Monday, April 12, 2010

ஆவியுடன் பேசுவது எப்படி?

உண்மையில் ஆவி வரும்போதும் சரியாக பேச முடியாது.... அதாவது நான் இங்கு குறிப்பிட்டது  கெட்ட ஆவியை இல்லை. கொட்டாவியை.

நான் ஒரு நாள் நண்பனின் வீட்டில் இரவு தங்கியிருந்த போது நடு ராத்திரியில் தெருவில் சலசலப்பு..நாய் தொலைவில் குரைக்கும் சத்தம்..யாரோ நடந்து வரும் சத்தம் போலிருந்தது..கிட்ட வந்து நாமிருந்த வீட்டை கடந்து சென்ற போது நாய்கள் குரைக்கவில்லை..ஆனால் ஒரு மனிதன் நடந்து செல்வது போலிருந்தது.. நண்பனுட்பட வீட்டிலிருந்த அனைவரும் எழுந்து திருநீறு பூசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டனர்..

மறுநாள் நண்பனின் சகோதரிகள் பக்கத்துவீட்டுக்காரரிடம் இரவு பேய் நடந்து போனதாக கூறிக்கொண்டிருக்க நன்பனின் தந்தை திருத்தினார்..
அது பேய் இல்லை.. வைரவர்..

மீண்டுமொருநாள் நிஷா புயலின் பேய்க்கூத்தால் அதே நண்பனின் வீடு    குளமாகிவிட அருகிலிருந்த இன்னொரு வீட்டில் தங்கியிருந்தனர்.. 
சிறுவர்கள் 4 தகர பீப்பாயை சேர்த்து கட்டி படகோட்டிக்கொண்டிருந்தனர்.
சிறுமிகள் சிலர் பேப்பரில் கப்பலோட்டி பொண்டிருந்தனர்.
இளைஞர்கள் பெண்கள் இடுப்பளவு வெள்ளத்தில் நடந்து வருமபோது பாவாடை தாமைரை மலர் பொலிருக்குன்னு இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்..
அதேவீட்டில் தங்கியிருந்த பாபுஜி அங்கிள் என்பவர் அங்கிருந்த சிலரை     கூட்டிவைத்து பிரசங்கம் நடத்தி கொண்டிருந்தார்.. அவர் வன்னியில் சிலகாலம் இருந்தவராம்.. அங்கு காட்டுக்குள் செல்லும் அனைவரும் திரும்பி வந்து விடுவார்களாம்..
ஆனால் ஒரு சிலரை மட்டும் “ஆள் மயக்கி“னு ஒரு புல்லு தடுத்துடுமாம்..
அத மிதிச்சா காட்டுக்குள்ள எங்க போனாலும் திரும்ப அதே இடத்துக்கு கொண்டு வந்துடுமாம்.. வெளிய வரவே முடியாதாம்.. பாதையே தெரியாம இருக்குமாம்..
அதில இருந்து தப்பிக்கணுமனா நிண்ட இடத்திலயிருந்து சுத்தவர வட்டமா சிறுநீர் கழிக்கணுமாம்(அடங்கொய்யாலா!)
அப்ப அதிண்ட சக்தி போயிடுமாம்( யூரினுக்கு இப்பிடி ஒரு பவறா!!)

இத விட அவர் பல பேயக்கதைகள் சொல்லி ஆவியுடன் பேசமுடியும்      என்றெல்லாம் சொல்லி அதுகளுக்கு உதாரணங்களும் சொல்லி அனைவரையும் பயமுறுத்தி கொண்டிருந்தார்(சிறுவயதில் அண்ணா என்னை பயமுறுத்த நிறைய பேய்க்கதைக் சொல்லுவான் அதனால் இவை எனக்கு மரத்துப்போயிருந்தது..)

நான் அவருக்கு சொன்னேன் “நான் இதுவரை பேயை பார்த்ததில்லை அதனால் பேய் இல்லை என நான் நிரூபிக்கிறேன். அது இருக்கு என நீங்கள் நிரூபித்தால் நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்“
அதற்கு அவர் என் பிறந்த தேதியை கேட்டுவிட்டு கண்ணை மூடி யோசித்துவிட்டு “தம்பி உன் ஜாதகபடி நீ தேவகணம். ஆகவே உன் பின்னால் ஆவி நின்று கொண்டிருந்தால்கூட நீ அதை பார்க்க முடியாது..பேச முடியாது..“என்றார்...
நீங்கள் பேசி காட்டுங்கள் நான் கேட்கிறேன் என்றேன்.. அதற்கு ஆவிகள் பழிவாங்ககூடியவை அவற்றை கோபபடுத்தாதே என்றார்..“அப்படியானால் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்கள் தானே பேயாக அலைவார்கள் எம் இனத்தில் விரும்பி தம்முயிரை மாய்த்த இளைஞர்கள் எம் எதிரியை பழிவாங்கலாம் தானே!“ என்றேன்..
தனக்கு வீட்டில் அவசர வேலை இருக்கிறது என கூறி எழுந்து போய்விட்டார்..

மறுநாள் காலை நான் ஆவியிடம் பேசிக்காட்டுவதாக நண்பனின் குடும்பத்துக்கு கூறினேன்..

எம்மில் பலருக்கு ஆவிபிடித்த அனுபவம் இருக்கலாம்.. தடிமன் ஜலதோஷம் வந்த பொழுது அம்மா சுடுநீருக்குள் எதையோ கலந்து தருவா.. மற்ற படி சுடுகாட்டில் எல்லாம் ஆவி பிடித்ததில்லை ஏனெனில் எனக்கு ஆவியை பிடிக்காது.. ஆனால் வேற்று கிரகத்தாருடன் பேசியிருக்கிறேன் என யாராவது வந்தால் அதைப்பற்றி யோசிக்கலாம்..
யாருக்காவது ஆவியுடன் பேசிய அனுபவம் அல்லது அதற்கான வழிமுறைகள் தெரிந்திருப்ருப்பின் கீழே தெரியப்படுத்துங்கள்..

மறு நாள் காலை...
சுட சுட  தேனீர் வந்தது தேனீர் கோப்பையை நான் வாயருகில் வைத்துக்கொண்டு “ஹலோ..! ஆவியா.. ஆமா நான் தான் கதைக்கிறேன் என்னது இந்த நபர் தொடர்பு எல்லைக்குள் இல்லையா..? Sorry.. றோங் நபர்..”

இங்க Comment பண்ணுங்கப்பா...!

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails