எனது ஊரில் நான் கிருத்திகன். இந்த நாட்டில் யாழ்ப்பாணத்தான் இந்த கண்டத்தில் இலங்கையன் அமெரிக்காவின் பார்வையில் ஆசியாக்காரன்..
நான் பேசும் மொழியைப் பேசுவேர் உலகில் எட்டு கோடி போ்.
உலக நாடுகளுக்கு சீனா காகிதம் கொடுத்தது..
ஸ்ஹொட்லாந்து சைக்கிள் கொடுத்தது..
ஹொலான்ட் கடிகாரம் கொடுத்தது..
அமெரிக்கா தொலைபேசி கொடுத்தது..
இங்கிலாந்து தொலைக்காட்சி கொடுத்தது..
பிரான்ஸ் தையல் இயந்திரம் பொடுத்தது.
இதல்லதத்தயும் பாவிச்சிட்டிருக்கிற நாம என்ன கொடுத்தேபாம்?
அரிய பல இலக்கியங்களையும் சமய பண்பாடுகளையும் கொடுத்துள்ளோமே!
நாக்கு வழிக்கும் கருவியை கூட நாம் கொடுக்கவில்லை...
இந்த உலகில் கொடுப்பவனுக்கே இனி வாழும் அதிகாரம் உண்டு என்றால் நமக்கு?
ஒவ்வொரு இனமும் தமக்கென சில அடையாளங்கள் எச்சங்களை வைத்திருப்பது போல தமிழர்கள் தம்மை நினைவு வைத்திருக்க உலகுக்கு விட்டு வைத்திருக்கும் அடையாளங்கள் என்ன?
இப்ப நாங்க இருக்கிற உலகம் தகவல் தொழிநுட்ப உலகமாம்.
மனித மூளை கண்டுபிடித்த தொலைபேசியையே முழுமையாக பயன்படுத்த தடுமாறும் நம் அயலில் வீடியோ பேச்சு இணைய அரட்டை போன்றவை பரவ எத்தனை காலம் தேவை?
இவை பற்றி தெரிந்தவர்களும் ஆக்கபூர்வமான தகவல்களை தேடுவதை விட அரட்டைகளிலேயே மூள்கிகிடப்பது ஆரோக்கியமானதா?
தேடுபொறிகளில் ஆங்கிலத்தில் கிடைக்கும் தகவல்களின் அளவோடு தமிழ் தகவல்களை ஒப்பிடவே முடியாமல் இருந்தாலும் தமிழ் வலை பதிவர்களின் கைவண்ணங்கள் ஓரளவு ஆறுதலளிக்கின்றன..
யாழ்தேவி போன்ற திரட்டிகளில் இணைவதால் அவை பலரை சென்றடைகின்றன..
யாழ்தேவியின் அங்கீகாரத்தால் தினக்குரலில் வெளியாகும் பதிவுகள் இணைய பாவனை அற்றோரிடையேயும் சென்றுசேர்கின்றன..
என்னையும் நட்சத்திரமாக அங்கீகரித்த யாழ்தேவிக்கு மீண்டும் நன்றிகள்.
4 comments:
தண்ட தண்ட கூல்...கூல்.... கலக்கிறிங்க கூல்... முதலில் யாழ்தேவி நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். இன்னு மொன்று என் குரு சுஜாதா ஒரு தேர்தல் கருவி கண்டுபிடித்தாரே.... அதையும் சேர்த்துக் கோங்கோ...
வாழ்த்துக்கள் கிருத்திகா!
அதுசரி
கூடவரும் இளைஞர்கள்,
சீன் போடற பார்ட்டிங்க - வயசானவங்க.. வேற அச்சா ப்ளாக்குக்கு போய்டுங்க... உள்ள வந்த பின்னாடி அழப்புடாது
இது ஒண்ணும் எனக்கு சரியா புரியலயடா!
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் கூல் பையா :)
Post a Comment