மனசை திறந்து வைடா மச்சான்!
தமிழ் பொழுதுபோக்கு ப்ளாக்கரின் 50வது பதிவு.
Cool Boy, யாழ் மண்ணின் மைந்தன், திருத்தணிகேநன், சிந்துஜன் என
பொழுது போக்கின் Bloggers - நான்கு ஸ்ரார்ஸ்.
சிந்துஜன்
செம ஸ்டைலிஷ் பார்ட்டி!
நான்ஸ்டாப் கல கலா பேச்சு தான் அவனின் ஸ்பெஷல்.
கவிதை திறமைக்கு தசரதன் மைந்தன் CBZ ஓட வைச்சதிலிருந்தே இவர் திறமை தெரிஞ்சிருக்கும்..
சாட்டிங் பிரியன்.. செல்போன் பிரஜை.. கொஞ்சம் குண்டு.. கிரிக்கட் புலி..
(முகத்துல ஒரு கைதேர்ந்த எழுத்தாளனுக்குரிய களை தாண்டவமாடுறாப்ல இருக்குல்ல..!)
யாழ் மண்ணின் மைந்தன்
செம ஸ்மார்ட் மனுசன்..
சொந்த ஊர் Jaffna என்றாலும் இப்போது Colombo பையன்..
“இரகசியம் கசியும் வாய் இருந்தால்
தேசியம் அழியும் பகை நெருப்பால்“
தேசியம் அழியும் பகை நெருப்பால்“
பிறந்தோம் வாழ்ந்தோம் பத்தோடு பதினொன்றாய் கும்மியடித்தோம் சென்றோம் என்று இருப்பதில் இஷ்டமில்லை அண்ணாச்சி
அதிகமா பேச விரும்பலை செயல்ல காமிப்பேன்ங்கிறார்..
விமர்சன வித்தகன்..
இளமை ப்ளஸ் இனிமை = மண்ணின் மைந்தன்
பெண் ரசிகைகள் அதிகமுள்ளவன் இவன் தான்..
திருத்தணிகேசன்
கோடம் பாக்கத்திலிருந்து கடுப்பை பட்டையைக் ! கிளப்பும் இளம் புயல்..!
லயலா கல்லூரி ஸ்டூடண்ட்
சினிமாவும் இவர் இலட்சியங்களிலொன்று..
திடுப்ன்னு வெள்ளித்திரையில் கண்டா காண்டாயிடாதீங்க..!
எல்லாரும் ரசிக்கிற மாதிரி
பெரிய எண்டர்டெய்னர் ஆகணும் பாஸ்..
அதான் லட்சியம்.. என்கிறார் இவர்.
Cool Boy
Software இலட்சியம்..!
டீன் ஏஜ் டிக்கட்லயிருந்து ஸ்வீட் பார்ட்டிகள் வரைக்கும் Followers இருக்கே(நெனப்பு தான்!) எப்டினு நீங்க கேட்டா “அது ரொம்ப சிம்பிள் பாஸ்.. மனசை திறந்து வைடா மச்சி எதிர்ல எதிரியே இருந்தாலும் நேசிங்கிறது தான் நம்ம பாலிசி! நம்ம மனசை திறந்து வைச்சா லட்சம் பறவைகள் உள்ளே வரும் சிலது கொத்திட்டு போயிரும் சிலது கூடே கட்டி குடியேறிடும் ஆனா அதுக்காக பிரச்சனைக்கு பயந்து கிட்டு பூட்டி வைச்சா அத்தனை பறவைகளும் பறந்து போயிரும்னு எங்கயோ படிச்சேன்.. அது தான் நம்ம பார்முலா...!
பைக்ல ரவுண்டஸ் போறதுதான் ஹாபி ஆனா எழுபது கிமீ க்கு மேல போமாட்டேன்.. ஏன்னா நமக்கு சத்தம் புடிக்கும் ஆனா ரத்தம் பிடிக்காதே தலைவா..!“
மருத்துவ துறையில்
மைல்கல்லாய் இருக்கபோகும் இளைஞன்..
ஆனால் மனமோ சே குவோரா..
விடிய விடிய டிவிடி பார்த்துட்டு
விடியும் போது உறங்குவது இவன் பொழுது போக்கு...
இவன் போகும் இடமெல்லாம் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது..
இவன் சாதாரணமா பேசினாலே லெள்ளு தாங்காது..
இனி வருங்காலங்களில் பதிவுலகம் நிம்மதியா தூங்காதுன்னு நெனைக்கிறோம் (அவ்வளவு மொக்கை....!)
வாழ்த்துக்கள்..!
50வது postக்கே இவ்வளவு அலப்பறை பண்ணினதுல கடுப்பாயிருந்தீங்கன்னா Sorry..
(ஏன் Englishல Sorry சொல்றோம்னா “மன்னிப்பு“ தமிழ்ழ எமக்கு பிடிக்காத வார்த்தை..)
விரைவில் 500வது post ல் சந்திப்போம் (ஆத்தீ..! அதுக்குள்ளயா..?..)
1 comments:
வேற்றுக்கிரக பதிவர்களாயிருக்கீங்க..!
(வித்தியாசமானவய்ங்க..)
உங்க கனவுகள் மெய்ப்பட வாழ்த்துக்கள்..
கலக்குங்க..
Post a Comment