Sunday, May 2, 2010

அழியும் யாழ்நகர் பண்பாட்டு சின்னங்கள்-எச்சரிக்கை ரிப்போர்ட்

 

மற்ற இடங்களை போலல்லாது யாழ்நகர் கடுமையான யுத்தத்தை தாங்கிய “செல்“வந்த பூமி.
துளைகளை காணாத கட்டடங்களையும் கொலைகளை காணாத மனிதர்களையும் காண்பது அரிது..
கந்தகவாசம் ஓயும்முன்னே அடுத்த ஆர்ப்பாட்டமில்லாத அபாயசங்கு ஊதபடுகிறது.
தற்போது புது கட்டடம்ஸ்..
புது கம்பனீஸ்..
புது ரூறிஸ்ட்..
கலக்குது Jaffna கலக்குது..னு தோணுறதென்னமோ உண்மைதான்..
ஆனா இவளவுநாளும் இங்கிருந்த தமிழர் போய்வர வீதிகள் போதுமாயிருந்தன..
இப்போது அபிவிருத்திக்காக பாதை அகலமாக்கப்படவேண்டியுள்ளது..
ஏற்கனவே சிங்களவன் உத்தரவு குடுத்திட்டான் சீனாக்காறன் நோண்ட ஆரம்பிச்சிட்டான்..
இதனால வரப்போற இலாபங்கள் ஒருபுறமிருக்க..
யுத்தத்தில் கூட தப்பிய சில தமிழர் பண்பாட்டு சின்னங்கள் இன்று அழிக்கபட நாம் வேடிக்கை பார்க்கபோகிறோமா ..!
அவசர அபிவிருத்தியா..? தூரநோக்குடான அபிவிருத்தியா எமக்கு தேவை?
இவ்வளவு நாளும் சரியான மின்சாரமில்லாமல் இணையம் இல்லாமல் ஏன் பல அடிப்படை வசதிகள் தேவைகள் இல்லாமலே வாழ்ந்ததை யாராலும் மறுக்கமுடியுமா?
அப்படியிருந்தும் எம்மவர்கள் உலகம் முழுவதும் சாதிக்காமல் விட்டார்களா?
அபிவிருத்தி பூகோளமயமாதல் என்பவற்றின் பெயரால் நாமே நமது பண்பாட்டு சின்னங்களை இழக்கபோகின்றோமா?..
பல்வேறு பிராந்திய மக்கள் அவர்களது தனித்துவமான பண்பாட்டு வரலாற்று அம்சங்களை அழியவிடாமல் பாதுகாப்பதில் பெரும் முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர்..
ஆனால் நமக்கோ இவ்விதமான முயற்சிகளோ அதற்கான வேலைத்திட்டங்களோ இல்லாவிட்டால் கூட பரவாயில்லை அதைபற்றி யோசிக்க கூட மனமில்லை..!
தற்போது ஆரம்பித்துள்ள வீதிகளை அகலமாக்கும் பணியால் பாதிக்கபட போகும் புராதன எச்சங்களில் குறிப்பிடகூடிய சில..
கே.கே.எஸ் வீதியில்..

  • வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை மையமாக கொண்டஇலங்கையின் ஒரேயொரு கோயில்நகரம்(1790)
  • நூற்றாண்டுக்கு முற்பட்ட யாழ் இந்துக்கல்லூரியின் பிரார்த்தனை மண்டபம்(1890)
  • மூத்த பத்திரிகைகளில் ஒன்றான இந்து சாசனத்தின் பழைய கட்டட தொகுதி
  • நாவலர் இயக்கத்தின் கருத்து நிலையை ஆட்டங்காணவைத்த கின்லர் மண்டபம்
  • சித்தர் பரம்பரையின் சிவதொண்டர் நிலையம்(1930)
  • நாவலர் பாடசாலை(1848)

கல்வியங்காடு முத்திரை சந்தி பகுதியில்

  • அரண்மனை நுளைவாயில் மந்திரிமனை சட்டநாதர் போயில் முதலியன..
  • சங்கிலியன் சிலை..
  • மானிப்பாய் புராதன கிறிஸ்தவ தேவாலயம்..
  • கண்டி வீதியில் ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண நகர கட்டுமானங்கள் மட்டுமல்ல பல 300 வருடத்துக்கு மேற்பட்ட இயற்கை மரங்களையும் அழிப்பதை வேடிக்கை பார்க்கபோகின்றோம்...

யாழ்ப்பாணத்தில் அரும்பொருட்காட்சியகத்துக்கு எத்தனைபேர் போயிருப்பார்கள் என்று கேட்க போவதில்லை.. அது எங்கேயிருக்கிறதெண்டு எத்தின பேருக்கு தெரியும்?
பிள்ளைகளுக்கு டாடி மம்மி எண்டு கூப்புட சொல்லிகுடுக்கும் பெற்றோருக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா என்ன!!?
அம்மாக்களுக்கு சீரியல் பாக்கவே நேரம் போதறதில்லை..
அங்கிள்களுக்கு எடுப்பா வேலைக்கு போகவும் வீட்ல உடுப்புதோய்க்கவும் விடுப்பு புடுங்கவுமே இடுப்பு ஓடிஞ்சு கடுப்பா போயிடுவினம்..

பண்பாட்டையும் வரலாற்று சின்னங்களையும் அழிக்காது உள்ளெடுக்கும் அபிவிருத்தியே எமக்கு தேவைப்படுகிறது.
இதற்கான மாற்று திட்டங்களும் சொத்துகளை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளும் துறைசார் வல்லுனர்களின் வழிகாட்டல்களும் புரிந்துகொள்ள கூடிய அரசாங்கமும் பொதுமக்களின் ஆதரவும் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துளைப்புடனான கூட்டுநடவடிக்கைகளும் இருந்தால் நல்லாயிருக்கும் ஆனா அதெல்லாம் இங்கயிருக்கெண்டா முப்பது வருசமா தமிழரும் சிங்களவரும் புடுங்குப்பட்டு ஆளயாள் தூக்கி கொஞ்சியிருக்க வேண்டிவந்திராதே...!

இங்க Comment பண்ணுங்கப்பா...!

8 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails