Thursday, August 19, 2010

வீழ்வது யாராயினும்..(வீழ்வது யாராயினும்.. தொடர்கதை பாகம்-1. இது எம் சக பிரபல பதிவர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம்.. முழுவதும் படித்தபின் அவர் யாரென கண்டுபிடிக்க கூடியதாக இருக்குமென நினைக்கிறேன்.. அவரது ஆசியுடன் கதை வடிவில் எழுதுகிறேன்...நன்றி.)


 24 மணிநேரம் பிடித்தது ரகுக்கு...

எதற்கென்றா கேட்கிறீர்கள்?

ஒரு கட்டுரை எழுதுவதற்கு... அது சாதாரண கட்டுரையாயிருந்தால் உடனே முடித்துவிடலாம் ஒரு முகந்தெரியாத பெண்ணுக்காக எழுதிக்கொண்டிருக்கிறானே..

பாடசாலை.. வீடு.. டியூசன்.. நண்பர்கள்.. குறும்பு என பள்ளிப்பருவத்து வாழ்க்கையினை அனுபவித்துக்கொண்டிருந்தவன் ரகு...
அப்பேதே இலக்கிய ஆர்வ கோளாறு என பட்டம் வாங்கியிருந்தான்..
பாடசாலையின் தமிழார்வலர்களில் அவனும் ஒருவனென்பதால் எந்த விழாக்களிலும் ரகுவின் பங்கும் கண்டிப்பாக இருக்கும்...
ஒருமுறை எமது பாடசாலைக்கும் ஏனய பாடசாலை ஒன்றுக்கும் பட்டிமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது..
பட்டிமன்றம் நடைபெறும் இடம் வேம்படி பெண்கள் பாடசாலை...
எதிரணியின் பேச்சு பீரங்கிகள் புயலை கக்கிக்கொண்டிருக்கின்றன..
நமது சாலமன் பாப்பையாவோ புயல்வீசிய பக்கமே சாய்ந்துவிடுவார் போலிருக்கிறது.. அப்புறம் நாட்டாம தீர்ப்ப மாத்துன்னு அப்பீல் கேக்க முடியாது..
ஏதாச்சும் அதிசயம் நடைபெற்றால் தான் எமது அணி வெல்லமுடியும் ஆனால்
வேம்படி பெண்களோ பங்காளி பள்ளி என்பதால் கரகோசங்களை எமக்கே வாரி வழங்கியது மாபெரும் ஆறுதலாக இருந்தது..
எல்லாம் நல்லவிதமாக சொதப்ப இருந்த நேரத்தில் எதிரணி புண்ணியவான் ஒருத்தன் ஸேம் சைடு கோல் போட்டதால் ரகுவு்ம் அதையே பிடித்துகொண்டு ஆவேசமாக பேசியதில் அந்த கோடையிலும் உச்சி குளிர்ந்த (அல்லது பயந்துபோன..) சாலமன் எம் அணி வெற்றியை அறிவித்தார்.

சிலநாட்களில் ரகுவின் தமிழ் ஆசிரியை மகளிர் தினத்துக்கு கட்டுரைஒன்று தேவைப்படுவதாகவும் அவனதுனது பட்டிமன்றத்தை பார்த்த யாரோ அவனை எழுதி தருமாறு கேட்டதாகவும் கூறியதை அலட்சியபடுத்தியபடி தனது கடமைகளில் மூள்கிவிட்டான்..
சிலநாட்களில் மறுபடியும் அழைத்தாள் ஆசிரியை

ஹே.. ரகு..“

ரகு தனக்குள் “டார்ச்சர் விடாது போலிருக்கே!..“

வேம்படி பெட்டை ஒருத்தி தான்டா கேட்டவள்...”

ஙே..!!!”

ஏலாட்டி விடு வேறயாரயும் கேட்டு பாக்கிறன்...

என்ன டீச்சர் நீங்கள் கேட்டு செய்யாம இருப்பனா... நாளைக்கே தாறன்...“

யாரோ ஒருத்தி தன் பேச்சாற்றலையும் திறமையையும் மதித்து என்னட்ட கேட்டிருக்கிறாள்.. எல்லா பெட்டையளும் இங்கிலீஷ்ல ஃபில்ம் காட்டுற பெடியள தேட இது என்னை கேட்டிருக்குதெண்டா அவ்வளவு வடிவா எதிர்பார்க்கேலாது போலிருக்கே..!! சரி நமக்கென்ன கலியாணமா கட்டபோறம் என்றான் ரகு. அவள் அந்த டீச்சரின் வீட்டில் பர்சனல் வகுப்புக்கு வருபவளாம்..

ஒரு பக்கத்து வீட்டு பெண் போல அவள் முகம் இருக்குமென நினைத்த படி தன் இலக்கிய நாயகர்களான சுஜாதா.. வைரமுத்து.. போன்றவர்களின் புத்தகங்களெல்லாம் தேடி பிடித்து மகளிர் சம்பந்தமான குறிப்புகள் எடுத்து கண்விளித்து கட்டுரையாக எடுதிவிட்டு பாத்தா திருப்தி இல்லை..
யாரென தெரியாத பெண்ணுக்காக நித்திரை விழித்து மறுபடி மறுபடி எழுதியதில் குப்பை கூடை நிரம்பிவழிந்தது..

இதற்கு தான் 24மணி நேரம் பிடித்தது ரகுக்கு...

ஒரு வழியாக தூக்கம் தொலைத்து எழுதி முடித்து படுத்தபோது ஒரு புறம் சாதித்த திருப்தியும் மறுபுறம் ஒரு நாள் தூக்கம் போய்விட்டதே என்ற கடுப்பும் ஏற்பட்டது... பின்நாட்களில் அவளாலே மொத்த தூக்கமும் பறிமுதலாகபோவது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை..

மறுநாள் தன் படைப்பை டீச்சரிடம் கொடுத்து விட்டு தன் ரசிகையை பற்றி கேட்க நினைத்த போதும் பதின்ம வயதுக்கேயான கூச்சம் அவனைனை தடுத்து விட்டது..

2 நாட்களுக்கு பின்பு...
கோடையின் வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.. 
பாடசாலை தனக்கேயான கூச்சலுடனும் வழமையான அம்சங்களுடனும் இயங்கிக்கொண்டிருந்தது..
ரகுவின் பெயரிட்டு முதல்வர்கள் அறையில் ஓர் கடிதம் காத்திருந்தது...
முகத்தில் கேள்விக்குறியுடன் அதை பிரித்தபோது..
நீல நிற காகிதத்தில் சிவப்புநிற மையால் எழுதப்பட்டிருந்ததை படித்தான்
ரகு...
பகீரப்பிரயர்த்தனத்துக்கு விடை கிடைத்தது.
நன்றியுடன் மித்ரா

வகுப்பும் பாடசாலையின் பெயரும் இடப்பட்டு அழகான கையெழுத்துகளில் பெண்மை மின்னியது...
எவ்வளவு நேரமாக அதையே பார்த்து கொண்டிருந்தானோ தெரியாது மணியடிக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். பாடசாலை முடிவதற்கு அடித்த மணி அது.. வீட்டிற்கு திரும்பிய பிறகும் மனதில் அந்த கடிதமே வந்து போனது..

யாரிந்த மித்ரா???

நண்பர்களிடத்தில் விசாரித்தபோது.. பல வித பதில்கள் கிடைத்தது
பெண்கள் பற்றிய பொது அறிவு கூடியவன் வினோத் தான்.. சமயங்களில் பொய்சொல்வதுண்டு.. ஆனால் நல்ல நண்பன். வினோத்திடம் கேட்டபோது..

க்எ..எந்த ம்..மித்ரா?

மித்ரா மகேந்ரன்

பாடசாலை வகுப்பு என்பவற்றையும் கேட்டவன் முகம் திடீரென மாறியது..

அடேய்.. அவ ஒரு தே..  தேவ... (என்ன சொல்ல போறானோ என அவன் வாயை பார்த்தபோது...)


அவ தேவதைடா...

ரகு குதூகலப்படுவதை வினோத்தால் உணரமுடிந்தது...


ஆண்கள் பள்ளியில் படித்த ரகுவுக்கு ஒரு பெண்ணிடமிருந்து வந்த கடிதம் குறுகுறுப்பை ஏற்படுத்தியிருந்தது..அவளுக்கு பதில் அனுப்பினால் அவர்களது பள்ளியில் பிரித்துப்பார்த்து விட்டு தான் கொடுப்பார்கள். 

ஒரு சாராயப்போத்தலின் உதவியால் மித்ராவின் பள்ளி செக்கியூரிட்டியை மடக்கியாயிற்து அவனிடம் கடிதமும் கொடுத்தாயிற்து.. அவனும் கடிதத்தை அவளது வகுப்பிலேயே கொடுப்பதாக உத்தரவாதமளித்தான்..

சில வாரங்களுக்கு பிறகு...
முதல்வர்கள் பிரிவுபசார விழாவுக்கான ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தன... ரகு பிரதம விருந்தினர் விருந்தாளிகள் சம்மந்தமான பொறுப்புகளை ஏற்றிருந்தான்..
மண்டபத்தை மாணவர்கள் சிலர் ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார்கள்

நாளை விழா..
கன்டீனில் சிலர் மெதுவான குரலில் அரட்டையடித்து கொண்டிருந்தார்கள்..
ரகு கன்டீனில் நுளைந்தான் பாடப்புத்தகங்களை தொப்பென்று போட்டான் களைப்பாக இருக்கிறான் என்பதை உணர முடிந்தது..
டீயை உறிஞ்சியபடி விழா ஏற்பாட்டு ஃபைலை புரட்டினான்..

கடவுள் வாழ்த்து வரவேற்றது.. பிடிக்காதென்பதால் அடுத்த பக்கத்தை புரட்டினான்..
ஆசிசெய்தி.... அதிபர் புத்தி மதி சொன்னார்.. 
ப்ச்..“
பக்கங்களை தட்டிக்கொண்டு போனவனின் கண்கள் வருகைதருவேர் பட்டியலில் குத்திட்டு நின்றது..
குடித்துக்கொண்டிருந்த டீ வெளியே வந்துவிடும் போல புரையேறியது..

காரணம் பெயர் பட்டியலில் மித்ரா மகேந்திரன்..

அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு..

டீயை அப்படியே வைத்து விட்டு புத்தகங்களை அள்ளிகொண்டு மீண்டும் மண்டபத்துக்கே ஓடினான்..
மண்டபத்தை சிறிய வகுப்பு மாணவர்களின் உதவியுடன் மேலும் அழகாக்கினான்..
கதிரைகளின் வரிசைகளை நெருக்கமாக்கினான்..
அங்கிருந்த படியே நாளை மாணவர்கள் அமரும் ஒழுங்கு நிரலை தயாரித்தான் 
வேம்படி மகளிர் பாடசாலை மித்ரா மகேந்ரன்-35 வது ஆசனம்
ரகு-36 வது.. வினோத்.. ஏனயவற்றையும் கனகச்சிதமாக எழுதினான் பள்ளி முடிந்த பின்னரும் நின்று ஏற்பாடுகளை கவனித்தான்..
மாலை நல்லூரான் சன்நிதியில் வெட்கத்தை விட்டு பெரிய்ய்ய கும்பிடு போட்டான்..

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தவன் மணிக்கணக்கில் குளித்தான் நிலைக்கண்ணாடி கடுப்பாகுமளவுக்கு தலைவாரினான்..

வாசலையே பார்த்து கொண்டிக்கிறான் ரகு..
.
விழா ஆரம்பித்தாயிற்று..
கடவுள் வாழ்த்து 
அதிபர் ஆசிச்செய்தி
ப்ச்...
இன்னும் விழாவின் பிரதம விருந்தினர் வரவில்லை.. அவரா முக்கியம் நமக்கு.

யாழ்ப்பாணத்து வீஐபி களின் மேன்மையான குணம் நமது பிரதம விருந்தினரிடத்தும் இருந்தததால் சிங்கம் அரை மணிநேரம் தாமதமாகவே வந்தார்..
வரவேற்கும் பொறுப்பு ரகுவினுடையதாச்சே..
வாசலுக்கு சென்று மாலை போட்டு கைகுலுக்... ஓ... வேம்படி மாணவிகள் கூட்டம்... 
நம்மையுங்கடந்து மண்டபத்துக்குள் சென்றது..
நமது சிங்கம் அதிபருடன் சிரித்துப்பேசியபடி பாரியார் சகிதம் மண்டபம் நோக்கி 
சென்றுகொண்டிருக்கிறது..

ஆஹா...அன்ன நடை

மண்டபத்தை அடைந்ததும் அனைவரும் எழுந்து நிற்கிறார்கள் 35வது ஆசனத்தை பார்க்கிறான் ரகு.. முன்னால் நிற்பவர்கள் மறைப்பதால் தலைகளே அலை மோதின..
“..இப்ப கூடாது.. இந்த வேலைகளை முடித்தபின் ஆறுதலாக அருகில் சென்று அமர்ந்ததும் பார்க்கலாம்..“
என்ற மனஉறுதியோடிருந்தவன் எதேட்சையாக திரும்பியபோது...அங்கே..!!!!
ரகுவின் ரகசிய ரசிகைமித்ரா...
வினோத் சொன்னது சுத்த பொய்..
அவள் தேவதை இல்லை.
(தவிப்புகள் தொடரும்...)

இங்க Comment பண்ணுங்கப்பா...!

8 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails