Saturday, April 3, 2010

இது தான்டா காதல்..


நான் பல காதல் கதைகளை கேட்டிருந்த போதும் என் மனதை தொட்ட ஒரு கதை இது..
என் நண்பனின் கதை

1995 சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்ற என் நண்பனின் குடும்பம் அங்கு குடிசை கட்டி வசித்து வந்தது.. பலர் சொந்த ஊருக்கு 6மாதம் கழித்து திரும்பிவிட தொடர்ந்து அங்கேயே வாழ்தனர்.


2004 ம் ஆண்டு..
அங்கு வீடடுகளுக்கு வந்து அரிசி மா இடிப்பது, சமையல் போன்ற வேலைகள் செய்து வாழும் ஒரு பெண் வழக்கமாக வந்து மா இடித்து கொடுத்து விட்டு போவாள்..
ஒரு நாள் அவளுக்கு சுகயீனம் என்று அவளின் 12 வயது மகள் வந்து வேலைகள் செய்தாள்.(அவர்களின் தந்தை அனர்த்தத்தில் அகாலமரணமடைந்து விட்டாராம்..).
அன்று அவளுக்கு நண்பன் சில ஒத்தாசைகள் செய்து உதவினான்..
இப்படி ஆரம்பித்த பழக்கம் நல்ல புரிந்துணர்வாக மாறியது..
பின் 2006ம் சொந்த ஊரை பார்க்க வந்த அவளால திடீரென பாதை மூடப்பட்டதால் மீண்டும் அங்கு போக முடியவில்லை (இதற்கிடையில் ஊருக்கு வரு முன் அவன் தான் சம்பாதித்த பணம் ரூ 2800/=ஐயும் தனது மோதிரத்தையும் அவளிடம் கொடுத்து விட்டுருந்தான்...)

பின் இளைஞர்கள் யுத்தத்திலீடுபடவேண்டிய அவசியத்தால் போருக்கு போய்விட்டான் அவன்..
இதில் குண்டடி பட்டதால் அவனது காலில் ஒரு அறுவைசிகிற்சைமேற்கொள்ளவேண்டியிருக்கிறது..
இப்போதும் ஊன்று கோலின் உதவி தேவையாயிருக்கிறது..

2009ம் வருடம் யுத்தம் முடிவுக்கு வந்து பல முகாம்களுக்கும் இடங்களுக்கும் மாறி மாறி அலைந்து திரிந்து
இனி வாழ்க்கை என்னவாக போகிறது என்ற ஏக்கத்தோடு
கடைசியில் பிறந்த மண்ணுக்கே வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்த போது
ஒரு நாள் எதோட்சையாக அவளை மறுபடியும் நகர பஸ் தரிப்பிடத்தில் சந்திக்க முடிந்தது..


இப்போது அவள் ஒரு மகளிர் இல்லத்தில் தையல்வேலைகள் செய்துவரும் 18 வயது யுவதியாகியிருந்தாள்...
பரஸ்பர சம்பாஷனைகளுக்கு பிறகு இருவரும் திருமண பந்தத்தில் இணைய இருக்கின்றனர்..

இன்னும் அவனது பணமும் மோதிரம் அவளிடமே இருக்கிறது..
அவள் தன் வாழ்க்கையில் அனுபவித்த எந்த துன்பத்தின் போதும் அவற்றை பயன்படுத்தவில்லை..


என்னினிய இளம் மக்கள்ஸ்...
இத மாதிரி ஒருத்தி தான் நமக்கு திருமதியா வரணும்னு கனவு கண்டுட்டிருப்போம்..
நிஜ யதார்த்தம் தலைகீழாயிருக்கும்..
ஆனா எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றங்கள் அதிகமாயிடும்..
அங்கிள்ஸ் கிட்ட கேட்டு பாருங்க.. முதல்ல எதுவும் சொல்ல மாட்டாங்க இன்னுங்கொஞ்சம் உசுப்பி பாருங்க கசப்பான உண்மைகள் வெளிவரும்..


கல்யாணத்தில முடியறதில்லை  காதல்..
கல்யாணத்தில தான் ஆரம்பிக்கணும் உண்மைக்காதல்..

காதலிக்கும் போது நாம் மாற்றும் பழக்க வழக்கங்கள் விட்டுக்கொடுப்புகள் சொந்த விருப்பு வெறுப்புகள் கல்யாணத்துக்கப்புறம் சிக்கலை கொண்டுவரகூடாதுன்னா Love பண்ணும் போதே நல்ல புரிந்துணர்வு ஏற்படுத்தப்படணும்..
எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத ஒடஞ்சிடாம பாக்கறவன் கில்லாடி..உங்கள் கருத்துகளை கீழே Comment என்பதை க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்..
பிடித்திருந்தால் ஓட்டளிப்பு பட்டையில் Vote செய்யுங்கள்

இங்க Comment பண்ணுங்கப்பா...!

4 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails