விஜயஜன் 51 படமாக வெளிவரவிருக்கும் சுறாவுக்கான எதிர்பார்ப்புகள் பரபரப்புகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன்.
குருவி, வில்லு, வேட்டைக்காரன் என்று தொடர்ந்து ஒஸ்கார் பர்போமன்ஸ் கொடுத்துவரும் விஜய் இதிலும் தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்திழுப்பார்.
நிலத்துக்கு அடியிலிருந்து வருதல்.. வானத்திலிருந்து குதித்தல்... போன்ற அறிமுக காட்சிகள் ஏற்கனவே நடித்து விட்டதால் இம்முறை கடலுக்குள்ளிருந்து வருவாராம்..(அடுத்த படத்தில் எரிமலை வெடித்து சீற அதனுள் இருந்து அசால்ட்டாக வெளிவந்து லாவா குழம்பை வியர்வை போன்று வழித்து போட்டுவிட்டு கமராவை பார்த்து சிரிப்பாராம்..)
அறிமுகப்பாடலுக்காக வழக்கமான அவரது Beatக்கு பாடல் வரிகள் எழுதப்பட்டு கொண்டிருக்கின்றன...
ஓப்பனிங் பாடலை இம்முறை வாலியும், விஜயின் பர்ஸனாலிட்டியை, எண்ணங்களை வெளிக்காட்டும் பாடலை கபிலனும் எழுதியிருக்கிறார்கள்.
அடியும் உதையும் கலந்து வைச்சு...
இடுப்பு எலும்பை ஒடிச்சு வச்சு...
நான் அடிச்சா தாங்க மாட்டே..
நிக்காம ஓடு ஓடு..
போன்ற மனதை வருடும் வரிகள் ஏற்கனவே வந்துவிட்டதால் இம்முறை
நான் கடிச்சா பதினாறு ஊசி...
நான் இடிச்சா கபாலம் காலி
சுறா விழுங்கினா கரைக்கு போயி சேரமாட்டே...
நிக்காம நீந்து நீந்து நீந்து நீந்து...
போன்ற தத்துவ கருத்துகளை காதார கேட்கலாமாம்.
ஒரு டிக்கட்டுக்கு இன்னொரு டிக்கட் இலவசம் என்று வேட்டைக்காரனில் இவர் செய்த சாதனைகள் இம்முறையும் தொடரும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இவரது ரசிகர்கள்..
படத்துக்கு படம் தன் வித்தியாசமான கெட்டப்புகளால் கவர்ந்திழுக்கும் விஜய் எக்போதுமில்லாதவாறு தலையை மேவி இழுத்து இரண்டு நாள் தாடியுடன் கலக்கபோவதால் அனைவரும் இப்போதே ஆர்வமாகிவிட்டனர்.
நீ சொல்றத கேட்டுபறந்து பேக நா ஒண்ணும் புறா இல்லடா.. நீந்தி போகும் சுறா... என்ற வசனத்தாலேயே படம் வழமைபோல 200நாள் ஓடுமாம்..
நீச்சலடிப்பதால் உடல் அழகு பெறும் என்ற மசேஜை இப்படத்தில் நீந்திய படியே வாழும் சுறாவை உதாரணமாக வைத்து காட்டியுள்ளார்கள்..
இதனாலே விஜய் சிக்ஸ்பாக் உடன் வருகிறாராம்..
மீன்பிடித்துவைப்பதற்காக 6 Bagகள் வைத்திருக்கிறாராம்...
வில்லன்களுடன் விஜய் போதும் காட்சியை கடலுக்கடியில் வைத்து படமாக்கியுள்ளாராம் இயக்குனர்..
இராமேஸ்வரத்தில் விஜயிடம் அடிவாங்கி தூக்கியெறியப்படும் அடியாள்கள் இலங்கையில் வந்து விழும் காட்சி அழகாக படமாக்கப்பட்டுள்ளதாக கமிராமேனை பாராட்டினாம் விஜய்...
கல்லூரி பெண்ணாக வரும் தமன்னாவுக்கு பாடல் காட்சிகளுக்கு என கர்ச்சீப்பில் ஆடை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக மண்டையைபோட்டு உடைக்கிறதாம் கோடம்பாக்கம்.
மொத்தத்தில் தண்ணீருக்குள் ‘சுறா’ விஜய் வேட்டையாடும் ஆக்ஷன் திரைக்கு வந்து வழக்கம் போல 100 நாட்கள் ஓட இன்னும் சில வாரங்களே உள்ளன.
காத்திருப்போம்
இந்த கொலைவெறி பதிவு அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் உங்க ஓட்டை குத்துங்க எஜமான் குத்துங்க..
6 comments:
நல்ல வேலை ஆரம்பித்து விட்டீர்கள். இனி களை கட்டும். ஆனால் படம் வந்து உங்களை பச்சடி ஆகுதோ தெரியாது. இன்னொரு கில்லியானால் நீங்கள் பல்லி.
please remove word verification
பன்னாடை எத்தினையாவது படம் எண்டு கூட தெரியாமல் பதிவு எழுத வந்திட்டாய்... இது 50 ஆவது படம்டா பரதேசி...
பாக்க தானே போறீங்க..
இருந்தாலும் நல்லாயிருக்கு..
@Anonymous
ஒவ்வெரு தபாவும் பாத்துட்டு தானே இருக்கோம்..
Best of luck
வருகைக்கு நன்றி..
ஹீ...ஹீ...
நைஸ்...
///அடுத்த படத்தில் எரிமலை வெடித்து சீற அதனுள் இருந்து அசால்ட்டாக வெளிவந்து லாவா குழம்பை வியர்வை போன்று வழித்து போட்டுவிட்டு கமராவை பார்த்து சிரிப்பாராம்..///
யாரும் கப்டன் ஃபீல்ட் ல இல்லை என்று கவலை படக்கூடாது...
நம்ம விஜய் இருக்க கவலையேன்...
@வளாகம்
வருகைக்கும் கருத்துக்கம் நன்றி..
டி.ஆர் ஐயும் மிஸ்பண்ற ஃபீலிங் இப்ப இல்லாம போட்டுது..
Post a Comment