யாழ்ப்பாணத்தில் பதிவர்சந்திப்பு - முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க
“ஆ...! அங்கே ஒரு றோட்டு தென்படுது“ என்றான் அனு...
“சாத்தியமேயில்லை Google Mapல் இல்லையே“ உறுதியாக தன் ஐபோனை பார்த்தபடி மறுத்தான் வதீஸ்...
“அட.. ஜோரான பாதயாத்தான் கிடக்கு“ என்றவன் கோபி.
“நேரத்தை வீணடிக்கமுடியாது கோணடிச்சுகொண்டு முன்னேறுங்கள்..“ என சுபாங்கன் உத்தரவிட அவனது ஒளியை விட வேகமா செல்லக்கூடிய டைம் மிஷினில் (அதைப்பார்க்க விரும்புபவர்கள் க்ளிக்குக) அந்த பாதையினூடாக விரைந்தார்கள்.
பாதையின் குண்டுகுழிகளுக்கு தாக்குபிடிக்கமுடியாமல் வண்டி வெள்ளத்துக்குள் குடைசாய்ந்தது...!
“ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து ஓடம்போலே ஆடலாம் பாடலாம் ஓடலாம்..” என ரிங்டோனை வெளியிட்டது கோபியின் போன்
“ஹலோ கூல்போய் என்ன... பதிவர்சந்திப்பு தொடங்கபோகுதோ என்னண்டா சுபாங்கன்ர மோட்டசைக்கிள்ள தான் நாலுபேரும் வந்து கொண்டிருந்தனாங்கள் வழீல ஒரு அக்ஸிட...
பீப் பீப் பீப்...
தண்ணீர் புகுந்ததால் தொலைபேசி அத்தோடு தன் உயிரை விட்டது.
“பாதை கிடையாதுன்னு நான்தான் சொன்னேனில்லையா...“ என்றான் வதீஸ்.
“அடேய் ஆற்றயோ காணீக்குள்ள புகுந்திட்டம் போலிருக்கு தோட்டக்காறன் உழுதுவச்சிருக்கிறான் வா ஓடிப்போயிடுவோனம்...“
“நண்பர்களே இதுதான் காங்கேசன்துறைச்சாலை என வழங்கப்படும் கே.கே.எஸ் றோட்டு...“ இதால போகோணுமெண்டால் குரங்கு கொப்ப பிடிச்சுகொண்டிருக்கிறமாதிரி வண்டிய இறுக்கி பிடிச்சுகொண்டிருக்கோணும்...! அட கோபி கைய எடு நான் வாகனத்த தான் வண்டியெண்டனான்...“ என ஐயம் தெழிவித்தார் சுபாங்கன்
இதேநேரம் யாழ் இந்துக்கல்லூரி மண்டபத்தில் விழா ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டுகொண்டிருந்தன...!!!
மண்டப வாயிலில் ஜனத்தொகை சிறிது சிறிதாக அதிகரித்தவண்ணமிருந்தது.
“நிகழ்ச்சி நிரலின்படி தொடங்கவேண்டிய நேரமாச்சு எங்க ஜனா..“
என்று ஆறுதலாய் ஆரம்பிக்கும் யாழ்ப்பாண பண்பாடு தெரியாமல் அவசரப்படுத்தினார் மருதமூரான்.
“ஆள் மேடைக்கு பின்னுக்கு கொண்டிபிஸ்னஸில பிஸியாயிருக்கிறார் இப்ப வாறதாம்...“ கூறிவிட்டு பின்புறமாக சென்றார் நிரூஜா.
“ஓ... அண்ணன் கண்டி'லயும் பெரிய பிஸ்னஸ் மாக்னட் போலிருக்கு...“ தோரணம் கட்டியவாறே முகட்டுக்குள்ளிருந்து வினா எழுப்பினார் மதிசுதா.
ஒருவழியாக மண்டப வாயிலிலுக்கு வந்து சேர்ந்த ஜனா அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து..
“ஓ... தமிழின் வருங்கால தூண்களே! வருக வருக ஆம் இவ்விழாவை இனிதே ஆரம்பித்துவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம் நான் அதிகம் பேச விரும்பவில்லை பதிவுலகில் ஒற்றுமையே பலம் என்ற கருத்தோடு எனது சிற்றுரையை நிறைவு செய்து அடுத்த நிகழ்வாக மண்டபத்துக்குள் சென்று ஆசனங்களில் அமர்ந்து கொள்வோ......“
கூறிமுடிக்கமுன்னர் பின்புறமாக வந்து நின்று இடைமறித்த பாலவாசகன் காதுக்குள் மெதுவாக....
“உஷ்... ஜனாண்ண இன்னும் Hall ஒழுங்குபண்ணி முடியேல்ல.. நேற்று உங்க பேச்சை நீட்டுங்க..“
சொல்லிவிட்டு கதிரைகளை அடுக்குவதற்காக ஓடிவிட்டார்....
சடுதியான சூழ்நிலையால் சிலையாகி நின்ற ஜனாவின் பின்புறமாக வந்த Cool Boy கிருத்திகன் அவரின் கைகளில் எதயோ திணித்து...
“மேடைக்கருகில் இது கிடைச்சுது இத வச்சு சமாளிக்கேலுமோ பாருங்கோ..“
கையில் ஓர் புத்தகம் அம்பிட்டிருப்பதை முன்னிட்டு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய அதை பிரித்து பார்த்தபடி ஜனா தொடர்ந்தார்.
“ம்ம்... வந்து.. .இந்த நேரத்தில் ஆண்டவனுக்கு நன்றி கூறும் முகமாக அவரது போதனைகள் கொஞ்சம் பார்ப்போம்...
ஜெனலிஸ் அத்தியாயம் 1 பாடல்1 இறைவன் படைப்பை ஆகாயத்திலும் பூமியிலும் தொடங்கியபோது பூமி நடமாட்டம் எதுவுமேயில்லாத காலியிடமாக இருண்டு கிடந்தது.
இறைவன் மூச்சு கடலின்மேல் விழுந்தது இறைவன் சொன்னார் இங்கே வெளிச்சம் பரவட்டும்.
உடனே வெளிச்சம் பரவியது.
நெடுநேரத்துக்கு பிறகு...
இறைவன் மோஸஸிடம் சொன்னார் நீ நீசனாய் மலையுச்சியை சென்றடையும் போது உன்னை என் 10 கட்டளைகளையும் புரிந்துகொள்ளச்செய்வேன்...
“இந்த சந்திப்பு ஏற்பாடு உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கும் இல்லையா மதிசுதா...? என்ன அப்போத தொடக்கம் ஏதோ அந்தரப்பட்டுகொண்டிருக்கிறியள் போலிருக்குது உதென்ன கையில...? குப்பை தொட்டி அந்தப்பக்கமிருக்கு...!“
என மதிசுதாவை விசாரித்தார் வரோ.
இல்ல கானா வரோ அங்கயிருந்துதான் கொண்டாறன் பாண் சுத்தி வந்த பழைய பேப்பர் போலிருக்கு அடுத்ததா ஜனாணக்கு உரையாற்ற குடுத்துதவலாமெண்டு வச்சிருக்கிறன்...அது சரி இந்த வரவேற்பு பனர் எங்க கட்டுறது?
இதேநேரம் ஜனா தொடர்கிறார்...
“ஜாப் அதைக்கேட்டுவிட்டு என்ன சொன்னானென்றால்.... கொர்ர்ர்.... கொர்ர்ர்...“
“முடிஞ்சுது அவங்க உள்ள வரலாம்...“ ஜனாவை உலு(எழு)ப்பி Cool Boy கிருத்திகன் மெல்லிய குரலில் கூற...
உற்சாகமாக அறிவித்தார் ஜனா
“இனிதே இடைவேளைக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இப்போது அனைவருக்கும் சுடுசோறு வழங்கப்படும்...! அதனைதொடர்ந்து அடுத்த நிகழ்வு பதிவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்.
நன்றீ...!!!
30 comments:
என்னப்பா ஒரே இரத்த வாடையாக் கிடக்குது.....
ஹா ஹா ஹா..
கூடுதல் சிரிப்பைத் தந்தது சுபாங்கனின்
ஹா ஹா ஹா..
கூடுதல் சிரிப்பைத் தந்தது சுபாங்கனின்
time machine ;)
:))))
@LOSHAN
தங்களின் வரவுக்கும் ரசனைக்கும் நன்றி லோஷன் அண்ணா...!
அத பலபேர் வாங்குறதுக்கு கடும் போட்டி நிலவுதாம்...
ஏலத்தில கூட விடமாட்டன் எண்டு சுபாங்கன் சொல்லீட்டார்...!!
@Subankan
உங்க டைம்மிஷினுக்கு ஏக கிராக்கி தலைவரே..!
ஒரு மூட்டை பேரிச்சம்பழம் தந்தாலும் குடுத்திராதீங்க சொல்லிட்டேன்...!!!
@கன்கொன் || Kangon
//என்னப்பா ஒரே இரத்த வாடையாக் கிடக்குது....//
நிஜத்தில அப்பிடி ஆயிடக்கூடாதேங்கிறதுக்காகத்தான் கோபி...
மத்தபடி ச்சும்மா ஜாலிக்குதான்..
நன்றி..
ஒரு மார்க்கமாவே திரியிறாங்கப்பா..........?
சிரித்தேன். மகிழ்ந்தேன்.
நான் நேற்று நீங்க சந்திச்ச விசயம் எண்டு நினைச்சு வந்து பார்த்தா இங்கே பலருடைய டவுசரை உருவுரீங்க....ஒரே நகைச்சுவை போங்கள்...
நேற்றைய சந்திப்பு படப்பதிவு எங்க??
பயனுள்ள முயற்சி!!
மாதம் ஒரு சந்திப்பு பதிவுலகத்தின்
முயற்சி!!
நடாத்தினால் தமிழுக்கு வெற்றி!!!
@KANA VARO
பிரபல பதிவர்கள் பலரிது டவுசரை உருவாமல் விட்டமையை ஆட்சேபிக்கிறோம். கூல் பாய் ஒழிக!
ம்ம்ம்...இன்று ஒரு மீட்டிங்கில் நீங்கள் சொன்னதுபோலவே இருந்துவிட்டு..எப்படா லஞ்ச் டைம் வரும் என்று காத்திருந்துவிட்டு ஒருவன் லஞ்ச் டைம் என்று உலுப்ப ஓடிவந்துவிட்டடேன்.
தகவல்களுக்கு நன்றி வரோ. வருவோம், சந்திப்போம், கலந்துபேசுவோம்.
ஹாஹா.. குட்டைக்குள் விழுந்த பிறகு குரங்குப்பிடியில் சிரிச்சுச் சிரிச்சு முடியல..:D:D:D
:)
:)))
யாழில் போன ஞாயிறு பதிவர் சந்திப்பு நடந்ததா? நானும் அன்றைய தினம் அங்கேதான் இருந்தேன்.
மன்னிக்கணும் கூகூகூகூல் இந்தப் பதிவை எப்படித் தவற விட்டேன் என்றே தெரியல திருப்பியும் சொல்கிறேன் மன்னிக்கணும்....
இன்னும் எத்தனை டவுசர் கிழியுமோ...
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
லோஷன் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர்பதிவு அஞ்சலோட்டக் கோலை ஜனா அண்ணர் எனக்குத் தந்தார். இதை நானும் நாலு பேரிட்ட குடுத்து தொடர்ந்து ஓடுவம்... நான் அழைப்பவர்
கூல்போய் - அறிமுகமாவதற்கு முன்னர் என் கோபங்களை அள்ளிக்கட்டிக் கொண்டவர். அதாங்க... விஜய் பற்றி தாறுமாறா எழுதுற இவர் ரஜினி பற்றி எழுதட்டும்.
@மருதமூரான்.
தங்கள் ரசனைக்கு நன்றி அண்ணா...
சந்திப்போம்.
@KANA VARO
முதலில் அஞ்சலோட்ட பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள்.
//நான் நேற்று நீங்க சந்திச்ச விசயம் எண்டு நினைச்சு வந்து பார்த்தா இங்கே பலருடைய டவுசரை உருவுரீங்க....ஒரே நகைச்சுவை போங்கள்...
நேற்றைய சந்திப்பு படப்பதிவு எங்க?//
நாங்கல்லாம் சீரியஸ்ஸா எழுததொடங்கினா யாரும் வாசிக்கமாட்டாங்க.. அதான் இப்புடி..
நன்றி
@K.Thiruthanigesan
//பயனுள்ள முயற்சி!!
மாதம் ஒரு சந்திப்பு பதிவுலகத்தின்
முயற்சி!!
நடாத்தினால் தமிழுக்கு வெற்றி!//
எலேய் மக்கா சந்திப்பு நடத்துறதால தமிழ் எப்புடிலே வெற்றி பொறும்?...
@இலங்கை பதிவர்கள் கண்காணிப்பு மன்றம்.
//பிரபல பதிவர்கள் பலரிது டவுசரை உருவாமல் விட்டமையை ஆட்சேபிக்கிறோம். கூல் பாய் ஒழிக!//
ஆகா ஒழிகன்னு சொல்லிட்டாங்க ...
ஆத்தா நான் பிரபலமாயிட்டேன்...
நேர்ந்துகிட்ட மாதிரி கடாவெட்டி பொங்கல் வைக்கிறேன்...
@Jana
நன்றி
சந்திப்போம்...
வீட்ல ஒரே க்ரிக்கட் ப்ரட்டீஸாமே நெஜமாவா..?
@Bavan
//ஹாஹா.. குட்டைக்குள் விழுந்த பிறகு குரங்குப்பிடியில் சிரிச்சுச் சிரிச்சு முடியல..:D:D://
உங்கள விடவா நாங்கல்லாம்..!!?
நன்றி பவன்...
சந்திப்போம்...
@கார்த்தி
//யாழில் போன ஞாயிறு பதிவர் சந்திப்பு நடந்ததா? நானும் அன்றைய தினம் அங்கேதான் இருந்தேன்//
அடடா.. மிஸ் பண்ணிட்டோமே..
அடுத்த முறை யாழில் நிற்கும் போது தொலைபேசியில் அழையுங்கள்.. சந்திப்பு விபரம் குழுமத்தில் அறியதரப்படும் என நினைக்கிறேன்..
சந்திக்க ஆவலாயுள்ளோன்..
@ம.தி.சுதா
நீங்க சுடுசோற்றை மிஸ்பண்ணீட்டீங்கன்னு ரொம்ப சோகத்துல இருந்தேன் தலைவா...
இப்பதான் வயித்துல பால வாத்தீங்க...
நன்றி
@KANA VARO
மீண்டும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்..
தங்கள் பேச்சுக்கு மறுபேச்சேது..!!!
முடிந்த வரைக்கும் முயற்சி செய்கிறேன்...
அண்ணா மாதிரியே தம்பியும் நகைச்சுவையில கலக்குறீங்கள் கூல்...:)
Post a Comment