குறும்படம் எடுப்பது பற்றி அஷோக்பரன் ஆரம்பித்த ஐடியா..
இதற்கும் இப்பதிவுக்கும் காமடிக்காக மட்டுமே சம்பந்தப்படுத்தபடுகிறது..
கீழே வரப்போகும் சில இலங்கைப் பதிவர்கள் அனைவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் நெருங்கிய தோழமையும் உண்டு...
மத்தப்படி முழுக்க கற்பனையே...
சிரிங்க சீரியஸ்ஸா எடுத்துக்காதீங்க.
பதிவர்களின் அமோக ஆதரவோடு மெருகேறி உருவேறி கதைக்கு கருவேறுவதற்காக பதிவர் ஜனா தலைமையில் கூட்டம் நல்லூர் மரத்தடி மணலில்..
புதிதாக யாரிடமோ இருந்து லவட்டி வந்த ஆளில் பெரிய கமராவுடன் கூல்போய் கிருத்திகன்..
கதைக்கருவுக்காக தீவிர சிந்தனையில் ம.தி சுதா...
செலவுகளை தன் தலையில் கட்டுவதற்காக “பிரபல பதிவர் ஜனா தலைமையில் கூட்டம்“ என்று அறிவித்துவிட்டார்களே என்ற கடுப்பில் ஜனா அண்ணா தன் தொலைபேசியில் இருக்கும் நண்பர் நம்பர்களுக்கு ஏதோ SMSசெய்தபடியிருக்கிறார்...
பாலவாசன் வழக்கம் போல இன்றும் “சிலநேரம் வருவார்..“
தன் டிஜிட்டல் கமராவில் வேப்பமரத்தை ஆங்கிள் பார்த்தபடி சுபாங்கன் அண்ணா..
கிருத்திகன்:
சுபாங்கன் அண்ணா குறும்படம் எடுப்பது இதுதான் உங்களுக்கு ஃபெஸ்ட் எக்ஸ்பீரியன்சோ? ஆ... கேட்டா ஓம் எண்ண வேணும் இல்லாட்டி இல்லை எண்ணவேணும் இப்பிடி ஆருக்கும் தெரியாம என்ர கால கிள்ளினா எனக்கென்னண்டு விளங்கும்...
மதிசுதா:
விடுங்க கூகூல்.. இந்த படம் சமுதாயத்தயே புரட்டி போட்டுரணும்..
ஏதாச்சும் மசேஜ் சொல்லணும் நாங்கள் கண்டுபிடிச்சிருக்கிறம் எவ்ளவு நேரம் ஏசியில் வேலை செய்தாலும் நம்ப தோல் உலராம சுருங்காம இருக்கிறதுக்கு ஒரு கண்டுபிடிப்பு அதாவது கருவாட்ட தோல் சீவி 4 துண்டா வெட்டி எயார்கொண்டிஷனுக்க போட்டுரணும்... இத பத்தி ஒரு பதிவு நாளக்...(ஜனான்ணா ஆரம்பிக்கிறார்..)
ஜனா:
ஆங்..சிறுவர் உணர்வுகள மையப்படுத்தி எடுக்கலாம்.
கிர்கிஸ்தான் இலக்கிய எழுத்தாளர் றம்புட்டான் தன்ர எழுத்துகள்ள சொல்லவர்றதும் இதுதான்..
டைட்டில் முடிஞ்சதும் கூல்பாய் உங்க கமிரா முதல்ல ஒரு பூவில இருந்து Zoom Out ஆகுது அந்த பூவ ஒரு சிறுமி கைலவச்சிட்டு சந்தோஷமா சிரிச்சிட்டே ஆசையோட மோந்து பாக்குறா..
அவ வயசு 7 1/2...
பெயர் துளசிகா.. இல்லைனா.. மல்லிகா ஆங்.. அரலிக்கா அப்டீன்னு வச்சிக்கலாம்..
ஏன் மோந்து பாக்குறான்னா நானும் கேபிள்சங்கரும் சேர்ந்து இயக்கின ஒரு குறும்பட லஞ்ச் ப்ரேக்ல பெஞ்ல உக்காந்து பஞ்ச் டயலாக் பத்தி பேசிட்டிருக்கோம்..
அப்ப அங்க வந்த ராமநாராயணன் சொன்னது இது.. பூவை காட்டி ஹீரோயின் மனநிலையை சொல்ல முடியும்னு.. அடுத்த காட்சி என்னன்னா..(விழுந்து மறித்த மதிசுதா..)
மதிசுதா:
ஆமான்னே ஆரம்பமே அருமை சமூக பிரச்சனையை உள்ள கொண்டாரணும் எப்டீன்னா... அடுத்த காட்சி கூல்பாய் உங்க கமிரால அந்த சிறுமியின் அழுது சிவந்த கண்களையும் கட்.. ரத்தம்கசிந்த உதடுகள் கட்.. கலைந்த தலைமுடி கட்..நககீரல் கொண்ட முதுகு இதேநேரம் மீசிக் எப்டீன்னா (வாயால் சோகமாக செய்து காண்பிக்கிறார்..) காட்டறோம் அவ கைல இருந்த பூ இப்ப ஏதோ சப்பாத்து காலால் நசிபடுகிறது... அந்த சப்பாத்துக்கு மேலே உயரும் கமரா அது ராணுவ பூட்ஸ் என உணர்த்துகிறது..
அவளுடைய டயலாக் கேளுங்க ”இப்பிடி பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா அன்னதானம் சாப்பிட போயிருக்கவே மாட்டேனே..“ (மறிக்கிறார் சுபாங்கன்..)
சுபாங்கன்:
இந்த சீன் ஓகே.. ஆனா பொண்ணுக்கு பதிலா பையன போட்டுரலாம்..
(சடுதியாக ஏதோ நினைவுக்கு வந்தவனாக..)கிருத்திகன்:
பாஸ் லைப்ரரிக்குள்ள ஷூட்டிங் நடத்த பர்மிஷன் தருவாங்களா...
சுபாங்கன்:
கூல் பையா ஷ்... பப்ளிக் பப்ளிக்....
கிருத்திகன்:
பப்ளிக் லைப்ரரி இல்லை பாஸ்.. கொக்குவில் லைப்ரரியெண்டெல்லோ கேள்விப்பட்....ஆ.. மறுபடியும் அதே இடத்துலயே நுள்றீங்(தொலைபேசி அழக்கிறது.. டிஸ்பிளேயில் பாலவாசகன்..: )
சுபாங்கன்:
கூல் பையா ஷ்... பப்ளிக் பப்ளிக்....
கிருத்திகன்:
பப்ளிக் லைப்ரரி இல்லை பாஸ்.. கொக்குவில் லைப்ரரியெண்டெல்லோ கேள்விப்பட்....ஆ.. மறுபடியும் அதே இடத்துலயே நுள்றீங்(தொலைபேசி அழக்கிறது.. டிஸ்பிளேயில் பாலவாசகன்..: )
வாசகன்:
வணக்கம் கூல்பாய் நான் இன்டைக்கு தான் வாழ்க்கைல முதன் முதல்ல கொம்பு பணிஸ் சாப்பிட போறன் பேக்கறீக்குள்ள போறதுக்கு கியூவில நிக்கிறம் இண்டைக்கெண்டு நான் ICயும் கொண்டுவரேல்ல.. என்ன செய்ய?
கூல்:
வணக்கம்னே இப்ப இங்க குறும்பட கதை டிஸ்கஷன் போய்ட்டிருக்கு..
வாசகன்:
ஓ.. அதுக்கு நான் ஒரு கவிதை தாறன் பெயர் “சின்னவன்“ படம் தொடங்க முதல் கவிதய போட்டு கீழ அன்புடன் பாலவாசகன் எண்டு போடுவம்..
அதாவது அவன் பட்டிக்காட்டில இருந்து பட்டனத்துக்கு போய்...
ஜனா:
அய்.. மருதமூரான் கோல் எடுக்கிறார்..
வணக்கமய்யா.. ஒரு மாரி நாங்களும் கதை ஓகே பண்ணிட்டம் உங்கள பத்தி தான் கதைச்சுகொண்டிருக்க நீங்களும் கோல் பண்ணுறியள்..அதாவது நகரத்து ஆடம்பரங்கள பாத்து பிரமிச்...(மறிக்கிறார் மருதம்ஸ்..)
மருதமூரான்:
ஆங்.. இங்க காதல், கடவுள், காமம் இந்த மூன்றும் உணர்வுகள், நம்பிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் அணுகப்படுபவை. பொதுசேவைப் பேரூந்தொன்றில் வீடு செல்வதற்காக ஏறுகிறான் சிறுவன் கடைசி இருக்கையில் நடுத்தர வயதுள்ள ஆணும்- பெண்ணும் மிகவும் நெருக்கமாக உட்காந்திருந்தார்கள் ஒருவரை ஒருவர் முகர்ந்து கொண்டும், சொறிந்து கொண்டும் மர்ம உறுப்... (இடைமறித்த ஜனா எங்கே இந்த கலாசார காவலர்கள் பதிவ அடுத்து படமாக்கணும் அதானே...!!)
மருதமூரான்:
சரி உங்கட விருப்பம் ஜனா.. ஆசப்படுறியள் அப்பிடியே செய்யுங்கோ..
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியோட படத்த முடிக்கலாம்..
இதற்குள் அதே போனில் புல்லட் பவன்
புல்லட்:
வணக்கம் ஃப்ரண்ஸ்... கொன்ஃபிடன்ஸ் கோல் போட்டு கேட்டுகொண்டு தானிருக்கிறன்..நகரத்த பாத்து பையன் பிரமிக்கிற இடம் கதிரேசன் கோயில்.. அங்க அழகான பெண்கள பையன் பாத்திட்டிருக்கும் போது திடீர்னு ஏதோ முதுகுல முட்டற ஃபீலிங்..
திரும்பி பாத்தவனுக்கு பிரமிப்பு கூல்பாய் இந்த காட்சிய பிரம்மாண்டமா காட்டறதுக்கு காமிரா ஆங்கிள் வந்து...நேர வந்து சொல்றேன்..
அங்க ஒரு குண்டு பொண்ணு ஜீன்ஸ் அன்ட் ரைட் லோநெக் ரீசேர்ட்டோட நகர்ந்து போய்ட்டிருக்கு...
இதுக்கு யார நடிக்க போடலாம்னு குளம்பாதீங்க கோபி நல்ல பொடியன் செய்வான்... ஆங்.. இன்னொண்ணும் தேவை ஜனாண்ணா.. வோட்டர் புறூவ் மாதிரி இது எறும்பு புறூவ் அதாவது எறும்பு போகமுடியாததா இருக்கணும்...
ஜீன்ஸ் போட்டு தலைல விக் வச்சு ரீசேட் போட்டு குண்டா காட்டுறதுக்கு தலகணி கட்டி... எங்கட குறும்படத்துக்கு செய்த மாதிரியே செற்ரப்பண்ணுவம்..
அப்பிடியே கோபி முட்டுக்கால்ல இருந்து குனிஞ்சு கும்பிடணும்...(கொன்பிடன்ஸ் callலிருந்து கோபி..)
கன்கொன்:
(மெதுவாக..)“ஆகா ஆரம்பிச்சுட்டாரே ஆப்பை...“ இந்த சீன் லோஷனண்ணக்கு பிடிக்காது நான் வேற சொல்றேன்.. ஹஹ்.. ஹாஹ் ஹாஹ்.. அஹ்... ஹாஹ்....(10நிமிடமாக சிரித்துகொண்டிருக்கிறார் அந்த கப்பில் ஏதோ யோசித்து விட்டார்..)
கேளுங்கண்ணா கதாநாயகன் கொளும்பில கிரிக்கட் கிரவுண்ட், பிட்ச், லைட்டிங்ஸ்... ஸரேடியம்... கொமன்றி எண்டு எல்லாத்தயும் பாத்து பிரமிச்சு போற மாதிரி சீன்...(கொன்பிடன்ஸ் Callலிருந்து லோஷன் அண்ணா..)
லோஷன்:
ஆம் வணக்கம் பதிவுலக தோழர்களே இன்றும் என்றும் போல் தொலைபேசியூடாக உங்களனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி புலர்ந்திருக்கும் மாலைப்பொழுதில் இன்னுமொரு காத்திரமான கருத்தை உங்கள் முன்வைக்கலாமென எண்ணுகிறேன்..
தலைப்பு வைக்கும் போது “தமன்னாவின் கப்பரகொய்யா அரலிக்கா சாப்பிடுமா?“ அப்டீன்னு வையுங்க அப்ப நெறய்ய பேரு பாக்க வருவாங்க ஹீரோயின் பெயர்கூட ஒத்து போகுது தலைப்புக்கு சம்பந்தமில்லைனு யாரும் சொல்லமுடியாது... ஜனா உங்க கருத்(அலைபேசியில் பிரபல பதிவர் வரோ..)
வரோதயன்:
என்னையும் அழைத்தமைக்கு அனைவருக்கும் என் முதற்கண் நன்றிகளை தெரிவிக்கிறேன் கூல்போய் கம்பஸடியால மோட்டசைக்கிள்ள போனபோது றோட்டில நிண்ட என்ன கவனிக்காததற்கு என் கடும் கண்டனங்களை அறிவிக்கிறேன்.
சரித்திர வீரன் சங்கிலியன இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாத்தி எடுப்போம் ராமாயணத்த மணிரத்னம் எடுத்த மாதிரி..
முதல் ஷாட் சங்கிலியன இன்ரடக்ஷன் வீரமாகாளியம்மன் கோயிலடில ஒரு பைட்டுல ஆரம்பிக்குது
அது முடிய இன்ரோ சாங்
அடுத்து காமடி கலந்த லவ்..
அடுத்து 4 வெள்ளைக்கார வில்லன்கள்..
பஞ்ச் டயலாக்
லவ்
பைட்
டூயட் சாங்
பைட்
குத்துபாட்டு
க்ளைமாக்ஸ்பைட்...
ஹப்பீஸ் என்டிங்.
சூப்பர் கதைல்ல ஜனாண்ணா இப்டி பண்ணினா வசூல் பிச்சிக்கும்...
வீட்டிலிருந்து அவசரமாக கோல் வருவதாக ஜனாண்ணா விடை பெற கூட்டம் கலைகிறது...
19 comments:
ஏய்யா? ஏன்? ஏன்?
//நான் இன்டைக்கு தான் வாழ்க்கைல முதன் முதல்ல கொம்பு பணிஸ் சாப்பிட போறன் பேக்கறீக்குள்ள போறதுக்கு கியூவில நிக்கிறம்//
இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை டாக்டர்
எப்படியெல்லாம் காமடி பண்ணுறீங்க... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
கலக்கல் கூல்போய்!!!
யாரையும் பாராபட்சம் பார்க்காமல் போட்டு தாக்கி இருக்கீங்க!!
லோஷன் அண்ணாவும் தமனாவும்!!! வரோ அண்ணாவும் சங்கிலியன் நவீனமும் சூப்பர்!!
கூகூகூல் உங்களை எப்படி மற்றவர்கள் புரிந்திருக்கிறார்கள் என்ற தெரியவில்லை ஆனால் நீங்கள் மற்றவர் களை நன்க பரிந்த இருக்கிறீர்கள் உதாரணத்திற்கு மதலாவத லோசண்ணாவின் உரை நடை ஒவ்வொர நாளும் கெட்டப் பாடமான வரிகள் அனால் மாலையாக்கியத கொஞ்சம் வித்தியாசம்... மற்றது அதுதான்யா அன்புள்ள சந்தியா பாகம் 2 எழுதினாரே அவரு தான்.. ஃஃஃ...வணக்கம் பதிவுலக தோழர்களே இன்றும் என்றும் போல் தொலைபேசியூடாக உங்களனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி புலர்ந்திருக்கும் மாலைப்பொழுதில் இன்னுமொரு காத்திரமான கருத்தை உங்கள் முன்வைக்கலாமென எண்ணுகிறேன்...ஃஃஃ ///...ஆமான்னே ஆரம்பமே அருமை சமூக பிரச்சனையை உள்ள கொண்டாரணும் எப்டீன்னா... அடுத்த காட்சி கூல்பாய் உங்க கமிரால அந்த சிறுமியின் அழுது சிவந்த கண்களையும் கட்.. ரத்தம்கசிந்த உதடுகள் கட்.. கலைந்த தலைமுடி கட்..நககீரல் கொண்ட முதுகு இதேநேரம் மீசிக் எப்டீன்னா (வாயால் சோகமாக செய்து காண்பிக்கிறார்..) காட்டறோம் அவ கைல இருந்த பூ இப்ப ஏதோ சப்பாத்து காலால் நசிபடுகிறது... அந்த சப்பாத்துக்கு மேலே உயரும் கமரா அது ராணுவ பூட்ஸ் என உணர்த்துகிறது..///
@Subankan
//ஏய்யா? ஏன்? ஏன்?//
லைப்ரரிக்குள்ள ஷூட்டிங் நடத்த பர்மிஷன் தருவாங்களா????
//இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை டாக்டர்//
நம்பிடுங்கோ டாக்டர்..
@மதுரை சரவணன்
//எப்படியெல்லாம் காமடி பண்ணுறீங்க... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார்..
உங்க ப்ளாக்ல வந்து கமன்ட் அடிக்க முடியாம இருக்கு.. கவனிங்க..
@Anuthinan S நன்றி பாஸ்..
பாரபட்சம் பாக்காம அடுத்த வாட்டி உங்களயும் 'கவனிக்கறேன்..'
எப்பூடி..!!!
குளிர் தம்பி….!
என்னுடைய உலக மகா கருத்துக்களை சர்வதேச ரீதியில் விருதுகள் பெறும் குறும்படமாக எடுக்க வாழ்த்துக்கள்:)
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக நகைச்சுவைப் பதிவுகள். அதுவும், பதிவர்களை காலி பண்ணி வருவது சந்தோசம். அதுவும், பாலவாசனின் ‘கொம்புபணிஸ்’ விவகாரம் சூப்பரோ சூப்பர்.
எங்கிருந்து இப்படியெல்லாம் யோசிக்கச் சொல்லுது. தொடர்ந்தும் பதிவர்களை காலி பண்ணவும். நான் சிரிக்க தயார்.
ஆஹா...சிரிப்பை அடக்க முடியலை..கொம்பு பணிசும், கபரகொய்யாவும் துரத்துது.
ஹி ஹி.... :D
எல்லாரும் மருதமூரான் அண்ணாவை போட்டுத்தாக்குவது நல்லா இருக்கு....
நிறையப் பதிவர்களை நன்றாகப் பின்தொடர்ந்திருக்கிறீர்கள்...
கலக்குங்கோ....
(உந்த word verification ஐ தூக்கப்படாதோ? )
தம்பி, சூப்பரோ சூப்பர்....
வர வர இலங்கை பதிவுலகம் சூடு பிடிக்குது, தொடர் கதை... ஜனா அண்ணாவின் தொடர்கதை என்று ஆரம்பித்து கூல் இப்பிடி கலக்குறார்.
அதுவும் ஜனா அண்ணா கதை சூப்பர் (ரம்புட்டான் தான்)
சங்கிலியன் கதையை பக்கா விஜய் படம் போல ரெடி பண்ணுறீங்கள் போல, கல்லா கட்டுமா? அல்லது ஊத்திக்குமா?
கதையோட கதையா இன்னொண்டையும் சொல்லுறன், கமராவும் கையுமா அலையுறது கூல் தான், ஸோ தம்பி ஒரு குறும்படம் எடுக்க ரெடி ஆகு... (ஜனா அண்ணனை ஹீரோ ஆ போட்டா இன்னும் நல்லம்)
//”இப்பிடி பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா அன்னதானம் சாப்பிட போயிருக்கவே மாட்டேனே//
ஹாஹா.. டேர்னிங் பொயின்ட் சூப்பர்..:D
//படம் தொடங்க முதல் கவிதய போட்டு கீழ அன்புடன் பாலவாசகன்//
ஆங்.. "இந்தக் கவிதையை எழுதியவர் DR.பாலவாசகன் MBBS என்று போடும்படி கேட்டுக்கொண்டார்" எண்டு போடலாம்..:P
//கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியோட படத்த முடிக்கலாம்//
ஆங் மது அண்ணா கட்டி வையுங்கப்பா பிறகு படம் முடியாது..:P
//இதுக்கு யார நடிக்க போடலாம்னு குளம்பாதீங்க கோபி நல்ல பொடியன் செய்வான்//
கறுப்பு நமீதா எண்டு புனைப்பெயரையும் வையுங்கப்பா..:P
//அப்பிடியே கோபி முட்டுக்கால்ல இருந்து குனிஞ்சு கும்பிடணும்//
ஆழ்ந்த அனுதாபங்கள் கன்கொன்..:P
அவ்வ்வ்வ்.. கூல்பாய் கலக்கல் தலிவா... :D
எனது கருத்து (குறும்படம் பற்றி) - நடிக்கிவங்க எல்லாருக்கும் டயலொக்கே இல்ல.. எல்லாத்தையும் டயலொக் பொக்ஸ் போட்டு உள்ளுக்கு டைப் பண்ணி கிட்டத்தட்ட போட்டோ கமண்ட் மாதிரி செய்யலாம் பக்கிரவுண்ட்ல சோகக்காட்சிக்கு சோக மியூசிக், சந்தோஷக் காட்சிக்கு சந்தோச மியூசிக் போட்டுக் கவர் பண்ணிடலாம்..புது முயற்சியாக இருக்கும்...எப்புடி..:P:P:P
வர்ட்டா..:)
@மருதமூரான்.
//என்னுடைய உலக மகா கருத்துக்களை சர்வதேச ரீதியில் விருதுகள் பெறும் குறும்படமாக எடுக்க வாழ்த்துக்கள்:)
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக நகைச்சுவைப் பதிவுகள். அதுவும், பதிவர்களை காலி பண்ணி வருவது சந்தோசம். அதுவும், பாலவாசனின் ‘கொம்புபணிஸ்’ விவகாரம் சூப்பரோ சூப்பர்.
எங்கிருந்து இப்படியெல்லாம் யோசிக்கச் சொல்லுது. தொடர்ந்தும் பதிவர்களை காலி பண்ணவும். நான் சிரிக்க தயார்.//
நன்றியண்ணா...
தொடர்ந்தும் காலி பண்ணினா பாவமில்லையா நம்மாளுங்க...
‘கொம்புபணிஸ்’ விவகாரம் உளவுத்தகவல்கள் பொய்யென்பதை உறுதிப்படுத்துதா..!!! : )
@Jana
//ஹா...சிரிப்பை அடக்க முடியலை..கொம்பு பணிசும், கபரகொய்யாவும் துரத்துது.//
நன்றி கதைநாயகனே...
கொக்குவில் லைரரில பையனுக்கு என்னாச்சுன்னு போன் கால்ஸ் வருது நான் உங்ககிட்ட விளக்கம் கேக்க சொல்லியிருக்கன்...
@கன்கொன் || Kangon
//ஹி ஹி.... :D
எல்லாரும் மருதமூரான் அண்ணாவை போட்டுத்தாக்குவது நல்லா இருக்கு....//
அவ்வளவு பாசக்கார பலலுவ சார் நாங்க..
//நிறையப் பதிவர்களை நன்றாகப் பின்தொடர்ந்திருக்கிறீர்கள்...//பதிவுலயா பர்சனலாவா?
கலக்குங்கோ....
//(உந்த word verification ஐ தூக்கப்படாதோ? )//
இதோ..தூக்கியாச்சு நண்பா சுட்டி காட்டியமைக்கு நன்றி.
@ம.தி.சுதா
//கூகூகூல் உங்களை எப்படி மற்றவர்கள் புரிந்திருக்கிறார்கள் என்ற தெரியவில்லை ஆனால் நீங்கள் மற்றவர் களை நன்க பரிந்த இருக்கிறீர்கள்//
நீங்க நல்லவரா கெட்டவரான்னு மட்டும் புரியலை ம.தி சுதா..
கருத்துக்கும் தங்கள் தரமான ரசனைக்கும் நன்றி.
: )
@KANA VARO
ண்ணா.. நன்றிங்கண்ணா..!!
//வர வர இலங்கை பதிவுலகம் சூடு பிடிக்குது//
தீப்பிடிக்காட்டி சந்தோசம்...
//தொடர்கதை என்று ஆரம்பித்து கூல் இப்பிடி கலக்குறார்.//
ரொம்ப வதைக்கிறனே...!!!?
//அதுவும் ஜனா அண்ணா கதை சூப்பர் (ரம்புட்டான் தான்)//
அப்ப நீங்களும் அடிக்கடி இலக்கிய சுழல்ல எம்பிட்டிருக்கிறயள்...
//சங்கிலியன் கதையை பக்கா விஜய் படம் போல ரெடி பண்ணுறீங்கள் போல, கல்லா கட்டுமா? அல்லது ஊத்திக்குமா?//
நீங்க கை வச்சா கல்லா கட்டும்...
//கதையோட கதையா இன்னொண்டையும் சொல்லுறன், கமராவும் கையுமா அலையுறது கூல் தான், ஸோ தம்பி ஒரு குறும்படம் எடுக்க ரெடி ஆகு... (ஜனா அண்ணனை ஹீரோ ஆ போட்டா இன்னும் நல்லம்)//
வரோண்ணா.. ஜனா அண்ணனை ஹீரோ ஆ போட்டா அது குறும்படம் இல்லை இலக்கிய காவியம்..
@Bavan
நன்றி போட்டோ கெமன்ட் பவன்..
புது முயற்சி அருமை இதுவரை இப்படி வந்திருக்குமா தெர்ல..
உங்க கொமன்ட் ஒரு குட்டி தமிழ்ப்படம் மாதிரி இருந்திச்சு... குறும்பட கதை டிஸ்கஷன் பகுதி-2 ஐ நீங்க தொடரலாம் போலிருக்கே...
அனைவருக்கும் பல்பு
எல்லோருக்கும் லடாய்..
கலக்கல் கலாய்த்தல்
மொக்கு நோண்டி
எந்த வட்டார மொழில சொன்னாலும் ஒண்டு தான் தொடரலாம்..
//உங்க கொமன்ட் ஒரு குட்டி தமிழ்ப்படம் மாதிரி இருந்திச்சு... குறும்பட கதை டிஸ்கஷன் பகுதி-2 ஐ நீங்க தொடரலாம் போலிருக்கே...//
ஐடியாவுக்கு நன்றிங்ணா..:P
குறும்பட வைபோகமே-2-http://nbavan7.blogspot.com/2010/09/2.html
Post a Comment