கடைசியாக மலைநாட்டு சுற்றுலா சென்ற போது நண்பர் வீடடிலிருந்து புறப்பட்டோம் பஸ்சுக்காக காத்திருந்து தமிழர் மரபுப்படி பஸ் வந்த பிறகு சாவகாவமாக வெளிக்கிட்டு இளித்து கொண்டு நான் புறப்பட தயார் என்றார் நண்பர்.
அப்போது எமக்கு தெரியவில்லை தான் அவரின் கடைசி சிரிப்பு என...
இப்போது பஸ் அந்த ஐயாவின் வீட்டிலுள்ளவர்களை பிக்கப் பண்ண போய் நின்றது..
அவரின் பாரியாரும் நாலு மகள்களும் ஏறக்குறைய வீட்டிலுள்ள எல்லா சாமான்களையும் பஸ்ஸினுள் திணித்தனர்.
அப்புறம் வீட்டு நாயிடமிருந்து பிரியாவிடை..
அந்த காட்சியை கண்டால் கல்லும் கண்ணீர் வடிக்கும் இப்படி ஒரு இரக்க சிந்தனையாளர்களா என்று..
பிறகு இருவர் உக்காரும் இருக்கையில் ஆளுக்கொரு சீட்டில் இருந்து கொண்டு ஆளயாள் பார்த்து சிரிக்க “பஸ் ஓட வெளிக்கிட காத்து வரும்“ என்றா அந்த ஆன்டி...
சில இளைஞர்கள் நின்று வந்தாலும் ஒருகட்டத்தில் மற்ற நண்பர்களின் மடிகளில் உக்கார்ந்த போதும் சிலர் வாந்தியெடுத்த போதும் அவர்கள் எழுந்து ஒரே சீட்டில் இருக்கவில்லை..
இடையில் ஐயா ஏதும் கதைக்க போய் அனைவர் முன்னாலும் அவர் பல்லு பறப்பதை விரும்பாததால் அவர் ஏதும் கதைக்கவில்லை போலும்..
எம்மோடு வந்த ஒண்ணரை வயது பையனை சிறிது நேரம் தூக்கி வைத்திருந்த என் நண்பன் சொன்னான்.. அடேய் அந்த ஆண்டி பையனை பார்த்து சொன்னவ “குளப்படி செய்யுறியோ.. நான் கிழவியா வந்தாப்பிறது நீ செய்த குளப்படியெல்லாம் உனக்கு சொல்லி காட்டுன் எண்டு இப்ப மட்டும் என்ன இவ பதினாறு வயதிலயோ இருக்....“ சொல்லி வாய் மூடமுதல் மனுசி திரும்பவும் வந்து பையன் கன்னத்தை கிள்ளி
“தம்பி என்னை அக்கா எண்டெல்லோ கூப்புர்றான்“.
நண்பனுக்கோ கடுப்பில் முகம் சிவந்துவிட்டது. எனக்கோ சிரிப்பை அடக்குவதற்காக பக்கத்திலிருந்த மரக்கொப்பை திரும்பிநிண்டு பல்லால் கடிக்கவேண்டியிருந்தது...
இத்தனைக்கும் அவ இந்த வருசத்தில வாற மூண்டாவது ரூறாம் இது..
அடுத்தநாள் விடிய 3 மணிக்கு முளிப்பு வந்து எழுந்து பார்த்தபோது பாத்ரூமில் குளிக்கும் சத்தம் அன்ரியின் படுக்கை மட்டும் காலியாயிருந்தது..
3.30க்கு எழுந்து பார்த்த நண்பன் சொன்னான் பார்றா அன்ரி காலமயே சிம்ரன் உடைல நிக்கிறா..
திரும்பி சிமரனை பார்த்த போது சிரிப்பை அடக்க தலயணையை இறுக்கி கடிக்க வேண்டியிருந்தது..
(எக்கு தப்பா கற்பனை பண்ணாதீங்கோ.. சாறி கட்ட முயற்சி பண்ணிகொண்டிருந்தா..)
பக்கத்தில படுத்திருந்த றைவர் சொன்னார் “தம்பி 8 மணிக்கு தான் பஸ் வெளீல வெளிக்கிடுவம்“
அடுத்து நாலு மகள்களும் குளித்து முடித்தனர்..
இதற்கிடையில் வெற்றிகரமாக வெளிக்கிட்டு முடித்த அன்ரி வாத்து தன் குஞ்சுகளை பார்ப்பது போல் கதிரையில் இருந்து மகள்கள் வெளிக்கிடுவதை பூரிப்போடு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்..
இப்பதானே 5.30ஆகுது 8மணிவரையும் என்ன செய்ய போகினம் எண்டு யோசிக்கும் போதே ஒரு லகேஜிலிருந்து மினி ப்யூட்டி பார்லரையே அந்த ஹாலில் சிருஷ்டித்து காட்டினார்கள்...
ஏகப்பட்ட க்றீம்கள் பிறஸ்கள் தலைக்கு டைகள் பஞ்சுகள் எல்லாம் வைத்து மேக்கப் போட்ட அந்த காட்சியை நீங்களும் மனத்திரையில் கொண்டு வரவேண்டுமெனில் எங்காவது அக்ஸிடன்ற் பட்ட காருக்கு டிங்கர் வேலை செய்யும் சீனை நினைத்து கொள்ளவும்..
நாலு மகள்களும் செல்போன் வைத்திருந்தாலும் சிம்ரன் அன்ரி ஒரு CDMA போன் வைத்திருந்து நடப்பதையெல்லாம் வெளிநாட்டிலுள்ள யாருக்கோ நேரடி வர்ணனை செய்த வண்ணம் இருந்தா...
நண்பன் சொன்னான் நல்ல வேளை குளிர் பிரதேசம் எண்டபடியா CDMAயோட தப்பீட்டம் பாலைவனத்துக்கு போயிருந்தமெண்டா ஃப்ரிஜ் எல்லாம் பஸ்சுக்க ஏத்தியிருப்பினம்..
இடையில ஒரு பொம்மைக்கடையில அழகான பொம்மை ஒண்டு பொம்மை வித்து கொண்டிருந்தது பொடியளெல்லாம் பொம்மை விலைகளை படுசிரத்தையாக விசாரித்துகொண்டிருந்தபோது அங்கு வந்தது சிம்ரன் அன்ரி & கோ.
அரைவாசி பொம்மைகடையை பஸ்சுக்குள் ஷிஃப்ட் ஆக்கினார்கள்..
அந்த ஐயாவோ முற்றும் துறந்த ஞானி போல் முகத்தை வைத்திருந்தார்...
(போன ஜென்மத்துல மனுசன் யாருக்கு என்ன பாவம் பண்ணியிருக்குமோ..!)
மீண்டும் பஸ் புறப்பட்டது அன்ரி CDMAயில் யாருக்கோ சொல்லி கொண்டிருந்தா
“இண்டக்கு நாங்கள் பெரிசா சிலவளிக்கேல்ல”