Tuesday, April 20, 2010

கருவிலிருக்கும் குழந்தையின் வடிவம் ஓம்!"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்குள்ளே தான் இந்த அண்டமே அடங்குகிறது! வையத்திலுள்ளோரை வழிநடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது இந்தப் பிரணவ மந்திரமே. கடவுள் முதல் கடைசிக் குடிமகன் வரை ஓங்கி ஒலிக்கும் வலிமை வாய்ந்த- மிக எளிமையான மந்திரம் "ஓம்'. இந்து மதத்தின் இரு கண்களாக விளங்கும் சைவம், வைணவம் இரண்டுமே போற்றிடும் சக்தி வாய்ந்த பிரபஞ்ச மந்திரமாக இது திகழ்கிறது.

இந்த மந்திரத்தில் உயிர் இருப்பதால் இதைப் "பிரணவம்' என்கிறோம். பிரணவம், பிராணன் என்பதற்கெல்லாம் "உயிர்' என்பதே பொருள்.

"ஓம்' என்பதன் பொருள் என்ன? அதன் தத்துவம் என்ன? அதன் நிலைப்பாடு என்ன? எந்தெந்த தெய்வங்களை வேண்ட இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்? இதனைச் சொல்வதால் அடையும் நன்மைகள் என்ன? யார் யாரெல்லாம் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்?


"ஓம்' என்பது "அ'கார "உ'கார "ம'கார எழுத்துகளின் சங்கமம். "ஓ' என்பது தமிழில் உயிர் நெடில்; "ம்' என்பது மெய் எழுத்து.

உயிரும் மெய்யும் (உயிர் + உடல்) சேர்ந்தால் ஒரு உயிருள்ள உடல் உருவாகின்றது. உயிர் இல்லாத உடல் பிணம்; மெய் (உடல்) இல்லாத உயிர் (ஆன்மா) ஆவி.

"ஓம்' என்பது உயிரும் உடலும் இரண்டறக் கலந்த உயிருள்ள உடல் போன்றது. அதாவது முழுமையானது; பரிபூரணமானது. பூரணம் என்றால் பூஜ்ஜியம் என்பதையே குறிக்கும். பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமே இல்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் பூஜ்ஜியம் இல்லா விட்டால் எதுவுமே இல்லை. இந்தப் பிரபஞ்சமே பூஜ்ஜியம்தானே! "ஓம்' என்பது உயிராகி உடலை இயக்குவது! துடிப்புடன் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.

"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம்

பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய

பூர்ணமே வா வசிஷ்யதே'.

"அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே' என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள். பூரணத்தைப் பிரித்தால்கூட அதுவும் பூரணமாகவே இருக்கும். ஆக பரம்பொருள் பூரணமானது; அதன் ஒரு சிறு பகுதியும் பூரணமே.

ஒரு காந்தக் கட்டியை நூலில் கட்டித் தொங்கவிட்டால் அது வட, தென் துருவங்களை நோக்கியே நிற்கும். உலகின் எந்தப் பகுதியிலும், எந்த வேளையிலும் அது அதே நிலையில்தான் நிற்கும். நாம் அதை திசை மாற்றித் திருப்பி விட்டால்கூட அது பழைய நிலைக்கே திரும்பிவிடும். அதே காந்தக் கட்டியைப் பல துண்டுகளாக உடைத்தாலும், ஒவ்வொரு துண்டும் உடைப்பதற்கு முன்பிருந்த காந்தக்கட்டியின் தன்மையை ஒத்திருக்கும். வடிவம்தான் சிறிதாகுமே தவிர குணத்தில் வேறுபடாது.

மேற்சொன்ன சுலோகத்தின் கருத்தை- பூர்ண சக்தியை கவியரசு கண்ணதாசன் அவருக்கே உரித்தான கவிநயத்தில்,

"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு

புரியாமலே இருப்பான் ஒருவன்

அவனைப் புரிந்துகொண்டால்

அவன்தான் இறைவன்!'

என்கிறார்.


கருவிலிருக்கும் குழந்தை "ஓம்' என்ற எழுத்து வடிவத்திலேயே காணப்படும். இந்த நிலையை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் கருவிகள் வந்தபின்பே நாம் பார்க்க முடிந்தது. ஆனால் ஞானிகளும் யோகிகளும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்த உண்மையைக் கூறியிருக்கின்றனர். கருப்பையில் கரு வளர்வதற்குத் தேவையான அனைத்து பஞ்சபூத சக்திகளும் தொப்புள்கொடி வழியாகச் செல்லுகிறது. நமக்கு ஆரம்பத்தில் உணவு செல்லும் வாய், நாபி எனப்படும் தொப்புள் ஆகும்.

குழந்தை கருப்பையிலிருந்து வெளிவந்தபின், தொப்புளுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை (மாவி) தொப்புளிலிருந்து நான்கு அல்லது ஐந்து அங்குல நீளம் விட்டு அறுத்தெடுத்து பூமியில் புதைத்துவிடுவர். பின் அக்குழந்தை வாய்வழி உணவு உண்ண ஆரம்பிக்கிறது.

தொப்புள் என்பது கரு வளர அடிப்படை உறுப்பு. மஹாவிஷ்ணுவின் தொப்புளிலிருந்து உதித்த தாமரையில் பிறந்தவரே சிருஷ்டிகர்த்தா வான பிரம்மா. சிருஷ்டிக்கும் தொப்புளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதைப் புராணங்கள் கூறுகின்றன. உயிரைப் படைப்பவன் பிரம்மன்; பின் அதை இயக்குவது பிராணன் எனப்படும் ஆன்மா.

"ஓம்' என்னும் மந்திரத்தில் "ஓ' என்பது தொப்புளிலிருந்தே உருவாகிறது. "ம்' என்பது வாயிதழ்களில் நிறைவு பெற்று, உள்ளும் புறமும் அதிர்வலைகளை எழுப்புகின்றது.உடலுக்கு ஒன்பது வாயில்கள். கண்கள் இரண்டு, நாசிகள் இரண்டு, காதுகள் இரண்டு; வாய், ஜனனேந்திரியம், ஆசனம் ஆகியவை தலா ஒன்று. கரு வளர்ந்து குழந்தையாக உருமாறுவதற்குப் பயன்பட்ட தொப்புள் இந்த ஒன்பதில் இல்லை. குழந்தை கருப்பையிலிருந்து வெளிவந்தவுடன் அந்த வாயில் அடைபட்டுவிட்டது. ஒரு பலூனின் வாய் காற்றடைத்தபின் கட்டப்படுவது போல, தொப்புள் வழி பிராணனை நிறைத்த பின்பு அந்த துவாரம் கட்டப்பட்டுவிடுகிறது.

பிராணனைப்போல மேலும் ஒன்பது வாயுக்களும் சேர்ந்து மொத்தம் பத்து வாயுக்கள் நம் உடலில் அடைக்கப்பட்டுள்ளன. தச வாயுக்கள் அடைக்கப்பட்ட பைதான் மனிதன். "காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா' என்பதன் விளக்கமே இந்த தச வாயுக்கள் அடைக்கப்பட்டிருப்பதால் வந்தது தான். இந்தப் பத்து வாயுக்களில் பிராணன் என்ற உயிர் வாயு பிரதானமானதாகும். இதையே உயிர் மூச்சு, ஆன்மா என அழைக்கிறோம். மனித உடலில் தொப்புளைச் சுற்றி மணிப்பூரகம் என்னும் பாம்பாக மூச்சுக்காற்று சுற்றியிருக்கிறது என்று கடப்பை பரமஹம்ஸ ஸ்ரீசச்சிதானந்த யோகீஸ்வர ஸ்வாமிகள் கூறுகிறார். அவரது இந்த விளக்கமானது "ஜனன மரண ரகசியம்' என்ற நூலில் பக்கம் 56, 57-ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

"தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, அந்தந்த வயதுக்குத் தக்கபடி எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் சுற்றிப் படுத்துக் கொண்டு, அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே வந்து, இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்.'

நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம். நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக (சிலர் வாய் வழியாகவும் சுவாசிப்பதுண்டு) நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை. ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு. கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்பு ளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.

நாம் காதுகளால் கேட்கும் ஒலியைக் (ஆன்க்ண்ர் ரஹஸ்ங்) கடத்துவதற்கு காற்று அவசியம். காற்றில்லா வெற்றிடத்தில் காதுகளால் கேட்கும் ஒலியைக் கடத்த முடியாது.

ஒரு ஒலியை உருவாக்க வேண்டுமென்றா லும், உருவாக்கிய அந்த ஒலியைக் கடத்த வேண்டு மென்றாலும் காற்று நிச்சயம் தேவை. காற்று இல்லாத இடத்திற்கெல்லாம் கடத்தப்படும் ஒலி மின்காந்த அலைகளாகும். (ஊப்ங்ஸ்ரீற்ழ்ர் ஙஹஞ்ய்ஹற்ண்ஸ்ரீ ரஹஸ்ங்ள்). இந்த ஒலியைக் காதால் கேட்க முடியாது. இதைக் காதால் கேட்க வேண்டுமாயின் அதற்கென்று தனிக் கருவிகள் தேவை. (ரேடியோ, தொலைக் காட்சிப் பெட்டி, கணினி).

முன்பு கூறியதைப்போல தொப்புளில் "ஓ' என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்கு கிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு. இப்படி உயிரா கிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெ டுத்து மேலெழும்பி வருவதே "ஓம்' எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படு வதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.

நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் "ஓம்' என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அநேகமாக நாம் பேசும்போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது; ஆனால் "ஓம்' என உச்சரிக் கும்போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.

அடுத்து, காதுகள் "ஓம்' என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு. குழந்தை கருவறையிலிருந்து வெளி உலகுக்கு வந்தவுடன் செக்கச் செவேரென்றோ, நல்ல வெள்ளையாகவோ இருக்கும். வெளியுலகம் கண்டவுடன் சூரியனின் கதிர்கள், வெளிக்காற்று களின் தாக்கம் மற்றும் கால நிலைக்கேற்ப அதன் நிறம் சிறிது சிறிதாக மாறுபடும். சிவப்பாக அல்லது வெள்ளையாக இருந்த குழந்தை கறுப்பாக மாறலாம். ஆனால் காதுகள் அப்படியல்ல. பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை. ஆக, நாம் கருவில் "ஓம்' என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் "ஓம்' என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்துவிட்டது.

இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கி றோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை "ஓம்' என்ற பிரண வத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது.

ஆலயத்தினுள் எழுப்பப்படும் "ஓம்' என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.

"ஓம்' என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. "ஓம்' என்ற மந்திரத்தை உச்சரித்தாலே உடல் நோய்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைகின்றன. இந்த மந்திரம் உச்சரிப்போரையும் கேட்போரையும் எந்த நோய்களும் எளிதில் அண்டுவதில்லை. காரணம் "ஓம்' என்ற மந்திரத்தின் அதிர்வலைகள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும், ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலங்களையும் தட்டி எழுப்பி, சீராக இயங்கச் செய்து, யோகம் செய்த பலனைத் தருகிறது.

இந்த மந்திரத்தை உச்சரிக்க வயது வித்தியாசம், ஆண், பெண் பேதமில்லை. அனைவரும் உடல் சுத்தம், மன சுத்தமுடன் இந்த மந்திரத்தைக் கூறலாம். இந்த மந்திரத்தைக் கூறி எல்லா தெய்வங்களையும் வழிபடலாம். ஆதியந்தமில்லா அருட்பெரும் ஜோதியாகிய சிவனையும் இந்த மந்திரத்தால் துதிக்கலாம்; கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், குலதெய்வங்களையும் இந்த மந்திரத்தால் துதிக்கலாம்.

இந்த மந்திரத்தை உச்சரித்துப் பலன் அடைந்த வர்களுக்கே அதன் பூரண சக்தி நன்கு தெரியும். அனுபவிக்காதவர்கள் இது வெறும் கற்பனை என வாதிடலாம். அவர்கள்கூட மறுத்துப்பேச முடியாத ஒரு செய்தி...

உத்ராஞ்சல் வழியாக திருக்கயிலை செல்லும் போது, இமயமலைத் தொடரில் "நாபிதாங்' என்றொரு இடம் இருக்கிறது. "நாபி' என்பதற்குத் தொப்புள் என்பதே பொருள் என முன்னரே கூறியிருக்கிறோம். இந்த நாபிதாங் என்ற இடத்தில் மூன்று பெரிய மலைச் சிகரங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் "ஓம் பர்வதம்' (ஓம் மலை) என்றழைக் கப்படும் மலையானது நம்மை பிரமிக்க வைக்கிறது. காரணம், அந்தப் பெரிய மலையில் "ஓம்' (ற்) என்ற வடமொழி எழுத்தை, மலை முழுக்க எழுதி யிருப்பதைப் போன்று இயற்கையாகவே பனிப்போர்வைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மலைக்குப் பக்கத்தில் "நாபி பர்வதம்' (தொப்புள் மலை) என்ற மற்றொரு மலை உள்ளது. மனித உடலிலுள்ள தொப்புளைப் போல இயற்கையாகவே அமைந்துள்ளது இந்த மலை. இந்த அமைப்பி னாலேயே அந்த இடத்தின் பெயரும் "நாபிதாங்' என்ற காரணப் பெயராயிற்று. மூன்றாவதாக அமைந்துள்ள "திரிசூல பர்வதம்' (திரிசூல மலை) மூன்று சிகரங்களுடன் அந்த லோகநாயகன்- லோக நாயகியை நினைக்க வைக்கிறது. இந்தக் காட்சிகளை மனக்கண்ணில் நிறுத்தி நினைத்துப் பாருங்கள்- உண்மையிலேயே நம்மை சிலிர்க்க வைக்கிறதல்லவா!

இப்படி ஆதியந்தமில்லாத அந்த திரிசூலதாரி யின் எல்லைக்குள் இயற்கையாகவே உருவெடுத்து நிற்கும் நாபி மலையும், அதனையடுத்து ஓம் மலையும் அமைந்திருப்பது அந்த பிராண நாதன்- பிரணவ நாதனின் திருவிளையாடல்தானோ! அவனை நினைத்து "ஓம்... ஓம்... ஓம்...' என நாம் உச்சரிக்கும்போது நம்மை வாட்டும் பிணிகள்- பீடைகள் எல்லாம் போம்... போம்... போம்... எனப் போய்விடாதா என்ன!

அன்பு நண்பர்களே ஆசாமிகளின் பின்னால் சென்று நேரத்தை வீண்ணாக்கி பின்பு வருத்தம் அடைவதை விட தமிழ் பொழுதுபோக்கு தளத்த பொழுதுபோக்கா படியுங்க மத அறிவு பெறுங்க,,

மதம் வள்ர்ப்போம் மனிதனாய் வாழ்வோம்

என்றும் உங்களுடன்
பசுமை சகோதரர்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

10 comments:

கோவி.கண்ணன் said...

ஆண்டுகள் கிபி தொடக்கத்திலும் கூட தமிழ் எழுத்து 'ஒ,ஓ' வின் வடிவம் 'Z' தான்

அப்போதெல்லாம் கருவில் இருக்கும் குழந்தைகள் 'Z' வடிவத்தில் இருந்தது என்று சொல்லுவிங்களா ?

விஜய் said...

இதுவரை நான் கேட்டிராத படித்திராத விளக்கங்கள்.

வாழ்த்துக்கள்

விஜய்

குலவுசனப்பிரியன் said...

தமிழ்க் குழந்தைகள் தப்பித்தார்கள். வேற்று மொழிக் குழந்தைகள்தான் பாவம் கண்டபடி கோணிக்கொண்டும் துண்டுபட்டும் கிடக்கவேண்டும். வேறு மொழிகளில் ஓம் எப்படி எழுதப்படுகிறது என்று காண்க: http://en.wikipedia.org/wiki/Aum

Cool Boy said...

அடிச்சு தூள் கிளப்புறீங்க ஐயரே..!
இது போன்ற பதிவுகள் தமிழ் உலகுக்கு தேவை..
வாழ்த்துக்கள்

Anonymous said...

ஓம் என்பது தமில் எலுத்தா முதலில் அது என்ன மொலி சொல்லும். பின்பு கருவில் உல்லது என்ன வடிவம் என பார்க்கலாம். அகில உலகத்தை படைத்தவன் எல்லாம் வல்ல எக இரைவன் அல்லாஹ் ஒருவனெ வனகத்திர்குரியவன்.

thiruthanigesan said...

தலைவா கோவி.கண்ணன்
உங்களுக்கு ஆசாமிகள் தான் சரி,,

thiruthanigesan said...

நன்றி விஜய் உங்களைப் போன்றவர்களுக்கு நல்ல தகவல்களை
தர நம்ம பதிவுலகம் செவ்வனே பணிஆற்றுகிறோம்

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் ,
நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்..ஒரு சின்ன வேண்டுகோள்" மதம் "என்பதற்கு பதிலாக ""சமயம் ""என்ற வார்த்தை உபயோகிங்கள்.. முன்னோர்கள் சைவ சமயம், வைணவ சமயம்
என்றே உள்ளது .
நன்றி

hamaragana said...

அன்புடன் வணக்கம்
நண்பர் nellai express.ஓம் என்ற எளுத்து தமிழ?? என கேட்டுள்ளார் அதுபோக இறைவன் ஒருவனே என்ற சர்ச்சையும் கிளப்பயுள்ளார் .....நண்பரே நீங்கள் இந்த தளத்தின் வருகைக்கு நன்றி.. அதோடு நிறுத்திகொள்ளுங்கள் ..மேற்கொண்டு யார் பெரியவன் என்ற வினா யாரும் உங்களிடம அல்லது பதிவுகளிலோ இல்லை கவனித்து பின்னூட்டம் இடுங்கள் நண்பரீ..இந்த பதிவு என்போன்றவர்களுக்கே.....சரிதானே Tamilpp.!!!

vasant said...

http://vasantruban.blogspot.com/2010/11/om-chant.html


here u can download different type of om chanting

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails