Thursday, April 29, 2010

ஆத்திரமூட்டும் அம்மணிகள் - சிம்ரன் ஆன்டி!

கடைசியாக மலைநாட்டு சுற்றுலா சென்ற போது நண்பர் வீடடிலிருந்து புறப்பட்டோம் பஸ்சுக்காக காத்திருந்து தமிழர் மரபுப்படி பஸ் வந்த பிறகு சாவகாவமாக வெளிக்கிட்டு இளித்து கொண்டு நான் புறப்பட தயார் என்றார் நண்பர்.

ஏறியவுடன் ஏற்கனவே பஸ்ஸை ஏற்பாடு செய்த ஐயா கல கல என சிரித்து பேசியவண்ணம் மகிழ்ச்சியாக வந்தது ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது. ஏனெனில் முக்கால்வாசிப்பேர் மணமானவர்கள்.
அப்போது எமக்கு தெரியவில்லை தான் அவரின் கடைசி சிரிப்பு என...

இப்போது பஸ் அந்த ஐயாவின் வீட்டிலுள்ளவர்களை பிக்கப் பண்ண போய் நின்றது..
அவரின் பாரியாரும் நாலு மகள்களும் ஏறக்குறைய வீட்டிலுள்ள எல்லா சாமான்களையும் பஸ்ஸினுள் திணித்தனர்.
அப்புறம் வீட்டு நாயிடமிருந்து பிரியாவிடை..
அந்த காட்சியை கண்டால் கல்லும் கண்ணீர் வடிக்கும் இப்படி ஒரு இரக்க சிந்தனையாளர்களா என்று..

பிறகு இருவர் உக்காரும் இருக்கையில் ஆளுக்கொரு சீட்டில் இருந்து கொண்டு ஆளயாள் பார்த்து சிரிக்க “பஸ் ஓட வெளிக்கிட காத்து வரும்“ என்றா அந்த ஆன்டி...
சில இளைஞர்கள் நின்று வந்தாலும் ஒருகட்டத்தில் மற்ற நண்பர்களின் மடிகளில் உக்கார்ந்த போதும் சிலர் வாந்தியெடுத்த போதும் அவர்கள் எழுந்து ஒரே சீட்டில் இருக்கவில்லை..
இடையில் ஐயா ஏதும் கதைக்க போய் அனைவர் முன்னாலும் அவர் பல்லு பறப்பதை விரும்பாததால் அவர் ஏதும் கதைக்கவில்லை போலும்..

எம்மோடு வந்த ஒண்ணரை வயது பையனை சிறிது நேரம் தூக்கி வைத்திருந்த என் நண்பன் சொன்னான்.. அடேய் அந்த ஆண்டி பையனை பார்த்து சொன்னவ “குளப்படி செய்யுறியோ.. நான் கிழவியா வந்தாப்பிறது நீ செய்த குளப்படியெல்லாம் உனக்கு சொல்லி காட்டுன் எண்டு இப்ப மட்டும் என்ன இவ பதினாறு வயதிலயோ இருக்....“ சொல்லி வாய் மூடமுதல் மனுசி திரும்பவும் வந்து பையன் கன்னத்தை கிள்ளி
“தம்பி என்னை அக்கா எண்டெல்லோ கூப்புர்றான்“.
நண்பனுக்கோ கடுப்பில் முகம் சிவந்துவிட்டது. எனக்கோ சிரிப்பை அடக்குவதற்காக பக்கத்திலிருந்த மரக்கொப்பை திரும்பிநிண்டு பல்லால் கடிக்கவேண்டியிருந்தது...
  இத்தனைக்கும் அவ இந்த வருசத்தில வாற மூண்டாவது ரூறாம் இது..

அடுத்தநாள் விடிய 3 மணிக்கு முளிப்பு வந்து எழுந்து பார்த்தபோது பாத்ரூமில் குளிக்கும் சத்தம் அன்ரியின் படுக்கை மட்டும் காலியாயிருந்தது..
3.30க்கு எழுந்து பார்த்த நண்பன் சொன்னான் பார்றா அன்ரி காலமயே சிம்ரன் உடைல நிக்கிறா..
திரும்பி சிமரனை பார்த்த போது சிரிப்பை அடக்க தலயணையை இறுக்கி கடிக்க வேண்டியிருந்தது..
(எக்கு தப்பா கற்பனை பண்ணாதீங்கோ.. சாறி கட்ட முயற்சி பண்ணிகொண்டிருந்தா..)
பக்கத்தில படுத்திருந்த றைவர் சொன்னார் “தம்பி 8 மணிக்கு தான் பஸ் வெளீல வெளிக்கிடுவம்“
அடுத்து நாலு மகள்களும் குளித்து முடித்தனர்..
இதற்கிடையில் வெற்றிகரமாக வெளிக்கிட்டு முடித்த அன்ரி வாத்து தன் குஞ்சுகளை பார்ப்பது போல் கதிரையில் இருந்து மகள்கள் வெளிக்கிடுவதை பூரிப்போடு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்..

இப்பதானே 5.30ஆகுது 8மணிவரையும் என்ன செய்ய போகினம் எண்டு யோசிக்கும் போதே ஒரு லகேஜிலிருந்து மினி ப்யூட்டி பார்லரையே அந்த ஹாலில் சிருஷ்டித்து காட்டினார்கள்...
ஏகப்பட்ட க்றீம்கள் பிறஸ்கள் தலைக்கு டைகள் பஞ்சுகள் எல்லாம் வைத்து மேக்கப் போட்ட அந்த காட்சியை நீங்களும் மனத்திரையில் கொண்டு வரவேண்டுமெனில் எங்காவது அக்ஸிடன்ற் பட்ட காருக்கு டிங்கர் வேலை செய்யும் சீனை நினைத்து கொள்ளவும்..


நாலு மகள்களும் செல்போன் வைத்திருந்தாலும் சிம்ரன் அன்ரி ஒரு CDMA போன் வைத்திருந்து நடப்பதையெல்லாம் வெளிநாட்டிலுள்ள யாருக்கோ நேரடி வர்ணனை செய்த வண்ணம் இருந்தா...
நண்பன் சொன்னான் நல்ல வேளை குளிர் பிரதேசம் எண்டபடியா CDMAயோட தப்பீட்டம் பாலைவனத்துக்கு போயிருந்தமெண்டா ஃப்ரிஜ் எல்லாம் பஸ்சுக்க ஏத்தியிருப்பினம்..

இடையில ஒரு பொம்மைக்கடையில அழகான பொம்மை ஒண்டு பொம்மை வித்து கொண்டிருந்தது பொடியளெல்லாம் பொம்மை விலைகளை படுசிரத்தையாக விசாரித்துகொண்டிருந்தபோது அங்கு வந்தது சிம்ரன் அன்ரி & கோ.
 அரைவாசி பொம்மைகடையை பஸ்சுக்குள் ஷிஃப்ட் ஆக்கினார்கள்..
அந்த ஐயாவோ முற்றும் துறந்த ஞானி போல் முகத்தை வைத்திருந்தார்...
(போன ஜென்மத்துல மனுசன் யாருக்கு என்ன பாவம் பண்ணியிருக்குமோ..!)
மீண்டும் பஸ் புறப்பட்டது அன்ரி CDMAயில் யாருக்கோ சொல்லி கொண்டிருந்தா
 “இண்டக்கு நாங்கள் பெரிசா சிலவளிக்கேல்ல”

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, April 28, 2010

சாமியார்களே அடுத்த ஹீரோ நீங்களாகக்கூட இருக்கலாம்.சாமியார்களை போட்டு கிழித்துக்கொண்டு இருக்கிறது சன் டிவி, இவய்ன்க எல்லாம் காலங்காத்தால எழும்பி பல்லு விளக்கிறாஙகலோ இல்லயோ கமராவும் கையுமா துப்பு துலக்க கிளம்பிடுவாங்க போலிருக்கு, என்று சாமியார்கள் சஙகடப்படும் அளவுக்கு சாமியார் பட்டியல் நீண்டு செல்கிறது. பிரேமானந்தா, ஜெஜெந்திரர், நித்தியானந்தா, கல்கி (இடயில் உஙகளுக்கு தெரிந்த சாமியார் பெயர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள், நாளை அவர்களும் சன் டீவியை அலங்கரிக்கலாம்) இந்த வரிசையில் இறுதியாக ஒரு கொமவை(,) கூட்டியிருப்பவர் வசந்த்குருஜீ. கைகளில் குங்குமம் வரவைத்தல்,பெண்டுகளை சாமியாட வைத்தல்(பஜனைகளில் குத்து பாட்டு பாடினால் மட்டும்..),வாயிலிருந்து லிஙகம் எடுத்தல்(எண்ட வாயிலையும் அசிங்க அசிங்கமா வருகுது, என்ன பண்ணுறது மாறி வாறது லிங்கம் எண்டா என்னையும் சாமி எண்டுவானுகல்) போன்ற வழக்கமான மோடி மஸ்தான் வேலைகளால் தன்னையும் ஒரு சாமியாராக்கிகொண்டார். தவறு சாமியாராக காட்டிக்கொண்டார்.


ஒருகாலத்தில் கோமணத்துக்கே சிங்கி அடித்த சாமியார்கள் இன்று கோடிகளில் புரள்கிறார்கள். கஷ்டம் எண்டு வரும் கஷ்டமர்களுக்கு நெற்றியில் கொஞ்ச திருநீறை இழுத்து விட்டு முடிந்தால் ஓரிரு பூக்களும் சேர்த்து கொடுத்து பணக்கத்தைகளை டவுன்லோட் செய்கிரார்கள். இன்றய கால கட்டதில் பெண்களை கவர சாருக்கான்,சல்மான்கானாக எல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை,சாமியாராக இருந்தாலே போதும்.இப்படி சக்சஸ் ஃபுல்லாக போய்க்கொண்டிருந்த சாமியார் பிஸ்னசில் பெரிய கல்லை தூக்கி கடாசியிருக்கிறது சண்டீவி. நல்லா போய்க்கிட்டிருந்த சாமியார் பிசினஸ் இன்று சீடீக்களிலும் சில்லறை கடைகளிலும் செய்திகளாய் தொங்கிக்கொண்டிருக்கிறது.

சாமியார்களே கவனம் அடுத்த ஹீரோ நீங்களாகக்கூட இருக்கலாம், தொழிலுக்கு போகும் போது நன்றாக ஒரு தடவை உன்களை சோதித்துகொள்ளுங்கள். உங்கள் கமக்கட்டுகளில் கூட கமராவை பதுக்கி வைதிருக்கலாம்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Sunday, April 25, 2010

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்

அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற
அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை
உருவாகி உள்ளன.கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.


எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.


பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.


இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!


அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."


அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்
சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:
"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.


விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)


இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)


செர்‎ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!

இப்படிப்பட்ட பதிவுகளை இத் தளத்தில் ஏன் இடுகிறோம் என்றால் இனிமேல் ஆவது இந்து மத மகிமையை உணர்ந்து இந்து மதத்தை இழுக்காக்கும் ஆசாமிகள் பற்றி பதிவிடும் பதிவாளர்கள் இந்துவின் மகிமை பற்றி பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்..

என்றும் அன்புடன்
பசுமை சகோதரர்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, April 24, 2010

ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!a>
"புன்னரையன் கோவிலிலே

வெள்ளை விளிசங்கின்

பேரரவம் கேட்டிலையோ'

என்று காலை நேரத்து கோவில் ஓசையை வருணித் தாள் ஆண்டாள்.

பழங்காலத்தில், காலை நேரத்தில் கோவில்களில் மங்கலச்சங்கு ஒலித்து, "கோவிலுக்கு அனைவரும் வருக' என்று அழைத்த காரணத்தால் "விளிசங்கு' எனப் பட்டது. "சங்கொலி' என்பது வழிபாடுகளின் தொடக்கம்.

"கோழி சிலம்பச் சிலம்பும் குரு கெங்கும்;

ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்'

என்று மணிவாசகர் அருளியதும் இங்கு குறிக்கத் தக்கது.

ஒலியும் இசையும் வழிபாட்டின் அங்கங்கள் ஆகும்.

இறைவன் ஒலி வடிவானவன். ஏழிசையாய் விளங்குகின்றவன். இவற்றை எடுத்துக் காட்டுகின்ற அடையாளங்களாக சில தெய்வங் களின் கைகளில் இசைக்கருவிகள் திகழ்கின்றன. சிவனது கையில் இருப்பது உடுக்கை. வீணையை ஏந்தி இருக்கின்றவர்கள் சரஸ்வதியும், நாரதரும். கிருஷ்ணனின் கையில் புல்லாங்குழல் இருக்கின்றது. சங்கு விஷ்ணுவின் கையில் கம்பீரமாக வீற்றிருக்கின்றது. மத்தளம் கொட்டு கின்றவர் நந்திதேவர். இசை வடிவ மான இறைவனை, இசை மூலமாகவே வழிபட்டு அடைவது மிக எளிது என்று இவை உணர்த்துகின்றன. இராவணன், திருஞான சம்பந்த சுவாமிகள், ஆனாய நாயனார், திருப்பாணாழ்வார், அருண கிரிநாதர் முதலானோர் இசை மூலமாக இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றவர்களே.
அசரீரி


ஒலி வடிவமாகவே இருக்கின்ற ஒரே தெய்வம் அசரீரி. சரீரமற்றது என்ற பெயருக்குத் தகுந்தபடி இது எங்கும் எப்போதும் உருவமற்றது; அருவம். தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஒன்றைச் சுட்டிக்காட்டுதல், ஓர் உண்மையைப் புலப்படுத் துதல் முதலிய நெருக்கடியான சூழ்நிலைகளில், அந்த நெருக்கடிகளை நீக்க அசரீரியானது தெய்வத்தின் குரலாக ஒலிக்கின்றது. இதைப் பற்றிய புராண வரலாறுகளும் கதைகளும் நூற்றுக்கணக்காக உள்ளன. சில தலங்களில் அசரீரியின் ஆணையைக் கேட்டு மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தல புராணங் கள் தெரிவிக்கின்றன. எனவே, அசரீரி என்பது ஒரு முக்கியமான ஒலிவடிவத் தெய்வம்; தெய்வீக ஒலி.

இனி, சில கோவில்களில் கேட்கக்கூடிய அபூர்வமான - அதிசயமான தெய்வீக ஒலிகள் பற்றிய விவரங்களைக் காண்போம்.
ஓங்கார ஒலி

ஓங்கார ஒலி எல்லாவற்றுக்கும் அடிப்படை யானது; பிரணவம். ஆன்மிகத்தில் ஓங்கார ஒலியும், அதன் "ஓம்' என்ற வடிவமும் எப்போதும் புனிதமாக மதிக்கப்படுகின்றன.

திருக்குற்றாலத் திருக்கோவில் ஒரு சங்கைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு வேறு எந்தக் கோவிலிலும் இல்லை. சங்கைப் போன்றது கோவில். சங்கில் இடையறாமல் ஒலிக்கின்ற ஓங்கார ஒலியைப் போன்றவன்- அந்த ஒலியாகவே விளங்குகின்றவன் இறைவன்.

விநாயகரின் வடிவம் ஓங்கார அமைப்புடையது. ஓங்கார ஒலியைத் தருகின்ற விநாயகர் ஒருவர் காஞ்சி புரம், பஞ்சுப்பேட்டை, திருவோண காந்தன் தளி என்ற கோவிலில் வீற்றிருக்கின்றார். விநாயகர் சிலை அருகில் காதை வைத்து உற்றுக் கேட்டால் ஓங்கார ஒலி கேட்கின்றது. இது ஓர் அதிசயம்தானே!

திருவொற்றியூர் கௌடீசுவரர் சந்நிதியிலும் ஓங்கார ஒலியைக் கேட்க முடியும்.

திருச்செந்தூரில், கொடி மரத்தின் எதிர்ப்புறச் சுவரில் ஒரு துளை இருக்கின்றது. இதன் வழியே பார்த்தால் செந்திலாண்டவனின் திருவடிகளில் சரணடைய ஓடி வரும் கடல் அலைகளைக் காணலாம். அதே துளையில் காதை வைத்து உற்றுக் கேட்டால் "ஓம்' என்ற ஒலி இடையறாமல் ஒலிப் பதைக் கேட்கலாம்.வேத ஒலி

திருவிடைமருதூர் கோவிலில், ஆவுடையார் சந்நிதியின் பின்புறச் சுவரில் சில துளைகள் இருக்கின்றன. இவற்றில் காதை வைத்து உற்றுக் கேட்டால், சிலர் வேதப்பகுதிகளை ஓதுவதைப் போன்ற நுட்பமான ஒலிகள் ஒலிப்பதை உணரலாம். இங்கு தேவர்கள் ஆவுடையாரைச் சுற்றி நின்று வேதப்பகுதிகளை இசைப்பதாக ஐதீகம்.

கடல் ஒலி

திருக்காட்டுப்பள்ளியில், தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு மேற்கு மதிற்சுவரின் அருகில், கடல் ஒலியைப் போன்ற ஓர் ஒலி தொடர்ந்து கேட்கின்றது. இது எப்படி? ஆன்மிகப் புதிர்கள் சிலவற்றிற்கு விடையே கிடைப்பதில்லை.

எதிரொலிகள்

திருவரங்கம், திருவையாற்றுத் திருக்கோவில்களில், குறிப்பிட்ட பகுதிகளில் நின்று, "ரங்கா'- "ஐயாறா' என்று இறைவரது திருப்பெயர்களை சத்தமாகக் கூறினால் அப்பெயர்களின் அடுக்கிய எதிரொலிகள்- அசரீரி வாக்கைப்போல அடுத்தடுத்து ஒலிக்கின்றன. கோவிலின் கட்டடத்திறன் எதிரொலிகளை உருவாக்குகின்றது.

தேனீக்களின் ரீங்காரம்

சித்தாய்மூர் (சிற்றேமம்; சிற்றாய்மூர்) திருநெல்லிக் காவுக்கு அருகில் இருக்கின்ற திருத்தலம். இங்கே இறைவன் சந்நிதியின் தென் பக்கத்தில், கல் சாளரத் தில் ஒரு தேன்கூடு உள்ளது. இதிலுள்ள தேன் அபிஷேகத் திற்குப் பயன்படுகின்றது. தேன் கூட்டிற்கும் நாட்பூசை உண்டு.

முன்னர், பிரம்ம ரிஷி ஒருவர் தினமும் அர்த்தயாமத்தில் வந்து இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவர் வருகின்ற நேரம் மிகக் கடந்தது. கோவில் நடை காப்பிடப்பட்டது. தரிசனம் கிடைக்காமல் வருந்திய முனிவர், தேனீயின் வடிவம் கொண்டு கோவிலில் புகுந்து வழிபட்டு அங்கேயே தங்கி விட்டார். இவரைப்போலவே பல சித்தர்கள் தேனீக்களாக வந்து இறைவனை வழிபடுகின்றனராம். ஆகவே, தேனீக்களின் ரீங்கார ஒலிகளை இறைவனது சந்நிதியில் கேட்க முடிகின்றது.

இதேபோலத் திருக்கண்ணமங்கையில், தாயார் சந்நிதியின் சாளரத்தில் ஒரு தேன்கூடு நூற்றாண்டு களாக இருக்கின்றது. இதையும் தினமும் பூஜிக்கின்ற னர். இப்பூஜையை பக்தர்கள் நேரில் தரிசிக்கலாம்.

திருக்கண்ண மங்கையில், தாயாரின் திருமணத் தைக் காண தேவர்களும், அவரைத் தரிசிக்க தவசிகளும் தேனீக்களின் வடிவங்களுடன் வந்து, ஓங்கார ரீங்காரம் செய்கின்றனராம்.

வண்டொலி

பிருங்கி முனிவர் வண்டின் வடிவமெடுத்து, அர்த்தநாரீசுவரர் வடிவத்தைத் துளைத்துச் சென்று சிவனை மட்டுமே வலம் வந்து வழிபட்ட திருத்தலம் திருவெண்டுறை. இங்கு வண்டின் மென்மையான ரீங்கார ஒலி கருவறையின் அருகில் ஒலிப்பதை இன்றும் கேட்க முடிகிறது.மணி ஒலி

பூஜை நேரத்தில் கோவிலிலும் வீட்டிலும் ஒலிக் கின்ற மணி ஒலி மிகவும் முக்கியமான தெய்வீக ஒலியாகும். இத்தெய்வீக ஒலி, அதைக் கேட்பவர்களின் இதயத்தின் ஆன்மிக- தெய்வீக உணர்வுத் துடிப்பு களைத் தூண்டக்கூடிய சக்தியுடையது.

இதயத்தில் நீங்காமல் நிலைத்திருக்கின்ற இறைவனுக்கு இதயத்தின் துடிப்பே தெய்வீக மணியொலியாகி விடுகிறது.

கோவில் மணி ஒலியைக் கேட்டவுடனே வீட்டில் பூஜை வழிபாடுகளைத் தொடங்குவது மிகவும் நல்லது. கோவிலிலும் வீட்டிலும் ஒரே நேரத்தில் பூஜையும் ஆராதனையும் நடைபெறும்படி கவனித் துக் கொள்ள கோவில் மணி ஒலியை முக்கியமாகக் கருத வேண்டும்.

பூஜைக் காலங்களில் தொடர்ந்து மணியடிப்பதை தாச மார்க்கத்தில் ஒரு மார்க்கமாக திருமூலர் குறிப்பிடுகின்றார்.

எனவே, நாதாந்த நாயகனை- நாதரூபனை- பிரணவ மூர்த்தியை- இசை ரூபனை- தெய்வீக நாத ஒலிகள் ஒலிக்க வழிபாடு செய்வது மிகவும் பொருத்தம்தானே

என்றும் அன்புடன்
பசுமை சகோதரர்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Thursday, April 22, 2010

தமிழிற்குப் பெருமை சேர்ப்பவை


என் இனிய தமிழ் பொழுதுபோக்கு பதிவுலக நண்பர்களே!
எம் தாய்மொழி தமிழ் எனக்கு தெரிந்த தமிழ் பற்றி நாலு விடயத்தை இப்பதிவு மூலம் பகிர்கிறேன்,,,

நாம் தமிழில் பொழுதுபோக்க இத்தளத்தில் ஒன்று சேர்கிறோம் அந்த தமிழ் உலகில் எந்த நிலையில் எப்படி உள்ளது என அறிந்து இருப்பதும் வேண்டும் அல்லா..

எம் மொழி பற்றி பலர் பலவற்றை கூறி இருப்பார்கள் காலத்தால் முற்பட்டது
அப்படி இப்படி என!

நாம் எமது மொழி பற்றிச் சிந்தித்துப் பார்ப்பமே ஆனால் மொழிகளில் முதலானது தமிழ்..
என்னடா இவன் இப்படி சொல்லுறனே என பாக்காதீங்க‌ஆதாரம் என்னிடம் உண்டு
ஒர் சிறு பிள்ளையிடம் ஒரு பென்சில் காகிதம் கொடுத்து எழுத சொல்லிப்பாருங்க‌
அது யப்பான் நாட்டு சிறுவன் ஒ அல்ல சீனா நாட்டு சிறுவன் என்றாலும் முதலில் எழுதுவது 0 தான். எந்த சிறுவன் என்றாலும் வட்டம் வட்டம் ஆக அல்லது சுழி சுழியாக தான் கீறுவான், இதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா அப்படி ஆனால் தமிழில் முதல் எழுத்து


"அ" இதன் ஆரம்பமே சுழி/வட்டத்தில் தான் இது மட்டும் அல்ல‌
"ஆ" இரண்டு சுழி
"இ" ஒரு சுழி
"ஈ" இரண்டு சுழி
"உ" ஒரு சுழி
"ஊ" இரண்டு சுழி
"எ" ஒரு சுழி
"ஏ" ஒரு சுழி
"ஒ" ஒரு சுழி
"ஓ" இரண்டு சுழி
"ஒள" இரண்டு சுழி
"ஆய்த எழுத்து" மூன்று சுழி
இப்படி இலகுவான எழுத்து உருவம் கொண்டது

மற்றும் அனைத்து மொழியில் காணப்படும் எழுதும் ‍‍‍/,\,|,_,0 இவ்வாறான கோடுகளால் தான் ஆனது. அதே போல் தமிழில் முதலாவது எழுத்தான "அ"
தன்னகத்தே இந்த அனைத்துக் கோடுகளையும் கொண்டுள்ளது எந்த மொழியிலும் இவ்வாறு இல்லை!!!!!
சிறந்த எழுத்து உருவம் கொண்டது தமிழ்

மற்றும் தற்போது தமிழ்க்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு விடயம் நடந்துள்ளது..

1) அதில் ஒன்று!!!!!!!!
நீங்க எல்லாரும் 2012 படம் பார்த்து இருப்பீர்கள் எல்லா??
என்னக் கூட கிருத்தி இப்பவும் சொல்லுவன் உனக்கு இன்னும் 2012 படம் பார்த்த அதிர்வு போகல்ல என்று,
அது இல்ல விடயம் நாம நாம்ம விடயத்துக்கு வருவம்,,
அதுல உலகம் அழியப்போகுது அப்படி என்று படம் எடுத்து இருக்குரார்கள், அது அழியுதோ இல்லயோ ஆனா ரஸ்ய நாட்டு விஞ்ஞானிகள் இப்படி உலகம் அழிந்தால் மறுபடியும் உலகம் தானாக உருவாகுவதற்க்கு வேண்டிய கலங்கள்,அமீபா,நுண்ணனுக்கள்,மற்றும் நாகரீகம் பண்பாடுக்கு வேண்டிய புத்தகங்கள், உலக உயிரியல் வரலாறு,அனைத்து விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய அனைத்துத் தகவலையும்,உலகம் மீள உருவாக தேவையான பொருட்களையும் நிலத்துக்கு அடியில் எந்த அதிர்வையும் தாங்கக் கூடிய வகையான ஒரு அறையில் பாதுகாத்து வருகிறார்கள்,,, இதில் தமிழுக்கு என்ன பெருமை என்று நினைக்காதீங்க,, இந்தியாவில் இருந்து
இரண்டு புத்தகம் அவ் விஞ்ஞானிகளால் பாதுகாக்கப்படுகிறது அதில் ஒன்று திருவள்ளுவரால் தமிழில் இயற்றப்பட்ட‌ திருக்குறள். மற்றையது தெலுங்கில் கீர்த்தனாஞ்சலி என்ற இரு புத்தகமும்,,,


இப்ப நம்ம தமிழ் உலகத்தில் எவ்வளவு முக்கியமான இடதுல இருக்கு என்று தெரியுதா????

அடுத்த பெருமை தான் ஆங்கிலேயனையே அடித்து விரட்டப் போகுது!!!!!!!!!!

அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர்
யார் தெரியுமா????
உலகில் தற்போது புகழுக்கு சொந்தக்காரர்
எல்லப் புகழும் இறைவனுக்கே..
இப்ப கண்டு பிடிச்சு இருப்பீங்க எல்லா?????
ஆம் நம்ம ஏஆர்.ரகுமான் தான்,,,
அவர் பாட்டு பாடுறது அது ஒஸ்கர் வாங்கினது எல்லம் பெருமை தான் ஆனால் அவர் இது எல்லத்தையும் விட‌
இன்னும் ஒரு வேலை செய்துட்டு அமைதியா இருக்குறாரு
அதுதான் பெரிய விடயம்,,
ஹலோ பாஸ் நான் திருக்குறளுக்கு இசை அமைக்குறத சொல்லல்ல!!!!!!
ஏஆர்.ரகுமான் ஜெய்ஹோ ஜெய்ஹோ என்று பாட்டுப் பாடி அப்புறம் ஜெய்ஹோ என்று மேடை நிகழ்வு எல்லம் நடத்தினாரு எல்ல!!!
அது தான் இப்ப மேலும் புகழ் சேர்த்து இருக்கு,,,

ஏஆர்.ரகுமான் ஜெய்ஹோ ஜெய்ஹோ என்ற‌ பாட்டு அப்புறம் ஜெய்ஹோ என்று மேடை நிகழ்வு இதை எல்லம் பாத்துட்டு இருந்த ஒக்ஸ்வேட் அகராதி நிறுவனம்
தற்போது ஏஆர்.ரகுமானிடம் ஜெய்ஹோ என்ற வார்த்தை
மேலும் அதன் கருத்து பற்றி ஆய்வு செய்து வருகிறது
வெகுவிரைவில் தமது பதிப்பில் ஜெய்ஹோ என்ற வார்த்தையையும் சேர்க்கவுள்ளது
இனி ஒக்ஸ்வேட்டிலும் ஜெய்ஹோ!!!!!!!!!
ஒரு தமிழனே ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடித்தால்
இதுக்கு மேல தமிழ்க்கு எப்படி பெருமை சேர்க்க முடியும்,,

ஆனா எவ்வளவு தான் கோடம்பாக்கதுல நடந்தாலும்
மூச்சுவிடாத ஒரே ஒரு நபர்


நம்ம ஜெய்ஹோ புகழ் ஏஆர்.ரகுமான்

மேலும் இது போல் பல தகவல் உடன் உங்களைச் சந்திக்கும் வரை
என்றும் அன்புடன்
KESH

மேலும் தமிழ் வளர்க்கப் பாடுபடும் நண்பன் கிருத்திகனுக்கு
பசுமை நண்பர்கள் சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, April 21, 2010

கதவை திற புகழ் நித்தியானந்தா சாமி ஹிமாலய பிரதேசத்தில் பிடிபட்டார்கதவை திற காற்று வரட்டும் ( காற்று வந்ததோ என்னவோ எல்லாருக்கும் தெரியும் தானே ரஞ்சிதா அக்கா வந்தது ) மனதை திற மகிழ்ச்சி பொங்கட்டும் புகழ் கள்ள சாமியார் நித்தியானந்தா இந்தியாவின் ஹிமாலய பிரதேசத்தில் வைத்து அந்த நாட்டு கர்நாடக பொலிசாரினால் பிடிக்கப்பட்டார்

சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த ஒருவர் பல கோடிக்கு அதிபதியானது எப்படி ? இவரது குட்டுகள் பிடிபட்டது எப்படி ? இவருக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஆர்வம் இருந்து வந்துள்ளது.இவர் பாடசாலை போவதை நிறுத்தி விட்டு ஆலயங்களில் தனது சிறு வயது காலத்தை கழித்துள்ளார்.( இவர் இண்டைக்கு இரவு தொடங்கி களிதான் சாப்பிடுவார் ) இவர் தன்னை தானே நானே கடவுள் நானே சிவன் நானே கிருஷ்ணன் என்று அலம்பி திரிந்து உள்ளார்.( எங்க ஊரிலும் இப்படித்தான் பல பேர் இருக்கினம் ) இவர் அலட்டுவதை பார்த்த ஒரு சிலர் இவர் ஒரு கடவுள் எண்டு நினைத்து வணங்க ஆரம்பித்து விட்டார்கள்( இப்படியானவர்கள் இருக்கும் மட்டும் கள்ள சாமியார்களுக்கு வாழ்க்கை தான் )

பிறகு இவரது உரையை கேட்டு பணக்கார்கள் அரசியல் வாதிகள் சினிமா நட்சத்திரங்கள் பலர் மயங்கி இவரது பக்தர்கள் ஆகினார். இவருக்காக தங்கள் சொத்துக்களை எல்லாம் எழுதி வைத்தனர்.இவரும் பல நிலங்களை ஆக்கிரமித்து தனது அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி இது நில உரிமையாளர்களே நன்கொடையாக தந்தது எண்டு சொல்லி எடுத்து கொண்டார்.இவருக்கு உலகின் பல இடங்களிலும் பக்தர்கள் இருந்தனர்.குறிப்பா இவருக்கு பெண் பக்தர்களே அதிகமாக இருந்தனர்.ஏனோ தெரியல பெண்கள் சாமியாரிடம் போறதின் மர்மம் என்னவோ ( இவர்களின் கணவர்களிடம் இல்லாததை சாமியார் காட்டுராரோ தெரியல) இவர் காலில் தொட்டு வணங்குவதக்கு ரூபா 50000 கட்டணமாக எடுத்து இருக்கிறார்.மேலும் நான் கிருஷ்ணன் என்று பல பெண்களுடன் ஆனந்த தாண்டவம் நடத்தி இருக்கிறார்.மேலும் தான் அர்த்தனாரிசுவரர் எண்டு சொல்லுவாராம் (இவரை பார்க்கவே அப்படிதான் இருக்கு)

என்ன தான் இருந்தாலும் இவர் ரஞ்சிதா அக்காவோடு ஆராச்சி செய்ததை என்னால மறக்க முடியல எண்ணெய் மசாஜ் வேற .என்னதான் சொல்லுங்கோ பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தும் யட்டி போடாது தமிழர் பாரம்பரியமான கோமணம் கட்டி வந்திருக்கிறார் இவரது ஆட்சிரமத்தில் இருந்த ஆண்கள் பெண்கள் இருவரிடமும் உறவு கொண்டு இருக்கிறார்.(நாறல் பயலே) இவரது செயல்களை பார்த்த லெலின் என்ற இவரது சீடன் ரகசிய காமெரா மூலம் வீடியோ எடுத்து வைத்து இருந்து இருக்கிறார்.லெனின் மேல சந்தேகம் கொண்ட சாமி லெனின் எங்கு சென்றாலும் 120 வாகனங்களை பின்னால் விட்டு உளவு வேற பார்த்து இருக்கார். இதை பார்த்த லெனின் இனி ஆட்சிரமத்தில் தான் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என எண்ணி 7 பஸ்கள் எடுத்து சென்னைவந்து இருக்கார்.இதை தெரிந்து கொண்ட அரவாணி சாமியார் லெலின் இடம் வீடியோ வெளியிட வேண்டாம் என்று கெஞ்சி கூட இருக்கார் .ஆனால் இவரது கெஞ்சல்களை செவிமடுக்காத இவர் சீடன் இவரின் நிய வாழ்கையை உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டும் இவரது உண்மை முகத்தை எல்லாரும் அறிய வேணும் எண்டு எண்ணி ஊடகங்களுக்கு அதை வெளி இட்டு இருக்கார்.

இனியாவது மக்கள் விழிப்பாக இருந்து இவரை போல கள்ள சாமியார்கள் உருவாவதை தடுங்கள் ..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

ஒரு காதல் தோல்வியால் உருவான FACEBOOK இணையத்தளம்காதலின் சின்னம் தாஹ்மகால் என்று எல்லாரும் பொதுவாக சொல்லுவார்கள்.ஆனால் காதல் தோல்வியின் சின்னம் என்று குறிப்பாக எவற்றையும் யாரும் இது வரை சொல்லவில்லை.காதல் தோல்வி அடைந்தவர்கள் பொதுவாக பார்த்தால் அவர்கள் முகத்தில் படர்ந்த தாடியும், குடியும் குடித்தனமுமாக என்று அவர்களின் காதலியின் நினைவில் இருந்து விடுபட முடியாமல் இருப்பார்கள்.ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு இருந்த மாணவன் Mark Zuckerberg என்பவர் தன்னை கை விட்டு போன தனது காதலியின் நினைவில் இருந்து மீள்வது எப்பிடி என்று ஒரு இரவில் நினைத்து கொண்டு இருக்கும் போது அவருக்கு ஒரு யோசனை வந்தது.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான விபரங்களை அச்சிட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவது அந்த பல்கலைக்கழகத்தின் வழக்கம். அதை அனைத்து மாணவர்களும் பேஸ்புக் என்று சொல்லுவார்கள். இதை மனதில் வைத்துக்கொண்டே Mark Zuckerberg என்ற மாணவன் தனது சக நண்பர்களான Eduardo saverin Dustin Moskovitz, Chris Hughes ஆகியோரை இணைத்து கொண்டு பேஸ்புக் என்ற இணையத்தளத்தை உருவாக்கினார்.முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்.பிறகு காலப்போக்கில் அந்த இணைய தளத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளப்பட்டனர்.


ஆனால் இன்று அபிவிருத்தி அடைந்த நாடு,அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்று உலகத்தில் அனைத்து நாடுகளிலும், வீடுகளில் கணணியை வைத்திருப்பவர்கள் வைத்திருக்காதவர்கள், சிறுவர்கள்,முதியவர்கள் என எல்லா வயது மட்டதினரும் FACEBOOK பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று கூறலாம். எந்த அளவுக்கு இன்று உலகத்தில் பிரபலம் அடைந்து இருக்கிறது. ஒரு காதலியின் நினைவில் இருந்து விடுபடுவதற்கு Mark Zuckerberg என்பவரால் ஒரு பொழுது போக்காக உருவாக்கப்பட்ட இணையதளம் இன்று உலகின் பல நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கிறது. இதை உருவாக்கிய Mark Zuckerberg என்ற மாணவனை உலகின் முக்கியமான பணக்காரனாக உருவாக்கி இருக்கிறது .மேலும் பல முன்னணி நிறுவனங்கள் இதை வாங்க போட்டி போடுகின்றனர்.இதில் உலக புகழ் பெற்ற நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலீடு செய்து இருக்கிறது. இன்று எந்த இணைய தளம் பல இலட்ச கோடிகளில் சம்பாதிக்கிறது . மேலும் இதன் மதிப்பு இன்னமும் உயர்ந்து கொண்டே போகிறது.இந்த சமூக சேவை இணைய தளத்தை அனைவரும் பயன்படுத்தும் காரணம் என்ன? இதில் உறுப்பினராக இணைவது சுலபம் ஒரு இ-மெயில் முகவரி இருந்தால் மட்டும் போதுமானது.மேலும் பல நாடுகளில் இருந்து நண்பர்களை உருவாக்கி கொள்ள முடியும் .அவர்களுடன் அரட்டை பண்ண முடியும்,உங்களின் உணர்வுகளை,விருப்பங்களை,உங்கள் அன்றாட செயற்பாடுகளை நீங்கள் வாசித்ததை ,பிறருக்கு தெரியாத பல விடயங்களை எல்லாம் நீங்கள் அவர்களுடன் பகிந்து கொள்ள முடியும்.நீங்கள் உங்கள் நண்பர்களின் உணர்வுகளை ,விருப்பங்களை ,அவர்களின் பழக்கவழக்கங்கள் எல்லாம் புரிந்து கொள்ள முடியும் மேலும் உங்கள் உறவினர்கள் ,சிறு வயதில் படித்த நண்பர்கள், தெரிந்தவர்கள்,அறிந்தவர்கள் இன்று எல்லாருடனும் இந்த இணைய தளத்தில் தொடர்பை வைத்திருக்க முடியும். இந்த இணையத்தளம் உங்களின் தனிமையை போக்கி உங்களுக்கு ஒரு புதிய உறவுகளை பெற்று தருகிறது என்றால் மிகையாகாது.
.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Tuesday, April 20, 2010

கருவிலிருக்கும் குழந்தையின் வடிவம் ஓம்!"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்குள்ளே தான் இந்த அண்டமே அடங்குகிறது! வையத்திலுள்ளோரை வழிநடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது இந்தப் பிரணவ மந்திரமே. கடவுள் முதல் கடைசிக் குடிமகன் வரை ஓங்கி ஒலிக்கும் வலிமை வாய்ந்த- மிக எளிமையான மந்திரம் "ஓம்'. இந்து மதத்தின் இரு கண்களாக விளங்கும் சைவம், வைணவம் இரண்டுமே போற்றிடும் சக்தி வாய்ந்த பிரபஞ்ச மந்திரமாக இது திகழ்கிறது.

இந்த மந்திரத்தில் உயிர் இருப்பதால் இதைப் "பிரணவம்' என்கிறோம். பிரணவம், பிராணன் என்பதற்கெல்லாம் "உயிர்' என்பதே பொருள்.

"ஓம்' என்பதன் பொருள் என்ன? அதன் தத்துவம் என்ன? அதன் நிலைப்பாடு என்ன? எந்தெந்த தெய்வங்களை வேண்ட இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்? இதனைச் சொல்வதால் அடையும் நன்மைகள் என்ன? யார் யாரெல்லாம் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்?


"ஓம்' என்பது "அ'கார "உ'கார "ம'கார எழுத்துகளின் சங்கமம். "ஓ' என்பது தமிழில் உயிர் நெடில்; "ம்' என்பது மெய் எழுத்து.

உயிரும் மெய்யும் (உயிர் + உடல்) சேர்ந்தால் ஒரு உயிருள்ள உடல் உருவாகின்றது. உயிர் இல்லாத உடல் பிணம்; மெய் (உடல்) இல்லாத உயிர் (ஆன்மா) ஆவி.

"ஓம்' என்பது உயிரும் உடலும் இரண்டறக் கலந்த உயிருள்ள உடல் போன்றது. அதாவது முழுமையானது; பரிபூரணமானது. பூரணம் என்றால் பூஜ்ஜியம் என்பதையே குறிக்கும். பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமே இல்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் பூஜ்ஜியம் இல்லா விட்டால் எதுவுமே இல்லை. இந்தப் பிரபஞ்சமே பூஜ்ஜியம்தானே! "ஓம்' என்பது உயிராகி உடலை இயக்குவது! துடிப்புடன் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.

"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம்

பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய

பூர்ணமே வா வசிஷ்யதே'.

"அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே' என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள். பூரணத்தைப் பிரித்தால்கூட அதுவும் பூரணமாகவே இருக்கும். ஆக பரம்பொருள் பூரணமானது; அதன் ஒரு சிறு பகுதியும் பூரணமே.

ஒரு காந்தக் கட்டியை நூலில் கட்டித் தொங்கவிட்டால் அது வட, தென் துருவங்களை நோக்கியே நிற்கும். உலகின் எந்தப் பகுதியிலும், எந்த வேளையிலும் அது அதே நிலையில்தான் நிற்கும். நாம் அதை திசை மாற்றித் திருப்பி விட்டால்கூட அது பழைய நிலைக்கே திரும்பிவிடும். அதே காந்தக் கட்டியைப் பல துண்டுகளாக உடைத்தாலும், ஒவ்வொரு துண்டும் உடைப்பதற்கு முன்பிருந்த காந்தக்கட்டியின் தன்மையை ஒத்திருக்கும். வடிவம்தான் சிறிதாகுமே தவிர குணத்தில் வேறுபடாது.

மேற்சொன்ன சுலோகத்தின் கருத்தை- பூர்ண சக்தியை கவியரசு கண்ணதாசன் அவருக்கே உரித்தான கவிநயத்தில்,

"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு

புரியாமலே இருப்பான் ஒருவன்

அவனைப் புரிந்துகொண்டால்

அவன்தான் இறைவன்!'

என்கிறார்.


கருவிலிருக்கும் குழந்தை "ஓம்' என்ற எழுத்து வடிவத்திலேயே காணப்படும். இந்த நிலையை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் கருவிகள் வந்தபின்பே நாம் பார்க்க முடிந்தது. ஆனால் ஞானிகளும் யோகிகளும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்த உண்மையைக் கூறியிருக்கின்றனர். கருப்பையில் கரு வளர்வதற்குத் தேவையான அனைத்து பஞ்சபூத சக்திகளும் தொப்புள்கொடி வழியாகச் செல்லுகிறது. நமக்கு ஆரம்பத்தில் உணவு செல்லும் வாய், நாபி எனப்படும் தொப்புள் ஆகும்.

குழந்தை கருப்பையிலிருந்து வெளிவந்தபின், தொப்புளுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை (மாவி) தொப்புளிலிருந்து நான்கு அல்லது ஐந்து அங்குல நீளம் விட்டு அறுத்தெடுத்து பூமியில் புதைத்துவிடுவர். பின் அக்குழந்தை வாய்வழி உணவு உண்ண ஆரம்பிக்கிறது.

தொப்புள் என்பது கரு வளர அடிப்படை உறுப்பு. மஹாவிஷ்ணுவின் தொப்புளிலிருந்து உதித்த தாமரையில் பிறந்தவரே சிருஷ்டிகர்த்தா வான பிரம்மா. சிருஷ்டிக்கும் தொப்புளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதைப் புராணங்கள் கூறுகின்றன. உயிரைப் படைப்பவன் பிரம்மன்; பின் அதை இயக்குவது பிராணன் எனப்படும் ஆன்மா.

"ஓம்' என்னும் மந்திரத்தில் "ஓ' என்பது தொப்புளிலிருந்தே உருவாகிறது. "ம்' என்பது வாயிதழ்களில் நிறைவு பெற்று, உள்ளும் புறமும் அதிர்வலைகளை எழுப்புகின்றது.உடலுக்கு ஒன்பது வாயில்கள். கண்கள் இரண்டு, நாசிகள் இரண்டு, காதுகள் இரண்டு; வாய், ஜனனேந்திரியம், ஆசனம் ஆகியவை தலா ஒன்று. கரு வளர்ந்து குழந்தையாக உருமாறுவதற்குப் பயன்பட்ட தொப்புள் இந்த ஒன்பதில் இல்லை. குழந்தை கருப்பையிலிருந்து வெளிவந்தவுடன் அந்த வாயில் அடைபட்டுவிட்டது. ஒரு பலூனின் வாய் காற்றடைத்தபின் கட்டப்படுவது போல, தொப்புள் வழி பிராணனை நிறைத்த பின்பு அந்த துவாரம் கட்டப்பட்டுவிடுகிறது.

பிராணனைப்போல மேலும் ஒன்பது வாயுக்களும் சேர்ந்து மொத்தம் பத்து வாயுக்கள் நம் உடலில் அடைக்கப்பட்டுள்ளன. தச வாயுக்கள் அடைக்கப்பட்ட பைதான் மனிதன். "காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா' என்பதன் விளக்கமே இந்த தச வாயுக்கள் அடைக்கப்பட்டிருப்பதால் வந்தது தான். இந்தப் பத்து வாயுக்களில் பிராணன் என்ற உயிர் வாயு பிரதானமானதாகும். இதையே உயிர் மூச்சு, ஆன்மா என அழைக்கிறோம். மனித உடலில் தொப்புளைச் சுற்றி மணிப்பூரகம் என்னும் பாம்பாக மூச்சுக்காற்று சுற்றியிருக்கிறது என்று கடப்பை பரமஹம்ஸ ஸ்ரீசச்சிதானந்த யோகீஸ்வர ஸ்வாமிகள் கூறுகிறார். அவரது இந்த விளக்கமானது "ஜனன மரண ரகசியம்' என்ற நூலில் பக்கம் 56, 57-ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

"தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, அந்தந்த வயதுக்குத் தக்கபடி எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் சுற்றிப் படுத்துக் கொண்டு, அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே வந்து, இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்.'

நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம். நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக (சிலர் வாய் வழியாகவும் சுவாசிப்பதுண்டு) நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை. ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு. கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்பு ளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.

நாம் காதுகளால் கேட்கும் ஒலியைக் (ஆன்க்ண்ர் ரஹஸ்ங்) கடத்துவதற்கு காற்று அவசியம். காற்றில்லா வெற்றிடத்தில் காதுகளால் கேட்கும் ஒலியைக் கடத்த முடியாது.

ஒரு ஒலியை உருவாக்க வேண்டுமென்றா லும், உருவாக்கிய அந்த ஒலியைக் கடத்த வேண்டு மென்றாலும் காற்று நிச்சயம் தேவை. காற்று இல்லாத இடத்திற்கெல்லாம் கடத்தப்படும் ஒலி மின்காந்த அலைகளாகும். (ஊப்ங்ஸ்ரீற்ழ்ர் ஙஹஞ்ய்ஹற்ண்ஸ்ரீ ரஹஸ்ங்ள்). இந்த ஒலியைக் காதால் கேட்க முடியாது. இதைக் காதால் கேட்க வேண்டுமாயின் அதற்கென்று தனிக் கருவிகள் தேவை. (ரேடியோ, தொலைக் காட்சிப் பெட்டி, கணினி).

முன்பு கூறியதைப்போல தொப்புளில் "ஓ' என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்கு கிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு. இப்படி உயிரா கிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெ டுத்து மேலெழும்பி வருவதே "ஓம்' எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படு வதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.

நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் "ஓம்' என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அநேகமாக நாம் பேசும்போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது; ஆனால் "ஓம்' என உச்சரிக் கும்போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.

அடுத்து, காதுகள் "ஓம்' என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு. குழந்தை கருவறையிலிருந்து வெளி உலகுக்கு வந்தவுடன் செக்கச் செவேரென்றோ, நல்ல வெள்ளையாகவோ இருக்கும். வெளியுலகம் கண்டவுடன் சூரியனின் கதிர்கள், வெளிக்காற்று களின் தாக்கம் மற்றும் கால நிலைக்கேற்ப அதன் நிறம் சிறிது சிறிதாக மாறுபடும். சிவப்பாக அல்லது வெள்ளையாக இருந்த குழந்தை கறுப்பாக மாறலாம். ஆனால் காதுகள் அப்படியல்ல. பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை. ஆக, நாம் கருவில் "ஓம்' என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் "ஓம்' என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்துவிட்டது.

இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கி றோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை "ஓம்' என்ற பிரண வத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது.

ஆலயத்தினுள் எழுப்பப்படும் "ஓம்' என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.

"ஓம்' என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. "ஓம்' என்ற மந்திரத்தை உச்சரித்தாலே உடல் நோய்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைகின்றன. இந்த மந்திரம் உச்சரிப்போரையும் கேட்போரையும் எந்த நோய்களும் எளிதில் அண்டுவதில்லை. காரணம் "ஓம்' என்ற மந்திரத்தின் அதிர்வலைகள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும், ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலங்களையும் தட்டி எழுப்பி, சீராக இயங்கச் செய்து, யோகம் செய்த பலனைத் தருகிறது.

இந்த மந்திரத்தை உச்சரிக்க வயது வித்தியாசம், ஆண், பெண் பேதமில்லை. அனைவரும் உடல் சுத்தம், மன சுத்தமுடன் இந்த மந்திரத்தைக் கூறலாம். இந்த மந்திரத்தைக் கூறி எல்லா தெய்வங்களையும் வழிபடலாம். ஆதியந்தமில்லா அருட்பெரும் ஜோதியாகிய சிவனையும் இந்த மந்திரத்தால் துதிக்கலாம்; கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், குலதெய்வங்களையும் இந்த மந்திரத்தால் துதிக்கலாம்.

இந்த மந்திரத்தை உச்சரித்துப் பலன் அடைந்த வர்களுக்கே அதன் பூரண சக்தி நன்கு தெரியும். அனுபவிக்காதவர்கள் இது வெறும் கற்பனை என வாதிடலாம். அவர்கள்கூட மறுத்துப்பேச முடியாத ஒரு செய்தி...

உத்ராஞ்சல் வழியாக திருக்கயிலை செல்லும் போது, இமயமலைத் தொடரில் "நாபிதாங்' என்றொரு இடம் இருக்கிறது. "நாபி' என்பதற்குத் தொப்புள் என்பதே பொருள் என முன்னரே கூறியிருக்கிறோம். இந்த நாபிதாங் என்ற இடத்தில் மூன்று பெரிய மலைச் சிகரங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் "ஓம் பர்வதம்' (ஓம் மலை) என்றழைக் கப்படும் மலையானது நம்மை பிரமிக்க வைக்கிறது. காரணம், அந்தப் பெரிய மலையில் "ஓம்' (ற்) என்ற வடமொழி எழுத்தை, மலை முழுக்க எழுதி யிருப்பதைப் போன்று இயற்கையாகவே பனிப்போர்வைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மலைக்குப் பக்கத்தில் "நாபி பர்வதம்' (தொப்புள் மலை) என்ற மற்றொரு மலை உள்ளது. மனித உடலிலுள்ள தொப்புளைப் போல இயற்கையாகவே அமைந்துள்ளது இந்த மலை. இந்த அமைப்பி னாலேயே அந்த இடத்தின் பெயரும் "நாபிதாங்' என்ற காரணப் பெயராயிற்று. மூன்றாவதாக அமைந்துள்ள "திரிசூல பர்வதம்' (திரிசூல மலை) மூன்று சிகரங்களுடன் அந்த லோகநாயகன்- லோக நாயகியை நினைக்க வைக்கிறது. இந்தக் காட்சிகளை மனக்கண்ணில் நிறுத்தி நினைத்துப் பாருங்கள்- உண்மையிலேயே நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா!

இப்படி ஆதியந்தமில்லாத அந்த திரிசூலதாரி யின் எல்லைக்குள் இயற்கையாகவே உருவெடுத்து நிற்கும் நாபி மலையும், அதனையடுத்து ஓம் மலையும் அமைந்திருப்பது அந்த பிராண நாதன்- பிரணவ நாதனின் திருவிளையாடல்தானோ! அவனை நினைத்து "ஓம்... ஓம்... ஓம்...' என நாம் உச்சரிக்கும்போது நம்மை வாட்டும் பிணிகள்- பீடைகள் எல்லாம் போம்... போம்... போம்... எனப் போய்விடாதா என்ன!

அன்பு நண்பர்களே ஆசாமிகளின் பின்னால் சென்று நேரத்தை வீண்ணாக்கி பின்பு வருத்தம் அடைவதை விட தமிழ் பொழுதுபோக்கு தளத்த பொழுதுபோக்கா படியுங்க மத அறிவு பெறுங்க,,

மதம் வள்ர்ப்போம் மனிதனாய் வாழ்வோம்

என்றும் உங்களுடன்
பசுமை சகோதரர்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, April 19, 2010

தமிழ் நாட்டு தலைவர்களே ஒரு நிமிடம்...!

காந்தி பிறந்த தேசம் அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்ற இந்தியா பல இனங்கள் வாழும் தேசத்தின் மனிதாபிமானத்துக்கு ஒரு உதாரணம் இங்கு காணலாம்.
இலங்கை இரசாங்கத்துக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கான வரலாற்று நிகழ்வொன்று கீழே

(ஐயையோ சுப்புற மணிய சுவாமிஜிக்கு புடிக்காத காட்சி ஒன்னும் கடைசீல வந்திட்டுதே! அதுதாங்க இலங்கை ராணுவத்திடம் இந்திய பிரதமர் அடி வாங்குறது..)
இந்திய படைகள் இலங்கையில் செய்த வேலைகளை யாராவது சராசரி ஈழ அகதியை கேட்டுப்பாருங்கள்..

முன்பு பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து விட்டு சென்ற போது 2002 ஆட்சியிலிருந்த அம்மா மீண்டும் தமிழ் நாட்டுக்குள் வர அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு கூறியதை சிரமேற்கொண்டு இப்போது அனுமதி மறுத்து விட்டீர்களாமே!
அற்புதம்! தாங்கள் சொன்ன வாக்கை காப்பாற்றும் தன்மை கண்டு பூரிக்கிறோம்..
அப்படியே கலைஞர் ஆட்சி மீது அம்மா கொடுத்த புகார்கள் எங்கே போயிற்று என்று கேட்க மாட்டோம்.. ஏன்னா அவங்க காங்கிரஸின் கூட்டணியாச்சே!

 இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை இல்லை - என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்
 அய்யா ஆளும் இத்தாலி நாட்டுகாரருக்கும் இந்திரா காந்தியை சுட்ட சீக்கியரை பற்றியும் நாங்க வாய் திறக்க மாட்டோம்...
ஏன்னா கண்ட படி யாரும் வந்து தங்கி செல்ல இது தர்ம சாலை இல்லை வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு...

பார்வதியம்மாள் தமிழகத்திற்கு வந்ததே தனக்குத் தெரியாது-கலைஞர் 
அய்யா தெரிஞ்சிருந்தா வெத்திலை வச்சு வரவேற்றிருப்பீர்கள் என்று தெரியும்.
உலக தமிழரின தலைவர் எனக்கூறிக் கொள்ளும் நீங்கள் ஒபாமாவாலேயே பேசி நிறுத்த முடியாத யுத்தத்தை அரை நாள் உண்ணாவிரதத்தில் நிறுத்தி இலங்கை தமிழர்களுக்கு சுபீட்சத்தை பெற்று தந்ததையும் பழ நெடுமாறன் என்பவர் இலங்கைக்கு கொண்டு வர இருந்த மருந்து பொருட்களை தடுப்பதில் நீங்கள் காட்டிய பேரார்வமும் ஏற்கனவே உங்கள்மீது தமிழர் வைத்திருந்த நம்பிக்கையை அதிகரித்துவிட்டது.. தமிழினம் மீதும் தமிழ் மீதும் ஆர்வம் காட்டிவரும் உங்கள் செயற்பாடுகள் புல்லரிக்க வைக்கிறது.


அந்த வரலாற்று நிகழ்வை காண இங்கு க்ளிக்குக.

போலீஸ் கமிஷனர்க்கே தெரிந்திருந்த விடையம் முதல்லருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே!
இதைபார்க்கும் போது புரியுகிறது தங்களின் வாய்மையின் தூய்மைஅன்னையின் சிலையை எந்நேரமும் அலுவலகத்தில் வைத்திருக்கும் உங்க தாய்ப்பாசம் மெய்சிலிர்க்க வைக்குது.. 
இதைப்பற்றி மக்கள் என்ன பேசிக்கிறாங்கன்னா.. மக்கள் கிடக்கறானுங்க இலவசமா எதயாவது குடுத்தா எல்லாத்தயும் மறந்துடுவானுங்க..


மருத்துவ தேவைக்காக வந்த அந்த மூதாட்டி செய்த குற்றம் தான் என்ன?

இங்க Comment பண்ணுங்கப்பா...!

50வது ஜாலி கச்சேரி..!


மனசை திறந்து வைடா மச்சான்!


தமிழ் பொழுதுபோக்கு ப்ளாக்கரின் 50வது பதிவு.
Cool Boy, யாழ் மண்ணின் மைந்தன், திருத்தணிகேநன், சிந்துஜன்  என  
பொழுது போக்கின் Bloggers - நான்கு ஸ்ரார்ஸ்.
         சிந்துஜன்செம ஸ்டைலிஷ் பார்ட்டி!
நான்ஸ்டாப் கல கலா பேச்சு தான் அவனின் ஸ்பெஷல்.
கவிதை திறமைக்கு தசரதன் மைந்தன் CBZ ஓட வைச்சதிலிருந்தே இவர் திறமை தெரிஞ்சிருக்கும்..
சாட்டிங் பிரியன்.. செல்போன் பிரஜை.. கொஞ்சம் குண்டு.. கிரிக்கட் புலி..
(முகத்துல ஒரு கைதேர்ந்த எழுத்தாளனுக்குரிய களை தாண்டவமாடுறாப்ல இருக்குல்ல..!)     யாழ் மண்ணின் மைந்தன்
செம ஸ்மார்ட் மனுசன்..
சொந்த ஊர் Jaffna என்றாலும் இப்போது Colombo பையன்..

“இரகசியம் கசியும் வாய் இருந்தால்
தேசியம் அழியும் பகை நெருப்பால்“

பிறந்தோம் வாழ்ந்தோம் பத்தோடு பதினொன்றாய் கும்மியடித்தோம் சென்றோம் என்று இருப்பதில் இஷ்டமில்லை அண்ணாச்சி
அதிகமா பேச விரும்பலை செயல்ல காமிப்பேன்ங்கிறார்.. 

விமர்சன வித்தகன்..
இளமை ப்ளஸ் இனிமை =  மண்ணின் மைந்தன்

பெண் ரசிகைகள் அதிகமுள்ளவன் இவன் தான்..         திருத்தணிகேசன்

கோடம் பாக்கத்திலிருந்து கடுப்பை பட்டையைக் ! கிளப்பும் இளம் புயல்..!
லயலா கல்லூரி ஸ்டூடண்ட்
சினிமாவும் இவர் இலட்சியங்களிலொன்று..
திடுப்ன்னு வெள்ளித்திரையில் கண்டா காண்டாயிடாதீங்க..! 
எல்லாரும் ரசிக்கிற மாதிரி 
பெரிய எண்டர்டெய்னர் ஆகணும் பாஸ்.. 
அதான் லட்சியம்.. என்கிறார் இவர்.
 இப்ப தமிழ் சினிமாவின் வெற்றி சூத்திரமே மூன்றெழுத்தாம் அதாவது 
காமடி 
நமீதா 
வசூல் அப்டீங்கிறார்...
(இந்த வெய்யிலுக்கு இது வேறயா..!)       Cool BoySoftware இலட்சியம்..!
டீன் ஏஜ் டிக்கட்லயிருந்து ஸ்வீட் பார்ட்டிகள் வரைக்கும் Followers இருக்கே(நெனப்பு தான்!) எப்டினு நீங்க கேட்டா “அது ரொம்ப சிம்பிள் பாஸ்.. மனசை திறந்து வைடா மச்சி எதிர்ல எதிரியே இருந்தாலும் நேசிங்கிறது தான் நம்ம பாலிசி! நம்ம மனசை திறந்து வைச்சா லட்சம் பறவைகள் உள்ளே வரும் சிலது கொத்திட்டு போயிரும் சிலது கூடே கட்டி குடியேறிடும் ஆனா அதுக்காக பிரச்சனைக்கு பயந்து கிட்டு பூட்டி வைச்சா அத்தனை பறவைகளும் பறந்து போயிரும்னு எங்கயோ படிச்சேன்.. அது தான் நம்ம பார்முலா...!
பைக்ல ரவுண்டஸ் போறதுதான் ஹாபி ஆனா எழுபது கிமீ க்கு மேல போமாட்டேன்.. ஏன்னா நமக்கு சத்தம் புடிக்கும் ஆனா ரத்தம் பிடிக்காதே தலைவா..!“

 புது வரவு பிரசன்னாமருத்துவ துறையில் 
மைல்கல்லாய் இருக்கபோகும் இளைஞன்..
ஆனால் மனமோ சே குவோரா..
விடிய விடிய டிவிடி பார்த்துட்டு 
விடியும் போது உறங்குவது இவன் பொழுது போக்கு...
இவன் போகும் இடமெல்லாம் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது..
இவன் சாதாரணமா பேசினாலே லெள்ளு தாங்காது..
இனி வருங்காலங்களில் பதிவுலகம் நிம்மதியா தூங்காதுன்னு நெனைக்கிறோம் (அவ்வளவு மொக்கை....!)
வாழ்த்துக்கள்..!
50வது postக்கே இவ்வளவு அலப்பறை பண்ணினதுல கடுப்பாயிருந்தீங்கன்னா Sorry..

(ஏன் Englishல Sorry சொல்றோம்னா “மன்னிப்பு“ தமிழ்ழ எமக்கு பிடிக்காத வார்த்தை..)

விரைவில் 500வது post ல் சந்திப்போம் (ஆத்தீ..! அதுக்குள்ளயா..?..)

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Sunday, April 18, 2010

யாழ் வர்த்தக கண்காட்சி 2010 படங்கள்.

முழுக்க முழுக்க சிங்களவரின் உற்பத்திகளையும் இறக்குமதிகளையும் யாழ்ப்பாணத்தில் Marketing செய்வதற்கான கண்காட்சியில்..
பல்வேறு போட்டிகளும் அதற்கு பரிசுகளும்.. இலவச இசைநிகழ்ச்சி போன்றவையும்.. நடைபெற்றுக்கொண்டிருக்கும் கண்காட்சி நடைபெறும் யாழ் மத்தியகல்லூரரியின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..

யாழ் பொது நூலகம்  இன்றய நிலை..
மறக்க முடியுமா?
அன்று எரியூட்டினீர்கள்
பின்பு அதற்கு ஆதாரமே இல்லாதவாறு பூசி மொழுகினீர்கள்..
ஆனாலும் எம்மவர் கல்வியில் முன்னணியில் தான் உள்ளனர்..

சிங்களவரின் கூடாரங்கள்..


நன்றி நண்பர்களே..
இரவிரவாக இசைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன..
கடும் யுத்தம் நடைபெற்று உலகமே தமிழினத்துக்காக குரல் கொடுத்த காலங்களிலும் இது போன்ற கேளிக்கைகளில் யாழ் மக்களின் மனதை திசைதிருப்ப முயற்சிகள் நடத்தப்பட்டதை மறக்க முடியுமா?

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Saturday, April 17, 2010

சிரிக்கவைக்கும் வித்தியாசமான விபரீத விபததுக்கள் வீடியோ தொகுப்பு

சாலையோர கண்காணிப்பு கமராவில் சிக்கிய ஒரு விபத்தின் வீடியோ..!ஆண்களுக்கு நிகரா பெண்களும் சாதிக்கிறாங்களாம்..
பெண் ஓட்டுணர்கள் எப்டி சாதிக்கிறாங்கன்னு கீழ பாருங்க..!


துன்பம் வரும் வேளையில் சிரின்னு சொல்லியிருக்காங்க..
இவங்களுக்கு வர்ற துன்பங்கள பாக்கும் போது நம்மால கண்டிப்பா சிரிக்காம இருக்க முடியாது..
இது சில வில்லங்கமான தருணங்களின் தொகுப்பு..கோயில் படத்துல நம்ப வடிவேல் வெய்ட் தூக்கி நோண்டியாகுறத பாத்தே விழுந்து விழுந்து சிரிச்சோம்..
இந்த வெள்ள கார வடிவேலுகள பாத்து யாருக்காச்சும் சிரிப்பு வரலன்னா அவங்க மனுசங்க இல்ல தெய்வ பயலுக..!


சிலர் “தண்ணி“ல இருந்தாலே அவங்க பண்ணுற அட்டகாசத்துல சிரிப்பு தாங்காது இவங்க தண்ணிக்குள்ள பண்ணுற அட்டகாசங்கள பாருங்க..எப்படியிருந்தது நண்பர்களே!

கீழ உள்ள வீடியோ ஆச்சரிய படுத்த கூடியது
மரணத்தின் வாலுக்கு சென்னு மறுஜென்மம் எடுத்த அதிஷ்டசாலிகளின் அதிர்ச்சியூட்டும் கணங்களின் தொகுப்பு.

அனைவரும் ரசிக்க மேலே தமிழ் மணம் உட்பட கீழுள்ள Vote Buttonகளில் வாக்களியுங்கள்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

தீ மிதிப்பது எம்மாலும் முடியுமா?கடவுள் நேர்த்திகளில் பலி கொடுத்தலை அடுத்து பிபலமானது தீ மிதித்தல் ஆகும்..
உடம்பில் மஞசள் நீரை ஊற்றியபடி.. அரோகரா ஒலி வானைப்பிளக்க..
மேளதாளம் முழங்க தீ மிதிப்பவர்கள் நெருப்பை தாண்டிய படி செல்வார்..
பின் அவரை பேட்டி கண்டால்.. தனக்கு இறைவன் அருளால் தீ ஒன்றும் செய்யவில்லை என்றும்.. உண்மையான பக்தி இல்லாதவர்களுக்கு கால் வெந்துவிடும் என்றும் அதற்கு 2 உதாரணங்களும் கூறுவார்..


இது கடவுளின் ஆசி பெற்றவர்களால் மட்டும் தான் முடியுமா?                                                                                நாம பண்ணினா தெய்வ குத்தமாயி சாமி கண்ண குத்திடுமா? இல்லைனா கால் சுட்டுடுமா?


8அடி நீளம் 2 அடி ஆழம் 1/2அடி அகலம் உள்ள குழி ஒன்றை வெட்ட வேண்டும்..


நிறைய விறகுகளை குவியலாக அடுக்கி பற்ற வைத்து நன்றாக எரியவிட வேண்டும்..


நெருப்பு தணல்கள் கட்டி கட்டியாக இருக்கும் போதே குழி முழுவதும் நன்றாக பரவிவிட வேண்டும்..


அவ்வப்போது உப்புதூளை கொட்டி விசிறி விட வேண்டும்..


கட்டாயம் நெருப்பு தணல்கள் கனண்று இருக்க வேண்டும் முக்கியமாக சாம்பல் இருக்கவே கூடாது..


தீ மிதிக்கும் முன்பு கால்களை தண்ணீரில் அவம்பி விட்டு நெருப்பு மீது வேகமாக நடக்க வேண்டும்..


பெண்களாக இருந்தால் காலில் அணிகலன்கள் இருக்கவே கூடாது..


யார் ஆசைப்பட்டாலும் தீ மீது நடக்கலாம் கால் சுடவே சுடாது..


எச்சரிககை:
ஏற்கனவே பயிற்சி பெற்ற ஒருவர் முன்னிலையில் அவரின் வழிகாட்டலோடு செய்து பார்க்கவேண்டும்..


எப்படி இது சாத்தியப்படுகிறது..?
 காலிலுள்ள தோல் வெப்பத்தை உணர 3 நொடிகள் எடுத்துக்கொள்ளும் அதற்குள் கால்களை இடம்மாற்றி நடக்கும் போது..
தீ மிதிப்பது எல்லோராலும் சாத்தியப்படுகிறது..தொடர்ந்து உயிரோடு புதைத்தவர் மண்ணிற்குள்ளிருந்து மீண்டு வருதல்..
வெறுங்கையில் விபூதி வரவளைத்தல்..
தானாக தீப்பிடிக்க வைத்தல் இன்னும் பல சுவாரசியமான சாமியார்களின் சாதனைகள் பற்றி பொழுதுபோக்காக பார்ப்போம்..

நன்றி நண்பர்களே!


மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக விபரிக்கும் இது போன்ற பதிவுகள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென நினைத்தால் மேலே தமிழ் மணம் உட்பட கீழுள்ள Vote Buttonகளில் வாக்களியுங்கள்.இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails