Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

Thursday, September 4, 2014

நடுக்காட்டில் ஓர் தங்க வேட்டை - உண்மை சம்பவம்.

இது என் நண்பன் ஒருவனுக்கு நடந்தது...

அவரு பேரு சோபி.
ஐடி பணியாளர். 

போதுமான பணப்புக்கம் இருந்தாலும், தேவைகளும் அதிகமாக இருந்ததால் சொந்த பிஸ்னஸ் செய்யலாம் என்ற எண்ணத்திலிருப்பவர்.

இவர் உணவகம் ஒன்றில் துறைமுகத்தில் பணிபுரியும் சில மனிதர்களை சந்தித்திருக்கிறார்.

அவர்களில் ஒரு சிங்கள பணியாளன், சோபியிடம் யாழ்ப்பாணத்தில் தனக்கு இடங்கள் தெரியாது எனவும் நல்ல சாப்பாட்டு கடை எங்கிருக்கிறது? தங்கிநிற்க நல்ல இடம் எது? எனவும் கேட்டறிய சோபியுடன் உணவருந்தியபடியே சகஜமாக பேச ஆரம்பித்துள்ளான்.

அவரை பற்றி விசாரிக்க தான் பிறிமா மாவு இறக்குமதி பணியாளன் எனவும் தம்புள்ள பகுதியை சேர்ந்தவர் எனவும், இங்கு யாரையும் தெரியாது எனவும் கூறியதுடன், தொலைபேசி எணையும் வாங்கி சென்றார்.

அன்று மாலையே தான் அருகிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிநிற்பதாகவும் ஏடிஎம் எங்கிருக்கிறது என தொலைபேசியில் விசாரித்தார்.

பதிலளித்த சோபி எந்த வங்கி என கேட்க இருவரும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவர தனக்கும் வங்கியில் தேவை இருக்கிறது அங்கு தான் புறப்பட போகிறேன் சேர்ந்தே போவோம் என அருகிலுள்ள அவரது விடுதிக்கு சென்று இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர்.

பேச்சுவாக்கில் இந்த வங்கியில் தங்கம் அடவு எவ்வளவு? நகையாக இல்லாமல் தங்க கட்டியாக வாங்குவார்களா என கேட்டார்.

பதிலுக்கு சோபி வங்கியிலேயே கேட்போமே என கூற யாழ்ப்பாணத்தில் நகை அணிவது தமிழ் கலாசாரம் என்பதால் இங்கு அடகு வைக்க போகிறேன் எமது பகுதியில் ஏன், எதற்கு என கேள்வி கேட்பார்கள் என்றவர்.

தொடர்ந்து தனது உறவினர் தம்புள்ளயில் காணி வாங்கியதாகவும் அதில் வீடுகட்ட அத்திவாரம் வெட்டும் போது தங்கம் கிடைத்ததாகவும் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறினார்.

மேலும் தமது பிரதேசத்தில் விற்க பயமாக உள்ளது என்றும் எப்படியாவது குறைந்த விலைக்காவது விற்க வேண்டும் என்று கடந்த முறை யாழ்ப்பாணம் வந்த போது நல்லூர் உண்டியலில் சிறிது தங்கம் போட்டு வேண்டிக்கொண்டேன் எனவும் கூறினார்.

தற்போது வங்கியை அடைந்திருந்தார்கள். சோபி வங்கிக்குள் நுளைய அந்த நபர் தன் பர்ஸை கையில் எடுத்தபடி ஏடிஎம்ஐ நோக்கி சென்றார்.

மறுநாள் சோபி அவருக்கு போன் செய்து அந்த தங்கத்தை தானே வாங்குவதாயும், நேரில் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டார்.

அந்த நபர் தன்வீட்டுக்கு வரும்படி அழைக்க சோபியின் சகோதரனும் இன்னொரு நண்பனும் அவருடன் புறப்பட்டார்கள்.

தம்புள்ளயில் இறங்கி இன்னொரு பஸ் புடித்து உள்ளே சென்றால் மலைக்குன்றுகள் நிறைந்த ஓர் கிராமம்.

அங்கிருந்து ஆட்டோவில் மரங்கள் நிறைநத ஓர் பகுதியை அடைந்து, உள்ளே நடந்து செல்ல புதிதாக காட்டை துப்புரவு செய்து உருவாக்கப்பட்ட பாதை, 

முடிவில் அந்த நபரின் உறவினர் புதிதாக வாங்கிய காணி.

முன்பு மன்னர்கள் யாராவது ஆண்ட பகுதியாயிருக்க கூடும்...!

கட்டட வேலைக்காக பறிக்கப்பட்ட சீமெந்து மூட்டைகள், கட்டட தொழிலாளர்கள் தங்கிநிற்க தற்காலிக கொட்டகை.

அதில் இவரது உறவினர் இருந்தார். இவர்கள் பார்க்க வருவதால் அன்று கட்டட வேலைகளை நிறுத்தியிருப்பதாக கூறினார்கள்.

அருகில் அத்திவாரம் வெட்டியிருந்தார்கள், பணியாளர்களது ஆடைகள் உலர்ந்து கொண்டிருந்தன.

அந்த உறவினர் கொட்டகையிலுள்ள ஓர் வெற்று பெயின்ட் வாளியிலிருந்து ஓர் பார்சலை எடுக்கிறார்,அது சீமெந்து பையால் சுற்றபபட்டிருக்கிறது.

அதை பிரிக்க உள்ளே துணியால் சுற்றப்பட்ட ஏதோவெரு பொருள் அதையும் பிரிக்க உள்ளே செப்பால் செய்யப்பட்ட உள்ளங்கையில் வைக்க கூடிய சிறிய மூடியுடன் செம்பு ஒன்று.

செம்பின் அடியில் மண் ஒட்டியிருக்கிறது.

கொட்டகையினுள் மரக்குற்றிகளாலேயே சிறிய டீப்பாய் போன்றும் அதை சுற்றி அமரகூடியவாறும் அமைத்திருந்தார்கள்.

அந்த டீபாயில் மூடியிருந்த துணியை விரித்து செம்பை கவிழ்த்தார்.

உள்ளேயருந்து தங்கம் கொட்டியது, அது தங்க பிஸ்கட் வடிவிலோ, நாணய வடிவிலோ ஆபரணமாகவே இருக்கவில்லை. தண்ணீர் துளி வடிவில் துகள் துகளாக காணப்பட்டது.

அவற்றை அவர்களை எடுத்து சென்று யாழ்ப்பாணத்துககு போய் பணத்தை தருமாறு கூறினார்.

மேலும் இதற்கு முன்னரும் தமிழர் ஒருவர் வாங்க வந்ததாகவும் இரவு ஷாம்பெய்ன் போத்தலுடன் தங்கிநின்று விருந்து வைத்ததாகவும் காலையில் சொல்லாமலே கிளம்பிவிட்டதாகவும் கூறினார்.

அதனால் தங்கத்துடன் தாம் பணம் வாங்க யாழ்ப்பாணம் வருவது பயமாக உள்ளது எனவும், நீங்கள் சென்று மறுபடி பணத்துடன் வாருங்கள் எனவும் பாதிவிலைக்காவது விற்றால் போதும் என தமக்கு இருப்பாகவும் கூறினார்.

அவர்களிடம் இருந்த சிறிய தராசில் நிறுத்து சமகால தங்கவிலையுடன் கணித்த போது பதினாறு இலட்சம் பெறுமதி இருக்கலாம் என ஊகிக்க முடிந்தது.

நம்மாளுங்க எழுமாறாக சில துகள்களை சாம்பிளுக்காக எடுத்து கொண்டு புறப்பட்டனர்.

அன்று முன்னிரவில் யாழ்ப்பாணத்தை அடைந்தவர்கள் சோபிக்கு சாம்பிள் தங்கத்தை காண்பிக்கவே, இரவேடிரவாக தங்கநகை வேலை செய்பவர்களின் உதவியுடன் பரிசோதித்து பார்க்கப்படுகிறது.

இயந்திர பரிசோதனை முடிவில் அது சுத்த தங்கம் என்பதற்கான ரசீதுடன் சோபி எம்மை சந்தித்து இந்த விடையங்களை கூறியதுடன் மறுநாள் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு தன் சகோதரனும் நண்பர்களும் புறப்பட இருப்பதையும் கூறினார்.

எம் முன்னாலேயே அந்த சிங்கள நபருக்கு போன் செய்து ஐந்து லட்சத்துக்கு தருமாறு கேட்க அவரோ எட்டு லட்சத்துடன் வாருங்கள் இல்லாவிட்டால் வேறு ஆள் பார்க்கிறோம் என கூறி போனை வைத்து விட்டார்.

மறுநாள் சோபியின் சகோதரன் அனுடன் துணிச்சலான நண்பன் ஒருவன் புறப்படுகிறார்கள்.

அவர்களது இடத்துக்கு போவதில்லை எனவும் சனநடமாட்டமுள்ள பகுதியில் வைத்து பணத்துக்கு பொருளை மாற்றுவது என்றும் திட்டமிட்டிருந்தார்கள்.

தம்புள்ளவில் இறங்கி போன் செய்து அவர்களை வரவைத்து, ரெஸ்டாரன்ட் ஒன்றில் பேசிக்கொண்டிருந்துவிட்டு அனைவரும் ஆட்டோ ஒன்றில் ஏறி அருகிலுள்ள வங்கிக்கு சென்று ஆட்டோவில் மற்றவர்கள் காத்திருக்க நம்மாளுங்க உள்ள போயி பணத்துடன் வந்து பணத்தை கொடுக்க அந்த செம்பை கொடுக்கிறார்கள்,

செம்பின் வௌிப்புறம் ஒட்டியிருக்கும் அத்திவார மண்ணை துடைத்து சோபியின் சகோதரன் தங்கத்தை நண்பனின் இருகைகளிலும் கொட்டி சரிபார்த்து மீண்டும் செம்பினுள்ளே கொட்டுகிறான்.

ஆட்டோவில் வைத்து பணத்தை எண்ணுகறார்கள். ஐந்து லட்சம் மட்டுமே இருப்பதை பார்த்துவிட்டு பணத்தை மீணடும் கொடுத்துவிட்டு செம்பை வாங்கிவிட்டார்கள்.

நம்மாளுங்க சோபிக்கு போன் செய்து விடையத்தை சொல்ல, மீண்டும் போனில் பேரம் நடக்கிறது. 

அவர்களோ 'உங்களை நம்பி பொருளை கொண்டுவந்தால் இப்படி செய்கிறீர்களே' என கோபமாக கூற, சில நிமிட பேச்சுவார்த்தைக்கு பின் இறுதியாக கைகளால் சிறிது தங்கத்தை எடுத்து கொண்டு பணத்தை வாங்கி கொண்டு செம்பை கொடுத்து விடுகிறார்கள்.

இவர்களை பஸ் ஏற்றி பஸ் புறப்படும்வரை காத்திருந்து 'பத்திரமாக போங்கள். போனதும் போன் செய்யுங்கள்' என கூறி அனுப்பிவைத்தாரகள்.

புறப்பட்டவரகள் அடுத்த இரண்டாவது இறக்கத்தில் இறங்கி வேறோர் பஸ்சில் ஏறி பயணத்தை தொடர்கிறார்கள்.

ஏனெனில் யாரும் இவர்கள் போகும் வண்டியை கண்காணித்து பொலிசில் மாட்டிவிடாமலிருக்க இந்த ஏற்பாடு.

யாழப்பாணத்தை அடைந்தபோது முன்னிரவு ஆகிவிட்டிருந்தது. இதுவரை இந்த விடையம் வேறு யாருக்கும் தெரியாது.

பஸ் ஸ்டான்டிலேயே காத்திருந்த சோபியிடம் பார்சலைகொடுக்கிறார்கள், பிரபல நகைக்கடை ஒன்றில் பதினைந்து லட்சத்துக்கு இதை வாஙகுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி சிலர் காத்திருக்கிறார்கள்.

அருகிலுள்ள வேறு நகை கடை வியாபாரிகள், சந்தேகத்துக்கிடமான ஆசாமிகள், சன நடமாட்டம் என்பன ஓய்ந்ததுமே நகைகடையை திறந்து மற்றவர்கள் உள்ளே போகமுடியும்.

சாதாரணமான கொத்துரொட்டி கடை ஒன்றில் அனைவரும் சாப்பிட்டபடியே நேரத்தை நகர்த்துகிறார்கள்.

மறுநாள்  பங்கு பணத்தை பிரித்து அவரவர் கைகளில் தந்து அனுப்பும் வரை அனைவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும் யாரும் தொலைபேசி ஆன் செய்யகூடாது என கூறுகிறார் நகைகடை ஓணர். உபரியாக தங்கத்தை உருக்கி வேறுவடிவத்துக்கு மாற்றும்வரை போகவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தொலைபேசிகள் ஆஃப் செய்ய படுகிறது.

தற்போது நடுச்சாமம்.

இவர்களுக்கு ஏற்கனவே கூறிய கடையை விட்டு வேறொரு தெருவிலிருக்கும் கடையை திறந்து விடுகிறார்(அந்த கடையும் அவருடையது தான்)

நகைகடையை திறந்து தரையிலுக்கார்ந்து ஒருபுறம் சோபி பதினைந்து லட்சத்தை எண்ண ஆரம்பிக்க மறுபுறம் தம்புள்ள போய்வந்தவர்கள் படுத்த படி ஓய்வெடுக்க நகைகடைகாரரும் அவருடன் நிற்கும் மற்றவர்களும் தங்கத்தை உருக்கும் பணிகளுக்கு ஆயத்தபடுத்துகிறார்கள்.

எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.

தங்கத்தை உரசி பார்க்கிறார்கள்...

உள்ளே செப்பு!.

'பகீர்'

ஒவ்வொன்றாக உரச அதே விளைவு தான். செப்புக்கு தங்கமுலாமிட்டிருக்கிறார்கள்.
ஐந்து லட்சம் அபேஸ்.

அவர்களது தொலை பேசிக்கு அழைத்தால் ச்விச் ஆஃப் செய்ய பட்டிருக்கிறது.
பொலிசிடம் புகாரளிக்க முடியாது.

பொலிசிடம் 'சீமெந்து மூட்டை அனுப்புவதாக கூறி பணமோசடி செய்துவிட்டார்கள். அவர்களை தேடி போகிறோம் கிடைத்ததும் தகவல் தருகிறோம். பிடிக்க உதவுங்கள்' என்று மட்டும் கூறி அவர்கள் மூலம் தம்புள்ள பொலிசிற்கும் அறிவித்துவிட்டு,
மறுநாள் கூட்டமாக கிளம்பி தம்புள்ளவில் அந்த இடத்தை அடைந்தால் கொட்டகையையும் காணோம், சீமெந்து மூட்டைகளையும் காணோம். 

அத்திவாரம் மட்டும் அப்படியேயுள்ளது.

ஏடிஎம்க்கு சோபியுடன் வந்தவனின் வங்கி கண்காணிப்பு கமரா வீடியோவை ஆராய்நதால் அவன் ஏடிஎம்க்குள் நுளையவே இல்லை, முதுகைகாட்டியபடி பர்ஸை கையில் எடுத்து பாத்து விட்டு திரும்பி நடந்து போயிருக்கிறான்.

அவனது போன் நம்பர்!!! ஐடி கார்ட் கொடுக்காமலே சிம் வாங்கப்பட்டிருக்கிறது.

ஆக இரண்டு விதமான தங்க துகள்கள் வைத்திருந்திருக்கிறார்கள், சாம்பிள் பார்க்க கொடுத்தது ஒரிஜினல் தங்கம்.

பணத்தை வாங்கி கையில் கொடுத்தது டூப்பு.

அவர்களது முன்னேறாபாடுகளை வைத்து பார்க்கும் போது... இந்த சம்பவம் நம் நண்பருக்கு மட்டுமல்ல, இதற்கு முதலும் இதற்கு பிறகும் தொடரும்...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Wednesday, September 3, 2014

பஸ்ஸில் டிக்கட் எடுக்காமல் போவது எப்படி?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்பவர்கள் காலையில் ஆயிரத்து முன்னூறு ரூபாக்கு பஸ் புக் செய்து மாலையில் ஆட்டோவுக்கு இருநூற்றம்பது கொடுத்து பஸ் புறப்படும் இடத்துக்கு சென்று தம் சீட்டில் அமருவது வழக்கம்.

இரண்டு மூன்று முறை இப்படி சென்றால் டிக்கட் போடும் இளைஞர் பழக்கமாகி அடுத்தமுறை போன்செய்தே புக்செய்துவிட்டு பிரதான சாலையில் பஸ்வரும் நேரம் ஏறிச்செல்வதும் உண்டு. அடுத்த கட்டமாக நூறு ருபா குறைவாக வாங்குவார்கள்.

அல்லது நூறு ரூபா அதிகம் கொடுத்து இளம் பெண்களுக்கு அருகில் சீட் புக் செய்பவர்களும் உண்டு.

நாம் பஸ் ஏறுவது வித்தியாசமானது... 
நண்பர்களுடன் பைக்கில் பஸ் புறப்படும் நேரத்துக்கு சற்று முன் பண்ணையடிக்கு சென்றால் அங்கு டிக்கட் போடுபவர்கள் 'நம்ம பஸ்ல போலாம் வாங்க' என்பார். 

அடுத்தவர் முந்தி கொண்டு 'முன்னுக்கு சீட் இருக்கு வாங்க' என்பார்கள். 

அடுத்தவர் 'ரெண்டு சீட் ஃப்ரீயாதான் இருக்கு படுத்திருந்தே போலாம் வங்க' என்பார். 

அப்போ அவசர பட்டு உள்ள ஏறிட கூடாது. மெதுவாக டிக்கட் எவ்வளவுனு கேக்கணும் அவர் 'ஆயிரத்தி இருணூறு உங்களுக்கெண்டபடியா ஆயிரம்' என்பார்.

அடுத்த பஸ் காரர் இத பாத்திட்டு நிப்பார். அவரிடமிருந்து விலகி இவர் பக்கமாக வந்தால் மெதுவாக 'எண்ணூறு ரூபாக்கு போலாம் வாங்க' என்பார்.

இதல்லாத்தயும் மூணாவதா ஒரு கண்டக்டர் பாத்திட்டு நிப்பார் அவர் பஸ் புறப்படுறதுக்கு ஐஞ்சு நிமிஷம் தான் இருக்கும் அவர்பக்கம் போனா 'இந்த பஸ் வெளிக்கிட போகுது அறுநூறு படி ஏறுங்க மற்ற பஸ் காரரிட்ட சொல்லாதீங்க... டிக்கட் தரமாட்டன்... இப்பவே காச தந்திருங்க' என்பார் டமால்னு அவர் கைல தலா ஐநூற குடுத்திட்டு உள்ள ஏறிரணும்.

வெளில இருந்த பஸ்களின் இஞ்சின் சத்தம், வவுனியா... கண்டி... கொழும்பு... திருகோணமலை... என்ற கண்டக்டர்களின் கூவல் சத்தம், புறப்படும் பஸ்களின் ஹார்ண் சத்தம் இத்தோட நாம பேரம் முடிஞ்ச அமளில கெக்கே பிக்கேன்னுட்டு  உள்ள போனா உள்ளருக்கற மத்தவங்க 'யார்றா இவனுங்க பிந்தி வர்ரானுங்க பஞ்ஷுவாலிட்டி தெரியாத பயபுள்ளங்க'ன்ற மாரியே நம்மள பாப்பாங்க.

நம்ம சீட்ல ஒக்காரவும் பஸ் புறப்படவும் டிவில படம் ஓடவும் சரியாயிருக்கும்.

இப்படியான நாட்களில் அருகில் அமர்பவர் கலகலப்பானவராகவோ, சரளமாக பேசக்கூடியவராகவோ அமைந்துவிட்டல் அது வரம்.

மாறாக அவர் உம்மாஞ்சியாகவோ, வெரி டீசன்ட் வெட்டி பந்தா ஆசாமியாகவோ இருந்தால் சீட்டை சரித்து விட்டு லப்டப்பை ஆன்செய்து இயர்போனை காதில் போட்டு படம் பார்க்கவேண்டியதுதான் ஏனெனில் பெரும்பாலும் பஸ் டிவியில் ஓடும் படம் ஏற்கனவே பார்த்ததாகவோ அல்லது விஜய் படமாகவோ இருக்கும்.

ஒரு தடவை ஷூ அயன் பண்ண சேர்ட்டுலாம் போட்டு என்பக்கத்துல உக்கார்ந்த  வெரி டீசன்ட் நடுத்தரவயது ஆசாமி ஒருவர் பஸ் புறப்பட்டதுலருந்து அடுத்தநாள் காலை இறங்கும் வரை தூங்கி என்மேல விழுந்திட்டே இருந்தான். நான் ஒரு கையால அவன் என் மேல விழாதபடி புடிச்சிட்டே தாங்காம இரவுமுழுக்க பயணிக்க வேண்டியிருந்தது.

இன்னொரு தபா முன் சீட்டில் ஒரு அஞ்சுவிரல்லயும் மோதிரம் போட்டு பட்டு வேட்டி கட்ன டபுள் எக்ஸ்எல் சைஸ் ஒரு முதியவரும் அவர் மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.

பஸ்க்குள் டிம் லைட் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.

நடுச்சாமம் தாண்டியதும் பஸ்க்குள் இன்னொரு ஆட்டோ ஓடும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அந்த சத்தம் பஸ் இஞ்சின் சத்தமாக மாறியது. பின்னர் அது கார் இஞ்சின் சத்தம் வான் இஞ்சின் சத்தம் ன மாறி மாறி இறுதியாக ஏதோவொரு தொழிற்சாலையின் சத்தமாக தொடர்ந்தது.

பின்னிரவில் டீ குடிக்க இறங்கிய போது அது அந்த முதியவரின் குறட்டை என்பதை அறிந்து கொண்டோம்.

 அவர் மனைவி இறங்கி தண்ணீர் போத்தல் வாங்கிவந்து அவருக்கு கொடுத்தார். பஸ் கதவுக்கருகில் சிகரட் பற்றியபடி நிற ஒருவர் சொன்னார்

'ஒருநாள் இரவு நம்மாலயே தாங்கமுடியலயே பாவம் இந்த அம்மா, டெய்லி எப்டி தான் தூங்கறாங்களோ!'.

இன்னொருவர் சொன்னார்  'ஐயா தொண்டை வரண்டிருககும்னு தண்ணி குடுக்கறாங்க. குடிச்சிட்டு செக்கண்ட் இனிங்ஸ் ஆரம்பிபார்'.

இப்போது பஸ்ஸில் வந்தவர்கள் பெண்கள் உட்பட இந்த ஐயாவால் தமக்குள் அன்னியோன்னியமாகிவிட்டிருந்தனர்.

மறுபடி பஸ் புறப்பட்டது அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஐயா இடிமின்னலை ஆரம்பித்தார். 

இதுவரை மற்றவர்கள் என நினைப்பார்களே என பேசாமல் வந்த சக பயணிகள் லைட் ஆஃப் செய்ததும் சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்தனர்.

பின்னாலிருந்த இளைஞன் ஒருவன் 'ஐயா இப்போ பூபாள ராகத்துல பொழந்து கட்டறாரு என்றான்'

இன்னொருவன் கொஞ்சம் அடிதடி ஆசாமியாருப்பான் போல 'களிமண்ண எடுத்து அந்தாளு வாய்ல அடைங்கப்பா! எங்கிருந்து சத்தம் வருதுன்னு பாப்பம் என்றான்'

முன் சீட்டுக்கருகில் இருந்தவர்கள் திடீரென மூக்கை பொத்தினார்கள். ஒரு பெட்ஷீட் போர்த்திய கன்னி ஒன்று 'கண்டக்டரண்ணா ஏசிய கூட்டுங்க ப்ளீஸ்' என கூவியது.

பஸ்ஸின் நடு பக்கம் இருந்த எமக்கு அந்த ஐயா, வாயால் மட்டும் குறட்டை விடவில்லை என்பது மட்டும் புரிந்தது. நமது நண்பன் ஒருவன் சத்தமாக 'நீங்க ஐயாக்கு வாய்ல களிமண் அடைஞ்சாலும் சத்தம் வரும் ஓய்..! அதுக்கு தான் பர்ஸ்டு வார்ணிங் குடுக்கறார்' என்றான்.

மறுநாள் அதிகாலை...
அவரது மனைவி தூக்கத்திலிருந்து எழுந்தார்(இப்போது நல்ல வெளிச்சம் என்பதால் அவர்கள் முகங்களை பர்க்க முடிந்தது) சகஜமாக தன் காதுகளிலிருந்து இரண்டு பஞ்சுகளை எடுத்து கைப்பையினுள் வைத்தார்.
அட! இபடித்தான் டெய்லி தூங்குவாங்களோ என ஆச்சரியப்பட்டோம். பரவால்ல போன ஜெமத்துல என்ன பாவம் செஞ்சாங்களோ!

அடுத்து எழுந்த முதியவர் தானும் ரெண்டு பஞ்சுகளை தன் காதிலிருந்து எடுத்து போட்டார்(அடங்கொன்னியா! உன் குறட்டை சத்தம் உனக்கே கேக்காம தான் தூங்குனியா)

அந்த ஐயா ஹொட்டஹேனா வந்ததும் இறங்குவதற்கு ஆயத்தமானார். பின் சீட்டிலிருந்த ஒருவர் 'நைட்டு ஃபுல்லா மிமிக்கிரி செய்து என்டர்ட்டெய்ன் செய்த ஐயா இறங்க போராரு எல்லாரும் கைதட்டுங்க என்றார். அவரோ யாரோ யாரையோ சொல்லுகிறார்கள் என்பது போல முகத்தை வைத்திருந்தார்.

அவர் இறங்கும் போது 'ட்ரைவர் அடுத்த வாட்டி இவர பஸ்ஸுல ஏத்தாதீங்க பஸ்ஸ இவர் வாய்லயே ஏத்துங்க' என்றான் யாரோ ஒருவன்.

இன்னொரு நாள் பயணத்தில் அருகில் அமர்ந்தவர் ஒரு இளைஞன் சொந்தமாக பட்டா குட்டி யானை வாகனம் வைத்திருப்பவனாம். இலங்கையின் பல பாகங்களுக்கும் காய்கறிகள் சப்ளை செய்பவராம்.பெயர் பார்த்தீபன். ஆள் பாக்க இளிச்ச வாய் மாதிரி இனசன்டாக 'யார் பெத்த புள்ளயோ'ன்ற மாதிரி இருந்தான். அவர் சொன்ன சம்பவம் இது.

வழியில் ஓர் சாலை பிரிகிறது, அதை காட்டி 'இங்கு தான் நடந்து!' என ஆரம்பித்தான்.

இவரும் குட்டியானை ட்ரைவரும் நண்பர்களுடன் காய்கறிகளை இறக்கிவிட்டு புத்தளத்துக்கருகில் வந்து கொண்டிருக்கிறார்கள் ட்ரைவர் 'தூக்கம்வருது, இந்த இடம் பயங்கரமானது போலிருக்கு, பக்கத்துல ஏதாச்சும் யாழ்ப்பாண நம்பர் வாகனம் நிண்டா நாமளும் நிறுத்தி தூங்கிட்டு போலாம்' என சொல்ல ஓரிடத்தில் யாழ்ப்பாண இலக்கத்தகடுடைய லாரியை கண்டு அதனருகில் நிறுத்துகிறார்கள்.

அந்த லாரிகாரரோ தாம் இதுவரை இங்கு தூங்கிவிட்டதாகவும் நீங்களும் தங்கி வாருங்கள், இடம் பயமில்லை, நாம் புறப்படுகிறோம் என கூறி புறப்பட்டு செல்கிறார்கள். குட்டியானை பார்த்தீபனுக்கு வாகன லீசிங் கட்டவேண்டிய தேதி நெருங்கிகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு முறை காய்கறி சப்ளை செய்த பணத்துக்கான செக் வங்கியில் திரும்பிவிட்டது. யாழ்ப்பாண தமிழன் என்ன கிறுக்கனா என பேசிக்கொண்டிருந்து விட்டு வாகனத்துக்கு கீழே விரிப்பை விரித்து தூங்க ஆயத்தமானார்கள்.

அருகில் சிகரட் பிடிக்க என போன ட்ரைவர் திரும்பிவந்து 'பார்த்தீபன்ணே! பாத்தீங்களா அங்க எலக்ட்ரானிக் கடைய என்னமா மெய்ன்டென் பண்றாங்க நம்மூர்ல இப்டி இல்லயே' என கூற அவன் காட்டிய பக்கம் ஓர் எலக்ரானிக் கடை வெளிப்புறம் கண்ணாடி சுவரால் உள்ளேயும் வெளியேயும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

பார்த்தீபனுக்கு அதை பார்த்ததும் லீசிங் ஆபிஸ் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

உள்ளே டிவிகள், மியூசிக் ஐட்டம்கள், டிவிடி ப்ளேயர், ஹிந்தி பட சிடிகள், மிக்ஸி, வாஷிங்மெஷின் இன்னும் சில என்னண்ணே தெரியாத எலக்டானிக் ஐட்டங்கள் காட்சியறையில் இருக்கின்றன.

காய்கறி இறக்க உதவிக்கு வந்திருந்த நண்பர்களில் ஒருவன் ட்ரைவரிடம் சிகரட்டை வாங்கி பற்ற வைத்த படியே(பேசிக்கலி அவனுக்கு தம்மடிக்கும் பழக்கம் இல்லையாம்) பிரதான சாலையிலிருந்து கடையருகில் சென்று நோட்டம் விடுகிறான். 

வாகன புழக்கம் இல்லாத பகுதி.
 திரும்பி வந்து அந்த டிவிய எடுத்து தாறன் யாழ்ப்பாணத்தில கொணந்து எனக்கு தரோணும் என ட்ரைவரிடம் கூறிவிட்டு உங்களுக்கு என வேணும் என பார்த்தீபனை கேட்கிறான்.

'ஒரேயொரு டிவிய கொண்டுபோய் என பண்றது, எல்லா டிவியையும் ஏத்துவம்'

அடுத்து குட்டியானை அந்த கடையடிக்கு நகர்கிறது.

ஒருவன் கூரைமீதேறி அந்த மஸ்கனைட் சீட்டை வாகன சாவியால் கழட்டி உள்ளே இறங்க சதுரவடிவ அலங்கார தட்டுகள் அவற்றிலேயே யூ பல்ப்புகள் மாட்டப்பட்டிருககும் அதை மேலேயிருந்து கையால் தூக்கினா அப்டியே வந்திடுச்சாம் அந்த சதுர வடிவ துவாரத்துக்குள் இறங்கி மேசையை துவாரத்துக்கு நேரே போட்டுவிட்டு உள்ளிருந்து ஒருவர் மேலே கொடுக்க துவாரத்திலிருப்பவன் வாங்கி கூரையிலிருப்பவனிடம் கொடுக்க அவன் எஞ்சின் ஸ்ரார்ட் செய்யப்பட்ட நிலையிலுள்ள வாகனத்திலிருப்பவனுக்கு கொடுக்க வாகனம் நிம்பியாயிற்று.

 அனைவரும் வந்தாயிற்று ட்ரவர் டென்ஷனில் தம்மடித்தபடியுள்ளார். புறப்பட வேண்டியது தான் பாக்கி. (விதி!)

நில்லுங்கண்ணே வாரேன் என இறங்கி ஓடிய நண்பன் ஒருவன் தனியாக உள்ளே போய் அங்கிருந்த சுழல கூடிய கதிரையை தூக்கி கூரையிலிருப்பவனிடம் கொடுக்க முயல அது துவாரத்துள் நுளைய மாட்டேன் என்கிறது பார்த்தீபனோ மேலிருந்து 'கதிரை கிடக்கட்டும் வாடா யாரும் வந்திட போறாங்க' என்கிறான்.

அந்த நேரம் கடை ஓணரும் அவன் நண்பன் ஒருவனும் அவ்வழியால் மோட்டார் பைக் ஒன்றில் வந்தவர்கள் இதை கண்டுவிட்டு 'எங்க கடை கதிரை' என சிங்களத்தில் கத்துகிறார்கள். உள்ளே மின்விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டதால் ஏனய பொருட்கள் போனதை காணவில்லை.

இவர்கள் பயந்தாலும் கடை ஓணர் இவர்க நோக்கி வருகிறான். பார்த்தீபனும் நண்பனும் மட்டுமே கடையருகில் மற்றவர்கள் தயாராக வாகனத்துக்குள். கடை ஓணரின் நண்பன் யாருக்கோ அனேகமாக போலிசுக்கு போன் செய்கிறான்

பார்த்தீபனும் கடை ஓணரும் ஏதோ பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாக ட்ரைவர் வண்டிக்குள்கிடந்த ஏதோவெரு பொருளால் கடை ஓணரை தாக்க ஆரம்பிக்க அவர்கள் பைக்கில்  ஏறி புறப்பட இவர்களும் வாகனத்தில் புறப்படுகிறார்கள்.

எபடியும் அவர்கள் ஊர் மக்களை கூட்டிககொண்டு நம்மை தேடுவது உறுதி என்றவாறே வாகனம் செல்கிறது.
டாட்டா பட்டா குட்டியானை வாகனம் வேகம் 45கிமீ தாண்டி ஓடுவதே அபூர்வம்.

போய்க்கொண்டிருக்க அடுத்த சந்தியில் மூன்று மோட்டார்வண்டி கூடவே கடைக்காரனின் நண்பனும் அவன் இவர்களை அடையாளம் காட்ட பின்தொடர்கிறார்கள்.

சிறிது நேரத்தில் கடைக்காரனும் இன்னும் ஏழெட்டு மோட்டார் வண்டிகளும் சூழ்கிறது.

பார்த்தீபன் மற்ற நண்பர்களிடம், 'அவர்கள் இன்னும் பத்து நிமிடத்துக்குள் நம்மை சுற்றி வழைத்து விடுவார்கள்'

ட்ரைவர் 'முன்னுக்கு மேட்டபைக் வந்தா ஒரே ஏத்து தான்'

நண்பன் ஒருவன் வண்டியின் பின்புறம் நின்றவன்  உள்ளே கிடந்த டிவிடி ப்ளேயரை பின்தொடர்ந்த வாகத்தை நோக்கி வீசுகிறான்.

இப்போது உற்சாகமான பார்த்தீபன் 'பிடிபட்டா அவங்கட சாமான் ஒண்டும் உள்ள இருக்க கூடாது ஒரு நட்டு கூட இல்லாம தூக்கி வீசுங்க'என கத்த,

டிவி, ரேடியோ, கிரைண்டர் என வீதியில் அருகிலுள்ள வீடுகளில் பாலத்தில் மாறி மாறி விழுகிறது. சில பைக்குகள் இவர்களை முந்தி பாதையை மறித்து சென்று கொண்டிருக்கிறது. செய்த வேலையை விட ஓணரையும் தாக்கியமையால் இவர்களிடம் பிடிபட்டால் சங்கு நிச்சயம்.

வண்டி காலியானதும் பார்த்தீபன் வண்டிக்குள்ளிருந்த இரும்பு சாவியால் முன் கண்ணாடியை நொருக்குகிறான்.

அருகிலிருந்த பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து வண்டியை நிறுத்துகிறார்கள்.

பொலிசிடம் ஓணர் நீண்ட நேரமாக ஏதோ சிங்களத்தில் சொல்கிறான். பார்த்தீபன் யாழ்ப்பாணத்திலிருந்த யாருக்கோ போன் செய்துவிட்டு போலிசார் காட்டிய இடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வண்டி சாவியை போலிசிடம் கொடுத்துவிட்டு ஜெயிலில் உட்காருகிறார்கள்.
நேரம் இரவு மூன்று மணி இருக்கும்

மறுநாள் மதியம் யாழ்பாணத்திலிருந்து நண்பனும் ஒரு வக்கீலும் வந்திருந்தனர். வக்கீல் இவர்களுடன் பேசுகிறார்.
மதியமே இவர்களை துணியால் மூடி ஜீப்பில் ஏற்றி கோர்ட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.

இவர்கள் கூண்டில் நிற்கின்றனர்.

ஆங்கிலத்தில் வழக்கு நடைபெறுகிறது. 

தீர்ப்பில் கடை ஓணர், பார்த்தீபனுக்கு நாற்பத்து ஐந்தாயிரம் ரூபா கொடுக்க வேண்டும் என கூறி இவர்கள் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் வக்கீல் ஆங்கிலத்தில் கோர்ட்டுக்கு சொனது என்னன்னா...

'குற்றம் சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் மரக்கறி ட்ரான்ஸ்போர்ட் பணிகள் முடித்து திரும்பிகொண்டிருந்த போது பொது இடத்தில் சிகரட் பிடிக்காமல் ஒதுக்கு புறமாக வண்டியை நிறுத்தி சிகரட் பிடித்திக்கிறார்கள். 

அதற்கு முதல் யாரோ அந்த இடத்திலிருந்த இவர்களது கடையில் களவாடிவிட்டு தப்பி சென்றுள்ளார்கள், அல்லது இவர்களே களவுபோனதாக நாடகமாடலாம். அங்கு வந்த கடை ஓணர் எமது கட்சிகாரரை தாக்கி வாகன கண்ணாடியை நொருக்க சற்றும் எதிர்பாராத நம் கட்சிகாரர், இவர் நடுசாமத்தில் வழிப்பறிக்காக நம்மை தாக்குவதாக நினைத்து ஓணரை திருப்பிதாக்கியுள்ளனர். 

ஏனயவர்களும் கூட்டாக வெறிகொண்டு துரத்த ஆரம்பிக்கவே உயிரைகாப்பாற்ற வாகனத்தில் தப்பித்து தம் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்தில் புகுந்து நீதி கேட்டுள்ளனர்.

ஏதோ பொருட்கள் காணாமல் போனதாக கூறும் கடை ஓணருக்கு எமது அனுதாபங்களை தெரிவிப்பதோடு, தற்பாதுகாப்புக்காக தாக்கியதால் ஏற்பட்ட காயத்துக்கு மன்னிப்பு கேட்பதோடு, நீங்கள் நொருக்கிய எம் வாகன கண்ணாடிக்கான பணத்தை பெற்று தருமாறு தாழ்மையாக வேண்டுகிறோம்'

இந்த கதையை அருகிலிருந்தவன் சொல்லி முடித்திருந்தான்.
இப்போது அவனை பார்க்க 'நீயாடா இந்த காரித்த பண்ணே' என்பது போல இருந்தது.

பயணங்கள் பலவித மனிதர்களை சந்திக்கவைக்கிறது.
விந்தையான மனிதர்கள், வித்தியாசமான உணவுகள், மற்றவர்களது மத சம்பிரதாயங்கள், கலாசாரம் தாண்டிய ஆடைகள் இவற்றை அறிய முற்படாமல் தொடர்ந்தும் ஒரேமாதிரியே வாழவிரும்பின் வெளியில் செல்லாமல் வீட்டிலிருப்பதே சிறந்தது.

நாளை மற்றொரு நாளே!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, September 1, 2014

ஆவிகளுடன் பேசுவது எப்படி?- 2


இந்த சம்பவம் நடைபெற்றது சில காலங்களுக்கு முதல் ஆகும்.

வேலை நிமிர்த்தம் நண்பர்களுடன் தனியாக ஓர் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம்.
அந்த கால நாற்சதுர வீடு. வீட்டுக்குள்ளேயே முற்றம். ஒருஅறையில் மரப்படிக்கட்டுகள் ஏறிபார்த்தால் மேலே பரண் அதில் பழைய தட்டு முட்டு சாமான்கள். 

பகலில் நிறையபேர் வந்து போனாலும் இரவுகளில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே தங்கி நிற்பது வழக்கம். ஹாரர் மூவி செட் மாதிரியே இருக்கும். 


வீட்டுக்கு முன்னாலேயே கொக்குவில் மார்க்கெட் இருந்ததால் அங்கு கொண்டுவந்து விடப்படும் அநாதை பூனைக்குட்டிகளும் எம்முடனே தங்கும்.

பெரும்பாலும் நடுசாமம் தாண்டியும் பேசிக்கொண்டிருப்போம்.
இரவு இரண்டு மணிக்கு இரணுவ்தினர் ரோந்து செல்வார்கள்.
அதிகாலை மூன்று மணி ஆனால் அருகிலுள்ள பாண் பேக்கரிக்கு போய் கறி பணிஷ், ஜாம் பணிஷ் ஏதாவது வாங்கிவந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம்.
நான்கு மணிக்கெல்லாம் அன்றய தினசரி பத்திரிகைகள் எம் வாசலில் போட்டுவிட்டு போவார்கள் அருகிலுள்ள கடைக்காரருக்கு வரும் ஆடர் அது. கடைவாசலில் போட்டால் ஏழுமணிக்கு கடைகாரர் வருவதற்குள் களவாடிவிடுவார்கள் என்பதால் நம் வீட்டிற்குள் போட்டுவிட்டு போவார்கள். அந்த பத்திரிகை கட்டுகளிலிருந்து ஆளுக்கு ஒவ்வொன்றை எடுத்து படித்துவிட்டு மறுபடி சொருகி வைத்து விட்டு தூங்கிவிடுவோம். சில நேரங்களில் மறுபடிவைக்காமலே கடைக்காரர் எடுத்து போய் விடுவார்.

காலையில் எட்டுமணிக்கு வேலைக்கு வரும் பையன் நம்மை எழுப்பி திறப்பை வாங்குவான்.

இப்படியான இரவுகளில் ஒருநாள் ஆவிகளை பற்றிய பேச்சு வந்தது. 
அங்கு வந்து போகும் ரவி என்பவனுக்கு முன்னொருநாள் க்ரவுண்டில் விளையாடும் போது ஆவி ஒன்று அவன் உடலில் புகுந்ததாகவும். அதனால் அவன் வினோதமாக நடந்துகொண்டதாகவும் நண்பர்கள் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குள் தூக்கிசெல்ல முயன்ற வேளை முருகன் என் எதிரி நான் உள்ளே வரமாட்டேன் என கத்திவிட்டு மயங்கியதாகவும் கூறினார்கள். அவனோ தனக்கு மயங்கியதை தவிர எதுவும் நினைவில்லை என்றான். பிறகு தனியாக ஒருநாள் என்னிடம் ஆவி புகுந்ததற்கான காரணம் என ஒரு சம்பவத்தை கூறினான் அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

அன்றிரவு மற்றவர்கள் தூங்கியதும் இணையத்தில் ஆவிகளுடன் பேசுவது எப்படி என ஆங்கிலத்தில் தேடி ஔஜா பலகை என்ற வழிமுறைபற்றி அறிந்து மற்றவர்களுக்கு காட்டினேன். 

அது என்னான்னா ஒரு பெரிய்ய மட்டயைில் A-Z  வளைவாக எழுதப்பட்டு கீழே எண்களும் இடப்பட்டிருக்கும். மேலே சூரிய சந்திரர் படங்களுடன் ஆம் இல்லை என இருக்கும்.
இதில் ஒரு கண்ணாடி டம்ளரை இருவர் அல்லது மூவர் தொட்டபடி ஆவிகளிடம் கேள்வி கேட்க தேவையான எழுத்துகளின் மேல் டம்ளர் நகர்ந்து பதில் வரும்.

இதை செய்யும் போது இரவு நிசப்தமாக இருக்க வேண்டும்.

ஒற்றை மெழுகுவர்த்தி வௌிச்சம் மட்டுமே இருக்கவேண்டும்.

பேசிக்கொண்டிருக்கும் போது ஆவி சம்மதித்து குட் பாய் சொல்லி போவதாக கூறாமல் நாமாக இடையில் விலகினால் அது அங்கேயே யாரிலாவது தங்கிவிடும்.

ஆவி அடம்பிடித்தால் அவரவர் மத கடவுளின் ஜெபம், தேவாரம், தொழுகை ஏதாவது செய்ய வேண்டும்.

ஆல் கண்டிஷன்ஸ் அப்ளையுடன் இந்த பலகையை மறுநாள் பன்னிரண்டு மணிக்கு செய்வதென முடிவுசெய்யப்பட்டது.
வழக்கமாக எம்முடன் நிற்கும் இருவர் விஷப்பரீட்சைக்கு பயந்து அன்று வரவில்லை. இதை கேள்விப்பட்டு புதிதாக மூன்று நண்பர்கள் எம்மோடு இரவு நிற்பதற்கு வந்திருந்தார்கள்.

12மணிவரை சீட்டாடுவோம் என உக்கார்ந்தோம்.
நாம் தூங்கும் அறையில் கட்டில் ஒன்று அருகில் பெரிய மின்விசிறி ஒன்று அதை ஆன்செய்தால் புயலடிப்பது போல இருக்கும்.
மல்ட்டி ப்ளக்கில் விதவிதமான போன் சார்ஜர்கள் கட்டிலிலேயே பிசியாக இருக்கும். மேஜையில் லாப்டாப்கள், ஸ்பீக்கர். வைஃபை, நாய் பிஸ்கட், அருகில் ஒரு முயல் கூடு, சீடி தட்டு அன்ட் சீட்டு கட்டு.


'முதல்முறை பார்த்த ஞாபகம் மனதினில் தந்து போகிறாய்...' பாடல் அறை ஸ்பீகரில் ரண்டமாக தொடர்ந்து ஒலிக்கிறது சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம்.

இரவு பதினொரு மணி. 

அன்று தான் கேகேஎஸ் வீதிக்கு புதிாக கார்ப்பெட் போட்டு வாகனங்கள் போகாதபடி ஒருபுறம் தார்பீப்பாய்களை அடுக்கி டேப் கட்டியிருந்தார்கள். எனவே வாகனங்கள் வராது என்பதால் என் பைக்கை வாசலில் வீதியிலேயே நிறுத்தியிருந்தேன்.
நாம் விளையாடுவது சீட்டில் 532 என்ற ஐட்டம். 

வெல்லபோகும் தருணம் அந்த பாடலை உரக்க பாடியபடி விளையாடிக்கொண்டிருக்க தெருவில் 'தடால்!' என்ற ரெுஞ்சத்தம் கேட்டது.
கட்டிலிலிருந்து அனைவரும் பாய்ந்து சென்று பார்த்தால் ஆட்டோ ஒன்று புரண்டு போய் கிடக்கிறது.

இரண்டு அடி இடைவெளியில் என் பைக்(ஜஸ்ட்டு மிஸ்ஸாகியிருந்தால் காய்லாங்கடைக்கு போட்டிருக்கவேண்டியதுதான்). தார் பீப்பாய்கள் உருண்டு கொண்டிருந்தன. நான் வீட்டுக்குள்ளே சென்று முகப்பு லைட்டை ஆன் செய்து விட்டு வந்து பார்த்தால் ரவியும் மற்ற நண்பர்களும் ஆட்டோவை நிமித்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டோ அப்பளம் போல் நொருங்கி கிடக்கிறது, ஆட்டோ நிமிர உள்ளேயிருந்துஇரு உடல்கள் தெருவில் விழுகிறது. ஒருவனின் தலை முற்றிக பிளந்து ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது மற்றவனது கால்கள் உடைந்து போயுள்ளது.

ரவி உள்ளே போய் சீட்டாட விரித்திருந்த துணிகளை எடுத்துவந்து அடிபட்டவன் தலையை சுற்றி கட்டுகிறான். அவர்களோ இரத்தம் வருவது கூட தெரியாதளவுக்கு போதையில் இருக்கிறார்கள். கால் முறிந்தவன் வீதியில் கிடந்தபடியே மற்றவனை பார்த்து 'மச்சான் கலையனாகபோகுது எழும்பு போவம்' (அவன் ஆல்ரெடி போய்ட்டான்)என்றுவிட்டு நம்மை பார்த்து 'அண்ணை என்ன ஒருக்கா கழுவி ஆட்டோ டரைவர் சீட்ல இருத்தி விடுங்கோ' என்கிறான்.

இதற்குள் சனம் திரண்டுவிட்டது.
நாம் ஆம்புலன்ஸக்கு போன் செய்தால் அவர்கள் ஆர அமர அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார்கள்.

அடுத்து வந்த ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பவும் போலிஸ் வரவும் சரியாகவிருந்தது.
இவர்களை மோதிய வான் சிறிதுதூரம் தள்ளி நின்று இன்சூரன்ஸ் ஏஜன்டை வரவைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள்.
போலிசார் அவசரத்தில் ஆக்ஷிடன்ட் ஆன் ஆட்டோவை இன்னொரு பட்டா குட்டியானையில் ஏற்ற முயல அது உள்ளே நுளைய மாட்டேன் என்றது ஓர் இரும்பு கம்பியை எடுத்து நாலாபுறமும் அடித்து சப்பையாக்கி நுளைத்து கொண்டு புறப்பட்டார்கள்.
ஏற்கனவே வீதி திருத்த வேலைகளால் ஒருபுறம் மட்டுமே போக்குவரத்துக்கு விட்ட சாலையில் விபத்தும் சேர ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் உருவாகிவிட்டிருந்தது.

இந்த களோபரத்தில் அடிபட்டவர்களின் செல்போனிலிருந்து ஆட்டோ பற்றறி வரை அங்கு வந்த சிலர் ஆட்டையை போட்டிருந்தார்கள்.
முன்னால் சந்தை கட்டட வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து ஸ்ரேடியத்தில் மேச் பார்ப்பது போல இவற்றை பார்த்து கொண்டிருந்தார்கள்.

பாதை சகஜமாக இரவு ஒன்றரை ஆனது
நாம் நமக்குள் எதுவும் பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 

ஹாஸ்பிட்டல் போனவர்களுக்கு என்னாயிற்று என யோசித்தபடி இருக்க அதிகாலை நான்கு மணி அன்றய பத்திரிகைகள் வந்தது.
அதில் போட்டோவுடன் இந்த செய்தி வந்திருந்தது. ஒருவர் வரும் வழியில் இறந்து விட்டதாகவும் மற்றவர் படுகாயம் எனவும் விபத்து படத்தின் பின்னணியில் நம் வீடு. 

இறந்தவனிடம் கடைசியாக பேசி அவனுக்கு தலையில் துணி சுத்தி தண்ணீர் தெழித்தது ரவிதான்.

மறுநாள் இரவும் ஆவியுடன் பேசிபார்ப்போம் என்று 12மணிவரை வீட்டின்பின்புறம் காத்திருந்தோம். 

மற்றவர்களுக்கு உள்ளுக்குள் உதறினாலும் இதல்லாம் நடவாத காரியம் என எம்மை கலாய்த்து கொண்டிருந்தார்கள். 

அந்த நேரம் நானும் விது என்பவனும் திட்டமிட்டு தண்ணீர் போத்தல் எடுப்பதாக கூறி அங்கிருந்து வந்து வீட்டின் ஃபியூஸை புடுங்கிவிட்டு கூரை மேல் கற்களை எறிய நம்மை கலாய்த்தவர்கள் அலற ஆரம்பித்தார்கள். 

மீண்டும் கரண்டை கனக்ட் செய்து விட்டு அவர்களை பார்த்த போது மாறிமாறி கட்டிப்பிடித்தபடி இருந்தார்கள் போனில் சத்தமாக அம்மன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

அடுத்து ஒளஜா பலகையை தயார் செய்து மேஜைமீது வைத்து டீ குடிக்கும் டம்ளரை எடுத்துவந்து லைட் ஆஃப் செய்து மெழுகுவராத்தி ஏற்றி நானும் ரவியும் விதுவும் டம்ளரில் கைகளை வைத்து 'யாராவது இருக்கீங்களா?' என விது கேட்க பலத்த நிசப்தம்.
நான் கையை வைத்திருந்ததன் நோக்கம் அது தானாக நகருமா இல்லை இவர்கள் யாராவது நம்மை கலாய்க்க நகர்த்துவார்களா என பார்க்கவே! அப்படி நகராவிட்டால் நானே நகர்த்தலாமென உத்தேசித்திருந்தேன் தொடர்ந்து கேட்டு கொண்டிருந்தான். எந்த மூமென்டும் இல்லை

மெழுகுவர்த்தி உருகிகொண்டிருக்கிறது... 

மற்றயவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார்கள்... 

விது தமிழ் ஆங்கிலம் என மாறி மாறி அதே கேள்வியை கேட்டுகொண்டிருக்க, டம்ளர் நகர ஆரம்பித்தது கடிகாரத்தில் நிமிடமுள் நகரும் வேகம். ஒரு எழுத்தைதாண்டிய பிறகே அது நகர்ந்திருப்பதை ஊகிக்க முடியும்.
ஆம் என்ற பகுதியில் டம்ளர் வந்து நின்றது. 

ஒரு மெழுகுவர்த்தி முடிந்து அடுத்ததை ஏற்றினார்கள். அடுத்து 'உங்க பேரென்ன?' என யாழ்ப்பாண தமிழ், இந்திய தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மாறிமாறி கேட்டு பார்த்தான் டம்ளர் நகர்வதாக காணோம்.

நான் பொறுமையிழந்து கையை எடுத்து விட்டேன். 

நீண்ட காத்திருப்புக்குபிறகு முடிப்பம் என கூறி தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாணாடு எல்லாம் பாடி விட்டு மற்றவர்களும் கையை எடுத்தார்கள். 

விது அன்ட் ரவியை பார்த்தால் இவர்களுக்கு தேவாரம் என்று ஒரு ஐட்டம் இருக்குன்னு தெரியுமாங்கற மாரி இருக்கும். ஆனா கரக்ட்டா அதல்லாம் மனப்பாடம் பண்ணி நடுச்சாமத்துல பாடிருக்கானுங்க.

என்னுடைய டவுட் : டம்ளர் தானா நகர்ந்ததா இல்ல இவனுங்க கையால தள்ளினானுங்களா?

ரவின்ட டவுட்: வந்தது ஆட்டோல வந்தவன் ஆவியா? அது போயிடிச்சா இல்ல இங்கயே தங்கிடுச்சா?

விது டவுட்: நான் பேசினது ஆவிக்கு சரியா புரியலயோ? சிக்னல் வீக்காருக்குமோ?

மற்ற நண்பர்களுடைய டவுட்: இவனுங்க கிறுக்கனுங்களா? இல்ல நம்மள கிறுக்கனாக்கறானுங்களா?

மறு நாள் இரவு எடுத்த வீடியோவ பாத்த மத்த நண்பர்கள் சொன்னானுங்க மச்சான் அடுத்த வாட்டி பொம்பள பேய்ங்கள கூப்டு பேசுங்க. நாங்களும் பாக்க வாரோம்(ங்கொய்யால பேய்ல கூடவா!!!?)


இங்க Comment பண்ணுங்கப்பா...!

காளை மாட்டில் பணம் கறப்பது எப்படி? Based On A True Story

இடம்- அவுஸ்ரேலியா, நிறம்- கறுப்பு, மதம்- இல்லை, இனம்- பிரேசியன், பிறந்த திகதி- தெரியாது ஆனா சுகப்பிரசவம் தான்.

அவுஸ்ரேலியாவில் ஓர் அழகான குழந்தை பிறக்கிறது. டாக்டர் கண்ணாடியை கழற்றியபடியே பிரசவம் பார்த்தவர்களிடம் கூறுகிறார் 'சிங்கக்குட்டி பொறந்திருக்கான்...!' என்றபடி தன் டெலிவரி சார்ஜ் ரசீதை கௌ பாயிடம் நீட்டுகிறார்.

நாள்முழுவதும் ஓரே மேனியுடனும், பொழுதெல்லாம் ஓரே வண்ணத்துடனும் தன்சகோதரங்களுடன் பால்குடித்துவரும் காலப்பகுதியிலே தாயிடமிருந்து மகனைபிரித்து ஓர்பெரீய்ய கப்பலில் ஏற்றி அவுஸ்ரேலியாவைவிட்டு நாடுகடத்துகிறார்கள். 

ஷிப்பிங் சார்ஜ் இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க கொபாய்யின் வங்கிகணக்கில் மகனை விற்ற காசு வரவு வைக்கப்படுகிறது.

நடுக்கடலிலும் சாப்பாட்டுககு குறையில்லை. சுத்தவர இனசனத்துடன் ஜாலியாக சென்றுகொண்டிருக்கும் கப்பல் இலங்கையை அடைகிறது. இலங்கையிலும் எந்தகுறையுமின்றி கழிகிறது இளமைக்காலம். 

இப்போது அவர் ஒரு கட்டிளம் காளை. ஆனால் கண்ணில் எந்த கன்னியையும் இதுவரை கண்டதில்லை. காதல் அரும்பும் வயதில் தன்னையொத்த காளைகளுடனே நாட்கள் கழிகிறது.

கொழும்பிலிருந்து கண்டைனர் லாரியில் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்படுகிறார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள விவசாயதிணைக்களத்தில் தங்கவைக்க படுகிறார். இங்காவது பசுமாடுகளை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

 சில அதிகாரிகளின் அரியமுயற்சியில் (அதாவது உயிரணுக்கள் இவரது அனுமதியில்லாமல் ருத்பேஸ்ட் பிதுக்குவது போல பிதுக்கி எடுக்கப்படுகின்றது) இவர் வயதுக்கு வந்துவிட்டமை உறுதிப்படுத்தப்படுகிறது.

அன்றிலிருந்து காலையும் மாலையும் இருவர் காளைமாட்டிலும் பால் கறக்கும் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்த நபர்களோடே குடும்பம் நடத்தவேண்டிய நிலைக்கு ஆளாகிறார் மிஸ்டர் காளை.

இந்த நபர்களை பற்றி சொல்வதானால், அரசாங்கவேலை என ஐம்பதுலட்சம் சீதணம் அன்ட் வீடு வாங்கி அந்த காசில் பைக் வாங்கி காலையில் எழுந்து குளிச்சு, சாப்பிட்டு அயன் பண்ண சேட்டு, சப்பாத்து சகிதம் விவசாயதிணைககளத்துக்கு வந்து மாட்டுக்கு கைகளால் விந்து எடுப்பது இவர்கள் கடமை. இதற்கு மாதம் இருப்த்தைந்தாயிரம் சம்பளம் அன்ட் ஓய்வூதியம்.

நமீதாவின் தொடையையை விட பெரிய டெஸ்ட்டியூப் போன்ற றப்பர் குழாயுடன் சம்பவ இடத்தை தம் கைகளால் இருவரும் முயற்சித்து கூடவே மாடும் ஒத்துளைத்து பெறப்படும் விந்தணுகள் இரசாயணம் இடப்பட்டு குளிர்சாதனபெட்டியில் இலங்கையின் பல பாகங்களுக்கும் விற்கப்படும்.

'மச்சான்! தின்னவேலீல பெரிய மாடு நிககாம் வா பாப்பம்' என பலர் இவரை பார்த்து போகவந்தாலும் வெளியாட்கள் நிற்கிறார்களே என கொஞ்சங்கூட வெக்கமேயில்லாமல் தன் உயிரணுவை வாரிவழங்கும் வள்ளல் இவர்.

காலப்போக்கில் இதற்கு மேல் கறந்தால் இனி காற்று தான வரும் என்ற நிலமை உருவாக விவசாயதிணைக்களம் இவரை விற்க முடிவுசெய்தது. முஸ்லீம் பாய் ஒருவர் இரண்டு லட்சம் கொடுத்து வாங்கிபோனார். 

இதனால் இந்த மாடு முஸ்லீம் மதத்துக்கு மாறியது. ஏன்னா இந்து மாடாக இருந்தால் சைட்டிஷ்க்கு யூஸ் பண்ண முடியாதே!

வாங்கியவர் கமுக்கமாக காரியத்தை முடிக்காமல் பாரிய திட்டம் தீட்டினார். அங்கு தான் ஆரம்பித்தது அவருக்கு ஏழரை. 

இந்த மாட்டை கொக்குவில் பிரவுண்ரோட் சேர்ச்க்கு அருகில் அனைவரும் பார்க்க நடுவெய்யிலுக்குள் கட்டி உழவு இயந்திரத்தில் நாலு லோடு புல்லும் பறித்து அருகில் தகர மண்ணெண்ணெய் பீப்பாயின் வட்ட மூடி ஒன்றில் சோக் கட்டியால் இந்த உயர்ரக மாடு வருகிற ஐந்தாம் திகதி இறைச்சியடிக்கப்பட இருப்பதால் உங்கள் பங்குகளுக்கு இப்போதே முந்துங்கள் என எழுதி கூடவே தன் தொலைபேசி எண்ணையும் அடிச்சுவிட்டார்.

தமிழ்வாசிக்க தெரியாத மாடு இந்த சூதுவாது தெரியாமல் தான்பாட்டுக்கு புல்லு திண்டுகொண்டிருக்கிறது. முஸ்லீம் பாய்க்கு ஆடர்கள் குவிந்தது, கூடவே கோட் ஆடரும் வந்தது. 

என்னாச்சுன்னா யாழ் பல்களைகழக உடற்பயிற்சி பேராசிரியர் ஒருவர் இந்த மாட்டையும் போட்டயும் மாறிமாறி பாத்திட்டு கோட்டுக்கு இழுத்துவிட்டார். இப்போது மாடு நீதிமன்ற காவலில்...

வழக்கம் போல வழக்கை வருடகணக்காக இழுக்க கோர்ட் நினைத்தாலும் மாட்டை பராமரிப்பது பாரிய செலவாக இருந்தது ஏனெனில் இந்த ரக மாடுகள் சாதாரண மாடுகளை விட ஆறேழு மடங்கு தின்னும்.

இந்த வழக்கு பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் ஃப்ளாஷ் நியூஸ் ஆனது. உதயன் பத்திரிகை அடுத்த வழக்கு திகதி எப்போது என்பதையும் வழக்கு பார்க்க ஆர்வலர்கள் வருமாறும் அழைத்தது. இப்போ இந்த மாடு ஒரு பாப்புலர் ஸ்டார் ஆகிவிட்டிருந்தது யாழ்ப்பாணத்தில்.

அடடே! சமூக ஆர்வலரின் முயற்சியில் மாடு பொழச்சிக்க போவுதுனு இருந்த நேரத்தில் முஸ்லிம் பாய் தான் இரண்டரை லட்சத்துக்கு மாட்டை இறைச்சிக்கு வாங்கியதாகவும் தனக்கு எதிராக வழக்கு வைத்தவர் அந்த பணத்தை தனக்கு தந்துவிட்டு மாட்டை வீட்டுக்கு கூட்டிசெல்லட்டும் என கூற சமூக ஆர்வலர் வெலவெலத்து போனார். 

இவர் செந்தமாக உடற்பயிற்சிநிலையம் வைத்திருப்பவர் தன் மாணவர்களுக்கு மாட்டிறைச்சி திண்டா உடம்பு வைக்கும் என ஆலோசனை வழங்குபவர் அவரே இந்த மாட்டை பார்த்து இரங்கி காரியத்தில் இறங்கி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அடுத்து என்னசெய்வது என சிந்தித்த இவர் அருகிலிருந்த ஒரு அச்சகதுக்கு போய் ஐநூறு ரூபாக்கு பில்புத்தகம் ஒன்று பிரின்ட் செய்தார். 

யாழ்ப்பாண வர்த்தக சங்கத்திடம் அதை கொடுக்க வர்த்தக சங்கம் சார்பில் தலா ஐநூறு ரூபா படி அந்த பற்றுசிட்டு விற்று அந்த பணத்தில் யாழ் வர்த்தகர்கள் இந்த மாட்டை வாங்கினார்கள்.

பொதுவாகவே யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர்கள் வீடுகளில் பசுமாடுகள் பராமரிக்கும் வழக்கம் உடையவர்கள். சில மாடு வைத்திருப்பவர்களும் தமது மாடுகளுக்கு வர்த்தகர்களின் வீடுகளை இனங்கண்டு சென்றுவருமாறு பழக்கியுள்ளனர்.

தினமும் மாலையில் குறித்த நேரத்தில் தாமாகவே அந்த பசுமாடுகள் வீதியால் வாக்கிங் வந்து அவர்களது படலையில் நின்று 'ம்மே...!' என சவுண்டு விடும் வீட்டுகாரரும் தவிடு, கஞ்சி, இலைகுழை என தினம் ஒரு ஐட்டமாக கொடுப்பது வழக்கம்.(பின்னே அம்மாம்பெரிய்ய மாடு பிச்சகாரன் மாரி வாசல் வந்து நின்னா யாருக்கு தான் மனசு கேக்காது).

இந்த சம்பவத்துக்கு பிறகு எப்போது மாடு வாங்கினாலும் அந்த முஸ்லிம் பாய் ரெண்டு பெட்ஷீட்டை சுத்தி தான் கூட்டிச்செல்வார் என நினைக்கிறேன்.

இந்த வர்த்தகர்கள் வாங்கிய நம் கதாநாயகனை பராமரிப்பதற்கு தனிக்குழு அமைப்பது சிரமம் என்பதால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் இவர் இந்து மதத்துக்கு மாறுகிறார்.

அங்கு பிள்ளை வரம் வேண்டும் பக்தர்கள் இவருக்கு நாலு மூட்டை புண்ணாக்கு வாங்கி கொடுக்கலாம் என்ற செய்தி பரவவிடப்பட மக்கள் திரளாக அங்கு சென்றனர்.(ஆல்ரெடி அவர் பசுகளுக்கு பிள்ளை வரம்கொடுக்க தான் வெளிநாட்டுலருந்து யாழ்ப்பாணம் வந்தவர்). மாட்டுக்கு பக்கத்திலேயே ஒருபுறம் பில்போடும் கவுண்டர் வடக்கு பக்கம் புண்ணாக்கு களஞ்சியம் தெற்கு பக்கம் இன்னொரு புண்ணாககு களஞ்சியம்.

ஒருவர் போய் புண்ணாக்கு வாங்கிகொடுக்க பணம் கொடுக்கும் சமயம் அவரது கண்பார்வையில் நாலு மூட்டை புண்ணாக்கு அவரை கடந்து இருவரால் களஞ்சியத்துக்கு எடுத்து செல்லப்படும். அவருக்கு ஒரு பற்றுசீட்டு வழங்கப்படும்.

பிறகு அடுத்த நாள் பணம் கொடுப்பவர்களுக்கு அங்கிருந்து இந்த களஞ்சியத்துக்கு புண்ணாக்கு மூட்டை எடுத்து வருவது காண்பிக்கபடும்.

இவர் தின்ன தினமும் பத்து மூட்டை புண்ணாக்கு தேவை என காட்டிக்கொண்டாலும் இவர் தின்பது நான்கு மூட்டை ஊறவைத்த புண்ணாக்கு மட்டுமே!

பட் ஹீ இஸ் பேசிக்கலி வெரி வெரி லேஸி மான். பாக்க மலைமாரி இருந்தாலும் சிலை மாரிதான் நிப்பாரு சின்ன மூமென்ட் காண்றது கூட கஷ்டம்.

அங்கே இவருக்கென தனி பந்தல் போடப்பட்டது. சாணம் போட்ட அடுத்த செக்கன்டடே அதை துப்புரவுசெய்ய ஆட்கள் அமர்த்தப்பட்டார்கள்.
வரும் மக்கள் சுற்றுலா பயணிகள் இவருக்கு வாய்ப்பன், வடை, பாண் என கொடுக்க கோயிலில் பொங்கும் பக்தர்கள் பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம், மோதகம் என ஊட்டிவிட ஆரம்பித்தனர். இதைவிட இவருடன் செல்ஃபி எடுக்கும் நபர்களால் இன்ஸ்டக்ராம், பேஸ்புக், ட்விட்டர் என பிரபலமானார்.

இல்லறம் இனிதே(!) முடித்து தற்போது கீரிமலையில் துறவியாக வாழ்கிறார்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Friday, November 11, 2011

ஜாலியா ஒரு குறும்படம் - யாழ்ப்பாணம்


ஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.
ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது...! பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்


இப்போ கதை வேணுமே...!
யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.

லொகேஷன்...!
பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூர் பொது நூலகம் பஸ்ஸராண்ட் என்பனவற்றோடு ஒருமுறை சுபாங்கன் அண்ணாவோடு யாழ்ப்பாணத்தை சுற்றிவந்து போட்டோ எடுத்தபோது இதையெல்லாம் வீடியோவாக எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்றார். அவரோடு சென்ற சங்கிலியன் சிலை, மந்திரி மனை போன்ற பல இடங்களையும் தெரிவு செய்தோம்.

கதாநாயகன்
ஆறுமுதல் அறுவது வரை ஆறரைகோடி விசிறிகள் கொண்ட கறுப்பு  சூப்பர்ஸ்ராரை போல- நமக்கும் ஒரு சூப்பர்ஹீரோவாக மதிசுதா ஒரு கிழிந்த சட்டையுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து இறங்கினார்(காரக்டராவே மாறுவது என்பது இதுதான்).
இவரோடு பிரசன்னா என்ற மருத்துவதுறையை சார்ந்த ஒருவரும் உள்ளார்.

முதல்நாள் படப்பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் வைத்து மற்ற நடிகர்களுக்கு ஷ்கிரிப்டை கொடுத்து அவரவர் டயலாக்களை சொல்லி கொடுத்த பின் லொகேஷனுக்கு செல்ல சொல்லிவி்ட்டு நாம் அன்றய படப்பிடிப்பு இடமான கசூரினா பீச்க்கு போய்விட்டோம். ஆனால் மற்றவர்களை காணோம் ஒவ்வொருவராக அழைப்பு எடுத்தால் தாம் ஸ்பொட்'ல தான் நிக்கிறோம் என்றனர். சில நிமிட போராட்டத்துக்கு பிறகு அவர்கள் லெகேஷன் என நினைத்து சிலர் பஸ்ஸான்டுக்கும் சிலர் சங்கிலியன் சிலையடியிலும் போய் அங்குள்ளவர்களுக்கு இப்ப இங்க சூட்டிங் நடக்க போகுது என்று பீதியை கிளப்பி வி்டார்கள்.

(இந்த படத்தில் மதிசுதா மதுரன் உட்பட படத்தில் பணியாற்றிய சிலர்

பஸ்ரான்ட் படப்பிடிப்பு
தீபாவளி சனக்கூட்டம் நிரம்பிவழிந்து கொண்டிருந்தாலும் சன நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தையே தெரிவு செய்தோம். கமரா ரோல் ஆகிகொண்டிருக்கும் போது கமராவுக்கு குறுக்கே யாரும் வந்து விடாமல் எம்மோடு இருந்தவர்கள் நாலா பக்கமும் நின்று பார்த்துக்கொண்டாலும் பல ரீ டேக்குகள் எடுக்கவேண்டியானது. ஒரு பழக்கடையில் உசிரை குடுத்து நடித்துக்கொண்டிருந்த மதிசுதாவிடம் பலர் பொருள் விலை கேட்க சிறிது நேரம் ஒரு துறைசார் வல்லுனர் போல் பழ வியாபாரி ஆகி நடத்திக்கொடுத்தார்.

அங்கிருந்த சிலர் தம்மையும் படத்தில் எங்காவது இணைத்து கொள்ளுமாறு கேட்டனர். சிலர் திட்டு வாங்கினாலும் குறுக்கே நடந்து தம் முகத்தை கமராவுக்கு காட்டிய படி வரலாற்று சாதனை புரிந்தார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு 9மணியளவில் பருத்திதுறையிலிருந்து டப்பிங்குக்காக வந்து கொண்டிருந்தார் மதிசுதா அன்று விஜய் படம் ரிலீசாகி அவருக்க்காக ப்ஸ் நிலையத்துக்கருகில் நின்றிருந்த படக்குழுவினர் அனைவரும் 500/= டிக்கட்டை ஒரு நல்ல உள்ளம் ஓசியில் எடுத்து தந்ததால் தியேட்ருக்குள் சென்று விட்டோம்.  மதிசுதா பஸ் நிலையம் வந்தும் திரையரங்குக்கு வராமல் சென்று இடையில் மழை குறுக்கிட்டதால் வீதியில் ஓய்வெடுத்து காலை 5மணியளவிலே வீடு சென்றார். அவருக்காக எடுத்த டிக்கட்டை 1000ரூபாக்கு ஒரு உயிர் ரசிகருக்கு ப்ளாக்கில் விற்று இன்னுமொரு சாதனை நிலைநாட்டினோம் அன்று மதிசுதா என்ற புன்னகை மனிதருள்குள் இருந்த காலசுவடுகளின் வைராக்கியத்தை கண்டு வியந்து போனேன்.

இந்த குறும்படத்தின் முகப்புத்தக பக்கம் இது http://www.facebook.com/யாழ்ப்பாணம் இங்கே ஏனய புகைப்படங்கள் செய்திகள் எதிர்(பார்)ப்புகள் பகிரப்பட்டுள்ளது.

எம் படம் பற்றி செய்திகள் பகிர்ந்த ஊடகங்களுக்கு படத்தில் மட்டுமல்ல எம் தனிப்பட்ட நன்றிகளும் கூட..!

இப்போது Sound edit டப்பிங் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது இன்னும் சில நாட்களில் வெளியிட தயாரக உள்ளோம். உற்சாகமூட்டிய அனைவருக்கும் எம் உளமார்ந்த நன்றிகள்.

அடுத்துள்ளது படப்பிடிப்பின் போது இடம்பெற்ற சில சீரியஸ்ஸான சீக்கின்ஸ்...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Thursday, December 16, 2010

SUPER STAR ரஜினி -என்னை பாதித்த 10 படங்கள்



மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது சுப்பர்ஸ்டாரை தவிர...
ஆனாலும் காலமாற்றங்களுக்கேற்ப ஆறு முதல் அறுபது வரை அனைவரதும் பல்ஸ்க்கு ஏற்றவாறு படங்களை தந்து கொண்டிருப்பதே ரஜினியின் ஷ்பெஷாலிட்டி.
வரோ அண்ணா இந்த வாய்பபை தந்ததற்கு நன்றி.
Super Starரைப்பற்றி அது நல்லாருக்கு இது சரியில்லை என்று எழுதுமளவுக்கு நான் அதிமேதாவி இல்லை ஆகவே இது ஏதோ அமரகாவியம் என்று நினைத்து இதை படிக்க வந்தவர்கள் விரும்பினால் வேற அச்சா வலைத்தளத்துக்கு போய் நேரத்தை மிச்சப்படுத்தவும்.

தில்லுமுல்லு
யாழ் இந்து கல்லூரியில் சேர்ந்த 2ம் நாள் வகுப்பாசிரியரால் எனக்கு தரப்பட்ட திருநாம் இது.. 
ரஜினி என்ற ஹீரே தனியே ஸரைல் மூலமாகவோ ஆக்ஷன் படங்களாலோ வெற்றிக்கொடி நாட்டியவர் அல்ல என்பதை நிரூபித்த படங்களுள் இதுவும் ஒன்று. இன்ரர்வியூ காட்சியில் வரும் I can talk English, i can walk English, i can laugh English. Because English is very funny language. Bhairon becomes barren and barren becomes Bhairon because their minds are very narrow. நகைச்சுவை வசனம் என்னை மிகவும் கவர்ந்தது ஏன்னா இதே சீனை சமகாலத்துல அமிதாப்ஜியும் பண்ணியிருகாகாரு.. ஆனா எப்டியிருக்குன்னு ஒப்பிட்டு பாத்துக்குங்க.


பாட்ஷா
நினைவு தெரிந்த நாட்களில் நம்ம ஏரியாக்குள்ள(கோண்டாவில்) நெறய்யபேரு “நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி“ன்னு சொல்லிட்டு திரிவாங்க ஏன்டா இவங்க நூறு தடவை இந்த ஒண்டயே திருப்பி திருப்பி சொல்றாங்கன்னு நெனச்சதுண்டு ஆனா படம் பாத்ததில இருந்து இப்ப வரைக்கும் நான் யாருக்காச்சும் வாக்கு குடுக்கும் போது இந்த வாக்கியமும் கண்டிப்பாக இடம் பெறுகிறது....  
மாணிக்கமாக முதலில் ரஜினி நிறையவே ஒதுங்கிப்போவார் பின்னர் தன் ஃப்ளாஷ்பேக்கில் தன் கடந்த கால அடிதடி வாழ்கையை பற்றியும் அது காலத்தின் தேவையாலேற்பட்டது எனவும் கூறி தூள்கிளப்பிய படம்.
ஸ்ரைலுக்காகவும் வசனங்களுக்காகவும் நான் பல தடவை பார்த்த படம்.

முத்து
இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த காலங்களில் பாடல்கள் வெளியாகி கொளும்பு சர்வதேச ஒலிபரப்பு ரேடியோவில் கேட்டதுண்டு(அப்ப நியூசுக்காக வீட்டில் பேட்டரி ரேடியோ போடப்படும் நேரத்தில் ஏரியாவே அந்த இடத்துக்கு ஷிஃப்ட் ஆகி அமைதியா உக்காந்திருக்கும்..)
படத்தை சிறுவயதில் பார்த்தபோது ரஜினியை தவிர எதுவுமே நினைவில் இல்லை...
 பின்னாளில் ரஜினி மீனாவுடன் மேடையில் பேசும் காட்சியை வகுப்பில் பேசி மற்றவர்களின் வாயை பிளக்கவைப்பதுண்டு... 

அண்ணாமலை
பாடல்கள் வெளியானதும் ஊருக்குள் அனைவர் வாயிலும் ஒலித்ததால் பிடித்துபோனது பின்னர் தான் யாழ்சேவை ரேடியோவில் கேட்டதுண்டு (அப்ப அந்த ரேடியோ டிக்ஷனரியில் புதுப்பாட்டு என்பது வெளியாகி 6மாதம் கடந்த படங்களிலிருந்து ஒலிப்பது) இந்த சூழ்சிலையே படம்பார்க்கும் ஆர்வத்தை வெகுவாக தூண்டியது பின்நாளில் மனதில் நின்ற படங்களில் ஒன்றாகியது.


அருணாச்சலம்
ஏரியாவில் யாருக்காவது கலியாண படக்கொப்பி அல்லது வெளிநாட்டு கலியாண கொப்பி வீட்டுக்கு வந்தால் அன்று இரவு அந்த அயலுக்கே கொண்டாட்டம். ஏற்கனவே பார்க்காமல் பென்டிங்கில் இருக்கும் பூப்புனித நீராட்டுவிழா கொப்பியையும் அன்று தான் பார்ப்பார்கள். ஊரில் ரீவி டெக் வாடகைக்கு விடும் ஒருவரை பிடித்து ஒவ்வொருவரும் பங்கு போட்டு ஜெனரேட்டருக்கு மண்ணெண்ணெய் வாங்கி கொடுத்து மாலையில் விழா ஆரம்பமாகும் முதலில் சொந்தகாரர் கலியாணவீட்டை பார்ப்பார்கள் பிறகு பெரியவர்கள் திருவிளையாடல் வசந்த மாளிகை (ஊருக்குள்ள எப்ப படம் போட்டாலும் இதயேதான்... ) பார்ப்பார்கள் ஏதாவது ஒரு விஜயகாந் படம் இளைஞர்கள் எற்பாட்டால் திரையிடப்படும். இப்படியான ஓர் நடுநிசியில் பார்த்த படம் அண்ணாமலை.
படத்தின் கதையைவிட ரஜினியும் அந்த படம் பார்த்த சூழலுமே அந்தப்படத்தை பற்றி பசுமையான நினைவுகளாயுள்ளது. (இப்ப 6 படம் உள்ள டிவிடி 50ரூபாய்.. மடிக்கணினியில் Blue rayயில் பார்த்தாலும் அந்த மகிழ்ச்சி கிடைத்ததில்லை)


படையப்பா
இதுவும் மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில் பார்த்த படம் தான் படம் பார்த்த போதுதான் பாடல்கள் அறிமுகமாயிற்று... படம் பார்த்து பல காலத்துக்குபின்னும் வெற்றிக்கொடி கட்டு பாடல் இசை மனதில் ஒலித்துகொண்டேயிருந்தது. ரஜினி புலியாக மாறுவது மற்றும் வேல் பறந்து வரும் க்ராபிக்ஸ்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு (இப்ப அதல்லாம் கைவந்த கலை என்பது வேறு...) நீலம்பரி வீட்டில் ஊஞ்சலை இழுத்து போட்டு உக்காருவது சுருட்டை சுற்றுவது பாம்புக்கு முத்தம் கொடுப்பது என சில காட்சிகளே அந்த வயதில் மனதில் நின்றன... அப்போது தான் ராஜா தியேட்டர் ஜீன்ஸ் படத்துடன் கோலாகலமாக இயங்க தொடங்கியிருந்தது (புலமைபரிவில் சிறப்பாக பாஸ் செய்ததால் என் முதல் தியேட்டர் பிரவேசமும் அதுவே...) படையப்பா தியேட்டரில் ஓடும் போது கட்டாயம் கூட்டிப்போகவேண்டும் என வீட்டில் வரம் கேட்டடு அனுமதித்தார்கள் ஆனால் இன்னும் படையப்பா அந்த தியேட்டரில் ஓடவேயில்லை...


பாபா
ஸ்பைடர் மேன் பாதிப்பு இருந்ததாலும் ஆனந்தவிகடன் எதிர்பார்ப்பை எகிறவைத்ததாலும் (சின்னிஜெயந்தின் “ஒரு தடவை சொன்னா“  படமும் ஒரு காரணம்..) படம் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் கூடியது... படம் வெளியான புதிதில் வவுனியாவில் தங்கியிருந்த ஹோட்டலில் பார்த்த படம்(பள்ளியில் நான் தான் முதலில் பார்த்தேன்...). “பாபா கவுண்டிங் “ காட்சிகளும் நடைகண்டு அகங்காரம் பாடலும் விரும்பி ரசித்தேன்... 


சந்திரமுகி
16 வயதினிலே (எனக்கு தான்) படம் ரிலீஸாகும்நேரம் (சந்திரமுகி தான்) நமக்கு chicken pox வந்து 16 நாட்கள் எங்கேயும் போககூடாது என்று சொல்லிவிட்டார்கள். பொழுது போவதற்காக ஆனந்த விகடன்கள் என் படுக்கையை சுற்றி நிறைந்திருந்தது காலக்கொடுமையாக ரேடியோவில் பாடல்களும் அத்தனைபுத்தகங்களிலும் சந்திரமுகி பற்றிய நியூஸ்களும் வித்யாசாகர் போன்றவர்களின் பேட்டிகளுமாக என்ன கொடும சரவணா...!!! 
ஆர்வகோளாறில் இடையிலேயே சுகமாகிவிட்டதாக கூறி குலதெய்வம் கோயிலில் தோய்ந்து விட்டு அடுத்தநாள் நண்பர்களோடு தியேட்டருக்குள் புகுந்துவிட்டேன்....
சச்சின் விஜய் ரசிகர்கள் பாடசாலையில் நம்மோடு யுத்தம் செய்த வரலாறுகளுமுண்டு 
அப்புறம் தெலுங்கு டயலாக்ஸ் கூட மனப்பாடமாகும் வரை பார்த்து தீர்த்து விட்டோம்
900+ நாட்கள் ஒடிய படத்தின் சிறப்புகளை நான் இங்கு சொல்லதான் வேண்டுமா?


சிவாஜி
சங்கர் ரஜினி ரகுமான் சுஜாதா காமினேஷன் என்பதாலும் படப்பிடிப்பு தொடங்கும் போதே தியேட்டருக்கு போக வீட்டில் அனுமதி பெற்றுவிட்டேன். 


ரிலீஸாகும் நாள் காலை 3.00மணியோ 4.00யோ தெரியவில்லை கிளம்பி வழியில் 4..5.. இடத்தில “ஏ மல்லி கேஃபியோ ரைம் ஹோதய யண்ணே?“ என்ற கேள்விகளுக்கு விளக்கம் குடுத்து தியேட்டருக்கு போனால் அங்கே பெரிய கூட்டமே றோட்டில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தது விசாரித்ததில் “பலாலில ஷெல் விழுதெண்டு ஃப்ளைட் வரேல்லயாம் நளைக்கி தான் படம் வருமாம்...”


அப்புறம் வகுப்பிலும் சுவரெல்லாம் ரஜினி படம் வரைந்து physics போரடிக்கும் நேரத்தில் தூங்கும் அறையை OFFICE ROOM என பெயரிட்டு அதை அழிக்க பிரின்ஸிப்பல் வகுப்புக்கே பெய்ன்ட் அடித்தார்.


வெள்ளை ரஜினியும் மொட்டை BOSSம் கவர்ந்தார்கள். இந்தியில் மொழிபெயர்ப்பான (ரீகேடா)இப்பட பாடல்காட்சியை காமடியாய் கலாய்க்கும் (கோல்மால் ரிட்டர்ன்ஸ்) பாடல் கீழே நேரம் கிடைக்கறப்போ பாத்துக்குங்க.







குசேலன்
இதுவும் சோதனை மேல் சோதனை காலம் அதுவும் உயர்தர பரீட்டை சோதனைக்காலம்.
பரீட்டை தெடங்கின நாள்ளயே படமும் ரிலீஸ்...
பரீட்டைச காலம் யாருமே போகமாட்டாங்கள் ஆனா அன்னிக்கு பரீட்சை முடிந்ததும் மாலை கிட்டதட்ட மாறுவேடத்தில் தியேட்டருக்குள்ள நுளைஞ்சு பாக்கும் போது தான் புரிஞ்சுது அந்த பட க்ளைமாக்ஸ் சீன் பக்கத்தில ப்ரன்ஸ வச்சு கொண்டு பாக்காம விட்டது எவ்வளவு நல்லதெண்டு. நண்பர்கள் கூட இருக்கும் போது படம் பாத்து கண்ல தண்ணிவுட்டா நல்லாயிருக்காதுல்ல...


எந்திரன்
தொழிநுட்பத்தை பாத்து பிரம்மிச்ச படம்...
அதுக்கு போகும்போது ஒரு சிக்கலும் இல்லையோ எண்டு யோசிக்கிறாக்கள் இங்க போய் பாருங்கோ..
இதில தெரிஞ்சாக்கள் யாராவது நிக்கினமோ..?
இணையத்தில் (எனக்கும் தான்) முதன்முறையாக வெளியான எனது எந்திரன் விமர்சனம் இங்கே


சுல்த்தான் படத்திலிருந்த நம்பிக்கை போய் பலகாமாச்சு (நாங்க தான் முனன்முதல் ரஜினிக்கு 3டி அனிமேஷன் செயோணுமெண்டு தலைவிதியோ தெரியவில்லை..)
இவ்வளவு நேரமும் பொறுமயா படிச்சதுக்கு நன்றி 




ரஜினி 10 ஜ தொடர... ரஜினி பற்றி எழுதகூடிய தகுதி இருப்பவரான் ஜீவதர்ஷன்  அண்ணாஅவர்களை அழைக்கிறேன் இவர் ஒருதடவை எழுதினா நூறுபேர் எழுதின மாதிரி...
ஏன்னா இவர் நூறு தடவை எழுதினாலும் அந்த ஒருத்தர பற்றி தான் கூட எழுதுவார்


அடுத்து எந்திரனில் குற்றமும் பின்னணியும் சிறப்பாக ஆராய்ந்த சுபாங்கன் அண்ணாவை அழைக்கிறேன்.


விமர்சன பதிவுகள் அருமையாக எழுதக்கூடிய மருதமூரான் அண்ணாவை ரஜினி பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.


புதிதாக எழுதத்தொடங்கியிருக்கும் பதிவர் திருத்தணிகேசன் அவர்களின் ரஜினியின் சிறந்த 10 படங்களை பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.



இங்க Comment பண்ணுங்கப்பா...!

Sunday, December 12, 2010

பனைமரக்காடே பதிவர்கள் நாடே...!!! -100%சிரிப்புக்கு நாங்க காரண்டி.

யாழ்ப்பாணத்தில் பதிவர்சந்திப்பு - முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க


“ஆ...! அங்கே ஒரு றோட்டு தென்படுது“ என்றான் அனு...


“சாத்தியமேயில்லை Google Mapல் இல்லையே“ உறுதியாக தன் ஐபோனை பார்த்தபடி மறுத்தான் வதீஸ்...


“அட.. ஜோரான பாதயாத்தான் கிடக்கு“ என்றவன் கோபி.


“நேரத்தை வீணடிக்கமுடியாது கோணடிச்சுகொண்டு முன்னேறுங்கள்..“ என சுபாங்கன் உத்தரவிட அவனது ஒளியை விட வேகமா செல்லக்கூடிய டைம் மிஷினில் (அதைப்பார்க்க விரும்புபவர்கள் க்ளிக்குக) அந்த பாதையினூடாக விரைந்தார்கள்.


பாதையின் குண்டுகுழிகளுக்கு தாக்குபிடிக்கமுடியாமல் வண்டி வெள்ளத்துக்குள் குடைசாய்ந்தது...!


“ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து ஓடம்போலே ஆடலாம் பாடலாம் ஓடலாம்..” என ரிங்டோனை வெளியிட்டது கோபியின் போன் 


“ஹலோ கூல்போய் என்ன... பதிவர்சந்திப்பு தொடங்கபோகுதோ என்னண்டா சுபாங்கன்ர மோட்டசைக்கிள்ள தான் நாலுபேரும் வந்து கொண்டிருந்தனாங்கள் வழீல ஒரு அக்ஸிட... 
பீப் பீப் பீப்...
 தண்ணீர் புகுந்ததால் தொலைபேசி அத்தோடு தன் உயிரை விட்டது.


“பாதை கிடையாதுன்னு நான்தான்  சொன்னேனில்லையா...“ என்றான் வதீஸ்.


“அடேய் ஆற்றயோ காணீக்குள்ள புகுந்திட்டம் போலிருக்கு தோட்டக்காறன் உழுதுவச்சிருக்கிறான் வா ஓடிப்போயிடுவோனம்...“


“நண்பர்களே இதுதான் காங்கேசன்துறைச்சாலை என வழங்கப்படும் கே.கே.எஸ் றோட்டு...“ இதால போகோணுமெண்டால் குரங்கு கொப்ப பிடிச்சுகொண்டிருக்கிறமாதிரி வண்டிய இறுக்கி பிடிச்சுகொண்டிருக்கோணும்...! அட கோபி கைய எடு நான் வாகனத்த தான் வண்டியெண்டனான்...“ என ஐயம் தெழிவித்தார் சுபாங்கன்


இதேநேரம் யாழ் இந்துக்கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டுகொண்டிருந்தன...!!!
மண்டப வாயிலில் ஜனத்தொகை சிறிது சிறிதாக அதிகரித்தவண்ணமிருந்தது.


“நிகழ்ச்சி நிரலின்படி தொடங்கவேண்டிய நேரமாச்சு எங்க ஜனா..“  


என்று ஆறுதலாய் ஆரம்பிக்கும் யாழ்ப்பாண பண்பாடு தெரியாமல் அவசரப்படுத்தினார் மருதமூரான்.


“ஆள் மேடைக்கு பின்னுக்கு கொண்டிபிஸ்னஸில பிஸியாயிருக்கிறார் இப்ப வாறதாம்...“ கூறிவிட்டு பின்புறமாக சென்றார் நிரூஜா.


“ஓ... அண்ணன் கண்டி'லயும் பெரிய பிஸ்னஸ் மாக்னட் போலிருக்கு...“  தோரணம் கட்டியவாறே முகட்டுக்குள்ளிருந்து வினா எழுப்பினார் மதிசுதா.




ஒருவழியாக மண்டப வாயிலிலுக்கு வந்து சேர்ந்த ஜனா அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து..


“ஓ... தமிழின் வருங்கால தூண்களே! வருக வருக ஆம் இவ்விழாவை இனிதே ஆரம்பித்துவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம் நான் அதிகம் பேச விரும்பவில்லை பதிவுலகில் ஒற்றுமையே பலம் என்ற கருத்தோடு எனது சிற்றுரையை நிறைவு செய்து அடுத்த நிகழ்வாக மண்டபத்துக்குள் சென்று ஆசனங்களில் அமர்ந்து கொள்வோ......“


கூறிமுடிக்கமுன்னர் பின்புறமாக வந்து நின்று இடைமறித்த பாலவாசகன் காதுக்குள் மெதுவாக....


“உஷ்... ஜனாண்ண இன்னும் Hall ஒழுங்குபண்ணி முடியேல்ல.. நேற்று உங்க பேச்சை நீட்டுங்க..“ 


சொல்லிவிட்டு கதிரைகளை அடுக்குவதற்காக ஓடிவிட்டார்....
சடுதியான சூழ்நிலையால் சிலையாகி நின்ற ஜனாவின் பின்புறமாக வந்த Cool Boy கிருத்திகன் அவரின் கைகளில் எதயோ திணித்து...


“மேடைக்கருகில் இது கிடைச்சுது இத வச்சு சமாளிக்கேலுமோ பாருங்கோ..“


கையில் ஓர் புத்தகம் அம்பிட்டிருப்பதை முன்னிட்டு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய அதை பிரித்து பார்த்தபடி ஜனா தொடர்ந்தார்.


“ம்ம்... வந்து.. .இந்த நேரத்தில் ஆண்டவனுக்கு நன்றி கூறும் முகமாக அவரது போதனைகள் கொஞ்சம் பார்ப்போம்...


ஜெனலிஸ் அத்தியாயம் 1 பாடல்1 இறைவன் படைப்பை ஆகாயத்திலும் பூமியிலும் தொடங்கியபோது  பூமி நடமாட்டம் எதுவுமேயில்லாத காலியிடமாக இருண்டு கிடந்தது.
இறைவன் மூச்சு கடலின்மேல் விழுந்தது இறைவன் சொன்னார் இங்கே வெளிச்சம் பரவட்டும்.
உடனே வெளிச்சம் பரவியது.




நெடுநேரத்துக்கு பிறகு...


இறைவன் மோஸஸிடம் சொன்னார் நீ நீசனாய் மலையுச்சியை சென்றடையும் போது உன்னை என் 10 கட்டளைகளையும் புரிந்துகொள்ளச்செய்வேன்...


“இந்த சந்திப்பு ஏற்பாடு உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கும் இல்லையா மதிசுதா...? என்ன அப்போத தொடக்கம் ஏதோ அந்தரப்பட்டுகொண்டிருக்கிறியள் போலிருக்குது உதென்ன கையில...? குப்பை தொட்டி அந்தப்பக்கமிருக்கு...!“


 என மதிசுதாவை விசாரித்தார் வரோ.


 இல்ல கானா வரோ அங்கயிருந்துதான் கொண்டாறன் பாண் சுத்தி வந்த பழைய பேப்பர் போலிருக்கு அடுத்ததா ஜனாணக்கு உரையாற்ற குடுத்துதவலாமெண்டு வச்சிருக்கிறன்...அது சரி இந்த வரவேற்பு பனர் எங்க கட்டுறது?


இதேநேரம் ஜனா தொடர்கிறார்...


“ஜாப் அதைக்கேட்டுவிட்டு என்ன சொன்னானென்றால்.... கொர்ர்ர்.... கொர்ர்ர்...“


“முடிஞ்சுது அவங்க உள்ள வரலாம்...“ ஜனாவை உலு(எழு)ப்பி Cool Boy கிருத்திகன் மெல்லிய குரலில் கூற...


உற்சாகமாக அறிவித்தார் ஜனா 


“இனிதே இடைவேளைக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இப்போது அனைவருக்கும் சுடுசோறு வழங்கப்படும்...! அதனைதொடர்ந்து அடுத்த நிகழ்வு பதிவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்.
நன்றீ...!!! 

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Monday, August 23, 2010

வீழ்வது யாராயினும்...02


சொன்னால் நம்பமாட்டீர்கள்.. 
ஏனெனில் அவளை வர்ணிக்க அந்த வார்த்தை மட்டும் போதுமானதாயில்லை..
கு கூச்சசுபாவம் மிக்கவன் என்பதால் அழகைபற்றி இங்கு வர்ணிக்கவில்லை பார்க்கும் யாரையுமே மண்டியிடவைக்கும் குடும்ப பாங்கான ஏஞ்சல்....

நெஞ்சுக்குள் யாரோ பாறாங்கற்களை போட்டது போன்ற உணர்வு ரகுக்கு..
இது வரை யார் முன்னிலையிலும் அழுதிராத ரகுவின் கண்களில் இப்போது நீர்த்துளிகள்.. இது எந்த வகையான உணர்ச்சியின் வெளிப்பாடு என சரியாக சொல்லமுடியவில்லை..
மேடையில் நின்றுகொண்டிருந்தவன் அருகில் ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறைக்குள் நுளைந்து கண்களை துடைத்துக்கொண்டான்.. வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஆனந்தம்..


அவளருகில் சென்று என்ன பேசவேண்டும் என தன்னை தயார் படுத்திக்கொண்டு அவளருகில் தனக்கான ஆசனத்தில் சென்றமர்ந்தான்...


அடிவயிற்றில் ஏதோ அமிலம் சுரப்பது போல இருந்தது..
கால்கள் ஏன் தானாக உதறுகின்றன என எண்ணியவாறு அவளை கடைக்கண்ணால் பார்த்தபோது அவளும் ஏதோ பேசுவதறகு தன் மூஞ்சியையே பார்ப்பது போல இருந்தது... பிரமையோ தெரியவில்லை..
மற்ற மாணவர்கள் இப்போது ஓரளவுக்கு மாணவிகளுடன் நட்பாகி பேச ஆரம்பித்திருந்தனர்.

நேரம் ஓடிக்கொண்டிருக்கின்றது..


கூல்டிரிங்ஸ் கொண்டு வந்த மாணவன் ரகுவுக்கு பரிமாறினான்.. 


அடுத்து மித்ரா தன் கையால் எடுக்கும் போது தவறி ரகுவின் காலில் கொட்டிவிட்டது.. அவள் கையும் நடுங்கியிருப்பது புரிந்தது..
கீழே விழுந்த டம்ளரை எடுத்து வைத்தபோது அவள் ஏதோ சொன்னாள்..
ஆனால் காத்து தான் வந்தது..
மறுபடியும் குரலை சரிசெய்தவாறு

“SORRY..." சொன்னவாறே தனது கைக்குட்டையால் ரகுவின் தொடைமீது கொட்டிய குளிர்பானத்தை சுத்தம் செய்தாள்...

“ It's ok. Whatever it is, it's ok. There isn't a problem until you think there's a problem...'

தமிழ் மறந்து போயிற்றா எனக்கு என தன்னையே வியந்தான் ரகு..

முதன் முறையான இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்..

நீங்க ரகு தானே..
நான் தான் உங்ககிட்ட கட்டுரை கேட்டிருந்தேன் ரொம்ப நல்லாருந்தது Thank You.

நீங்க தானே மித்ரா?


பரஸ்பர உரையாடல்களுக்கு பின்.. ஒருவரை ஒருவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று..


“உங்க பெஸ்ட் ஃபரண்ட யாரு..?“


வினோத்தை காட்டினான்.
உங்க பெஸ்ட் ஃப்ரண்ட்?


நீங்க தான்..


மீண்டும் உடல் சிலிர்த்தது ரகுவுக்கு..


விழா இனிதே முடிந்தது அன்று தன் நண்பர்களுக்கும் மித்ராவை அறிமுகம் செய்து வைத்தான் .


அன்று ஆரம்பித்த உறவு பின் வந்த நாட்களில் கிரிக்கட் போட்டி பாடசாலை விழாக்கள் கோயில்கள் கல்வி நிலையங்கள் என சந்திப்புகள் தொடர்ந்தது..
இருவருக்கும் நல்ல புரிந்துணர்வும் நெருக்கமும் ஏற்பட்டிருந்தது..


அவளின் அன்பிலும் போடா வாடா என அவள் காட்டும் அக்கறையிலும் கிறங்கிப்போயிருந்தான் ரகு.. இது வரை எந்த பெண்ணும் இப்படி பேசியதில்லை... உலகமே இப்போது வேறு மாதழரி தெரிந்தது..


நல்லதொரு நாளில் தன் வீடடுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தான் ரகு..
வீட்டில் அனைவரையும் அறிமுகம் செய்தான்...


மித்ரா உன்ன பத்தி ரகு நிறைய சொல்லியிருக்கான்..
உன்னோட பழக தொடங்கின பிறகு தான் நல்ல உடுப்பு போடுறான்.. ரொம்ப நேரம் தலையிழுக்கிறான்... 
ரெம்ப மாறீட்டான்.. உன்னால அவன் நல்ல மனுசனாயீட்டான்..


“அப்டியா ஆன்டி...“ அழகான பல்வரிசையால் சிரித்தாள்..


கட்டிக்க போறவ முன்னாடி நக்கலடிக்காதீங்கம்மா...  அம்மாவை கட்டி பிடித்தபடி ரகு சிணுங்கினான்..
அவர்களின் குடும்பமும் கள்ளங்கபடமில்லாமல் பழகுமியல்பும் மித்ராக்கு பிடித்திருந்தாலும்..
என்ன நினைத்தாளோ 
“எனக்கு டைம் ஆயிட்டுது.. நான் போய்ட்டு வாறேன்...”
குடித்து கொண்டிருந்த டீயையும் வைத்துவிட்டு வேகமாக சென்று விட்டாள்.


பின்னர் மித்ராவை ரகு சந்தித்தபோது குரலில் கடுமை காட்டினாள் மித்ரா..


நகைச்சுவைக்காகவே அவ்வாறு கூறியதாக சமாளித்தான் ரகு..ஆனால் உள்ளே பட்சி நீதான் என் பத்தினி என்றது..


பாட புத்தகத்தை விரித்தால் அங்கும் மித்ராவே தெரிவாள்...


உயர் தர பரீட்சையும் கடந்தது.. 
பள்ளி வாழ்க்கை முடிந்திருந்தது ரகு இளைஞன் ஆகிக்கொண்டிருக்கிறான்... அடுத்து வந்த நாட்களில் வகுப்புகள் இல்லாத படியாலும் உள்நாட்டு யுத்தத்தின் மாற்றத்தாலும் சந்திப்புகள் அரிதாகின...
ஆனாலும் சளைத்தவனா ரகு..
காண்போர் கொக்குவில் சந்தியை வாடகைக்கு எடுத்து விட்டானோ! என வியக்குமளவுக்கு அவள் வீட்டு தெருவையே சுற்றி சுற்றி வந்தான்.. 


ஏறக்குறைய நண்பர்கள் வட்டம் மாறிவிட்டிருந்தது... வினோத்துடனான நட்பு மட்டும் தொடர்கிறது...
“மித்ராக்கு நான் லவ் ப்ரப்போஸ் பண்ண ஒரு ஐடியா சொல்லுடா..“
அம்பாணி பிஸ்னஸ்க்கு ஐடியா சொல்பவன் போல யோசித்தவன் முகம் பிரகாசமடைந்தது..
ஆஹா ஏதோ புதுமையான ஐடியா கிடைச்சாச்சு போலிருக்கு...
வினோத் ஐடியா சொன்னான் 


“லவ் லெட்டர் குடுடா மச்சான்..“  (ங்கொய்யால இத சொல்ல தான் இந்த ஃபில்டப்பா..)


பெறுபேறுகள் வெளிவர இன்னும் சில நாட்களே உள்ளநிலையில்.. ரகுவுக்கு காதல் பெறுபேற்றை அறிவதற்காக தன் உணர்ச்சிகளையெல்லாம் கொட்டி போதாக்குறைக்கு கவிஞர்களிடமும் திருடி (கட்டுரை எழுதவே என்னெல்லாம் செய்த ஆள் அவன்..) கடிதத்தை முடித்தாயிற்து...


இன்று பெறுபேறுகள் வெளியாயிவிட்டது...


மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் மக்கள்...சுர்ர்ர் என்ற வெயில்... ஷெல் சத்தங்கள் என ரம்பியமான சூழலில் எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தாள் மித்ரா.. கோவிலிலிருந்து வருகிறாள்..

 முகம் பிரகாசமாயிருந்தது  கடவுளுக்கு நன்றி தெரிவித்து விட்டு வருகிறாள்..


வினோத்தை கண்டதும் கோயிலருகிலேயே சைக்கிளை நிறுத்தினாள்.


“ஹாய்... வினோத் றிசல்ட் என்ன மாதிரி..?“
சொன்னான்... (இவனுக்கு பெண்களிட்ம பேசும் போது மட்டும் திக்குவாய் திக்கு திசை தெரியாமல் ஓடி ஒளித்துவிடும் ...) 
“ரகுவுக்கு..?“
சொன்னான்..“
 தனதையும் சொன்ன மித்ரா 
“கையில் என்ன லெட்டர் மாதிரி..“
“லவ் லெட்டர்..“
“ஓ.. சொல்லவே இல்ல யாரவள் வினோத்?..“
“அது.. வந்து.. உங்களுக்கு தான் ரகு உங்களுக்கு லவ் ப்ரபோஸ் செய்யறான்..“


                                                                              (எதிர்பார்ப்புகள் தொடரும்...)

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails