Showing posts with label பதிவர்கள் நகைச்சுவை. Show all posts
Showing posts with label பதிவர்கள் நகைச்சுவை. Show all posts

Friday, November 11, 2011

ஜாலியா ஒரு குறும்படம் - யாழ்ப்பாணம்


ஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.
ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது...! பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்


இப்போ கதை வேணுமே...!
யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.

லொகேஷன்...!
பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூர் பொது நூலகம் பஸ்ஸராண்ட் என்பனவற்றோடு ஒருமுறை சுபாங்கன் அண்ணாவோடு யாழ்ப்பாணத்தை சுற்றிவந்து போட்டோ எடுத்தபோது இதையெல்லாம் வீடியோவாக எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்றார். அவரோடு சென்ற சங்கிலியன் சிலை, மந்திரி மனை போன்ற பல இடங்களையும் தெரிவு செய்தோம்.

கதாநாயகன்
ஆறுமுதல் அறுவது வரை ஆறரைகோடி விசிறிகள் கொண்ட கறுப்பு  சூப்பர்ஸ்ராரை போல- நமக்கும் ஒரு சூப்பர்ஹீரோவாக மதிசுதா ஒரு கிழிந்த சட்டையுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து இறங்கினார்(காரக்டராவே மாறுவது என்பது இதுதான்).
இவரோடு பிரசன்னா என்ற மருத்துவதுறையை சார்ந்த ஒருவரும் உள்ளார்.

முதல்நாள் படப்பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் வைத்து மற்ற நடிகர்களுக்கு ஷ்கிரிப்டை கொடுத்து அவரவர் டயலாக்களை சொல்லி கொடுத்த பின் லொகேஷனுக்கு செல்ல சொல்லிவி்ட்டு நாம் அன்றய படப்பிடிப்பு இடமான கசூரினா பீச்க்கு போய்விட்டோம். ஆனால் மற்றவர்களை காணோம் ஒவ்வொருவராக அழைப்பு எடுத்தால் தாம் ஸ்பொட்'ல தான் நிக்கிறோம் என்றனர். சில நிமிட போராட்டத்துக்கு பிறகு அவர்கள் லெகேஷன் என நினைத்து சிலர் பஸ்ஸான்டுக்கும் சிலர் சங்கிலியன் சிலையடியிலும் போய் அங்குள்ளவர்களுக்கு இப்ப இங்க சூட்டிங் நடக்க போகுது என்று பீதியை கிளப்பி வி்டார்கள்.

(இந்த படத்தில் மதிசுதா மதுரன் உட்பட படத்தில் பணியாற்றிய சிலர்

பஸ்ரான்ட் படப்பிடிப்பு
தீபாவளி சனக்கூட்டம் நிரம்பிவழிந்து கொண்டிருந்தாலும் சன நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தையே தெரிவு செய்தோம். கமரா ரோல் ஆகிகொண்டிருக்கும் போது கமராவுக்கு குறுக்கே யாரும் வந்து விடாமல் எம்மோடு இருந்தவர்கள் நாலா பக்கமும் நின்று பார்த்துக்கொண்டாலும் பல ரீ டேக்குகள் எடுக்கவேண்டியானது. ஒரு பழக்கடையில் உசிரை குடுத்து நடித்துக்கொண்டிருந்த மதிசுதாவிடம் பலர் பொருள் விலை கேட்க சிறிது நேரம் ஒரு துறைசார் வல்லுனர் போல் பழ வியாபாரி ஆகி நடத்திக்கொடுத்தார்.

அங்கிருந்த சிலர் தம்மையும் படத்தில் எங்காவது இணைத்து கொள்ளுமாறு கேட்டனர். சிலர் திட்டு வாங்கினாலும் குறுக்கே நடந்து தம் முகத்தை கமராவுக்கு காட்டிய படி வரலாற்று சாதனை புரிந்தார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு 9மணியளவில் பருத்திதுறையிலிருந்து டப்பிங்குக்காக வந்து கொண்டிருந்தார் மதிசுதா அன்று விஜய் படம் ரிலீசாகி அவருக்க்காக ப்ஸ் நிலையத்துக்கருகில் நின்றிருந்த படக்குழுவினர் அனைவரும் 500/= டிக்கட்டை ஒரு நல்ல உள்ளம் ஓசியில் எடுத்து தந்ததால் தியேட்ருக்குள் சென்று விட்டோம்.  மதிசுதா பஸ் நிலையம் வந்தும் திரையரங்குக்கு வராமல் சென்று இடையில் மழை குறுக்கிட்டதால் வீதியில் ஓய்வெடுத்து காலை 5மணியளவிலே வீடு சென்றார். அவருக்காக எடுத்த டிக்கட்டை 1000ரூபாக்கு ஒரு உயிர் ரசிகருக்கு ப்ளாக்கில் விற்று இன்னுமொரு சாதனை நிலைநாட்டினோம் அன்று மதிசுதா என்ற புன்னகை மனிதருள்குள் இருந்த காலசுவடுகளின் வைராக்கியத்தை கண்டு வியந்து போனேன்.

இந்த குறும்படத்தின் முகப்புத்தக பக்கம் இது http://www.facebook.com/யாழ்ப்பாணம் இங்கே ஏனய புகைப்படங்கள் செய்திகள் எதிர்(பார்)ப்புகள் பகிரப்பட்டுள்ளது.

எம் படம் பற்றி செய்திகள் பகிர்ந்த ஊடகங்களுக்கு படத்தில் மட்டுமல்ல எம் தனிப்பட்ட நன்றிகளும் கூட..!

இப்போது Sound edit டப்பிங் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது இன்னும் சில நாட்களில் வெளியிட தயாரக உள்ளோம். உற்சாகமூட்டிய அனைவருக்கும் எம் உளமார்ந்த நன்றிகள்.

அடுத்துள்ளது படப்பிடிப்பின் போது இடம்பெற்ற சில சீரியஸ்ஸான சீக்கின்ஸ்...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, December 29, 2010

ஸிக்ஸ்! ஸிக்ஸ்!! ஸிக்ஸ்!!! - 02


பதிவர்கள் எழுதப்போகும் இத்தொடர்கதையின் அடுத்த கட்டங்கள் எப்படியிருக்கபோகின்றன என ஒவ்வொருவருடைய கற்பனைகளையும் படிக்கும் போது தான் தெரிய போகின்றன..

இக்கதையின் முதல் பாகத்தை படிக்க இங்கு சொடுக்கவும். மறுபடி திரும்பி வந்ததற்கு நன்றி. வாய்ப்பளித்த ஜனா அண்ணாவுக்கு நன்றி.

ஆறுமுகன்
ஆறுபடையான்
ஆறுனி

பெருசா காசு கேக்கலாம்டா என்றான் றுனி
ஒரு கோடி கேக்லாண்டா த மூணா பிரிச்சிக்குவோம் என்றான் றுபடையான்
கணக்கு பர்க்க என கையில் ஒரு குச்சியோடு தரையில் உக்கார்ந்த றுமுகன் சிறிது நேரத்திலேயே றாம் வாய்ப்பாடு கண்டுபிடித்தவனை றம்புறமாக திட்டிக்கொண்டு முயற்சியை கைவிட்டான்...

இவர்கள் ரொம்ப நேரம் யோசித்துகொண்டேயிருந்ததால் கால் வலித்திருக்கும் போல பூதம் மணலில் மர உக்கார்ந்து விட்டது.

இவனுங்க மூணுபேரும் சேர்ந்து யோசிச்சாங்க பெருசா என்ன கேக்கலாம்....!!!

நாங்க பாட்ர்ஷிப்பா பிஸ்னஸ் ஆரம்பிப்பம் மச்சான்...

மாடா... சினிமா படம் தயாரிக்கலாம் நானே ஹீரோவா நடிக்கிறேன்... உங்களுக்கு எதுக்கு சிரமம்..
ஆறுனியின் இந்த பேச்சினால் பாட்ர்ஷிப் முறிந்துவிடும் பாயமிருப்பதை உணர்ந்த ஆறுபடையான்
த சைட் பிஸ்னஸா பண்ணலாம் முதல்ல நாங்கள் வீட்ல ழகுக்கு வளக்கிற மீன் பிஸ்னஸ் ஆரம்பிப்போம் என முடிவெடுத்து...

மதிப்பிறக்குரிய பூதமே நிறைய மீன்களை தா என கோரஸாக கேட்க... 

சுறா முதல் நெத்தலி வரை அத்தனையும் ங்கு ஆஜராகின... (கடலில் தூண்டில் போட்டு பிடிக்க பட்டவை..)

நாம கேட்டது இந்த சுறாக்கள் இல்லை என ஆறுமுகன் கத்த தலையை சொறிந்த பூதம் ஒரு கூடை டிவிடிகளை வழங்கியது... 

ண்ணா இது வேணாங்ண்ணா... என்ற ஆறுமுகன் மீண்டும் 666 குழுவை கூட்டி சிறுவர்களுக்கு வியாபாரம் செய்யவென சிறிய மண்சட்டி பானை பிஸ்னஸ் ஆரம்பிப்பது என முடிவெடுத்தான். 

பூதமே ஒரு றை நிறைய சட்டி கொடு.... சட்டி கொடு...

 டுத்த கணமே  வர்களை சுற்றி மலைபோல் உள்ளாடைகள் குவிந்தன..

 டேய் பூதம்... நாங்க கேட்டது  டுப்புக்கு மேல வைக்கிற ஐட்டம் இடுப்புக்கு கீழ வைக்கிறத இல்லை...
என உள்ளேயிருந்து ஒரு  ஆறு தொண்டை கிழிய கத்தினான்...

ஒரு வழியாக  ந்த மலைக்குள்ளிருந்து வெளியேறிய ஆறுபடையான் வெளியே ஆறுனி மட்டும் மூச்சு வாங்க நிற்பதை கண்டு ' ஆறு...  ஆறு...' என கூப்பிட்டு பார்த்தான் உள்ளேயிருந்து ஆறுமுகன் குரல் கொடுக்க பூதத்தை பார்த்து மீண்டும் மூவரும்

 றை வெளியே கொண்டுவா என கத்தியதும்... 

தொண்டமனாறு அங்கே பாய்ந்து வந்தது...

 ற்றில் மூவரும் மூள்க தொடங்கினர். நீந்தி தப்பிப்பதற்காக தங்களை '   ன்னமாக மாத்து....' என கத்தினர்

 டுத்த கணமே வர்கள் சோறாக மாறி சேறோடு ஊரூராக ஊறி கரையொதுங்கினர்...

பக்கத்து வீட்டில் மேய்ந்து கொண்டிருந்த கோழி ஒன்று சோற்றை கொத்தி தின்றுவிட்டது...

வயிற்றுக்குள் இருந்து  வர்களின் குரல் வந்தது...
மூதேவி... மீண்டும் எங்களை பழைய மாதிரி மாத்து... 

என்றதும் 666நண்பர்கள் கோழியின் வயிறற்றை கிழித்து மீண்டும் மனித வடிவுக்கு வந்தனர். 

இன்று மாலை புறப்பட்டவர்கள் இப்போது நேரம் இரவாகிக்கொண்டிருந்தது சிறுவர்களை வீட்டில் தேடி புறப்பட்டிருப்பார்கள் னால் இவர்களோ வேறோர் ஊரிலல்லவா நிற்கிறார்கள்... 

'மீண்டும் மாலை வரவேண்டும்...' என கட்டளையிட மூவரின் கழுத்திலும் ழகான பூமாலைகள் வந்து விழுந்தன.

'கரப்பொத்தான கவிட்டு போட்ட மாதிரி மூஞ்சில கிடாரம் மாதிரி காது வச்சு கொண்டு எருமை மாடு.. உனக்கு காது கேக்காதா...?“

என ஆறுதலாக திட்டினான் ஆறுபடையான்...

ஐயனே தங்களின் விண்ணப்பங்களையே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் அடியேனிலேதும் வழு கண்டீரோ...!!!“

'பண்டி... வா எங்கட ஸ்கூலு தமிழ் படிக்க...' என்றான் இன்னொரு ஆறு“

பூதம் தமிழ் படிக்குமா... 666சிறுவர்களின் ஆசைகள் நிறைவேறுமா என்பது அடுத்த பாகத்தில்...
தொடர்ந்து கதையை அழகாக கொண்டு செல்ல தொடர் கதையான கொலைக்காற்றை மிக சிறப்பாக வீச வைத்த லோஷன் அண்ணாவை அழைக்கிறேன்... யை
நன்றி

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Thursday, December 16, 2010

SUPER STAR ரஜினி -என்னை பாதித்த 10 படங்கள்



மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது சுப்பர்ஸ்டாரை தவிர...
ஆனாலும் காலமாற்றங்களுக்கேற்ப ஆறு முதல் அறுபது வரை அனைவரதும் பல்ஸ்க்கு ஏற்றவாறு படங்களை தந்து கொண்டிருப்பதே ரஜினியின் ஷ்பெஷாலிட்டி.
வரோ அண்ணா இந்த வாய்பபை தந்ததற்கு நன்றி.
Super Starரைப்பற்றி அது நல்லாருக்கு இது சரியில்லை என்று எழுதுமளவுக்கு நான் அதிமேதாவி இல்லை ஆகவே இது ஏதோ அமரகாவியம் என்று நினைத்து இதை படிக்க வந்தவர்கள் விரும்பினால் வேற அச்சா வலைத்தளத்துக்கு போய் நேரத்தை மிச்சப்படுத்தவும்.

தில்லுமுல்லு
யாழ் இந்து கல்லூரியில் சேர்ந்த 2ம் நாள் வகுப்பாசிரியரால் எனக்கு தரப்பட்ட திருநாம் இது.. 
ரஜினி என்ற ஹீரே தனியே ஸரைல் மூலமாகவோ ஆக்ஷன் படங்களாலோ வெற்றிக்கொடி நாட்டியவர் அல்ல என்பதை நிரூபித்த படங்களுள் இதுவும் ஒன்று. இன்ரர்வியூ காட்சியில் வரும் I can talk English, i can walk English, i can laugh English. Because English is very funny language. Bhairon becomes barren and barren becomes Bhairon because their minds are very narrow. நகைச்சுவை வசனம் என்னை மிகவும் கவர்ந்தது ஏன்னா இதே சீனை சமகாலத்துல அமிதாப்ஜியும் பண்ணியிருகாகாரு.. ஆனா எப்டியிருக்குன்னு ஒப்பிட்டு பாத்துக்குங்க.


பாட்ஷா
நினைவு தெரிந்த நாட்களில் நம்ம ஏரியாக்குள்ள(கோண்டாவில்) நெறய்யபேரு “நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி“ன்னு சொல்லிட்டு திரிவாங்க ஏன்டா இவங்க நூறு தடவை இந்த ஒண்டயே திருப்பி திருப்பி சொல்றாங்கன்னு நெனச்சதுண்டு ஆனா படம் பாத்ததில இருந்து இப்ப வரைக்கும் நான் யாருக்காச்சும் வாக்கு குடுக்கும் போது இந்த வாக்கியமும் கண்டிப்பாக இடம் பெறுகிறது....  
மாணிக்கமாக முதலில் ரஜினி நிறையவே ஒதுங்கிப்போவார் பின்னர் தன் ஃப்ளாஷ்பேக்கில் தன் கடந்த கால அடிதடி வாழ்கையை பற்றியும் அது காலத்தின் தேவையாலேற்பட்டது எனவும் கூறி தூள்கிளப்பிய படம்.
ஸ்ரைலுக்காகவும் வசனங்களுக்காகவும் நான் பல தடவை பார்த்த படம்.

முத்து
இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த காலங்களில் பாடல்கள் வெளியாகி கொளும்பு சர்வதேச ஒலிபரப்பு ரேடியோவில் கேட்டதுண்டு(அப்ப நியூசுக்காக வீட்டில் பேட்டரி ரேடியோ போடப்படும் நேரத்தில் ஏரியாவே அந்த இடத்துக்கு ஷிஃப்ட் ஆகி அமைதியா உக்காந்திருக்கும்..)
படத்தை சிறுவயதில் பார்த்தபோது ரஜினியை தவிர எதுவுமே நினைவில் இல்லை...
 பின்னாளில் ரஜினி மீனாவுடன் மேடையில் பேசும் காட்சியை வகுப்பில் பேசி மற்றவர்களின் வாயை பிளக்கவைப்பதுண்டு... 

அண்ணாமலை
பாடல்கள் வெளியானதும் ஊருக்குள் அனைவர் வாயிலும் ஒலித்ததால் பிடித்துபோனது பின்னர் தான் யாழ்சேவை ரேடியோவில் கேட்டதுண்டு (அப்ப அந்த ரேடியோ டிக்ஷனரியில் புதுப்பாட்டு என்பது வெளியாகி 6மாதம் கடந்த படங்களிலிருந்து ஒலிப்பது) இந்த சூழ்சிலையே படம்பார்க்கும் ஆர்வத்தை வெகுவாக தூண்டியது பின்நாளில் மனதில் நின்ற படங்களில் ஒன்றாகியது.


அருணாச்சலம்
ஏரியாவில் யாருக்காவது கலியாண படக்கொப்பி அல்லது வெளிநாட்டு கலியாண கொப்பி வீட்டுக்கு வந்தால் அன்று இரவு அந்த அயலுக்கே கொண்டாட்டம். ஏற்கனவே பார்க்காமல் பென்டிங்கில் இருக்கும் பூப்புனித நீராட்டுவிழா கொப்பியையும் அன்று தான் பார்ப்பார்கள். ஊரில் ரீவி டெக் வாடகைக்கு விடும் ஒருவரை பிடித்து ஒவ்வொருவரும் பங்கு போட்டு ஜெனரேட்டருக்கு மண்ணெண்ணெய் வாங்கி கொடுத்து மாலையில் விழா ஆரம்பமாகும் முதலில் சொந்தகாரர் கலியாணவீட்டை பார்ப்பார்கள் பிறகு பெரியவர்கள் திருவிளையாடல் வசந்த மாளிகை (ஊருக்குள்ள எப்ப படம் போட்டாலும் இதயேதான்... ) பார்ப்பார்கள் ஏதாவது ஒரு விஜயகாந் படம் இளைஞர்கள் எற்பாட்டால் திரையிடப்படும். இப்படியான ஓர் நடுநிசியில் பார்த்த படம் அண்ணாமலை.
படத்தின் கதையைவிட ரஜினியும் அந்த படம் பார்த்த சூழலுமே அந்தப்படத்தை பற்றி பசுமையான நினைவுகளாயுள்ளது. (இப்ப 6 படம் உள்ள டிவிடி 50ரூபாய்.. மடிக்கணினியில் Blue rayயில் பார்த்தாலும் அந்த மகிழ்ச்சி கிடைத்ததில்லை)


படையப்பா
இதுவும் மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில் பார்த்த படம் தான் படம் பார்த்த போதுதான் பாடல்கள் அறிமுகமாயிற்று... படம் பார்த்து பல காலத்துக்குபின்னும் வெற்றிக்கொடி கட்டு பாடல் இசை மனதில் ஒலித்துகொண்டேயிருந்தது. ரஜினி புலியாக மாறுவது மற்றும் வேல் பறந்து வரும் க்ராபிக்ஸ்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு (இப்ப அதல்லாம் கைவந்த கலை என்பது வேறு...) நீலம்பரி வீட்டில் ஊஞ்சலை இழுத்து போட்டு உக்காருவது சுருட்டை சுற்றுவது பாம்புக்கு முத்தம் கொடுப்பது என சில காட்சிகளே அந்த வயதில் மனதில் நின்றன... அப்போது தான் ராஜா தியேட்டர் ஜீன்ஸ் படத்துடன் கோலாகலமாக இயங்க தொடங்கியிருந்தது (புலமைபரிவில் சிறப்பாக பாஸ் செய்ததால் என் முதல் தியேட்டர் பிரவேசமும் அதுவே...) படையப்பா தியேட்டரில் ஓடும் போது கட்டாயம் கூட்டிப்போகவேண்டும் என வீட்டில் வரம் கேட்டடு அனுமதித்தார்கள் ஆனால் இன்னும் படையப்பா அந்த தியேட்டரில் ஓடவேயில்லை...


பாபா
ஸ்பைடர் மேன் பாதிப்பு இருந்ததாலும் ஆனந்தவிகடன் எதிர்பார்ப்பை எகிறவைத்ததாலும் (சின்னிஜெயந்தின் “ஒரு தடவை சொன்னா“  படமும் ஒரு காரணம்..) படம் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் கூடியது... படம் வெளியான புதிதில் வவுனியாவில் தங்கியிருந்த ஹோட்டலில் பார்த்த படம்(பள்ளியில் நான் தான் முதலில் பார்த்தேன்...). “பாபா கவுண்டிங் “ காட்சிகளும் நடைகண்டு அகங்காரம் பாடலும் விரும்பி ரசித்தேன்... 


சந்திரமுகி
16 வயதினிலே (எனக்கு தான்) படம் ரிலீஸாகும்நேரம் (சந்திரமுகி தான்) நமக்கு chicken pox வந்து 16 நாட்கள் எங்கேயும் போககூடாது என்று சொல்லிவிட்டார்கள். பொழுது போவதற்காக ஆனந்த விகடன்கள் என் படுக்கையை சுற்றி நிறைந்திருந்தது காலக்கொடுமையாக ரேடியோவில் பாடல்களும் அத்தனைபுத்தகங்களிலும் சந்திரமுகி பற்றிய நியூஸ்களும் வித்யாசாகர் போன்றவர்களின் பேட்டிகளுமாக என்ன கொடும சரவணா...!!! 
ஆர்வகோளாறில் இடையிலேயே சுகமாகிவிட்டதாக கூறி குலதெய்வம் கோயிலில் தோய்ந்து விட்டு அடுத்தநாள் நண்பர்களோடு தியேட்டருக்குள் புகுந்துவிட்டேன்....
சச்சின் விஜய் ரசிகர்கள் பாடசாலையில் நம்மோடு யுத்தம் செய்த வரலாறுகளுமுண்டு 
அப்புறம் தெலுங்கு டயலாக்ஸ் கூட மனப்பாடமாகும் வரை பார்த்து தீர்த்து விட்டோம்
900+ நாட்கள் ஒடிய படத்தின் சிறப்புகளை நான் இங்கு சொல்லதான் வேண்டுமா?


சிவாஜி
சங்கர் ரஜினி ரகுமான் சுஜாதா காமினேஷன் என்பதாலும் படப்பிடிப்பு தொடங்கும் போதே தியேட்டருக்கு போக வீட்டில் அனுமதி பெற்றுவிட்டேன். 


ரிலீஸாகும் நாள் காலை 3.00மணியோ 4.00யோ தெரியவில்லை கிளம்பி வழியில் 4..5.. இடத்தில “ஏ மல்லி கேஃபியோ ரைம் ஹோதய யண்ணே?“ என்ற கேள்விகளுக்கு விளக்கம் குடுத்து தியேட்டருக்கு போனால் அங்கே பெரிய கூட்டமே றோட்டில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தது விசாரித்ததில் “பலாலில ஷெல் விழுதெண்டு ஃப்ளைட் வரேல்லயாம் நளைக்கி தான் படம் வருமாம்...”


அப்புறம் வகுப்பிலும் சுவரெல்லாம் ரஜினி படம் வரைந்து physics போரடிக்கும் நேரத்தில் தூங்கும் அறையை OFFICE ROOM என பெயரிட்டு அதை அழிக்க பிரின்ஸிப்பல் வகுப்புக்கே பெய்ன்ட் அடித்தார்.


வெள்ளை ரஜினியும் மொட்டை BOSSம் கவர்ந்தார்கள். இந்தியில் மொழிபெயர்ப்பான (ரீகேடா)இப்பட பாடல்காட்சியை காமடியாய் கலாய்க்கும் (கோல்மால் ரிட்டர்ன்ஸ்) பாடல் கீழே நேரம் கிடைக்கறப்போ பாத்துக்குங்க.







குசேலன்
இதுவும் சோதனை மேல் சோதனை காலம் அதுவும் உயர்தர பரீட்டை சோதனைக்காலம்.
பரீட்டை தெடங்கின நாள்ளயே படமும் ரிலீஸ்...
பரீட்டைச காலம் யாருமே போகமாட்டாங்கள் ஆனா அன்னிக்கு பரீட்சை முடிந்ததும் மாலை கிட்டதட்ட மாறுவேடத்தில் தியேட்டருக்குள்ள நுளைஞ்சு பாக்கும் போது தான் புரிஞ்சுது அந்த பட க்ளைமாக்ஸ் சீன் பக்கத்தில ப்ரன்ஸ வச்சு கொண்டு பாக்காம விட்டது எவ்வளவு நல்லதெண்டு. நண்பர்கள் கூட இருக்கும் போது படம் பாத்து கண்ல தண்ணிவுட்டா நல்லாயிருக்காதுல்ல...


எந்திரன்
தொழிநுட்பத்தை பாத்து பிரம்மிச்ச படம்...
அதுக்கு போகும்போது ஒரு சிக்கலும் இல்லையோ எண்டு யோசிக்கிறாக்கள் இங்க போய் பாருங்கோ..
இதில தெரிஞ்சாக்கள் யாராவது நிக்கினமோ..?
இணையத்தில் (எனக்கும் தான்) முதன்முறையாக வெளியான எனது எந்திரன் விமர்சனம் இங்கே


சுல்த்தான் படத்திலிருந்த நம்பிக்கை போய் பலகாமாச்சு (நாங்க தான் முனன்முதல் ரஜினிக்கு 3டி அனிமேஷன் செயோணுமெண்டு தலைவிதியோ தெரியவில்லை..)
இவ்வளவு நேரமும் பொறுமயா படிச்சதுக்கு நன்றி 




ரஜினி 10 ஜ தொடர... ரஜினி பற்றி எழுதகூடிய தகுதி இருப்பவரான் ஜீவதர்ஷன்  அண்ணாஅவர்களை அழைக்கிறேன் இவர் ஒருதடவை எழுதினா நூறுபேர் எழுதின மாதிரி...
ஏன்னா இவர் நூறு தடவை எழுதினாலும் அந்த ஒருத்தர பற்றி தான் கூட எழுதுவார்


அடுத்து எந்திரனில் குற்றமும் பின்னணியும் சிறப்பாக ஆராய்ந்த சுபாங்கன் அண்ணாவை அழைக்கிறேன்.


விமர்சன பதிவுகள் அருமையாக எழுதக்கூடிய மருதமூரான் அண்ணாவை ரஜினி பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.


புதிதாக எழுதத்தொடங்கியிருக்கும் பதிவர் திருத்தணிகேசன் அவர்களின் ரஜினியின் சிறந்த 10 படங்களை பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.



இங்க Comment பண்ணுங்கப்பா...!

Sunday, December 12, 2010

பனைமரக்காடே பதிவர்கள் நாடே...!!! -100%சிரிப்புக்கு நாங்க காரண்டி.

யாழ்ப்பாணத்தில் பதிவர்சந்திப்பு - முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க


“ஆ...! அங்கே ஒரு றோட்டு தென்படுது“ என்றான் அனு...


“சாத்தியமேயில்லை Google Mapல் இல்லையே“ உறுதியாக தன் ஐபோனை பார்த்தபடி மறுத்தான் வதீஸ்...


“அட.. ஜோரான பாதயாத்தான் கிடக்கு“ என்றவன் கோபி.


“நேரத்தை வீணடிக்கமுடியாது கோணடிச்சுகொண்டு முன்னேறுங்கள்..“ என சுபாங்கன் உத்தரவிட அவனது ஒளியை விட வேகமா செல்லக்கூடிய டைம் மிஷினில் (அதைப்பார்க்க விரும்புபவர்கள் க்ளிக்குக) அந்த பாதையினூடாக விரைந்தார்கள்.


பாதையின் குண்டுகுழிகளுக்கு தாக்குபிடிக்கமுடியாமல் வண்டி வெள்ளத்துக்குள் குடைசாய்ந்தது...!


“ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து ஓடம்போலே ஆடலாம் பாடலாம் ஓடலாம்..” என ரிங்டோனை வெளியிட்டது கோபியின் போன் 


“ஹலோ கூல்போய் என்ன... பதிவர்சந்திப்பு தொடங்கபோகுதோ என்னண்டா சுபாங்கன்ர மோட்டசைக்கிள்ள தான் நாலுபேரும் வந்து கொண்டிருந்தனாங்கள் வழீல ஒரு அக்ஸிட... 
பீப் பீப் பீப்...
 தண்ணீர் புகுந்ததால் தொலைபேசி அத்தோடு தன் உயிரை விட்டது.


“பாதை கிடையாதுன்னு நான்தான்  சொன்னேனில்லையா...“ என்றான் வதீஸ்.


“அடேய் ஆற்றயோ காணீக்குள்ள புகுந்திட்டம் போலிருக்கு தோட்டக்காறன் உழுதுவச்சிருக்கிறான் வா ஓடிப்போயிடுவோனம்...“


“நண்பர்களே இதுதான் காங்கேசன்துறைச்சாலை என வழங்கப்படும் கே.கே.எஸ் றோட்டு...“ இதால போகோணுமெண்டால் குரங்கு கொப்ப பிடிச்சுகொண்டிருக்கிறமாதிரி வண்டிய இறுக்கி பிடிச்சுகொண்டிருக்கோணும்...! அட கோபி கைய எடு நான் வாகனத்த தான் வண்டியெண்டனான்...“ என ஐயம் தெழிவித்தார் சுபாங்கன்


இதேநேரம் யாழ் இந்துக்கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டுகொண்டிருந்தன...!!!
மண்டப வாயிலில் ஜனத்தொகை சிறிது சிறிதாக அதிகரித்தவண்ணமிருந்தது.


“நிகழ்ச்சி நிரலின்படி தொடங்கவேண்டிய நேரமாச்சு எங்க ஜனா..“  


என்று ஆறுதலாய் ஆரம்பிக்கும் யாழ்ப்பாண பண்பாடு தெரியாமல் அவசரப்படுத்தினார் மருதமூரான்.


“ஆள் மேடைக்கு பின்னுக்கு கொண்டிபிஸ்னஸில பிஸியாயிருக்கிறார் இப்ப வாறதாம்...“ கூறிவிட்டு பின்புறமாக சென்றார் நிரூஜா.


“ஓ... அண்ணன் கண்டி'லயும் பெரிய பிஸ்னஸ் மாக்னட் போலிருக்கு...“  தோரணம் கட்டியவாறே முகட்டுக்குள்ளிருந்து வினா எழுப்பினார் மதிசுதா.




ஒருவழியாக மண்டப வாயிலிலுக்கு வந்து சேர்ந்த ஜனா அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து..


“ஓ... தமிழின் வருங்கால தூண்களே! வருக வருக ஆம் இவ்விழாவை இனிதே ஆரம்பித்துவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம் நான் அதிகம் பேச விரும்பவில்லை பதிவுலகில் ஒற்றுமையே பலம் என்ற கருத்தோடு எனது சிற்றுரையை நிறைவு செய்து அடுத்த நிகழ்வாக மண்டபத்துக்குள் சென்று ஆசனங்களில் அமர்ந்து கொள்வோ......“


கூறிமுடிக்கமுன்னர் பின்புறமாக வந்து நின்று இடைமறித்த பாலவாசகன் காதுக்குள் மெதுவாக....


“உஷ்... ஜனாண்ண இன்னும் Hall ஒழுங்குபண்ணி முடியேல்ல.. நேற்று உங்க பேச்சை நீட்டுங்க..“ 


சொல்லிவிட்டு கதிரைகளை அடுக்குவதற்காக ஓடிவிட்டார்....
சடுதியான சூழ்நிலையால் சிலையாகி நின்ற ஜனாவின் பின்புறமாக வந்த Cool Boy கிருத்திகன் அவரின் கைகளில் எதயோ திணித்து...


“மேடைக்கருகில் இது கிடைச்சுது இத வச்சு சமாளிக்கேலுமோ பாருங்கோ..“


கையில் ஓர் புத்தகம் அம்பிட்டிருப்பதை முன்னிட்டு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய அதை பிரித்து பார்த்தபடி ஜனா தொடர்ந்தார்.


“ம்ம்... வந்து.. .இந்த நேரத்தில் ஆண்டவனுக்கு நன்றி கூறும் முகமாக அவரது போதனைகள் கொஞ்சம் பார்ப்போம்...


ஜெனலிஸ் அத்தியாயம் 1 பாடல்1 இறைவன் படைப்பை ஆகாயத்திலும் பூமியிலும் தொடங்கியபோது  பூமி நடமாட்டம் எதுவுமேயில்லாத காலியிடமாக இருண்டு கிடந்தது.
இறைவன் மூச்சு கடலின்மேல் விழுந்தது இறைவன் சொன்னார் இங்கே வெளிச்சம் பரவட்டும்.
உடனே வெளிச்சம் பரவியது.




நெடுநேரத்துக்கு பிறகு...


இறைவன் மோஸஸிடம் சொன்னார் நீ நீசனாய் மலையுச்சியை சென்றடையும் போது உன்னை என் 10 கட்டளைகளையும் புரிந்துகொள்ளச்செய்வேன்...


“இந்த சந்திப்பு ஏற்பாடு உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கும் இல்லையா மதிசுதா...? என்ன அப்போத தொடக்கம் ஏதோ அந்தரப்பட்டுகொண்டிருக்கிறியள் போலிருக்குது உதென்ன கையில...? குப்பை தொட்டி அந்தப்பக்கமிருக்கு...!“


 என மதிசுதாவை விசாரித்தார் வரோ.


 இல்ல கானா வரோ அங்கயிருந்துதான் கொண்டாறன் பாண் சுத்தி வந்த பழைய பேப்பர் போலிருக்கு அடுத்ததா ஜனாணக்கு உரையாற்ற குடுத்துதவலாமெண்டு வச்சிருக்கிறன்...அது சரி இந்த வரவேற்பு பனர் எங்க கட்டுறது?


இதேநேரம் ஜனா தொடர்கிறார்...


“ஜாப் அதைக்கேட்டுவிட்டு என்ன சொன்னானென்றால்.... கொர்ர்ர்.... கொர்ர்ர்...“


“முடிஞ்சுது அவங்க உள்ள வரலாம்...“ ஜனாவை உலு(எழு)ப்பி Cool Boy கிருத்திகன் மெல்லிய குரலில் கூற...


உற்சாகமாக அறிவித்தார் ஜனா 


“இனிதே இடைவேளைக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இப்போது அனைவருக்கும் சுடுசோறு வழங்கப்படும்...! அதனைதொடர்ந்து அடுத்த நிகழ்வு பதிவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்.
நன்றீ...!!! 

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Tuesday, December 7, 2010

வலைச்சரத்தில் ஸ்ரார்ட் மியூசிக்! ....!

தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்! 


ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்!  அபடீன்னு அலப்பரை 'பன்னி'ட்டிருக்கிற 'பண்ணி'க்குட்டி ராமசாமி  சார்.. பதிவுலகில் பிரபல பதிவராகவும் வருங்கால எழுத்தாளராகவும் உலகமகா மாமேதையாகவும் தமிழ் புத்திஜீவியாகவும் அனைவராலும் அறியப்பட்டவர்.



நல்ல பதிவுகளைக்கண்டுபிடிக்கும் வேலை கிட்டத்தட்ட கீழ்ரும் வீடியோக்கு ஒப்பானது



அதல்லாம் அனுபவிச்சாதான் புரியும்...!

அந்த புண்ணிய ஆத்மாகிட்டயிருந்து வந்த செய்தி பெரிய்ய ஆச்சரியத்த குடுத்திருக்கு...
அதாவது வலைச்சரத்தில் என்னையும் நகைச்சுவைப்பகுதியில் அறிமுகப்படுத்தி உயர்த்தியிருக்காரு அந்த உத்தமரு...! (மகராசனா இருக்கணும்..)


அந்த இணைப்பைக்காண இங்கே க்ளிக்குங்கோ...!

இலைமறை காயாக இருந்து வருகின்ற தரமான ஆக்கங்களை தந்து கொண்டிருக்கும் பல புதிய பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை வலைச்சரதையே சாரும்.


கண்டதையும் நிறைய படித்து ஒப்பிட்டு ஆராய்ந்து புதியவர்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பை ஏற்பது சுலபமான காரியமல்ல...!

(சிலது விஜய் படம் மாதிரி இருக்கும்
சிலது கடிச்சுதிங்கற மாதிரி இருக்கும்...
சிலது ரத்தசரித்திரம் பாக்கறமாதிரி டெரரா இருக்கும்
சிலபேரோட ப்ளாக் அவங்க டைரிய பாக்கறமாதிரியே இருக்கும் சின்னவயசுல மூக்குக்குள்ள புளியாங்கொட்டய வச்சதுலருந்து இன்னிக்கு காலைல பண்ணினதுலருந்து வரைக்கும் போட்டுட்டு பிரபல பதிவராக ரைபண்ணிட்டிருப்பாங்க.)

கூட்டுக்களவாணிப்பசங்க தங்களுக்கு தாங்களே ஓட்டப்போட்டு பல மொகை்கைபதிவுகள் திரட்டிகள்ள முன்னுக்கு நிக்கறதால பல தரமான கற்பனைத்திறன்மிக்க படைப்புக்கள் 2..3.. ஓட்டுகளோட யாருக்கும் தெரியாம இருந்திட்டிருக்கு...! இதுங்களுக்குள்ள எல்லாம் நுளைஞ்சு இலைமறைகாய்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகளைக்கூறிக்கொள்கிறேன்.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, December 6, 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட் 2

தமிழ் பதிவர் சந்திப்பின் அறிமுகம் முதல் இடைவேளை வரை சுபாங்கன் அண்ணாவின் தரங்கத்தில்  பார்த்துவிட்டு வரவும்
யார் உசுப்பேத்தியும் இந்த பதிவை எழுதவில்லை என நம்பவும்.


இடைவேளையில் இன்னிசை
பாடல் போடுவதற்காக ஏற்பாட்டு குழுவினர் ஆளுக்கொரு பென்ரைவுடன் பாட்டுப்பெட்டியை நோண்டிக்கொண்டிருந்தார்கள்.
எந்திரன் பாடல் கோபியின் ப்ளாஷிலிருந்து அரங்கத்தை அதிரவைக்க ஆரம்பித்து இரு வரிகள் கடந்த நிலையில் “அவள் அப்படியொன்றும் அழகில்லை பாட்டை போடப்பன்..“ என்ற குரல் வர வேறு ப்ளாஷ் செருகப்பட்டது. குரல் வந்த திசையில் புல்லட்.
இதில தான் எங்கயோ சேவ் பண்ணின்னான் என அனுதினன் ஒவ்வொரு பாடலின் முதல்வரியையும் ஓடவிட இடைவேளையில் இன்னிசை இனிதே நிறைவடைந்தது.


கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
நிரூஜாவின் அறிவிப்பை தொடர்ந்து மைக்கைப்பிடித்த வரோதயன் அண்ணா பதிவுலக பதிவர்கள் பிரயோசனமாக சிரமதானம் செய்யவேண்டும் என்று கூற... கரகோஷம் வானைப்பிளந்தது.


ஜனா அண்ணா குறும்படம் எடுக்கலாம் என்று தொடங்கி தானும் கேபிள்சங்கர் சாரும் ஒரு ஷூட்டிங் இடைவேளையில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே எந்தக்கடையில் நல்ல ரீசேட் வாங்கலாம் என்பது பற்றி கதைத்த சம்பாஷனையை மீண்டும் ஒருமணிநேரமாக மிமிக்கிரி செய்து விளங்கப்படுத்தினார்.


இப்போது தான் அரங்கத்துக்குள் அரக்கப்பரக்க நுளைந்த ஒரு பு(மு)தியவர் தன்னை டோண்டு  என அறிமுகம் செய்து கொண்டு எல்லோர் முகத்தையும் உற்றுப்பார்த்து எதையோ சீரியஸாக தேடிக்கொண்டிருந்தார்.


அடுத்து கருத்துகளுக்கு நன்றி என உச்சஸ்தாயியில் உற்சாகமாகக்கூறிய மாலவன் அடுத்து மௌன அஞ்சலி செலுத்துவது போல் சிறிது நேரம் நின்றறார் சுதாகரித்துக்கொண்டு அஷ்வின் இருந்த பக்கமாக திரும்பி மெதுவான குரலில் “பேப்பர்... பேப்பர்..“  என்றார். 


புரிந்து கொண்ட சொபிசன் தூங்கிக்கொண்டிருந்த பவனிடம் நிகழ்ச்சி நிரலை கொடுத்துவிட அது மாலவன் கைகளுக்கு சென்றது 
கூடவே மாலவனின் காதுக்குள் பவன் “கெதியா முடிக்கட்டாம்“ என்று கிசுகிசுத்தார். பவர் கூடிய மைக் என்பதால் இந்த உரையாடல்கள் றொக்ஸி திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு கூட தெளிவாக கேட்டது. 




மாலவன் தொடர்ந்தார்- கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
 500க்கும் அதிகமான வலைப்பூக்கள் மற்றும் வலைமனைகளை யாழ்தேவி ஒருங்கிணைத்து வருகின்றது இதனோடு இணைந்து தொய்வு நிலையை போக்குவேம் -மருதமூரன் அண்ணா 


பதிவுகளில் சமூகப்பிரச்சனையை காட்ட வேண்டும் அதற்காக எல்லா பதிவுகளிலும் கற்பழிப்பு சம்பந்தமாக ஏதாவது இடம்பெற வேண்டும்- மதிசுதா 


அடுத்து கிருத்தின் ஏதோ சொல்ல வாயெடுக்க மைக்கை இழுத்தார் சுபாங்கன் சுபாங்கனின் கைகளிலிருந்த மைக்குக்கு முன்னால் வளைந்து முகத்தை நீட்டி 


கிருத்திகன் பதிவர்கள் எல்லோரு...


சுபாங்கன் தமிழ் பதிவர்கள் எல்..


கிருத்திகன் பதிவுலக பதிவர்...


சுபாங்கன் பதிவுலகில் சமீபகால..


இந்த இழுபறியில் ஸ்பீக்கர் “கூ.......“ என்ற சப்தத்துடன் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டது.. கூடவே அழகாக புகையும் கசிந்தது.


தொடர்ந்த மாலவன்  
“ஆம் தமது கருத்தை ஒற்றுமையாக எடுத்துரைத்த இரு பதிவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு... அடுத்து 
பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.


பதிவர்கள் தமக்கிடையே கருத்துகளை பரிமாறிக்கொண்டிருந்த வேளை


இடைவேளைக்கு வெளியே சென்ற லேஷனண்ணா அப்போது தான் மீண்டும் வற்திருந்தார்.
மழையில் அவர் முகம் கடுமையாக நனைந்திருந்தது துடைக்க ஏதாவது வேணுமே என அவர் எண்ணிய மறுவினாடி ஒரு கை அவருக்கு ஒரு பேப்பரை கொடுத்துதவியது. 


நிம்மதியாக முகம்துடைத்தவாறே நிமிர்ந்து பார்க்க மதிசுதா சிரித்தபடி நின்றிருந்தார் அண்ணே பாண் சுற்றிவந்த பழைய பேப்பரும் எனது பையில் பத்திரமாக இருக்... கூறி முடிக்கு முன்னரே முகத்தில் நவரசங்களை வெளிப்படுத்தியவாறு முகம் கழுவும் தொட்டியை நோக்கி ஓடினார் லோஷனண்ணா.


வதீஸை தனியாக அழைத்த டோண்டு “தம்பி நிரூஜான்னு ஒரு பொண்ணு உங்கஊர்ல எழுதிட்டிருக்கே அத பாக்கதானாக்கும் அசலூர்லருந்து ப்ஃளட்ட புடிச்சு வந்திருக்கேன் அது இன்னும் வரலியா..?“


சார் நிரூஜா உங்க ப்ரண்டா..?


ஆமா தம்பி நா இன்னிக்கு இங்க வந்தா அடுத்த மாசம் என்னோட 69 வது பர்த்டேக்கு தமிழ் நாட்டுக்கு வர்றதா சொல்லியிருக்கால்ல குறும்புக்காரி... 


அப்டியா சார் ரொம்ப நல்லது நீங்க அவர போயி கண்டிப்பா பாக்கணும் என வைத்தியர் பாலவானனை காட்டினார் வதீஸ்.


தங்களின் பெயர்க்காரணம் கேட்ட ஆதிரை அவர்களுக்கு மாலவன்.பா அளித்த விளக்கம் கீழே
ஆரம்பத்துல ரங்கராஜன்'னு ஒருத்தரு சுஜாதாங்கிற பெயரில ஏதோ எழுதிட்டிருந்தாரு.. 


இப்போ நான் நிரூஜாங்கிற பேர்ல முதலிடத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறேன் ஏன்னா... என தொடர்ந்தவரை சுபாங்கனும் ஜனா அண்ணாவும் ஒரு அறைக்குள் தள்ளிக்கொண்டு போய் கதவை சாத்தினார்கள். கதவில் Office Room என எழுதப்பட்டிருந்தது. 


நன்றி



பதிவர் சந்திப்பு

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Thursday, September 16, 2010

குறும்பட வைபோகமே..!!!

குறும்படம் எடுப்பது பற்றி அஷோக்பரன் ஆரம்பித்த ஐடியா..
இதற்கும் இப்பதிவுக்கும் காமடிக்காக மட்டுமே சம்பந்தப்படுத்தபடுகிறது..
கீழே வரப்போகும் சில இலங்கைப் பதிவர்கள் அனைவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் நெருங்கிய தோழமையும் உண்டு...
மத்தப்படி முழுக்க கற்பனையே...
சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க.



பதிவர்களின் அமோக ஆதரவோடு மெருகேறி உருவேறி கதைக்கு கருவேறுவதற்காக பதிவர் ஜனா தலைமையில் கூட்டம் நல்லூர் மரத்தடி மணலில்..

புதிதாக யாரிடமோ இருந்து லவட்டி வந்த ஆளில் பெரிய கமராவுடன் கூல்போய் கிருத்திகன்..
கதைக்கருவுக்காக தீவிர சிந்தனையில் ம.தி சுதா...
செலவுகளை தன் தலையில் கட்டுவதற்காக “பிரபல பதிவர் ஜனா தலைமையில் கூட்டம்“ என்று அறிவித்துவிட்டார்களே என்ற கடுப்பில் ஜனா அண்ணா தன் தொலைபேசியில் இருக்கும் நண்பர் நம்பர்களுக்கு ஏதோ SMSசெய்தபடியிருக்கிறார்...
பாலவாசன் வழக்கம் போல இன்றும் “சிலநேரம் வருவார்..“
தன் டிஜிட்டல் கமராவில் வேப்பமரத்தை ஆங்கிள் பார்த்தபடி சுபாங்கன் அண்ணா..

கிருத்திகன்: 
சுபாங்கன் அண்ணா குறும்படம் எடுப்பது இதுதான் உங்களுக்கு ஃபெஸ்ட் எக்ஸ்பீரியன்சோ? ஆ... கேட்டா ஓம் எண்ண வேணும் இல்லாட்டி இல்லை எண்ணவேணும் இப்பிடி ஆருக்கும் தெரியாம என்ர கால கிள்ளினா எனக்கென்னண்டு விளங்கும்...

மதிசுதா:  
விடுங்க கூகூல்.. இந்த படம் சமுதாயத்தயே புரட்டி போட்டுரணும்..
ஏதாச்சும் மசேஜ் சொல்லணும் நாங்கள் கண்டுபிடிச்சிருக்கிறம் எவ்ளவு நேரம் ஏசியில் வேலை செய்தாலும் நம்ப தோல் உலராம சுருங்காம இருக்கிறதுக்கு ஒரு கண்டுபிடிப்பு அதாவது கருவாட்ட தோல் சீவி 4 துண்டா வெட்டி எயார்கொண்டிஷனுக்க போட்டுரணும்... இத பத்தி ஒரு பதிவு நாளக்...(ஜனான்ணா ஆரம்பிக்கிறார்..)

ஜனா:  
ஆங்..சிறுவர் உணர்வுகள மையப்படுத்தி எடுக்கலாம்.
கிர்கிஸ்தான் இலக்கிய எழுத்தாளர் றம்புட்டான் தன்ர எழுத்துகள்ள சொல்லவர்றதும் இதுதான்..
டைட்டில் முடிஞ்சதும் கூல்பாய் உங்க கமிரா முதல்ல ஒரு பூவில இருந்து Zoom Out ஆகுது அந்த பூவ ஒரு சிறுமி கைலவச்சிட்டு சந்தோஷமா சிரிச்சிட்டே ஆசையோட மோந்து பாக்குறா..
அவ வயசு 7 1/2...
பெயர் துளசிகா.. இல்லைனா.. மல்லிகா ஆங்.. அரலிக்கா அப்டீன்னு வச்சிக்கலாம்..
ஏன் மோந்து பாக்குறான்னா நானும் கேபிள்சங்கரும் சேர்ந்து இயக்கின ஒரு குறும்பட லஞ்ச் ப்ரேக்ல பெஞ்ல உக்காந்து பஞ்ச் டயலாக் பத்தி பேசிட்டிருக்கோம்.. 
அப்ப அங்க வந்த ராமநாராயணன் சொன்னது இது.. பூவை காட்டி ஹீரோயின் மனநிலையை சொல்ல முடியும்னு.. அடுத்த காட்சி என்னன்னா..(விழுந்து மறித்த மதிசுதா..)

மதிசுதா:  
ஆமான்னே ஆரம்பமே அருமை சமூக பிரச்சனையை உள்ள கொண்டாரணும் எப்டீன்னா... அடுத்த காட்சி கூல்பாய் உங்க கமிரால அந்த சிறுமியின் அழுது சிவந்த கண்களையும் கட்.. ரத்தம்கசிந்த உதடுகள் கட்.. கலைந்த தலைமுடி கட்..நககீரல் கொண்ட முதுகு இதேநேரம் மீசிக் எப்டீன்னா (வாயால் சோகமாக செய்து காண்பிக்கிறார்..) காட்டறோம் அவ கைல இருந்த பூ இப்ப ஏதோ சப்பாத்து காலால் நசிபடுகிறது... அந்த சப்பாத்துக்கு மேலே உயரும் கமரா அது ராணுவ பூட்ஸ் என உணர்த்துகிறது..
அவளுடைய டயலாக் கேளுங்க ”இப்பிடி பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா அன்னதானம் சாப்பிட போயிருக்கவே மாட்டேனே..“ (மறிக்கிறார் சுபாங்கன்..)

சுபாங்கன்: 
 இந்த சீன் ஓகே.. ஆனா பொண்ணுக்கு பதிலா பையன போட்டுரலாம்..

(சடுதியாக ஏதோ நினைவுக்கு வந்தவனாக..)கிருத்திகன்: 
 பாஸ் லைப்ரரிக்குள்ள ஷூட்டிங் நடத்த பர்மிஷன் தருவாங்களா... 


சுபாங்கன்: 
கூல் பையா ஷ்... பப்ளிக் பப்ளிக்....


கிருத்திகன்: 
பப்ளிக் லைப்ரரி இல்லை பாஸ்.. கொக்குவில் லைப்ரரியெண்டெல்லோ கேள்விப்பட்....ஆ.. மறுபடியும் அதே இடத்துலயே நுள்றீங்(தொலைபேசி அழக்கிறது.. டிஸ்பிளேயில் பாலவாசகன்..: )

வாசகன்: 
 வணக்கம் கூல்பாய் நான் இன்டைக்கு தான் வாழ்க்கைல முதன் முதல்ல கொம்பு பணிஸ் சாப்பிட போறன் பேக்கறீக்குள்ள போறதுக்கு கியூவில நிக்கிறம் இண்டைக்கெண்டு நான் ICயும் கொண்டுவரேல்ல.. என்ன செய்ய?

கூல்: 
 வணக்கம்னே இப்ப இங்க குறும்பட கதை டிஸ்கஷன் போய்ட்டிருக்கு..

வாசகன்: 
   ஓ.. அதுக்கு நான் ஒரு கவிதை தாறன் பெயர் “சின்னவன்“ படம் தொடங்க முதல் கவிதய போட்டு கீழ அன்புடன் பாலவாசகன் எண்டு போடுவம்..
அதாவது அவன் பட்டிக்காட்டில இருந்து பட்டனத்துக்கு போய்...

ஜனா: 
 அய்.. மருதமூரான் கோல் எடுக்கிறார்..
வணக்கமய்யா.. ஒரு மாரி நாங்களும் கதை ஓகே பண்ணிட்டம் உங்கள பத்தி தான் கதைச்சுகொண்டிருக்க நீங்களும் கோல் பண்ணுறியள்..அதாவது நகரத்து ஆடம்பரங்கள பாத்து பிரமிச்...(மறிக்கிறார் மருதம்ஸ்..)


மருதமூரான்: 
 ஆங்.. இங்க காதல், கடவுள், காமம் இந்த மூன்றும் உணர்வுகள், நம்பிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் அணுகப்படுபவை. பொதுசேவைப் பேரூந்தொன்றில் வீடு செல்வதற்காக ஏறுகிறான் சிறுவன்  கடைசி இருக்கையில் நடுத்தர வயதுள்ள ஆணும்- பெண்ணும் மிகவும் நெருக்கமாக உட்காந்திருந்தார்கள் ஒருவரை ஒருவர் முகர்ந்து கொண்டும், சொறிந்து கொண்டும் மர்ம உறுப்... (இடைமறித்த ஜனா  எங்கே இந்த கலாசார காவலர்கள் பதிவ அடுத்து படமாக்கணும் அதானே...!!)


மருதமூரான்: 
 சரி உங்கட விருப்பம் ஜனா.. ஆசப்படுறியள் அப்பிடியே செய்யுங்கோ..
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியோட படத்த முடிக்கலாம்..

இதற்குள் அதே போனில் புல்லட் பவன்

புல்லட்:
 வணக்கம் ஃப்ரண்ஸ்... கொன்ஃபிடன்ஸ் கோல் போட்டு கேட்டுகொண்டு தானிருக்கிறன்..நகரத்த பாத்து பையன் பிரமிக்கிற இடம் கதிரேசன் கோயில்.. அங்க அழகான பெண்கள பையன் பாத்திட்டிருக்கும் போது திடீர்னு ஏதோ முதுகுல முட்டற ஃபீலிங்..
திரும்பி பாத்தவனுக்கு பிரமிப்பு கூல்பாய் இந்த காட்சிய பிரம்மாண்டமா காட்டறதுக்கு காமிரா ஆங்கிள் வந்து...நேர வந்து சொல்றேன்.. 
அங்க ஒரு குண்டு பொண்ணு ஜீன்ஸ் அன்ட் ரைட் லோநெக் ரீசேர்ட்டோட நகர்ந்து போய்ட்டிருக்கு...

இதுக்கு யார நடிக்க போடலாம்னு குளம்பாதீங்க கோபி நல்ல பொடியன் செய்வான்... ஆங்.. இன்னொண்ணும் தேவை ஜனாண்ணா.. வோட்டர் புறூவ் மாதிரி இது எறும்பு புறூவ் அதாவது எறும்பு போகமுடியாததா இருக்கணும்... 
ஜீன்ஸ் போட்டு தலைல விக் வச்சு ரீசேட் போட்டு குண்டா காட்டுறதுக்கு தலகணி கட்டி... எங்கட குறும்படத்துக்கு செய்த மாதிரியே செற்ரப்பண்ணுவம்.. 
அப்பிடியே கோபி முட்டுக்கால்ல இருந்து குனிஞ்சு கும்பிடணும்...(கொன்பிடன்ஸ் callலிருந்து கோபி..)

கன்கொன்:
 (மெதுவாக..)“ஆகா ஆரம்பிச்சுட்டாரே ஆப்பை...“ இந்த சீன் லோஷனண்ணக்கு பிடிக்காது நான் வேற சொல்றேன்.. ஹஹ்.. ஹாஹ் ஹாஹ்.. அஹ்... ஹாஹ்....(10நிமிடமாக சிரித்துகொண்டிருக்கிறார் அந்த கப்பில் ஏதோ யோசித்து விட்டார்..)
கேளுங்கண்ணா கதாநாயகன் கொளும்பில கிரிக்கட் கிரவுண்ட், பிட்ச், லைட்டிங்ஸ்... ஸரேடியம்... கொமன்றி எண்டு எல்லாத்தயும் பாத்து பிரமிச்சு போற மாதிரி சீன்...(கொன்பிடன்ஸ் Callலிருந்து லோஷன் அண்ணா..)

லோஷன்:
 ஆம் வணக்கம் பதிவுலக தோழர்களே இன்றும் என்றும் போல் தொலைபேசியூடாக உங்களனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி புலர்ந்திருக்கும் மாலைப்பொழுதில் இன்னுமொரு காத்திரமான கருத்தை உங்கள் முன்வைக்கலாமென எண்ணுகிறேன்..
தலைப்பு வைக்கும் போது “தமன்னாவின் கப்பரகொய்யா அரலிக்கா சாப்பிடுமா?“ அப்டீன்னு வையுங்க அப்ப நெறய்ய பேரு பாக்க வருவாங்க ஹீரோயின் பெயர்கூட ஒத்து போகுது தலைப்புக்கு சம்பந்தமில்லைனு யாரும் சொல்லமுடியாது... ஜனா உங்க கருத்(அலைபேசியில் பிரபல பதிவர் வரோ..)

வரோதயன்:
 என்னையும் அழைத்தமைக்கு அனைவருக்கும் என் முதற்கண் நன்றிகளை தெரிவிக்கிறேன் கூல்போய் கம்பஸடியால மோட்டசைக்கிள்ள போனபோது றோட்டில நிண்ட என்ன கவனிக்காததற்கு என் கடும் கண்டனங்களை அறிவிக்கிறேன்.
சரித்திர வீரன் சங்கிலியன இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாத்தி எடுப்போம் ராமாயணத்த மணிரத்னம் எடுத்த மாதிரி..
முதல் ஷாட் சங்கிலியன இன்ரடக்ஷன் வீரமாகாளியம்மன் கோயிலடில ஒரு பைட்டுல ஆரம்பிக்குது 
அது முடிய இன்ரோ சாங் 
அடுத்து காமடி கலந்த லவ்.. 
அடுத்து 4 வெள்ளைக்கார வில்லன்கள்.. 
பஞ்ச் டயலாக் 
லவ் 
பைட் 
டூயட் சாங் 
பைட் 
குத்துபாட்டு 
க்ளைமாக்ஸ்பைட்... 
ஹப்பீஸ் என்டிங்.
சூப்பர் கதைல்ல ஜனாண்ணா இப்டி பண்ணினா வசூல் பிச்சிக்கும்...

வீட்டிலிருந்து அவசரமாக கோல் வருவதாக ஜனாண்ணா விடை பெற கூட்டம் கலைகிறது...





இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails