தியேட்டரில் முதல் ஷோ பார்த்தால் என்னென்ன நன்மைகள்?
டிக்கட் விலையைப்பத்தி கவலைப்படாம ஏன் பிளாக்ல கூட வாங்கி தியேட்டருள்ள போயி ஆர்த்தியெடுத்து தேங்காயுடைச்சி பார்க்கறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்...
முதல் ஷோ பார்ப்பதால் ஏற்படும் பயன்கள் என்னாண்ணு பார்த்தோம்னா...
1) சனநெருக்கடிக்குள் நெருக்கப்பட்டு தள்ளுமுள்ளுப்பட்டு நசிபடுவதால் உடலிலுள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.
2) தலைக்குமேலால் ஏறிபோவது காலை வாரிவிட்டு முன்னேறுவது போன்ற அரசியல் டிப்ளோமாக்களை பழகுகிறோம்.
3) ப்ளாக்கில் டிக்கட் விற்பவர்களுக்கு வருமானத்தை பெருக்குவதன் மூலம் சிறு தொழில் வாய்ப்பை ஊக்குவிக்கிறோம்.
4) புகையிலை பான்பீடா கசிப்பு வியர்வை போன்றவற்றோடு காற்றில் கலந்து வரும் இன்னபிற வாசங்களுக்கும் பழக்கப்பட்டு விடுவதால் பொது இடத்தில் குமட்டிக்கொண்டு வரும் அலர்ஜி இல்லாமல் போகும்...
5) டிக்கட் கிழிக்கும் பகுதிக்கு செல்வதற்குள் சட்டை கிழிந்துவிடுவதால் புதுசட்டை வாங்கும் யோகம் கிடைக்கிறது...
6) படம் பார்க்கும் போது இருட்டில் நம்மை நோக்கி பறந்து வரும் காலி பாட்டில்கள் பிய்ந்த செருப்பு போன்றவற்றை தடுத்தாட்கொள்ள வேண்டியிருப்பதால் அது கண்களுக்கு நல்ல பயிற்சியாகி கண்பார்வை பிரகாசமடையும் எதிர்ப்பு சக்தி கூடும் எரியா மேட்ச்சில் விக்கட்கீப்பராகும் வாய்ப்பும் கிடைக்கலாம்.
7) அகராதியில் இல்லாத சில வார்த்தைகளை காதார கேட்டு இன்புறுகின்றோம்..
8) ஊருக்குள் சீன் போட நல்ல மேட்டர் கிடைக்கும்...
இவ்வளவு நன்மைகள் நிறைந்த முதல்காட்சி அனுபவத்தை தவறவிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல...
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... வேறு உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கீழே கருத்தில் தெரிவிக்கவும்.
16 comments:
superb
@அத்திரி
நன்றி
உங்க பதிவுகள் மாதிரி வருமடா? சார்..
செம் நக்கல்.நையாண்டிப்பதிவு,வாழ்த்துக்கள்
பாஸ் நீங்கதான் எங்க கஷ்டத்துக்கு எல்லாம் பலன் கொடுத்து எழுதி இருக்கீங்க!!!
இதுக்கு பிறகும் முதல் ஷோ பாக்கிறத தவற விடமாட்டோம்!!! ஆனா, டிக்கெட் விலையை குறைக்க சொல்லி ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்!!!
@சி.பி.செந்தில்குமார்
//செம் நக்கல்.நையாண்டிப்பதிவு,வாழ்த்துக்கள்//
தங்கள் ரசனைக்கு நன்றி சார்..
முக்கியமானத விட்டிட்டீங்களே, படத்தை பாத்திட்டு உடனேயே விமர்சனம் எழுதி அதிக ஹிட்ஸ் எடுக்கலாம் :-)
வாவ்.. முதல் ஷோ பாக்கிறதில இம்புட்டு விசயம் இருக்கா.. அட அட அட.. சூப்பர்...
இன்னொன்று விசில் அடிக்க பழகிக்கொள்ளலாம்..ஹிஹி..:D
9)தியட்டர் கதிரைகளை சேதப்படுத்துவதன் மூலம் நம்ம ஏரியக்குள்ள ஒரு புது திரையரங்கை வரவைக்க முடியும்!!!!
10)ரசிகர்கள் கட்டவுட் வைப்பதன் மூல பல டிஜிட்டல் விளம்பர கான்ராக்ட் எடுகிறவங்களுக்கு இலாபத்தை ஈட்டிக்கொடுக்கும்!!
11)மேலும் வீதிமறியல் போன்றவற்றில் பங்கு பெறுவதால்!! எங்காவது பிரச்சனை என்றால் உனடடியா மறியல் போராட்டத்தில் இறங்க வாய்ப்யை ஏற்படுத்திதரும்!!!
இது எல்லாத்துக்கும் மேலாக கூல்பாய் கிருத்திகன் போன்ற பலர் எச்சரிக்கையாக முதல் ஷோ பார்க்கப் போகும் போது பழைய சேட் மற்றும் பாதணி அணிந்து செல்வதால் பலரின் வருமானம் பாத்திகப்படுகிறது....
பிறதேஸ் படம் எப்பவேனும்னாலும் பாக்காலாம் ஆனா 1 ஷோ பார்க்குற கிக் இருக்குமா!!!!!!!!!
மன்னிக்கவும் நாங்க பிரீமியர் ஷோ, விஐபி ஷோ எல்லாம் 1 ஷோ ஆக கருதுவதில்லை!!!! பட்டி தொட்டி எங்கும் எப்ப படம் ரிலீஸ் ஆகுதோ அதுதன் 1ஷோ!!!!!!!
supar iya
supar iya
நல்ல அட்வைஸ் ஐஞ்சு ஆறுவருசத்துக்கு பிறகு ஆறுதலாப் படம் பார்க்கறிவங்க கவனத்துக்கு கொண்டு வந்தா நல்லாருக்கும்!!
//டிக்கட் கிழிக்கும் பகுதிக்கு செல்வதற்குள் சட்டை கிழிந்துவிடுவதால் புதுசட்டை வாங்கும் யோகம் கிடைக்கிறது...///
இப்பிடியாச்சும் வாங்கட்டுமே டா..... ஹீ ஹீ
சூப்பர் சூப்பர் ,, உங்காந்து யோசிப்பாங்களோ?
9. ஆசை தீர படம் பார்த்து விட்டு, அதன் பின் வெளியெ வந்து , பட்த்தால் சமுதாயம் கெடுகிறது... டிக்கட் விலை ஏற்றத்தால் மக்கள் பட்டினியால் இறக்கிரார்கள் என வெட்டி நியாயம் பேசலாம்
அப்ப நாமளும் இனி முதல் சொ தான் பார்க்கணும்... அது சரி எந்திரன் முதல் சொவில் யாரோ களவா படம் எடுத்தவங்களாம் தேடுறாங்கள் கேட்டால் என்ன சொல்வது...
@ம.தி.சுதா
நன்றி நண்பர்களே!
இந்த லிங்க அவங்களுக்கு அனுப்பிச்சுடுங்க மதி.சுதா...
http://www.rajinifans.com/latest_news_detail.html?rId=1486
நல்லதொரு அலசல்...
-
DREAMER
Post a Comment