ஆனாலும் காலமாற்றங்களுக்கேற்ப ஆறு முதல் அறுபது வரை அனைவரதும் பல்ஸ்க்கு ஏற்றவாறு படங்களை தந்து கொண்டிருப்பதே ரஜினியின் ஷ்பெஷாலிட்டி.
வரோ அண்ணா இந்த வாய்பபை தந்ததற்கு நன்றி.
Super Starரைப்பற்றி அது நல்லாருக்கு இது சரியில்லை என்று எழுதுமளவுக்கு நான் அதிமேதாவி இல்லை ஆகவே இது ஏதோ அமரகாவியம் என்று நினைத்து இதை படிக்க வந்தவர்கள் விரும்பினால் வேற அச்சா வலைத்தளத்துக்கு போய் நேரத்தை மிச்சப்படுத்தவும்.
தில்லுமுல்லு
யாழ் இந்து கல்லூரியில் சேர்ந்த 2ம் நாள் வகுப்பாசிரியரால் எனக்கு தரப்பட்ட திருநாம் இது..
ரஜினி என்ற ஹீரே தனியே ஸரைல் மூலமாகவோ ஆக்ஷன் படங்களாலோ வெற்றிக்கொடி நாட்டியவர் அல்ல என்பதை நிரூபித்த படங்களுள் இதுவும் ஒன்று. இன்ரர்வியூ காட்சியில் வரும் I can talk English, i can walk English, i can laugh English. Because English is very funny language. Bhairon becomes barren and barren becomes Bhairon because their minds are very narrow. நகைச்சுவை வசனம் என்னை மிகவும் கவர்ந்தது ஏன்னா இதே சீனை சமகாலத்துல அமிதாப்ஜியும் பண்ணியிருகாகாரு.. ஆனா எப்டியிருக்குன்னு ஒப்பிட்டு பாத்துக்குங்க.
பாட்ஷா
நினைவு தெரிந்த நாட்களில் நம்ம ஏரியாக்குள்ள(கோண்டாவில்) நெறய்யபேரு “நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி“ன்னு சொல்லிட்டு திரிவாங்க ஏன்டா இவங்க நூறு தடவை இந்த ஒண்டயே திருப்பி திருப்பி சொல்றாங்கன்னு நெனச்சதுண்டு ஆனா படம் பாத்ததில இருந்து இப்ப வரைக்கும் நான் யாருக்காச்சும் வாக்கு குடுக்கும் போது இந்த வாக்கியமும் கண்டிப்பாக இடம் பெறுகிறது....
மாணிக்கமாக முதலில் ரஜினி நிறையவே ஒதுங்கிப்போவார் பின்னர் தன் ஃப்ளாஷ்பேக்கில் தன் கடந்த கால அடிதடி வாழ்கையை பற்றியும் அது காலத்தின் தேவையாலேற்பட்டது எனவும் கூறி தூள்கிளப்பிய படம்.
ஸ்ரைலுக்காகவும் வசனங்களுக்காகவும் நான் பல தடவை பார்த்த படம்.
முத்து
இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த காலங்களில் பாடல்கள் வெளியாகி கொளும்பு சர்வதேச ஒலிபரப்பு ரேடியோவில் கேட்டதுண்டு(அப்ப நியூசுக்காக வீட்டில் பேட்டரி ரேடியோ போடப்படும் நேரத்தில் ஏரியாவே அந்த இடத்துக்கு ஷிஃப்ட் ஆகி அமைதியா உக்காந்திருக்கும்..)
படத்தை சிறுவயதில் பார்த்தபோது ரஜினியை தவிர எதுவுமே நினைவில் இல்லை...
பின்னாளில் ரஜினி மீனாவுடன் மேடையில் பேசும் காட்சியை வகுப்பில் பேசி மற்றவர்களின் வாயை பிளக்கவைப்பதுண்டு...
அண்ணாமலை
பாடல்கள் வெளியானதும் ஊருக்குள் அனைவர் வாயிலும் ஒலித்ததால் பிடித்துபோனது பின்னர் தான் யாழ்சேவை ரேடியோவில் கேட்டதுண்டு (அப்ப அந்த ரேடியோ டிக்ஷனரியில் புதுப்பாட்டு என்பது வெளியாகி 6மாதம் கடந்த படங்களிலிருந்து ஒலிப்பது) இந்த சூழ்சிலையே படம்பார்க்கும் ஆர்வத்தை வெகுவாக தூண்டியது பின்நாளில் மனதில் நின்ற படங்களில் ஒன்றாகியது.
அருணாச்சலம்
ஏரியாவில் யாருக்காவது கலியாண படக்கொப்பி அல்லது வெளிநாட்டு கலியாண கொப்பி வீட்டுக்கு வந்தால் அன்று இரவு அந்த அயலுக்கே கொண்டாட்டம். ஏற்கனவே பார்க்காமல் பென்டிங்கில் இருக்கும் பூப்புனித நீராட்டுவிழா கொப்பியையும் அன்று தான் பார்ப்பார்கள். ஊரில் ரீவி டெக் வாடகைக்கு விடும் ஒருவரை பிடித்து ஒவ்வொருவரும் பங்கு போட்டு ஜெனரேட்டருக்கு மண்ணெண்ணெய் வாங்கி கொடுத்து மாலையில் விழா ஆரம்பமாகும் முதலில் சொந்தகாரர் கலியாணவீட்டை பார்ப்பார்கள் பிறகு பெரியவர்கள் திருவிளையாடல் வசந்த மாளிகை (ஊருக்குள்ள எப்ப படம் போட்டாலும் இதயேதான்... ) பார்ப்பார்கள் ஏதாவது ஒரு விஜயகாந் படம் இளைஞர்கள் எற்பாட்டால் திரையிடப்படும். இப்படியான ஓர் நடுநிசியில் பார்த்த படம் அண்ணாமலை.
படத்தின் கதையைவிட ரஜினியும் அந்த படம் பார்த்த சூழலுமே அந்தப்படத்தை பற்றி பசுமையான நினைவுகளாயுள்ளது. (இப்ப 6 படம் உள்ள டிவிடி 50ரூபாய்.. மடிக்கணினியில் Blue rayயில் பார்த்தாலும் அந்த மகிழ்ச்சி கிடைத்ததில்லை)
படையப்பா
இதுவும் மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில் பார்த்த படம் தான் படம் பார்த்த போதுதான் பாடல்கள் அறிமுகமாயிற்று... படம் பார்த்து பல காலத்துக்குபின்னும் வெற்றிக்கொடி கட்டு பாடல் இசை மனதில் ஒலித்துகொண்டேயிருந்தது. ரஜினி புலியாக மாறுவது மற்றும் வேல் பறந்து வரும் க்ராபிக்ஸ்களை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு (இப்ப அதல்லாம் கைவந்த கலை என்பது வேறு...) நீலம்பரி வீட்டில் ஊஞ்சலை இழுத்து போட்டு உக்காருவது சுருட்டை சுற்றுவது பாம்புக்கு முத்தம் கொடுப்பது என சில காட்சிகளே அந்த வயதில் மனதில் நின்றன... அப்போது தான் ராஜா தியேட்டர் ஜீன்ஸ் படத்துடன் கோலாகலமாக இயங்க தொடங்கியிருந்தது (புலமைபரிவில் சிறப்பாக பாஸ் செய்ததால் என் முதல் தியேட்டர் பிரவேசமும் அதுவே...) படையப்பா தியேட்டரில் ஓடும் போது கட்டாயம் கூட்டிப்போகவேண்டும் என வீட்டில் வரம் கேட்டடு அனுமதித்தார்கள் ஆனால் இன்னும் படையப்பா அந்த தியேட்டரில் ஓடவேயில்லை...
பாபா
ஸ்பைடர் மேன் பாதிப்பு இருந்ததாலும் ஆனந்தவிகடன் எதிர்பார்ப்பை எகிறவைத்ததாலும் (சின்னிஜெயந்தின் “ஒரு தடவை சொன்னா“ படமும் ஒரு காரணம்..) படம் பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் கூடியது... படம் வெளியான புதிதில் வவுனியாவில் தங்கியிருந்த ஹோட்டலில் பார்த்த படம்(பள்ளியில் நான் தான் முதலில் பார்த்தேன்...). “பாபா கவுண்டிங் “ காட்சிகளும் நடைகண்டு அகங்காரம் பாடலும் விரும்பி ரசித்தேன்...
சந்திரமுகி
16 வயதினிலே (எனக்கு தான்) படம் ரிலீஸாகும்நேரம் (சந்திரமுகி தான்) நமக்கு chicken pox வந்து 16 நாட்கள் எங்கேயும் போககூடாது என்று சொல்லிவிட்டார்கள். பொழுது போவதற்காக ஆனந்த விகடன்கள் என் படுக்கையை சுற்றி நிறைந்திருந்தது காலக்கொடுமையாக ரேடியோவில் பாடல்களும் அத்தனைபுத்தகங்களிலும் சந்திரமுகி பற்றிய நியூஸ்களும் வித்யாசாகர் போன்றவர்களின் பேட்டிகளுமாக என்ன கொடும சரவணா...!!!
ஆர்வகோளாறில் இடையிலேயே சுகமாகிவிட்டதாக கூறி குலதெய்வம் கோயிலில் தோய்ந்து விட்டு அடுத்தநாள் நண்பர்களோடு தியேட்டருக்குள் புகுந்துவிட்டேன்....
சச்சின் விஜய் ரசிகர்கள் பாடசாலையில் நம்மோடு யுத்தம் செய்த வரலாறுகளுமுண்டு
அப்புறம் தெலுங்கு டயலாக்ஸ் கூட மனப்பாடமாகும் வரை பார்த்து தீர்த்து விட்டோம்
900+ நாட்கள் ஒடிய படத்தின் சிறப்புகளை நான் இங்கு சொல்லதான் வேண்டுமா?
சிவாஜி
சங்கர் ரஜினி ரகுமான் சுஜாதா காமினேஷன் என்பதாலும் படப்பிடிப்பு தொடங்கும் போதே தியேட்டருக்கு போக வீட்டில் அனுமதி பெற்றுவிட்டேன்.
ரிலீஸாகும் நாள் காலை 3.00மணியோ 4.00யோ தெரியவில்லை கிளம்பி வழியில் 4..5.. இடத்தில “ஏ மல்லி கேஃபியோ ரைம் ஹோதய யண்ணே?“ என்ற கேள்விகளுக்கு விளக்கம் குடுத்து தியேட்டருக்கு போனால் அங்கே பெரிய கூட்டமே றோட்டில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தது விசாரித்ததில் “பலாலில ஷெல் விழுதெண்டு ஃப்ளைட் வரேல்லயாம் நளைக்கி தான் படம் வருமாம்...”
அப்புறம் வகுப்பிலும் சுவரெல்லாம் ரஜினி படம் வரைந்து physics போரடிக்கும் நேரத்தில் தூங்கும் அறையை OFFICE ROOM என பெயரிட்டு அதை அழிக்க பிரின்ஸிப்பல் வகுப்புக்கே பெய்ன்ட் அடித்தார்.
வெள்ளை ரஜினியும் மொட்டை BOSSம் கவர்ந்தார்கள். இந்தியில் மொழிபெயர்ப்பான (ரீகேடா)இப்பட பாடல்காட்சியை காமடியாய் கலாய்க்கும் (கோல்மால் ரிட்டர்ன்ஸ்) பாடல் கீழே நேரம் கிடைக்கறப்போ பாத்துக்குங்க.
குசேலன்
இதுவும் சோதனை மேல் சோதனை காலம் அதுவும் உயர்தர பரீட்டை சோதனைக்காலம்.
பரீட்டை தெடங்கின நாள்ளயே படமும் ரிலீஸ்...
பரீட்டைச காலம் யாருமே போகமாட்டாங்கள் ஆனா அன்னிக்கு பரீட்சை முடிந்ததும் மாலை கிட்டதட்ட மாறுவேடத்தில் தியேட்டருக்குள்ள நுளைஞ்சு பாக்கும் போது தான் புரிஞ்சுது அந்த பட க்ளைமாக்ஸ் சீன் பக்கத்தில ப்ரன்ஸ வச்சு கொண்டு பாக்காம விட்டது எவ்வளவு நல்லதெண்டு. நண்பர்கள் கூட இருக்கும் போது படம் பாத்து கண்ல தண்ணிவுட்டா நல்லாயிருக்காதுல்ல...
எந்திரன்
தொழிநுட்பத்தை பாத்து பிரம்மிச்ச படம்...
அதுக்கு போகும்போது ஒரு சிக்கலும் இல்லையோ எண்டு யோசிக்கிறாக்கள் இங்க போய் பாருங்கோ..
இதில தெரிஞ்சாக்கள் யாராவது நிக்கினமோ..?
இணையத்தில் (எனக்கும் தான்) முதன்முறையாக வெளியான எனது எந்திரன் விமர்சனம் இங்கே
சுல்த்தான் படத்திலிருந்த நம்பிக்கை போய் பலகாமாச்சு (நாங்க தான் முனன்முதல் ரஜினிக்கு 3டி அனிமேஷன் செயோணுமெண்டு தலைவிதியோ தெரியவில்லை..)
இவ்வளவு நேரமும் பொறுமயா படிச்சதுக்கு நன்றி
ரஜினி 10 ஜ தொடர... ரஜினி பற்றி எழுதகூடிய தகுதி இருப்பவரான் ஜீவதர்ஷன் அண்ணாஅவர்களை அழைக்கிறேன் இவர் ஒருதடவை எழுதினா நூறுபேர் எழுதின மாதிரி...
ஏன்னா இவர் நூறு தடவை எழுதினாலும் அந்த ஒருத்தர பற்றி தான் கூட எழுதுவார்
அடுத்து எந்திரனில் குற்றமும் பின்னணியும் சிறப்பாக ஆராய்ந்த சுபாங்கன் அண்ணாவை அழைக்கிறேன்.
விமர்சன பதிவுகள் அருமையாக எழுதக்கூடிய மருதமூரான் அண்ணாவை ரஜினி பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.
புதிதாக எழுதத்தொடங்கியிருக்கும் பதிவர் திருத்தணிகேசன் அவர்களின் ரஜினியின் சிறந்த 10 படங்களை பற்றி விமர்சனம் எழுத அழைக்கிறேன்.

13 comments:
அழைத்ததற்கு நன்றி, நான் முன்னரே எழுதிவிட்டேன் :-)
http://eppoodi.blogspot.com/2010/11/blog-post_27.html
அழைப்பிற்கு நன்றி கூல், நிச்சயம் எழுதுகிறேன்
தம்பி இவ்வளவு ஸ்பீட் கூடாது. நானே பதிவு எழுதிட்டு படுக்கும் போது இரவு 12 மணியாச்சு. காலங்காத்தால எழும்பிப் பார்த்தா பதிவு போட்டிருக்கிறீர். நீர் பெரும் ஆள் தான்.
//நம்ம ஏரியாக்குள்ள(கோண்டாவில்)//
எலே! ஏரியா விட்டு ஏரியா வந்து ரகளை பண்ணாதையும். கோண்டாவில் நம்ம ஏரியா.. நீர் கொக்குவில் தானே! (அது சரி முந்தி இருந்திருப்பீர். கோண்டாவில் எவடம்?)
//ஏரியாவில் யாருக்காவது கலியாண படக்கொப்பி அல்லது வெளிநாட்டு கலியாண கொப்பி வீட்டுக்கு வந்தால்//
இது யாழ்ப்பாண மக்களின் அடையாளமல்லவோ! படையப்பாவை நான் இப்படித்தான் பார்த்தேன்.
//தமிழ்மணம் ஓட்டுப்பட்டை பதிவின் மேலே//
கீழ இருக்கிற ஐஞ்சும் என்னத்துக்கு?
ரஜினி படங்கள் நல்ல தெரிவுகளாக இருக்கின்றது. தொடர்ந்தமைக்கு நன்றி.
நண்பரே நீங்கள் போட்டிருக்கும் interview scene வேலைக்காரனில் வந்தது தில்லு முள்ளு வில் அல்ல, அது தேங்காய் சீனிவாசனை ஏமாத்துவாறே அந்தக் காட்சி . தெரிவுகள் ஓகே. நிறைய இறுதி பத்தாண்டுகளில் வந்த படங்களோ
வரோவிடம் இருந்தும் ஒரு சுப்பர் ஸ்ராரிடம்தான் போய் இருக்கு. அதே வேகம்..அதே நடை..பேடி கூல்...
ஆகவே இது ஏதோ அமரகாவியம் என்று நினைத்து இதை படிக்க வந்தவர்கள் விரும்பினால் வேற அச்சா வலைத்தளத்துக்கு போய் நேரத்தை மிச்சப்படுத்தவும்.//
அருமையான அவையடக்கம்.
சுவையான விளக்கங்கள்.
:)
புதிய படங்கள் தான் கூடப் பிடிச்சிருக்கு :)
எழுத்தை ரசித்தேன்.
கோல்மால் பாடல் கலக்கல்
Rajini is the stylish Icon
தலைவரின் எந்த படமுமே எமக்கு நல்ல தெரிவுதான் :-) உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது.
குசேலன் பார்த்தபோது சார்க் மாநாட்டு கெடுபிடி என்று நினைக்கின்றேன், கொங்கொட்டுக்கு போகவே ரொம்ப சிரமப்பட்டோம் :-(
அன்பு நண்பன் கிருத்திகனின் இந்த சூப்பர் ஸ்டார் பற்றிய கட்டுரைத் தொடர் நமது சமகால துன்பங்களுக்கு மத்தியில் ஒரு இன்பமாய் ஒளித்ததை திரும்பி பார்க்கும் களமாக அமைகிறது. நமது யாழ்மக்கள் வாழ்வில் திரையரங்குகளுக்கும் இடம் இருக்கும் என்று யாரும் எண்ணிப் பார்க்க கூட முடியாத நிலையில் இருந்த காலமும் உண்டு.
இந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்ட அனைத்து சந்தோசங்களும் அவர் மட்டும் அல்ல அவர் நண்பர்களும் அனுபவித்த சந்தோசமாகும். நான் முதல் முதலில் தியட்டரில் பார்த்த ரஜனி படம் சந்திரமுகி. இக் கட்டுரையினுள் இறங்கும் முன் ஒன்று கூற விரும்புகிறேன் நான் ஒரு விஜய் ரசிகன் இது என் நண்பர்களுக்கே தெரிந்த ஒன்றாகும். ஆனாலும் விஜய் அஜித் என்று அடிபடும் ரசிகர் கூட்டம் ஒன்று திரளும் இடம் என்றால் அது சூப்பர் ஸ்டாரின் படம் தான்..
இந்திய மற்றும் தமிழர் வாழ்வில் எம்ஜிஆர், சிவாஜி வரிசையில் இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார். சிவாஜி கணேசன் தனது கடைசி படமான படையப்பாவில் குறிப்பிட்ட ஒரு வசனம் “நான் சேர்த்து வச்சு இருக்குற ஒரே ஒரு சொத்து இவன்தான்”
எளிமையும் தன்னடக்கமும் கொண்ட டாக்டர் அப்துல்கலாம், ஏஆர்.ரகுமான் வரிசையில் எனக்கு பிடித்த மனிதர் மன்னிக்கனும் கிருத்திகனை நான் ஒரு வேளை சந்தித்த போது அவர் சொன்னார் இவங்க எல்லாம் மனிதர்கள் இல்லை புனிதர்கள். ஆம் எனக்கு பிடித்த புனிதர் ரஜனிகாந்த். அவர் கடந்து வந்த பாதை மற்றும் அவர் படங்கள் பற்றி எல்லாம் முன்னரே கிருத்திகன் பலமுறை அலசி விட்டார் எனினும் என்னைத் தாக்கியது எந்திரன் தான்…!!! என்ன ஒரு அற்புதமான படைப்பு. எதிர் பார்த்த்தை விட ஏராளமாக பல படைப்புக்களை அள்ளி வந்தது எந்திரன்.
எந்திரனை இரண்டு விதமாக பார்க்கலாம்.
1. பொழுதுபோக்காக பார்ப்பவர்களுக்கு வெறும் எந்திரன் தான்..
2. கொஞ்சம் அறிவை பயன்படுத்தி கொஞ்சம் விஞ்ஞானத்தையும் கலந்து பார்பவர்களுக்கு அவன் ஒரு இனம் புரியாத யந்திரன்.
என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் பார்த்த எந்திரனில் வரும் ஒவ்வொரு எழுத்து, சொற்கள் கூட மிகவும் நுன்னிய முறையில் பல்வேறு இயங்கு சொல்லாகவே அமைக்கப்பட்டுள்ளன..
மிகவும் மனதை கொள்ளை கொண்ட காட்சி! கடவுள் இருக்கிறார என்ற கேள்வி தான்???
இவ்வாறு சூப்பர் ஸ்டாரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்!!!
உலகத்துல ஆயிரம் ஸ்டார் இருக்கலாம் ஆனல் சூப்பர்ஸ்டார் எண்டா அது ரஜனி!!!
சூப்பர் கிருத்திகன்..!
வாசிக்க குடுத்துவைத்ததில் மகிழ்ச்சி.
சூப்பர்
கூகூகூகூல் குழுமத்தில் சேர்க்காத இப்பதிவை நான் நிராகரிக்கிறேன்...
அட ஒண்ணை மறந்திட்டேன்.. அருமையாக இருக்கிறது...
Post a Comment