Saturday, June 26, 2010

சுறா பெரு வெற்றி - சன் குடும்பத்தினருக்கு

சராசரி விஜய் ரசிகர்களையும் எரிச்சலூட்டி வேட்டைக்காரன் தேவலாம் என்று சொல்ல வைத்த இளைய தளபதி விஜயின் 50வது அரும் படைப்பு சுறா.


விஜயின் தந்தை கதைத்தேர்வுசெய்தாராம். ஆச்சரியப்படுமளவுக்கு ஒவ்வொரு ப்ரேமாக செதுக்கியிருந்தார்கள். என்னோடு தியேட்டருக்கு வந்திருந்த நண்பன் விஜயின் தீவிர ரசிகன். அவனே மொக்கை படம்னுட்டு தூங்கிட்டான்.
சில இடங்களில் வடிவேலுவே சவசவத்து போகிறார்.
விஜயின் பட்டி தொட்டி ரசிகர்களே கிழிச்சு காயவிடடிருக்கும்போது நாம புதுசா குறைசொல்ல ஒண்ணும் இல்லைங்கிறதால அத விட்டுடுவேம்.
படம் ஆரம்பச்சவுடனே சன் பிக்சர்ஸ் பெயரை பாத்தவுடனே தியேர்டரே விசில்ல அதிர்ந்துது. (அதுதான் கடைசி விசில்னு அப்ப புரியல..) கலாநிதி மாறனுடைய பெயரும் விஜய் 50வது படம் என்று டைட்டிலுக்கு நிகரா தூள் கௌப்பிச்சுது.

சுப்பர்ஸ்டாரே வர தயங்கினாலும் விஜயின் அரசியல் பிரவேசம் உறுதியாயிருப்பது அனைவரும் அறிந்ததே.
காங்கிரசாருடன் விஜய் நடத்திய பேச்சு வார்த்தையும் தெரிந்ததே.

விளம்பரம் தேட கற்பு பற்றி பாரிய பரபரப்பு அறிக்கைகளை விடுத்து தமிழ் நாட்டு பெண்களின் மானத்தை கப்பலேற்றிய நடிகைகளையே சேர்த்து கொள்ளும் நல்ல உள்ளம் காங்கிரசாருக்கு உண்டு.
காங்கிரசும் தி.மு.க வும் கூட்டணியாயிருந்தபோதும் தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த ஒரு நடிகர் காங்கிரசுக்கு செல்வது கலைஞர் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை காங்கிரசின் மேல் திருப்பும்.

குடும்பமாக பல வருடம் அரசியல் செய்பவர்கள் சரியான காலத்தில் இதனை புரிந்து கொண்டு சுறாவை தயாரித்திருக்கிறார்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என அம்மா கட்சி தொடர்ந்து புகார் தெரிவித்து கொண்டிருப்பது போன்று சொந்த செலவில் படமெடுத்து மேதகு டாக்டர் விஜயின் நன் மதிப்பை(!) குறைத்து தியேட்டர் உரிமையாளர்களினது வெறுப்பை மட்டுமல்ல சராசரி விஜய் ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டதாக கருதப்படுகிறது.

மொத்தத்தில் ஆப்பரேசன் சுறா சக்சஸ்.   

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, June 12, 2010

இப்புடியெல்லாம் பைக் ஓடாதீங்கோ..!

மயிர்கூச்செறியும் அட்டகாசமான விபரீத விளையாட்டுகளின் வீடியோ தொகுப்பு

கீழே உள்ளது பல்சர்மேனியா வீடியோ

நாமளும் நம்ப பல்சர்ல ரைபண்ணினா எமலோகந்தான்... ஏன்னா இது நன்றாக பயிற்சி பெற்ற ஸ்ரன் கலைஞர்களால் செய்யப்பட்ட விளம்பரம்..

இது எப்டியிருக்கு..?

இது சினிமாக்காக செய்யப்பட்ட ட்ரிக்ஸ்னுசொல்றவங்க கீழ உள்ள இரண்டு வீடியோகளையும் பாருங்க..
இந்த மாதிரி யாரும் ரை பண்ண மாட்டீங்கன்னு நெனைக்கறோம்..!!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails