Monday, August 23, 2010

வீழ்வது யாராயினும்...02


சொன்னால் நம்பமாட்டீர்கள்.. 
ஏனெனில் அவளை வர்ணிக்க அந்த வார்த்தை மட்டும் போதுமானதாயில்லை..
கு கூச்சசுபாவம் மிக்கவன் என்பதால் அழகைபற்றி இங்கு வர்ணிக்கவில்லை பார்க்கும் யாரையுமே மண்டியிடவைக்கும் குடும்ப பாங்கான ஏஞ்சல்....

நெஞ்சுக்குள் யாரோ பாறாங்கற்களை போட்டது போன்ற உணர்வு ரகுக்கு..
இது வரை யார் முன்னிலையிலும் அழுதிராத ரகுவின் கண்களில் இப்போது நீர்த்துளிகள்.. இது எந்த வகையான உணர்ச்சியின் வெளிப்பாடு என சரியாக சொல்லமுடியவில்லை..
மேடையில் நின்றுகொண்டிருந்தவன் அருகில் ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறைக்குள் நுளைந்து கண்களை துடைத்துக்கொண்டான்.. வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஆனந்தம்..


அவளருகில் சென்று என்ன பேசவேண்டும் என தன்னை தயார் படுத்திக்கொண்டு அவளருகில் தனக்கான ஆசனத்தில் சென்றமர்ந்தான்...


அடிவயிற்றில் ஏதோ அமிலம் சுரப்பது போல இருந்தது..
கால்கள் ஏன் தானாக உதறுகின்றன என எண்ணியவாறு அவளை கடைக்கண்ணால் பார்த்தபோது அவளும் ஏதோ பேசுவதறகு தன் மூஞ்சியையே பார்ப்பது போல இருந்தது... பிரமையோ தெரியவில்லை..
மற்ற மாணவர்கள் இப்போது ஓரளவுக்கு மாணவிகளுடன் நட்பாகி பேச ஆரம்பித்திருந்தனர்.

நேரம் ஓடிக்கொண்டிருக்கின்றது..


கூல்டிரிங்ஸ் கொண்டு வந்த மாணவன் ரகுவுக்கு பரிமாறினான்.. 


அடுத்து மித்ரா தன் கையால் எடுக்கும் போது தவறி ரகுவின் காலில் கொட்டிவிட்டது.. அவள் கையும் நடுங்கியிருப்பது புரிந்தது..
கீழே விழுந்த டம்ளரை எடுத்து வைத்தபோது அவள் ஏதோ சொன்னாள்..
ஆனால் காத்து தான் வந்தது..
மறுபடியும் குரலை சரிசெய்தவாறு

“SORRY..." சொன்னவாறே தனது கைக்குட்டையால் ரகுவின் தொடைமீது கொட்டிய குளிர்பானத்தை சுத்தம் செய்தாள்...

“ It's ok. Whatever it is, it's ok. There isn't a problem until you think there's a problem...'

தமிழ் மறந்து போயிற்றா எனக்கு என தன்னையே வியந்தான் ரகு..

முதன் முறையான இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்..

நீங்க ரகு தானே..
நான் தான் உங்ககிட்ட கட்டுரை கேட்டிருந்தேன் ரொம்ப நல்லாருந்தது Thank You.

நீங்க தானே மித்ரா?


பரஸ்பர உரையாடல்களுக்கு பின்.. ஒருவரை ஒருவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று..


“உங்க பெஸ்ட் ஃபரண்ட யாரு..?“


வினோத்தை காட்டினான்.
உங்க பெஸ்ட் ஃப்ரண்ட்?


நீங்க தான்..


மீண்டும் உடல் சிலிர்த்தது ரகுவுக்கு..


விழா இனிதே முடிந்தது அன்று தன் நண்பர்களுக்கும் மித்ராவை அறிமுகம் செய்து வைத்தான் .


அன்று ஆரம்பித்த உறவு பின் வந்த நாட்களில் கிரிக்கட் போட்டி பாடசாலை விழாக்கள் கோயில்கள் கல்வி நிலையங்கள் என சந்திப்புகள் தொடர்ந்தது..
இருவருக்கும் நல்ல புரிந்துணர்வும் நெருக்கமும் ஏற்பட்டிருந்தது..


அவளின் அன்பிலும் போடா வாடா என அவள் காட்டும் அக்கறையிலும் கிறங்கிப்போயிருந்தான் ரகு.. இது வரை எந்த பெண்ணும் இப்படி பேசியதில்லை... உலகமே இப்போது வேறு மாதழரி தெரிந்தது..


நல்லதொரு நாளில் தன் வீடடுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தான் ரகு..
வீட்டில் அனைவரையும் அறிமுகம் செய்தான்...


மித்ரா உன்ன பத்தி ரகு நிறைய சொல்லியிருக்கான்..
உன்னோட பழக தொடங்கின பிறகு தான் நல்ல உடுப்பு போடுறான்.. ரொம்ப நேரம் தலையிழுக்கிறான்... 
ரெம்ப மாறீட்டான்.. உன்னால அவன் நல்ல மனுசனாயீட்டான்..


“அப்டியா ஆன்டி...“ அழகான பல்வரிசையால் சிரித்தாள்..


கட்டிக்க போறவ முன்னாடி நக்கலடிக்காதீங்கம்மா...  அம்மாவை கட்டி பிடித்தபடி ரகு சிணுங்கினான்..
அவர்களின் குடும்பமும் கள்ளங்கபடமில்லாமல் பழகுமியல்பும் மித்ராக்கு பிடித்திருந்தாலும்..
என்ன நினைத்தாளோ 
“எனக்கு டைம் ஆயிட்டுது.. நான் போய்ட்டு வாறேன்...”
குடித்து கொண்டிருந்த டீயையும் வைத்துவிட்டு வேகமாக சென்று விட்டாள்.


பின்னர் மித்ராவை ரகு சந்தித்தபோது குரலில் கடுமை காட்டினாள் மித்ரா..


நகைச்சுவைக்காகவே அவ்வாறு கூறியதாக சமாளித்தான் ரகு..ஆனால் உள்ளே பட்சி நீதான் என் பத்தினி என்றது..


பாட புத்தகத்தை விரித்தால் அங்கும் மித்ராவே தெரிவாள்...


உயர் தர பரீட்சையும் கடந்தது.. 
பள்ளி வாழ்க்கை முடிந்திருந்தது ரகு இளைஞன் ஆகிக்கொண்டிருக்கிறான்... அடுத்து வந்த நாட்களில் வகுப்புகள் இல்லாத படியாலும் உள்நாட்டு யுத்தத்தின் மாற்றத்தாலும் சந்திப்புகள் அரிதாகின...
ஆனாலும் சளைத்தவனா ரகு..
காண்போர் கொக்குவில் சந்தியை வாடகைக்கு எடுத்து விட்டானோ! என வியக்குமளவுக்கு அவள் வீட்டு தெருவையே சுற்றி சுற்றி வந்தான்.. 


ஏறக்குறைய நண்பர்கள் வட்டம் மாறிவிட்டிருந்தது... வினோத்துடனான நட்பு மட்டும் தொடர்கிறது...
“மித்ராக்கு நான் லவ் ப்ரப்போஸ் பண்ண ஒரு ஐடியா சொல்லுடா..“
அம்பாணி பிஸ்னஸ்க்கு ஐடியா சொல்பவன் போல யோசித்தவன் முகம் பிரகாசமடைந்தது..
ஆஹா ஏதோ புதுமையான ஐடியா கிடைச்சாச்சு போலிருக்கு...
வினோத் ஐடியா சொன்னான் 


“லவ் லெட்டர் குடுடா மச்சான்..“  (ங்கொய்யால இத சொல்ல தான் இந்த ஃபில்டப்பா..)


பெறுபேறுகள் வெளிவர இன்னும் சில நாட்களே உள்ளநிலையில்.. ரகுவுக்கு காதல் பெறுபேற்றை அறிவதற்காக தன் உணர்ச்சிகளையெல்லாம் கொட்டி போதாக்குறைக்கு கவிஞர்களிடமும் திருடி (கட்டுரை எழுதவே என்னெல்லாம் செய்த ஆள் அவன்..) கடிதத்தை முடித்தாயிற்து...


இன்று பெறுபேறுகள் வெளியாயிவிட்டது...


மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் மக்கள்...சுர்ர்ர் என்ற வெயில்... ஷெல் சத்தங்கள் என ரம்பியமான சூழலில் எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தாள் மித்ரா.. கோவிலிலிருந்து வருகிறாள்..

 முகம் பிரகாசமாயிருந்தது  கடவுளுக்கு நன்றி தெரிவித்து விட்டு வருகிறாள்..


வினோத்தை கண்டதும் கோயிலருகிலேயே சைக்கிளை நிறுத்தினாள்.


“ஹாய்... வினோத் றிசல்ட் என்ன மாதிரி..?“
சொன்னான்... (இவனுக்கு பெண்களிட்ம பேசும் போது மட்டும் திக்குவாய் திக்கு திசை தெரியாமல் ஓடி ஒளித்துவிடும் ...) 
“ரகுவுக்கு..?“
சொன்னான்..“
 தனதையும் சொன்ன மித்ரா 
“கையில் என்ன லெட்டர் மாதிரி..“
“லவ் லெட்டர்..“
“ஓ.. சொல்லவே இல்ல யாரவள் வினோத்?..“
“அது.. வந்து.. உங்களுக்கு தான் ரகு உங்களுக்கு லவ் ப்ரபோஸ் செய்யறான்..“


                                                                              (எதிர்பார்ப்புகள் தொடரும்...)

இங்க Comment பண்ணுங்கப்பா...!

1 comments:

ம.தி.சுதா said...

அருமை கூகூகூல் அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்...

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails