Thursday, January 1, 2026

2026 மகிழ்வான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 வணக்கம்,

இதே நாளில் பல வருடங்களாக தொடர்ச்சியாக பதிவேற்றிவரும் புத்தாண்டு வாழ்த்தில் 2026 இன்று இனிதாக ஆரம்பித்துள்ளது.

கடந்த 2025 நீண்டதூர துவிச்சக்கர வண்டி பயணங்கள் நிறையவே பயணிக்க ஏராளமான வாய்ப்புக்கள் அமைந்தது.



இலங்கையின் வடமுனையான பருத்தித்துறை முனையிலிருந்து தெற்கு முனையான தெய்வேந்திரமுனை வரையான 650 kmக்கு மேலான பயணம் பார்வையறொறோருக்கு ஆதரவாக மேற்கொண்டேன். 

நீர்கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மீண்டும் நீர்கொழும்பை அடைந்த மற்றுமொரு பயணம் இரத்த தான விளிப்புணர்வு க்காக மேற்கொண்டோம்.

இலங்கை முழுவதையும் கடற்கரையை அண்டிய பாதையூடாக கடந்த பயணம் 1550 km க்கு மேலானது இயற்கையை பேணுவதை நோக்கமாக வலியுறுத்தி மேற்கொண்டோம்.

மீண்டும் ஒரு பயணம் கொழும்பில் ஆரம்பித்து மலையகம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தோம். இதன் போது Camping அமைத்து இரவுகளில் தங்கி பயணத்தை தொடர்ந்தோம்.

மற்றொரு பயணம் கொழும்பில் பசுமையை வலியுறுத்தி 120 KM.

போலியோ விளிப்புணர்வுக்காக குருநாகல் பகுதியில் மேலும் ஒரு 120+ Km மலைப்பகுதியில் மிதிவண்டி பயணம்.

யாழ்ப்பாணத்தில் 75KM பயணம் சவாரி போட்டி ஒன்றிற்காக என பல்வேறு நரட்டவர்களுடன், பல்வேறு இனத்தவர்களுடன், பல்வேறு மதத்தவர்களுடன் பயணித்த ஆண்டாக 2025 இனிய பல நினைவுகளையும் பல நாடளாவிய அங்கீகாரங்களையும் தந்து போனது.

விளையாட்டு துறைக்கு சற்றும் தொடர்பில்லாத எனக்கு மோட்டார் வண்டி, சொந்த கார் என சுற்றித்திரிந்த பின்னும் மீண்டும் சைக்கிளில் பயணிக்க ஆரம்பிப்பேன் என கனவிலும் நினைத்திருக்கவில்லை.

2026 முதல் நாள் இன்று கூட நியூசிலாந்து நாட்டவர்களுடன் யாழ்ப்பாணத்தில் மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன்,

பார்க்கலாம் எதுவரை தொடர்கிறதென்று...!

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவளித்து உடனிருக்கும் நண்பர்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகளும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்.

-கிருத்திகன். 


இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails