இளைய தளபதி அன்புத் தளபதி இனிய தளபதி இதய தளபதி தனது குருவி படத்தின் மூலம் உலக படங்களை எல்லாம் ஓட விட்டு எட்டி உதைத்து ஆஸ்கார் அவார்ட் வாங்கிய நடிப்பின் சிப்பி மேதகு டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில்(இவருக்கும் நடிப்பிக்கும் சம்பந்தம் இல்லை)உருவாகிய , அவரது 50 வது படம் சுறா.
ஐந்து பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு மட்டும் படம் நடிக்கும் உன்னதமான நடிகர்களில் இவர் முதன்மையானவர் என்பது யாவரும் அறிந்ததே. இந்த படத்தில் இவர் முதன் முதலாக மீனவ கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார். (எங்களுக்கு தெரியாத இவரது ஆஸ்கார் பெர்போர்மான்ஸ் எப்பிடி இருக்கும் என்று) இனி சுறா படத்தின் கதைக்கு வருவமா.
இவர் மீனவனாக நடிப்பதால் கண்டிப்பாக படத்தின் ஆரம்பத்தில் ஒரு படகு போட்டி இருக்கும்.ஒரு சாதாரண ஓட்டை படகை வைத்து கொண்டு போட்டிக்கு வருகின்ற எல்லா படகுகளையும் தண்ணீரில் பறந்து பறந்து ஓட ஓட விரட்டி பிடிப்பார்.பிறகு வெற்றி பெற்றவுடன் எல்லாரும் இவரை தூக்கி கொள்ளுவார்கள் அதில இவரது அறிமுக பாடல் ஆரம்பிக்கும் ( இதை சொல்லிய தெரிய வேணும் இதைத்தானே இவர் எல்லா படத்திலும் செய்கிறார்)
படகு போட்டி இல் இவர் வென்றவர்களில் படத்தின் வில்லன்களில் ஒருவரின் தம்பி இருப்பார்.(கதை போய்கொண்டு இருக்கு நாங்க எதிர் பார்க்கிறதை காணவில்லை வேற என்னவிஜய் அவர்களின் பஞ்சு டயலாக் தான்) பிறகு இவரும் இவரது நண்பர்களும் கடக் கரையில் இருந்து மொக்கை போட்டு கொண்டு இருப்பார்கள். அப்போது ஒரு வில்லன் ஒருவரை துரத்தி கொண்டு வந்து இவர் கண் முன்னே அரிவாளால் வெட்டி கொல்லுவார் .இவர் அதை பார்த்தும் பேசாமல் இருந்து விடுவார் .பிறகு அதே வில்லன் இவரது இடத்திக்கு வந்து ஒரு பெண்ணை மானவங்க படுத்த முற்படும் போது திடீரென வில்லன் முப்பது அடி தூரம் விழுந்து கிடப்பார்.(வேற என்ன விஜய் அவர்களில் கை பலம் தான் ).பிறகு விஜய் அவர்கள் எல்லாரையும் பறந்து பறந்து விரட்டி அடிப்பார் .(படத்தின் ஹீரோ இவர் தானே இவர் தானே செய்ய வேண்டும்) பிறகு பஞ்சு டயலாக் -. உன் வலையில் விழுவதற்கு புறா அல்ல நான் .சுறா சுறா ... பேசுவார்(கத்துவார் ) பாருங்கோ ஐயோ அம்மா தாங்க முடியாது.
படத்தில் கண்டிப்பாக தமன்னா பணக்கார பெண்ணாகவும் ஆங்கிலம் தெரிந்த பெண்ணாகவும் திமிர் பிடித்த பெண்ணாகவும் நடித்து இருப்பார் .கண்டிப்பாக இவருக்கும் தமன்னாவுக்கும் சண்டை வரும்.இவர் பிறகு இவர் தமன்னாவின் திமிரை அடக்குவார் .பிறகு ஒரு நாள் தமன்னாவை வேற ஒரு வில்லன்கள் கலைக்கிறது போல ஒரு காட்சி வரும் அதில இவர் மறுபடியும் பறந்து பறந்து அடித்து தமன்னாவை காப்பாத்துவார்.பிறகு தமன்னா காரில் செல்லும் போது இவர் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறது போல ஒரு சீன் வரும்( பல ஆண்டு காலமா இதை தானே செயுறாங்க) தமனாவுக்கு இவர் மேல காதல் வந்து விடும்.பிறகு இவரும் கதைப்பார். பிறகு பாண்டிசேரி ல இருந்து சுவிஸ் க்கு டுயெட் பாடி விட்டு வருவாங்க.(வழமையாக நடக்கிறது தானே )
பிறகு தான் தெரிய வரும் தமனாவின் அப்பா ஒரு பிரபல தாதா என்று. அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு காட்டுவார் (இதை தானே எல்லா தமிழ் படத்திலும் காட்டுறாங்க) பிறகு இவர் அவர்களுடன் சூப்பர் மானாய் விட பறந்து பறந்து சாகசங்களை காட்டி அடிபடுவார் .பிறகு கதைக்கு சம்பந்தமே இல்லாத பல வில்லன்கள் வந்து போவர்கள்.அவர்களையும் துவைத்து எடுப்பார் .பிறகு மக்களுக்கு அநீதி செய்கின்ற அரசியல் வாதி ஒருவருடன் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார் .(ஹீரோ வேஷம் என்றால் சும்மாவா) பிறகு மக்கள் ஆதரவு இவருக்கு இருக்கும். இவர் மக்களுக்கு உதவிகள் பல செய்கிறது போல சீன் வரும் .இவர் உடனே அரசியலில் குதித்து விடுவார் (இவரிட எதிர் கால திட்டமே அதுதானே . விஜய் அரசியலுக்கு வரலாம் இவரின் சினிமா தொல்லை கொறையும் ) இவர் ஒரு ஐந்து நிமிட பாடலில் தேர்தலில் வென்று அமைச்சர் ஆகிடுவார்.(இவர் ட நடிப்பு திறமைக்கு அமெரிக்காவுக்கு கூட ஜனாதிபதி ஆகலாம் )
இருந்து விட்டு அப்ப அப்ப இவரும் தமனாவும் செய்கின்ற மொக்கை கட்சிகளை கட்டுவாங்க(படத்தில சாங் இருக்கு மறந்திட வேண்டாம் எண்டு காட்டுறதுக்கு தான் ) படத்தின் கடைசி இல் கதைக்கு பொருத்தம் இல்லாத ஒரு செண்டிமெண்ட் அதில இவரின் அம்மா இல்லது அப்பா சம்மந்த பட்டதாகவே சீன் வரும் அதில இவர் அழுகிறது போல விக்கி விக்கி சிரிப்பார்.(இது ஆஸ்கார் பெர்போர்மான்ஸ்) படத்தின் கடைசி கட்டத்தில் இவர் 1000 வில்லன்கள் வருவார்கள் பிறகு எல்லா வில்லன்களையும் அடித்து விட்டு பஞ்சு டயலாக் பேசுவார் .இதை பார்த்தவுடன் தமனாவின் அப்பாவே இவருக்கு சம்மதம் சொல்லுவார்.இது தான் சுறா படத்தின் கதை .
குறிப்பு . டாக்டர் விஜய் அவர்களின் ஆஸ்கார் பெர்போர்மான்ஸ் பார்க்க முடியாமல் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் சீக்கிரமே கிளம்பிடார் .சுறாவின் 100வது நாள் கொண்டாடத்தில் மீண்டும் சந்திப்போம்( வேற என்ன 30நாள் ஓடின வேட்டைக்காரன் படத்தை 40நாள் என்று போஸ்டர் அடித்து போட்டவர்கள் தானே)
18 comments:
அடேங்கப்பா..
படம் வரமுன்னமே கதைய வெளியிட்டு பரபரப்பு பண்ணீட்டியேப்பு..
இருந்தாலும் அவர்ண்ட விசிலடிச்சான் குஞ்சுகள் வழக்கம் போல 100நாள் வெற்றிவிழா எல்லாம் கொண்டாட தான் போகுது..
Keep Rocking..
ungalukku vijayja pathu poramai..
ajith taan todarnthu tolvi padam nadikirar..
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
http://www.thalaivan.com/button.html
Visit our website for more information http://www.thalaivan.com
vijay nadikurathu ellamey eppoluthu lost movie than . ajith always better then vijay
// ஐந்து பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு மட்டும் படம் நடிக்கும் உன்னதமான நடிகர்களில் இவர் முதன்மையானவர் என்பது யாவரும் அறிந்ததே.//
எகிடு தகுடா அடிக்கிறியே ராசா.....
Anonymous said...
ungalukku vijayja pathu poramai..
ajith taan todarnthu tolvi padam nadikirar..
HAHAHA
konjam intha video'vayum paarunga
http://www.youtube.com/watch?v=7qzwfYnhI0c
Anonymous said...
ungalukku vijayja pathu poramai..
ajith taan todarnthu tolvi padam nadikirar..
HAHAHA... intha video'vayum parunga...
http://www.youtube.com/watch?v=7qzwfYnhI0c
நல்லாயிருக்கு மண்ணின் மைந்தன், நான் வேட்டைக்காரன் பார்க்கமலே விமர்சனம் எழுதினேன். நீங்க படம் வர முதலே பலமாசமா கட்டிக் காப்பாற்றின கதைய வெளியிட்டிங்க. இந்த நிலமை வேற எந்த நடிகனுக்கும் வரக்கூடாது! கதைய விடுங்கய்யா, கடைசி படத்துக்கு பேர் வைக்கிறதிலயாவது.... பேருகள பாருங்க......
47வது படம் குருவி
48வது படம் வில்லு
49வது படம் வேட்டைக்காரன்
50வது படம் சுறா
51வது படம் கருவாடு
52வது படம் மீன்காரன்
53வது படம் செருப்பு
54வது படம் ஊசி
55வது படம் தையல்காரன்
WELL KEEPET UP
@Anonymous
பொறாமை என்று ஒரு ஆமை உம் இல்லை விஜய் அவர்களின் ஆஸ்கார் பெர்போமேன்ஸ் எல்லாரும் அறிந்தது தானே
பொறாமை என்று ஒரு ஆமை உம் இல்லை விஜய் அவர்களின் ஆஸ்கார் பெர்போமேன்ஸ் எல்லாரும் அறிந்தது தானே
@thalaivan
நன்றி நள்றி நன்றி
எம்போன்ற புதியவர்களை இனங்கண்டு இணைத்து ஊக்கப்படுத்தியமைக்கு எம் பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்..
தலைவன் திரட்டியிலிணைந்ததையிட்டு பெருமகிழ்வடைகின்கோம்..
“தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்“
@ragulanchandra
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நீங்க சொல்றது சரி தான்
செத்த பாம்ப அடிக்கிறது பாவம்கிறதால விட்டுடுவோம் பொளச்சி போகட்டும்..
@ILLUMINATI
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
//எகிடு தகுடா அடிக்கிறியே ராசா....//
தம்பி உண்மய தானே சொல்லியிருக்காரு அண்ணாச்சி..
@Sree
ஹா ஹா போட்டீங்களே ஒரு போடு.. ஓரே போடா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
நல்லவேளை சார் ஆண்டவன் நம்மள இந்த மாதிரி கிளத்து தவளையா(விசிலடிச்சான் குஞசுகளா) படைக்கல..
விளிப்புணர்வு தொடரட்டும்..
@Anonymous
சார் கோடம் பாக்கம் போங்க.. நீங்க பேரரசு மாதிரி பெரிய்ய்ய டைரக்டராகலாம்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
என்னமா பேர் வைக்கிறீங்க..
எப்டி சார் இந்த மாதிரியெல்லாம் யோசிக்கறீங்க..
உங்க ப்ளாக் உரல் தரமுடியுமா..?
படம் மட்டும் இல்ல பாட்டும் திருடினது தான்....இந்த லின்க் பாருங்க..http://verumpaye.blogspot.com/2010/04/blog-post_04.html
இந்த படமும் போச்சா....???????
@Anonymous
சபாஷ்.
மிக நல்ல பதிவு..
தேடல் தொடரட்டும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!
Post a Comment