இயக்கி நடித்திருந்தார்.)
இக்குறும்படம் பல விருதுகளையும் பெற்றுக்கொண்டது.
இதில் பணியாற்றிய அனைவருக்கும் விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
இதில் பணியாற்றிய அனைவருக்கும் விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
பணியாற்றியவர்கள் - சத்திய மெண்டிஸ், கவிமாறன் சிவா, கிருத்திகன் .
குறும்படம் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்ற சீரியஸ்னஸ் கொஞ்சம் கூட இல்லாமல் டேக் இட் ஈஸி பாலிசியில் விளையாட்டுதனமாக படவேலைகளை முடித்துவிட்டு நண்பர்களுடன் விளையாட போன ஒரு சோம்பலான மாலையில் வந்து சொன்னார்கள்...
'நீங்க செய்த கரும்பலகை Short Film அவார்ட் வின் பண்ணிடுச்சு'.
இதில் நடித்திருந்த பெரியவர் தற்போது நம்முடன் இல்லை.
0 comments:
Post a Comment