கடவுள் நேர்த்திகளில் பலி கொடுத்தலை அடுத்து பிபலமானது தீ மிதித்தல் ஆகும்..
உடம்பில் மஞசள் நீரை ஊற்றியபடி.. அரோகரா ஒலி வானைப்பிளக்க..
மேளதாளம் முழங்க தீ மிதிப்பவர்கள் நெருப்பை தாண்டிய படி செல்வார்..
பின் அவரை பேட்டி கண்டால்.. தனக்கு இறைவன் அருளால் தீ ஒன்றும் செய்யவில்லை என்றும்.. உண்மையான பக்தி இல்லாதவர்களுக்கு கால் வெந்துவிடும் என்றும் அதற்கு 2 உதாரணங்களும் கூறுவார்..
இது கடவுளின் ஆசி பெற்றவர்களால் மட்டும் தான் முடியுமா? நாம பண்ணினா தெய்வ குத்தமாயி சாமி கண்ண குத்திடுமா? இல்லைனா கால் சுட்டுடுமா?
8அடி நீளம் 2 அடி ஆழம் 1/2அடி அகலம் உள்ள குழி ஒன்றை வெட்ட வேண்டும்..
நிறைய விறகுகளை குவியலாக அடுக்கி பற்ற வைத்து நன்றாக எரியவிட வேண்டும்..
நெருப்பு தணல்கள் கட்டி கட்டியாக இருக்கும் போதே குழி முழுவதும் நன்றாக பரவிவிட வேண்டும்..
அவ்வப்போது உப்புதூளை கொட்டி விசிறி விட வேண்டும்..
கட்டாயம் நெருப்பு தணல்கள் கனண்று இருக்க வேண்டும் முக்கியமாக சாம்பல் இருக்கவே கூடாது..
தீ மிதிக்கும் முன்பு கால்களை தண்ணீரில் அவம்பி விட்டு நெருப்பு மீது வேகமாக நடக்க வேண்டும்..
பெண்களாக இருந்தால் காலில் அணிகலன்கள் இருக்கவே கூடாது..
யார் ஆசைப்பட்டாலும் தீ மீது நடக்கலாம் கால் சுடவே சுடாது..
எச்சரிககை:
ஏற்கனவே பயிற்சி பெற்ற ஒருவர் முன்னிலையில் அவரின் வழிகாட்டலோடு செய்து பார்க்கவேண்டும்..
எப்படி இது சாத்தியப்படுகிறது..?
காலிலுள்ள தோல் வெப்பத்தை உணர 3 நொடிகள் எடுத்துக்கொள்ளும் அதற்குள் கால்களை இடம்மாற்றி நடக்கும் போது..
தீ மிதிப்பது எல்லோராலும் சாத்தியப்படுகிறது..
தொடர்ந்து உயிரோடு புதைத்தவர் மண்ணிற்குள்ளிருந்து மீண்டு வருதல்..
வெறுங்கையில் விபூதி வரவளைத்தல்..
தானாக தீப்பிடிக்க வைத்தல் இன்னும் பல சுவாரசியமான சாமியார்களின் சாதனைகள் பற்றி பொழுதுபோக்காக பார்ப்போம்..
நன்றி நண்பர்களே!
மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக விபரிக்கும் இது போன்ற பதிவுகள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென நினைத்தால் மேலே தமிழ் மணம் உட்பட கீழுள்ள Vote Buttonகளில் வாக்களியுங்கள்.
3 comments:
தலைவா நீங்க சொல்லுறது சரி ஆனா இந்து மத கொள்கைகள் எல்லதையும் ஒட்டு மொத்தமாக குறை கூற முடியாது,, இப்படி 3 விநாடில தீ கடக்க முடியும் என்டத கண்டுபிடிச்சது இந்து மதம்,, எனோ தெரியல்ல இப்போது எம் மதத்துக்கு சோதனைக்காலம் இந்த கள்ள சாமிகளால்,,
@thiruthanigesan
அடேய் Brother..!
மதங்கள் புனிதமானவை..
எமக்குமேல் ஒரு சக்தி உண்டென்பதை நான் உணர்ந்திருக்கிறேன்..
மத நெறி மத வெறியாவதால் ஏற்பட்ட உயிர்சேதங்களையும் அறிந்திருக்கின்றேன்..
நான் எந்த மதத்தையும் குறை கூறவில்லை..
இந்து மீது எனக்கு இருக்கும் பற்று என் அன்னைக்கு அடுத்த படியானது...
எத்தனையோ சம்பிரதாயங்களுக்கு விஞ்ஞாக விளக்கங்களை அதிகமாக கொண்டது எம் மதம்..
ஆனாலும் எம்மதமும் சம்மதம்..
இந்து மதம் வளர்ப்போம்,,,,,,,,,,,,,
Post a Comment