Monday, December 6, 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட் 2

தமிழ் பதிவர் சந்திப்பின் அறிமுகம் முதல் இடைவேளை வரை சுபாங்கன் அண்ணாவின் தரங்கத்தில்  பார்த்துவிட்டு வரவும்
யார் உசுப்பேத்தியும் இந்த பதிவை எழுதவில்லை என நம்பவும்.


இடைவேளையில் இன்னிசை
பாடல் போடுவதற்காக ஏற்பாட்டு குழுவினர் ஆளுக்கொரு பென்ரைவுடன் பாட்டுப்பெட்டியை நோண்டிக்கொண்டிருந்தார்கள்.
எந்திரன் பாடல் கோபியின் ப்ளாஷிலிருந்து அரங்கத்தை அதிரவைக்க ஆரம்பித்து இரு வரிகள் கடந்த நிலையில் “அவள் அப்படியொன்றும் அழகில்லை பாட்டை போடப்பன்..“ என்ற குரல் வர வேறு ப்ளாஷ் செருகப்பட்டது. குரல் வந்த திசையில் புல்லட்.
இதில தான் எங்கயோ சேவ் பண்ணின்னான் என அனுதினன் ஒவ்வொரு பாடலின் முதல்வரியையும் ஓடவிட இடைவேளையில் இன்னிசை இனிதே நிறைவடைந்தது.


கலந்துரையாடல் 3 - பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
நிரூஜாவின் அறிவிப்பை தொடர்ந்து மைக்கைப்பிடித்த வரோதயன் அண்ணா பதிவுலக பதிவர்கள் பிரயோசனமாக சிரமதானம் செய்யவேண்டும் என்று கூற... கரகோஷம் வானைப்பிளந்தது.


ஜனா அண்ணா குறும்படம் எடுக்கலாம் என்று தொடங்கி தானும் கேபிள்சங்கர் சாரும் ஒரு ஷூட்டிங் இடைவேளையில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே எந்தக்கடையில் நல்ல ரீசேட் வாங்கலாம் என்பது பற்றி கதைத்த சம்பாஷனையை மீண்டும் ஒருமணிநேரமாக மிமிக்கிரி செய்து விளங்கப்படுத்தினார்.


இப்போது தான் அரங்கத்துக்குள் அரக்கப்பரக்க நுளைந்த ஒரு பு(மு)தியவர் தன்னை டோண்டு  என அறிமுகம் செய்து கொண்டு எல்லோர் முகத்தையும் உற்றுப்பார்த்து எதையோ சீரியஸாக தேடிக்கொண்டிருந்தார்.


அடுத்து கருத்துகளுக்கு நன்றி என உச்சஸ்தாயியில் உற்சாகமாகக்கூறிய மாலவன் அடுத்து மௌன அஞ்சலி செலுத்துவது போல் சிறிது நேரம் நின்றறார் சுதாகரித்துக்கொண்டு அஷ்வின் இருந்த பக்கமாக திரும்பி மெதுவான குரலில் “பேப்பர்... பேப்பர்..“  என்றார். 


புரிந்து கொண்ட சொபிசன் தூங்கிக்கொண்டிருந்த பவனிடம் நிகழ்ச்சி நிரலை கொடுத்துவிட அது மாலவன் கைகளுக்கு சென்றது 
கூடவே மாலவனின் காதுக்குள் பவன் “கெதியா முடிக்கட்டாம்“ என்று கிசுகிசுத்தார். பவர் கூடிய மைக் என்பதால் இந்த உரையாடல்கள் றொக்ஸி திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு கூட தெளிவாக கேட்டது. 




மாலவன் தொடர்ந்தார்- கலந்துரையாடல் 4 - பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
 500க்கும் அதிகமான வலைப்பூக்கள் மற்றும் வலைமனைகளை யாழ்தேவி ஒருங்கிணைத்து வருகின்றது இதனோடு இணைந்து தொய்வு நிலையை போக்குவேம் -மருதமூரன் அண்ணா 


பதிவுகளில் சமூகப்பிரச்சனையை காட்ட வேண்டும் அதற்காக எல்லா பதிவுகளிலும் கற்பழிப்பு சம்பந்தமாக ஏதாவது இடம்பெற வேண்டும்- மதிசுதா 


அடுத்து கிருத்தின் ஏதோ சொல்ல வாயெடுக்க மைக்கை இழுத்தார் சுபாங்கன் சுபாங்கனின் கைகளிலிருந்த மைக்குக்கு முன்னால் வளைந்து முகத்தை நீட்டி 


கிருத்திகன் பதிவர்கள் எல்லோரு...


சுபாங்கன் தமிழ் பதிவர்கள் எல்..


கிருத்திகன் பதிவுலக பதிவர்...


சுபாங்கன் பதிவுலகில் சமீபகால..


இந்த இழுபறியில் ஸ்பீக்கர் “கூ.......“ என்ற சப்தத்துடன் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டது.. கூடவே அழகாக புகையும் கசிந்தது.


தொடர்ந்த மாலவன்  
“ஆம் தமது கருத்தை ஒற்றுமையாக எடுத்துரைத்த இரு பதிவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு... அடுத்து 
பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.


பதிவர்கள் தமக்கிடையே கருத்துகளை பரிமாறிக்கொண்டிருந்த வேளை


இடைவேளைக்கு வெளியே சென்ற லேஷனண்ணா அப்போது தான் மீண்டும் வற்திருந்தார்.
மழையில் அவர் முகம் கடுமையாக நனைந்திருந்தது துடைக்க ஏதாவது வேணுமே என அவர் எண்ணிய மறுவினாடி ஒரு கை அவருக்கு ஒரு பேப்பரை கொடுத்துதவியது. 


நிம்மதியாக முகம்துடைத்தவாறே நிமிர்ந்து பார்க்க மதிசுதா சிரித்தபடி நின்றிருந்தார் அண்ணே பாண் சுற்றிவந்த பழைய பேப்பரும் எனது பையில் பத்திரமாக இருக்... கூறி முடிக்கு முன்னரே முகத்தில் நவரசங்களை வெளிப்படுத்தியவாறு முகம் கழுவும் தொட்டியை நோக்கி ஓடினார் லோஷனண்ணா.


வதீஸை தனியாக அழைத்த டோண்டு “தம்பி நிரூஜான்னு ஒரு பொண்ணு உங்கஊர்ல எழுதிட்டிருக்கே அத பாக்கதானாக்கும் அசலூர்லருந்து ப்ஃளட்ட புடிச்சு வந்திருக்கேன் அது இன்னும் வரலியா..?“


சார் நிரூஜா உங்க ப்ரண்டா..?


ஆமா தம்பி நா இன்னிக்கு இங்க வந்தா அடுத்த மாசம் என்னோட 69 வது பர்த்டேக்கு தமிழ் நாட்டுக்கு வர்றதா சொல்லியிருக்கால்ல குறும்புக்காரி... 


அப்டியா சார் ரொம்ப நல்லது நீங்க அவர போயி கண்டிப்பா பாக்கணும் என வைத்தியர் பாலவானனை காட்டினார் வதீஸ்.


தங்களின் பெயர்க்காரணம் கேட்ட ஆதிரை அவர்களுக்கு மாலவன்.பா அளித்த விளக்கம் கீழே
ஆரம்பத்துல ரங்கராஜன்'னு ஒருத்தரு சுஜாதாங்கிற பெயரில ஏதோ எழுதிட்டிருந்தாரு.. 


இப்போ நான் நிரூஜாங்கிற பேர்ல முதலிடத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறேன் ஏன்னா... என தொடர்ந்தவரை சுபாங்கனும் ஜனா அண்ணாவும் ஒரு அறைக்குள் தள்ளிக்கொண்டு போய் கதவை சாத்தினார்கள். கதவில் Office Room என எழுதப்பட்டிருந்தது. 


நன்றி



பதிவர் சந்திப்பு

இங்க Comment பண்ணுங்கப்பா...!

19 comments:

ம.தி.சுதா said...

நிண்ட நாளுக்கப்பறம் எமது பழைய கூகூகூலை பார்க்கிறேன்...

அதே ரசனை ..
அதே ஜொள்ளு...

சிரிச்சு குடல் அறுத்திட்டிங்களே..

Subankan said...

சில இடங்களில் குபீர் சிரிப்பு :)

கலக்கல் கூல்

Bavan said...

அடங்கொக்கா மக்கா அதுக்குள்ளயா.. படிக்கிங்..:)

Bavan said...

கண் கலங்குது தலைவா...
மரணமொக்கை
சும்மா எல்லாரின் டவுசரையும் டர்ர்ர்ர்ர்... டர்ர்ர்ர்ர்ர் எண்டு கிழிச்சு எறிஞ்சிட்டீங்க...:D

ம.தி.சுதா அண்ணனுக்கு சுடுசோறு கிடைத்ததில் மகிழ்ச்சியும் புளகாங்கிதமும் அடைகிறேன்..:P

@ம.தி.சுதா அண்ணே - உங்களுக்குப் பிடித்த சாப்பாடு என்ன? #சீரியஸ்_சந்தேகம்..lol

நிரூஜா said...

ஏனய்யா...! ஏனய்யா... இந்த கொலை வெறி...!

ம.தி.சுதா said...

Bavan said...

@ம.தி.சுதா அண்ணே - உங்களுக்குப் பிடித்த சாப்பாடு என்ன? #சீரியஸ்_சந்தேகம்..

சரியான கேள்வி... உண்மையில் எனக்கு சோறு அவ்வளவு பிடிப்பதில்லை.. மூன்று நேரமும் பிட்டுத் தந்தாலே போதும்... ஆனால் வாழ்க்கையின் சில தரணங்களில் கை கொடுத்த சோற்றை கௌரவப்படுத்தவே நினைக்கிறேன்...

Jana said...

சமுகப்பிரச்சினையை கொண்டுவருவதிலையும், லோஷன் முகம்துடைக்க அந்த பேப்பருக்காவும் மதிசுதா வெயிட்ப்ணி நின்றதையும் நினைக்க நினைக்க சிரிப்பை அடக்கமுடியவில்லை.

anuthinan said...

மரண மொக்கை என்று இதை சொல்லலாம்!!!

நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன்

KANA VARO said...

என்னல நடக்குது இங்க?

KANA VARO said...

பஞ்சர் பஞ்சர் டோட்டலி டமேச்

Kiruthigan said...

@ம.தி.சுதா
//நிண்ட நாளுக்கப்பறம் எமது பழைய கூகூகூலை பார்க்கிறேன்...

அதே ரசனை ..
அதே ஜொள்ளு...

சிரிச்சு குடல் அறுத்திட்டிங்களே.//

சுடுசோறை ஜீரணித்தமைக்கு நன்றி மதிசுதா...

Kiruthigan said...

@Subankan

//சில இடங்களில் குபீர் சிரிப்பு :)

கலக்கல் கூல்//

நன்றி அண்ணாச்சி.
“கு” பாட்டு எங்கேருந்து புடிச்சீங்க..?

Kiruthigan said...

@Bavan

//கண் கலங்குது தலைவா...
மரணமொக்கை
சும்மா எல்லாரின் டவுசரையும் டர்ர்ர்ர்ர்... டர்ர்ர்ர்ர்ர் எண்டு கிழிச்சு எறிஞ்சிட்டீங்க...:D//

நன்றி பவன்.
தங்கள் போட்டோ கொமன்ஸில் டவுசருக்குள்ளேயிருப்பதும் கிழிபடவேண்டும் என எதிர்பார்க்கிறோம்...

Kiruthigan said...

@நிரூஜா

@யோ வொய்ஸ் தங்கள் ரசனைக்கு நன்றி (யோகா)

@ நிரூஜா
//ஏனய்யா...! ஏனய்யா... இந்த கொலை வெறி...!// எத்தின பேரு உந்த பேரால கொலைவெறில இருக்காங்க தெரியுமா..!!!
ஆண்பாவம் சும்மா விடாதுலே...

Kiruthigan said...

@Jana
//சமுகப்பிரச்சினையை கொண்டுவருவதிலையும், லோஷன் முகம்துடைக்க அந்த பேப்பருக்காவும் மதிசுதா வெயிட்ப்ணி நின்றதையும் நினைக்க நினைக்க சிரிப்பை அடக்கமுடியவில்லை//

நன்றி பாஸ்...
அந்த பேப்பரை கொடுத்துதவிய ஆபத்பாந்தவரே நம்மாளு தான்... (அது சுடுசோறு சுத்தி வந்த பேப்பர் எண்டும் ஒரு கதை அடிபடுது..)

Kiruthigan said...

@Anuthinan S
//மரண மொக்கை என்று இதை சொல்லலாம்!!!

நன்றாகவே வாய் விட்டு சிரித்தேன்//

ரசனைக்கு நன்றி Anuthinan S.
இதை விட வாய்விட்டு சிரிக்ககூடிய மெகா காமடிகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

Kiruthigan said...

@KANA VARO
//என்னல நடக்குது இங்க?//
ஓ அண்ணாச்சி கப்புல ஏறிப்பாருகோ தெரியும்...!!!

//பஞ்சர் பஞ்சர் டோட்டலி டமேச்//
தங்கள கலாய்கலைங்கிற எகத்தாளம்.. இனியொரு சந்தர்ப்பம் கிடைச்சா கடாசிடுறேன்...!!!

எனது பதிவுலகத்தையும் கவனித்து ரசித்ததற்கு நன்றி..
அடுத்து தங்களிடமிருந்து பதிவில் கிளம்ப இருக்கும் பூகம்பத்துக்காக வெய்ட்டிங்....!!!

எப்ப ரிலீஸ் பண்றீங்க உங்க காமடிக்கதம்பத்தை..?

Kiruthigan said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
என்னையும் அங்கீகரித்தமைக்கு மிக்க நன்றி சார்...
தங்கள் எழுத்துகளில் பொதிந்துள்ள நகைச்சுவைகளை ரசிப்பதுண்டு நீங்கள் தந்த அங்கீகாரத்துக்கு மீண்டும் நன்றிகள்.

test said...

//நிம்மதியாக முகம்துடைத்தவாறே நிமிர்ந்து பார்க்க மதிசுதா சிரித்தபடி நின்றிருந்தார் அண்ணே பாண் சுற்றிவந்த பழைய பேப்பரும் எனது பையில் பத்திரமாக இருக்...//
ha ha ha super! :-)

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails