பதிவர்கள் எழுதப்போகும் இத்தொடர்கதையின் அடுத்த கட்டங்கள் எப்படியிருக்கபோகின்றன என ஒவ்வொருவருடைய கற்பனைகளையும் படிக்கும் போது தான் தெரிய போகின்றன..
இக்கதையின் முதல் பாகத்தை படிக்க இங்கு சொடுக்கவும். மறுபடி திரும்பி வந்ததற்கு நன்றி. வாய்ப்பளித்த ஜனா அண்ணாவுக்கு நன்றி.
ஆறுமுகன்
ஆறுபடையான்
ஆறுனி
பெருசா காசு கேக்கலாம்டா என்றான் ஆறுனி
ஒரு கோடி கேக்லாண்டா அத மூணா பிரிச்சிக்குவோம் என்றான் ஆறுபடையான்
கணக்கு பர்க்க என கையில் ஒரு குச்சியோடு தரையில் உக்கார்ந்த ஆறுமுகன் சிறிது நேரத்திலேயே ஆறாம் வாய்ப்பாடு கண்டுபிடித்தவனை அறம்புறமாக திட்டிக்கொண்டு முயற்சியை கைவிட்டான்...
இவர்கள் ரொம்ப நேரம் யோசித்துகொண்டேயிருந்ததால் கால் வலித்திருக்கும் போல பூதம் மணலில் ஆற அமர உக்கார்ந்து விட்டது.
இவனுங்க மூணுபேரும் சேர்ந்து யோசிச்சாங்க பெருசா என்ன கேக்கலாம்....!!!
நாங்க பாட்ர்ஷிப்பா பிஸ்னஸ் ஆரம்பிப்பம் மச்சான்...
ஆமாடா... சினிமா படம் தயாரிக்கலாம் நானே ஹீரோவா நடிக்கிறேன்... உங்களுக்கு எதுக்கு சிரமம்..
ஆறுனியின் இந்த பேச்சினால் பாட்ர்ஷிப் முறிந்துவிடும் அபாயமிருப்பதை உணர்ந்த ஆறுபடையான்
அத சைட் பிஸ்னஸா பண்ணலாம் முதல்ல நாங்கள் வீட்ல அழகுக்கு வளக்கிற மீன் பிஸ்னஸ் ஆரம்பிப்போம் என முடிவெடுத்து...
மதிப்பிறக்குரிய பூதமே நிறைய மீன்களை தா என கோரஸாக கேட்க...
சுறா முதல் நெத்தலி வரை அத்தனையும் அங்கு ஆஜராகின... (கடலில் தூண்டில் போட்டு பிடிக்க பட்டவை..)
நாம கேட்டது இந்த சுறாக்கள் இல்லை என ஆறுமுகன் கத்த தலையை சொறிந்த பூதம் ஒரு கூடை டிவிடிகளை வழங்கியது...
ண்ணா இது வேணாங்ண்ணா... என்ற ஆறுமுகன் மீண்டும் 666 குழுவை கூட்டி சிறுவர்களுக்கு வியாபாரம் செய்யவென சிறிய மண்சட்டி பானை பிஸ்னஸ் ஆரம்பிப்பது என முடிவெடுத்தான்.
பூதமே ஒரு அறை நிறைய சட்டி கொடு.... சட்டி கொடு...
அடுத்த கணமே அவர்களை சுற்றி மலைபோல் உள்ளாடைகள் குவிந்தன..
அடேய் பூதம்... நாங்க கேட்டது அடுப்புக்கு மேல வைக்கிற ஐட்டம் இடுப்புக்கு கீழ வைக்கிறத இல்லை...
என உள்ளேயிருந்து ஒரு ஆறு தொண்டை கிழிய கத்தினான்...
ஒரு வழியாக அந்த மலைக்குள்ளிருந்து வெளியேறிய ஆறுபடையான் வெளியே ஆறுனி மட்டும் மூச்சு வாங்க நிற்பதை கண்டு ' ஆறு... ஆறு...' என கூப்பிட்டு பார்த்தான் உள்ளேயிருந்து ஆறுமுகன் குரல் கொடுக்க பூதத்தை பார்த்து மீண்டும் மூவரும்
ஆறை வெளியே கொண்டுவா என கத்தியதும்...
தொண்டமனாறு அங்கே பாய்ந்து வந்தது...
ஆற்றில் மூவரும் மூள்க தொடங்கினர். நீந்தி தப்பிப்பதற்காக தங்களை ' அன்னமாக மாத்து....' என கத்தினர்
அடுத்த கணமே அவர்கள் சோறாக மாறி சேறோடு ஊரூராக ஊறி கரையொதுங்கினர்...
பக்கத்து வீட்டில் மேய்ந்து கொண்டிருந்த கோழி ஒன்று சோற்றை கொத்தி தின்றுவிட்டது...
வயிற்றுக்குள் இருந்து அவர்களின் குரல் வந்தது...
மூதேவி... மீண்டும் எங்களை பழைய மாதிரி மாத்து...
என்றதும் 666நண்பர்கள் கோழியின் வயிறற்றை கிழித்து மீண்டும் மனித வடிவுக்கு வந்தனர்.
இன்று மாலை புறப்பட்டவர்கள் இப்போது நேரம் இரவாகிக்கொண்டிருந்தது சிறுவர்களை வீட்டில் தேடி புறப்பட்டிருப்பார்கள் ஆனால் இவர்களோ வேறோர் ஊரிலல்லவா நிற்கிறார்கள்...
'மீண்டும் மாலை வரவேண்டும்...' என கட்டளையிட மூவரின் கழுத்திலும் அழகான பூமாலைகள் வந்து விழுந்தன.
'கரப்பொத்தான கவிட்டு போட்ட மாதிரி மூஞ்சில கிடாரம் மாதிரி காது வச்சு கொண்டு எருமை மாடு.. உனக்கு காது கேக்காதா...?“
என ஆறுதலாக திட்டினான் ஆறுபடையான்...
ஐயனே தங்களின் விண்ணப்பங்களையே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் அடியேனிலேதும் வழு கண்டீரோ...!!!“
'பண்டி... வா எங்கட ஸ்கூலு தமிழ் படிக்க...' என்றான் இன்னொரு ஆறு“
பூதம் தமிழ் படிக்குமா... 666சிறுவர்களின் ஆசைகள் நிறைவேறுமா என்பது அடுத்த பாகத்தில்...
தொடர்ந்து கதையை அழகாக கொண்டு செல்ல தொடர் கதையான கொலைக்காற்றை மிக சிறப்பாக வீச வைத்த லோஷன் அண்ணாவை அழைக்கிறேன்... யை
நன்றி
9 comments:
கூலுக்குள் இருந்து நகைச்சுவை ஆறு போங்கி பிரவாகித்து புகுந்து விளையாடி இருக்கிறது கலக்கல் மல்லி...
//'பண்டி... வா எங்கட ஸ்கூலு தமிழ் படிக்க...' என்றான் இன்னொரு ஆறு
வாழ்த்துக்கள் தலைவரே.
மேலே காட்டபட்ட வசனத்தை வாசித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.
கலக்கீட்டாய்
என்னா ஒரு வேகம், கதையில் மட்டுமல்ல கூலின் உடனடிப் பதிவிலும்..
ம்ம்ம்... உங்கட பங்கை செய்திட்டியள் கூல். இனி கொஞ்சம் கதையை சீரியஸாக கொண்டு செல்வதே லோஷனின் பங்கு என நினைக்கின்றேன். நன்றிகள்.
எப்படி கூகூல் உங்களால் மட்டும் முடியுது... ஹ..ஹ..ஹ...
நான் நேற்றே சொல்லி விட்டேன் இன்று காலை பதிவு வரும் என்று...
அட்டகாசமான குறும்பு பையன்களை காட்டினீர்கள்...........சபாஷ்...........
லோஷன்ஜீ எங்க பார்ப்பம்........உங்க கலக்கல் கதையை.........!
கூலு... சூப்பர்..:D
சிரிச்சுச் சிரிச்சு முடியல..ஹாஹாஹா..:D
அடுத்து லோஷன் அண்ணாவா, அண்ணே வெயிட்டிங்கு..:D
பதிவு சூப்பர் மாப்பூ!!!
ஜ்டுத்த பாகத்துக்கு காத்திருப்பு
Post a Comment