Sunday, April 4, 2010

பதிவுலக தர்மம்

இதற்கு முந்திய சில எமது பதிவுகள் பல பின்னூட்டங்களை சந்தித்துள்ளன..
இதில் பாராட்டுக்களும் விமர்சனங்களும் எம்மை கடந்திருக்கின்றன..
அனாமதேய பின்னூட்டங்கள் பெயர் குறிப்பிட விரும்பா அன்பர்களால் இடப்படுவதாகும்..
நாம் பாராட்டுகளை மட்டும் வெளியிடாமல் எம்மை தாக்கி வந்த பின்னூட்டங்களையும் பிரசுரித்திருக்கின்றோம்..

நிலா said...
hey ... fool... this is nt a story, dnt fake peoples .... bullshit.. useless fellow. stupid.
APRIL 3, 2010 8:15 AM (பார்ப்பதற்கு திகதியின்  மேல் க்ளிக் செய்யவும்)


இப்பதிவு நகைச்சுவை வகையில் இணைக்கப்பட்டிருந்தாலும் இது ஒரு கதை அல்ல என கண்டு பிடிதமைக்கு நன்றியோ நன்றி..
ஆண்டவா என்னையும் இந்த மாதிரி “டீசண்டா” அறிவு பூர்வமா படைக்காதுக்கு நன்றி..

பன்னாடை எத்தினையாவது படம் எண்டு கூட தெரியாமல் பதிவு எழுத வந்திட்டாய்... இது 50 ஆவது படம்டா பரதேசி... (பார்ப்பதற்கு  அதன் மேல் க்ளிக் செய்யவும்)


இவரின் பெற்றோர் இவரை வளர்த்த பாணியில் இவரும் தன் விமர்சனத்தை சொல்லியிருக்கிறார்..
தப்பில்லை...
ஏனெனில் இவர் விஜய் ரசிகராக இருக்க கூடும்..
(ண்ணா சுக்ரன்னு ஒரு படம் வந்துதுங்க.. அதுல உங்க இளைய தலைவலி  ஸாரி தளபதியும் வர்றாருங்க அதயும் சேத்தாக்கா அவரு நடிக்கிற (அவரு எங்க நடிச்சாரு) 51வது படம் இது..)
  விவேகம் என்பது  இவரது வலைப்பூ பார்த்தீர்களானால் தெரியும்..  முழுக்க முழுக்க அந்தரங்கங்களையும் சர்ச்சைக்குரிய விடையங்களையும் கூசாமல் வெளியிட்டு பப்ளிசிட்டி பண்ணும் நாகரீக மனிதர்.. இவரது தளத்தில் ஆபாச படங்களுக்கு பஞ்சமில்லை..
(இது மாதிரி எங்களை படைக்கத ஆண்டவனுக்கு நன்றி)

hey wasteful idiot, stop to writing this sort of post, do some valuable post.... wht is the problem to u .... ur a basted.... bloody stupid... this is the message to u u dnt need to make it to visible to others ..... ****off
(நிலா) 4.3.10 என்ற பெயரில் வந்தது வார்த்தை பிரயோகங்கள் ர் மயமாக
இருந்ததால் பிசுரிக்கவில்லை..
இப்படி எழுதுவது உண்மையில் ஒரு பெண் தானா இல்லை போலியான நபரா என்பதை வாசிப்பவர்களின் ஊகத்துக்கு விட்டு விடுகிறோம்.. 


உன்னைப்பற்றி யாரும்
அடஎன்ன சொன்னால் என்ன
இந்த காதில் வாங்கி அதை
அந்த காதில் தள்ளு


மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்
ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு


பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
பந்து வரும் நீரில் மிதந்து


அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும்
தம்பி வாடா கொஞம் தொடத்தான்


மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்
மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா?
நாங்க சொல்லல சுப்பர்ஸ்ரார் பாட்ல SBB சொன்னது...

இது போன்ற இன்னும் அநாமதேயப் பின்னூட்டங்கள் வந்திருந்தாலும் அவை அனைத்தும் எமது
காசேதான் கடவுளடா 2 - உங்கள் மத்தியில் கொலைகாரர்கள் எச்சரிக்கை.க்கு சம்மந்த பட்டவர்களின் ஆதரவான தரப்பிலிருந்து வந்த மிரட்டல் பாணியிலான பின்னூட்டங்கள் போல கடுமையாக இல்லை.. அவை பற்றி விரிவாக எழுத இருக்கிறோம்..

எங்கு அநீதி நடந்தாலும் உன் உள்ளம் கொதித்தால் நீயும் நானும் தோழர்களே".
சேகுவேரா

என்ன தான் மறைந்திருந்து அநாமதேயப் பின்னூட்டங்கள் போட்டாலும் பின்னூட்டமிட்ட நேரத்தையும் கணனியின் முகவரியையும் IP2Map காட்டிக்கோடுக்குதே!


திருவாளர் திருடர்சுறா படத்தின் SuPEr HiT கதை இந்த பதிவு இன்னுமொரு தளத்தில் திருடப்பட்டடு இடுகையிடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தோம்.. எம் சக பதிவாளர் ஒருவர் திருட்டை குறிப்பிட்டு காட்டியிருந்தார்.. அவர் இதுகுறித்து சம்மந்தபட்டவரிடம் கேட்டபோது பதிலில்லையாம்.. (akam

எங்காவது நிஜ திருட்டிலீடுபட பொயிருப்பார் போலிருக்கிறது..) ஆனால் அவரது பிரதியாக்கத்துக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலிட நேரமிருக்கிறது போலிருக்கிறது.. (இதனை சொந்த கற்பனையால் எழுதிய பதிவர் “மண்ணின் மைந்தன்“ன் மனநிலையிலிருந்து சிந்தித்து பாருங்கள்.

அந்த திருட்டு பிரதிக்கான சுட்டியையும் தருகிறோம்
சுறா படத்தின் SuPEr HiT கதை


இது குறித்து கூகிளாண்டவரிடம் முறையிட்டால் என்னாகும் என்பது சொல்லவேண்டியதில்லை..

ஆனால் நாங்கள் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம்..

எப்படியிருப்பினும் பதிவுதிருடர்கள் நீங்களும் வாழ்க வழமுடன்..
உங்களுக்கு திருட தான் தெரியும் எங்களுக்கு சொந்தமா எழுதவே தெரியும்..
பி்.கு: உண்மையில் என் மேலுள்ள அன்பாலும் நடுநிலைமைபோடும் பின்னூட்டம் அனுப்பப்பட்டிருந்தால்  நன்றி..

ஐயா கனவான்களே! குவியல் குவியலாய் பிணம் விழுந்த தேசத்தில் பிறந்தவர்கள் நாங்கள்.. 25வயதாகியும் எம் சகபாடிகள் இன்னும் இரயிலை கூட கண்ணால் காணாமல் வாழ்கிறார்கள்.. காரணமே இல்லாமல் எம் உடன்பிறவா சகோதரிகள் கற்பழிக்கபட்டதை வெளியே சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.. நாம் பேசும் இம் மொழியை எம் பிள்ளைகள் பேசுவார்களா என்பது கூட சந்தேகம் தான்.. இப்படியிருக்கையில் ஒவ்வொரு முறையும் அஜித் படம் ஓட வேண்டுமா விஜய் படம் ஓட வேண்டுமா என்பது குறித்து  தானே எங்களுக்கு அக்கறை?

உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

4 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails