Thursday, September 30, 2010

எந்திரன் ஏமாற்றவில்லை... விமர்சனம்

எப்போ எப்போ என எதிர்பார்ப்பை எகிற வைத்து தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் இயக்குனர் கதாநாயகியாக உலக அழகி தொழிநூட்பத்தில் உலகின் முண்ணணி குழு ஒஸகார் வென்ற இசையமைப்பாளர் சவுண்ட் எடிட்டர் விஞ்ஞான கதைகளின் பிரபல கதாசிரியரின் கதை என இணைந்து வருடக்கணக்கில் உழைத்த உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது...


முதல்ள்நாள் ரசகர்களின் வீதி மறிப்பு தேங்காய் உடைப்பு தீபாராதனை தள்ளுமுள்ளு எல்லாம் கடந்து தியேட்டரில் 6முதல் 60 வரை ஸ்க்ரீனு கிழியும் விசில் ஆரவாரங்களோடு அடடகாசமாக ஆரம்பித்தது ப்ரீமியர் ஷோ...


மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்கள் உடல் பாகங்கள் செய்யும் வேலைகளை செய்யக்கூடியவை அவற்றுக்கு கட்டளைகள் கொடுக்க வேண்டும்..


ஆனால் அவற்றுக்கு சிந்திக்கும் திறன் வந்துவிட்டால்...? இக்கேள்விக்கான விடையை பிரம்மிக்கக்கூடியதாக திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.


ததையின் காட்சிகளை இங்கே சிலாகிப்பது திரையில்காணும் போது சலிப்பூட்டும் என்பதால் திரையில் காண்க..


ஆர்ட்டிஃபிகல் இன்ரலிஜன்ட் கதையில் காமடி மசாலாவை தூவி தந்திருப்பதுடன் தமிழ்சினிமா தன் வழமையான பாணியிலிருந்து ஒரு படி மேலே சென்றுள்ளது...


ஏ.எல் டேமினேட்டர் ஐரோபோ படங்களில் பார்க்காத சில விடையங்களும் இங்குள்ளன..


ஐஸ் இன்னும் 50Kg தாஜ் மஹாலாகவே தென்படுகின்றார்... கதை அவரை சுற்றியும் பின்னப்பட்ருக்கிறது.
காதல்ரத்து காட்சிகளில் சுப்பருஸ்டார் எவர்16 மார்க்கண்டேயன் என நிரூபிக்கிறார்..


ரயில் சண்டைக்காட்சிகள் க்ளைமாக்ஸ ஸ்பெஷல் எஃபெக்ட் பைட் என்பவை இருக்கையின் நுணிக்கு வரவைக்கின்றன..


சுப்பர்ஸ்டாருக்கு ஆர்ப்பாட்டமில்லாத இன்ரடக்ஷன்.. நோ பஞ்ச் டயலாக்ஸ்... ஆரோக்கியமான தமிழ்சினிமாவுக்கான அறிகுறி ஆனால் ஆஸ்த்தான ரசிகர்களுக்கு ஏமாற்றம்..


சிட்டி எனும் ரோபோவாக ரஜினி குழந்தையை தூக்கி விளையாடும் காட்சியாகட்டும்.. 'திரும்பி'பார்க்கும் ஸ்ரைலாகட்டும்..சிரிக்கவும் ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறார்.


அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் பத்து வருட உழைப்பபான ரேபோவை கார்ப்பரேஷன் குப்பையிலா வீசுவார்கள்... 


WiFi கன்ரோல் மூலம் வில்லன் ரோபோக்கள் உருமாறும் காட்சிகளை எழுத்தில் விமர்சிகுமளவுக்கு நாங்கள் வித்தகர்கள் இல்லை..


சந்தானம் தன் லொள்ளு வசனங்களால் சிரிக்கவைக்கிறார்...


பாடல் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன...


கமிரா கோணங்கள் அருமை...
2030 காலப்பகுதிவரை ஆர்ட்டிஃபிகல் இன்ரலிஜன்ட் மனித குலத்துக்கு தேவைப்பட்டதா? என்பதை Teen Star ஸ்ரேயா ஷர்மாவின் காட்சிகளோடு முடிகிறது படம்...
ப்ரேக்கிராம் செய்யப்பட்ட உணர்வுகளின் விளைவுகளே ஷங்கரின் எந்திரனாக ப்ரேமுக்கு ப்ரேம் மிரட்டல்..நன்றி.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

23 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails